செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும்
சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2. 38
மணிக்கு , ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம்
ஏவப்பட்டது.
ரூ. 450 கோடி செலவில் இந்தியா தனது சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளது.
மொத்தம் 200 மில்லியன் கி.மீ., பயணம் கொண்ட மங்கள்யான், திட்டமிடப்படி
ஏவப்பட்டதால், வரும் 30ம் தேதி பூமியின் வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு,
செவ்வாயை நோக்கி தனது நீண்ட பயணத்தை துவக்கும். அடுத்த 300 நாட்களில்
செவ்வாயின் பாதை நெருங்கும் மங்கள்யான் அடுத்த சில தினங்களில் ( 2014 -
செப் 24 ) சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இருந்து தகவல்களை
பூமிக்கு அனுப்பும். இதற்கான 56 .30 மணிநேர கவுன்டவுன் கடந்த
ஞாயிற்றுக்கிழமை காலையில் 6. 08 மணிக்கு துவங்கியது.
விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மற்றும் செயற்கைகோளை
கண்காணிக்க, இந்திய கடல் எல்லையில், யமுனா, நாலந்தா ஆகிய கப்பல்களில்
கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சில இடங்களில்
கட்டுப்பாட்டு அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
சரியான பாதையில் பயணிக்கிறது ; இஸ்ரோ சேர்மன்
குறுகிய காலத்தில் சரியான நேரத்தில் விண்ணில் செலுத்த துணை புரிந்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நான் தலைவணங்குகிறேன். விண்கலம் திட்டமிட்டபடி புவி வட்டபாதைக்கு சென்று சரியான பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது.இவ்வாறு இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். தொடர்ந்து பேசிய விஞ்ஞானிகள் கூறுகையில்; செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது உலக பெருமை சேர்த்ததில் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதா கூறினர்.
மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா?
மங்கள்யான்' என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோள், 1350 கிலோ எடை கொண்டது.
இந்த செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், கனிம வளம், மனிதர் வாழ
ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து, ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டு
உள்ளது. இதற்காக பிரத்யேகமாக, ஐந்து நவீன கருவிகள் "மங்கள்யான்'
செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் எடை, 15 கிலோ.
மீத்தேன் வாயு இருக்கிறதா? செவ்வாய்
கிரகத்தின் மேல் பகுதியில் மீத்தேன் வாயு இருக்கிறதா என்பதை இதில்
பொருத்தப்பட்டுள்ள கருவி தெரிவிக்கும். உலக அளவில் இது மிக முக்கிய
சோதனையாகும்.
இந்தியா 4வது நாடு : செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா வெற்றி பெற்று உலக சாதனை பட்டியலில் இந்தியா 4 வது நாடு என்ற இடத்தை பிடிகத்தது. இது வரை ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி கழகம்ஆகியன வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியுள்ளது. இந்நாடுகள் மொத்தம் அனுப்பிய 51 விண்கலத்தில் 21 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.