Finance Minister Arun Jaitley receiving the report of Seventh Pay Commission from its Chairman Justice A K Mathur in New Delhi on Thursday. (Source: PTI)


* 23.55 per cent increase in pay and allowances recommended

* Recommendations to be implemented from January 1, 2016

* Minimum pay fixed at Rs 18,000 per month; maximum pay at Rs
2.25 lakh

* The rate of annual increment retained at 3per cent
* 24 per cent hike in pensions

* One Rank One Pension proposed for civilian government employees on line of OROP for armed forces

* Ceiling of gratuity enhanced from Rs 10 lakh to Rs 20 lakh; ceiling on gratuity to be raised by 25 per cent whenever DA
rises by 50 per cent

* Cabinet Secretary to get Rs 2.5 lakh as against Rs 90,000 per month pay band currently

* Financial impact of implementing recommendations will be Rs 1.02 lakh crore – Rs 73,650 crore to be borne by Central Budget and Rs 28,450 crore by Railway Budget.

* Total impact of Commission’s recommendation to raise the ratio of expenditure on salary and wages to GDP by 0.65 percentage points to 0.7 per cent

* Military Service Pay (MSP), which is a compensation for the various aspects of military service, will be admissible to the defence forces personnel only

* MSP for service officers more than doubled to Rs 15,500 per month from Rs 6,000 currently; for nursing officers to Rs 10,800 from Rs 4,200; for JCO/ORs to Rs 5,200 from Rs 2,000 and for non-combatants to Rs 3,600 from Rs 1,000

* Short service commissioned officers will be allowed to exit the armed forces at any point in time between 7 to 10 years of service

* Commission recommends abolishing 52 allowances; another 36 allowances subsumed in existing allowances or in newly proposed allowances.

* Recommendations will impact 47 lakh serving govt employees, 52 lakh pensioners, including defence personnel.

- See more at: http://indianexpress.com/article/india/india-news-india/highlights-of-7th-pay-commission-report/#sthash.iuaNdqko.dpuf

CRC க்கு சென்றால் சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு - விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் பதில்!!! (நாள் :30/10/2015)


ஆதார் எண் Online E -Pay Roll - ல் இணைக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர் பள்ளிக்கல்வி - Wep Pay Roll -ல் ஊதியம் பெரும் அனைத்து அரசு பணியாளர்களின் ஆதார் எண் (Aadhaar No) Online E -Pay Roll - ல் இணைக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்


புதிய கல்விக் கொள்கை - கருத்தரங்கம்

50% அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:

"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம்' என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது.
 
ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது. அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் கணக்குகளை நிர்வகிக்க 0.01% கட்டணம்; மத்திய அரசு அறிவிப்பு


தொடக்கக் கல்வி - தீபாவளி 2015 - தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்தல் குறித்து பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பு


CPS SUBSCRIBERS DETAILS IN INDIA


ஓய்வூதியம் என்பது சலுகையா?

இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித் துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

♦ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.


♦இத்தகைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் உலகில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்தன. சர்வதேச சங்கமும், அதன் துணை அமைப்பான தொழிலாளர் ஸ்தாபனமும் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வரைமுறைகளை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

♦ஒருவர் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வுபெறும்போது எஞ்சிய கால வாழ்வாதாரத்திற்காக  வைப்பு நிதி திட்டம் உருவாகியது.இத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனது பங்களிப்பை செலுத்துவதோடு நிர்வாகமும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும்.

♦1930 களில் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எஸ்.எம். கெய்ன்ஸி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி மக்களின் வாங்கும் சத்தியைப் பெருக்க அரசுத்துறையில் நலத்திட்டங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டங்களை உருவாக்கிய அரசுகள் சேமநல அரசுகள் என அழைக்கப்பட்டன.

♦அந்த அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு பங்களிப்பு வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தின. இத்திட்டத்திற்கு அரசுகள் அளிக்க வேண்டிய பங்குத்தொகை மாதம்தோறும் அளிக்காமல் அந்த நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு மடைமாற்றப்பட்டது

♦இந்திய நாட்டில் முதலாவது ஊதியக் குழுவின் விளைவாக தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகள் 1950 ஏப்ரல் 17ம்தேதி அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பொது வருங்கால சேமிப்பு நிதி உருவாக்கப்பட்டது.

♦ இத்திட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசுகள் ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை ஓய்வூதியமாக வழங்கத் துவங்கின. பின்னர், ஊழியர்களிடம் எவ்விதமான பங்களிப்பும் பெறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

♦ஓய்வூதியச் சலுகை வழங்குவதில் முன்னர், பின்னர் என வேறுபடுத்தி பாரபட்சம் காட்டத்துவங்கியது மத்திய அரசு. அதனை எதிர்த்து டி.எஸ்.நகரா மற்றும் இதரர் பதிவு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17.12.1982ல் அளித்த தீர்ப்பு நாளையே ஓய்வூதியர்களின் ‘உரிமை’ தினமாக கொண்டாட படுகிறது.

♦ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மகா சாசனமாகும். ஓய்வூதியம் என்பது கவுரவமாக வாழும் உரிமையின் உத்தரவாதம் என மனித உரிமை ஆணையமும் தீர்ப்பு வழங்கி யுள்ளது.

♦பணி ஓய்வு பெற்ற பிறகு கவுரவ மாகவும் சுதந்திரமாகவும் வாழ உத்தர வாதம் அளிக்க வேண்டும். ஒருவர் தனது வாழ்வில் முதுமைத் தளர்ச்சியினையும், வறுமையையும் எதிர்த்திட வழங்கப் படுவதுதான் ஓய்வூதியம்.

♦எனவே, ஓய்வூதியம் என்பது கருணைத் தொகையல்ல. அது சட்டரீதியானது. இது நிர்வாக விருப்பு வெறுப்புகளாலோ அல்லது கருணை கொண்டோ வழங்கப் படுவதில்லை.

♦பென்சன் திட்டமே பென்சன் நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. பென்சன் நிதி என்று ஒன்று இல்லை. ஓய்வூதியம் என்பது ஒரு செலவினம் என நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

♦பென்சன் என்பது மத்திய -மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட பொறுப்பாகும். அதை வழங்கவேண்டியது கடமையாகும். மத்திய - மாநில அரசுகள், தங்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கத்தான் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள் ளன.

♦உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தமிழகத்தில் 1.4.2003லிருந்தும் 1.1.2004 ல் மத்திய அரசு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும் புகுத்தப்பட்டது.

♦இதற்கிடையில், 6வது ஊதியக்குழு ஓய்வூதியம் பற்றி ஆய்வு நடத்த டாக்டர் காயத்திரி குழுவை அமைத்தது. அக்குழு ஓய்வூதியத்தில் 54.75 விழுக்காடு பாதுகாப்பு துறையினருக்கே செலவு செய்யப்படுகி றது எனவும், எதிர்காலத்தில் ஊதியம், ஓய்வூதியத்திற்கான செலவினம் குறையும் எனவும் அறிக்கை அளித்தது.

♦இந்த உண்மைகளை அறிந்த அரசுகள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 30, 35 ஆண்டு காலம் ஊழியர்களின் சேமிப்பையும், அரசின் நிதியையும் பங்குச் சந்தை மூலதனமாக உலக நிதி நிறுவனங் களின் ஆணைகளுக்கேற்ப உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்குகிறது.அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.

♦ அதன்படி அமைக்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு விரைவில் பரிந்துரையை அறிவிக்க உள்ளது. அதற்குள், “ஏழைகளைப் பார், அவர்களது வருவாயை ஒப்பிட்டு பார்த்து பரிந்துரை செய்ய வேண்டும்” என ஊடகங்கள் முழங்
குகின்றன.

♦ஆனால், பெரு முதலாளிகளுக்கு வரிச் சலுகை, வாராக் கடன் தள்ளுபடி செய்யும்போது இந்த ஊடகங்கள் வாய் மூடி மவுனம் காக்கின்றன. போதாக் குறைக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் வயிற்றெரிச்சலை கொட்டியுள்ளார்.

♦புதிய பொருளாதாரக்கொள்கைகளை அமல்படுத்தும் உலக நாடுகள் அனைத்துமே முதலில் ஓய்வூதியத்தை வெட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.

♦ ஆரம்பத்தில் சிலி துவக்கி வைத்தது. அடுத்து அர்ஜெண்டினாவிலும் அமல்படுத்தப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோது அந்நாடுகளில் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்று நாடே ஸ்தம்பித்தன.

♦லத்தீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.இந்தியா ஜனநாயக நாடு. நாட்டின் வளர்ச்சி மட்டுமல்ல நாட்டின் சமூகப் பாதுகாப்பு எல்லையும் விரிந்துகொண்டே செல்கிறது.

♦நமது அரசு சமதர்ம சோசலிச பாதையில் பீடு நடைபோடும் அரசாகும். சமூக நலக் குடியரசாக பாடுபட்டுக்

♦. இதைத்தான் இந்திய அரசியல்அமைப்பு சட்டம் பிரகடனப்படுத்தி யுள்ளது. நம் நாட்டில் தொடர்ந்து விலை வாசி உயர்வால் ஏற்படும் தடுமாற்றங்கள். பணவீக்கத்தால் ஏற்படும் ஊதியக் குறைவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இவைகளை அறிந்த நம் நாட்டு பொருளாதார நிபுணர்களில் பெரும்பாலோனர் பொருளாதார சமத்துவம் பற்றியோ, வருவாய் சமப் பங்கீடு குறித்தோ இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவ நியதியையோ சிந்திப்பதில்லை. மாறாக, ஓய்வூதியம் வழங்குவதால் அரசு திவாலாகும் என முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

மறியல் போராட்டம் ஆசிரியர்கள் திட்டம்

ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, தொடர் மறியல் போராட்டத்துக்கு ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த கூட்டுக்குழு (ஜாக்டோ ) திட்டமிட்டுள்ளது.


மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழ் வழி கல்வி மேம்பாடு உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ அமைப்பு சார்பில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மறியல் போராட்டத்தை மேற்கொள்ள உயர்மட்டக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் ஆயத்த மாநாடு, டிச., 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடக்கிறது.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, டிச., 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் தொடர் மறியல் செய்ய உள்ளனர். மாவட்டத்தில், இப்போராட்டத்தில், 7,000 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதாக, ஜாக்டோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் தொடக்ககல்வித்துறையின் கீழ் சுமார் 44,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும், கிரமாப் பகுதிகளை சார்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

அரசாங்கம் இந்தாண்டு சுகாதரமான வாழ்க்கையை அனைவரும் பெற வேண்டும் என்ற குறிக்கோளை அடைய முயற்சி செய்து வருகிறது. இதற்காக கிரமங்களில் வீடுதோறும் கழிப்பிடம் மற்றும் பள்ளிகள் அனைத்தும் முழுமையான கழிப்பிட வசதியை பெற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. திட்டத்தை தீட்டும் அரசாங்கம் அதை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க தவறுவதால் திட்டத்தின் பலன் முழுமையாக கிடைப்பதில் இடர்பாடு ஏற்படுகிறது.
பள்ளிகளில் கழிப்பிடம் அமைப்பதில் முனைப்பு காட்டும் அரசாங்கம் அதை
சுகாதரமாக பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளிகளில்
படிக்கும் மாணவர்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே நாட வேண்டியுள்ளது. இது
குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர்
முத்துப்பாண்டியன் தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்
கூறியுள்ளதாவது
                        சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் சுமார் 1175 அரசு
 மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில்
கிட்டதட்ட 67,000 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பல
பள்ளிகள் முழுமையான கழிப்பிட வசதியும், சுத்தமான குடிநீர் வசதியும் இன்றி
செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ்
ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இந்தாண்டு முழுமையாக கழிப்பிடம் வசதியை
மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என கல்வித்துறை அனைத்து
தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கழிப்பிடத்தை தொடர்ந்து
பராமரிக்க எவ்வித திட்டமும் இல்லாததால் பள்ளிகளின் கழிப்பிடங்கள்
சுகாதரமற்ற இடமாக மாறும் சூழல் உள்ளது. கழிப்பிடங்களை சுத்தம் செய்ய
ஊராட்சியின் துப்புரவு பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள கல்வித்துறை
உத்தரவிட்டாலும் அதற்கான ஒத்துழைப்பை ஊராட்சி மன்றத் தலைவர்கள்
வழங்குவதில்லை. இதனால் கழிப்பிடங்களை சுத்தம் செய்ய இயலாமல்
தலைமையாசிரியர்கள் அவதியுறுகின்றனர்.
எனவே அரசாங்கம் மாணவர்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் கிடைக்கவும், அருகாமை பள்ளிகளை இணைத்து குறைந்தபட்சம் ஒரு துப்புரவு பணியாளரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் விலை உயர்ந்த கணினி உபகரணங்கள் இருப்பதால் அதை பாதுகாக்க இரவு காவலரை சுழற்சி அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.

ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தர வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும்; விதிகளை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



அக இ - புதியதாக அரசு பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 02.11.2015 முதல் 06.11.2015 வரையிலும், உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 16.11.2015 முதல் 20.11.2015 வரையிலும் மாவட்ட அளவில் நடத்த உள்ளது.



CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15

Popular Posts