கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய...

அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்ஊதியப்பட்டியல்கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதாஎந்த நாளில்சம்பளம்
வரவுவைக்கப்படும்போன்றதகவகல்களைநீங்களேஇணையத்தில்தெரிந்துகொள்ளலாம்.
1. www.treasury.tn.gov.in/Public/ ecstokenno.aspxஎன்ற தளத்திற்குச்செல்லவும்.
2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.
3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.
4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள்வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப்புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)
5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களேஎந்த தேதியில் உங்கள் அலுவலர்கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார்எந்த தேதியில் அதுகாசாக்கப்படும் என அறியலாம்.
மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும்அறிய முடியும்.

GPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்ய

GPF சந்தாதாரர்கள் தங்களது GPF கணக்கில்தங்களது CELL PHONE NUMBER ஐ பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது .


 எனவே GPF சந்தாதார்கள்

http://www.agae.tn.nic.in/onlinegpf/

என்ற இணைப்பை CLICK செய்து தங்களது CELL NUMBER ஐ பதிவு செய்யவும் . நண்பர்கள் இத்தகவலை முடிந்தவரை SHARE செய்து அனைத்து GPF சந்தாதாரர்களையும் இத்தகவல் சென்றடைய வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர்க்கல்வி பயிலத் தலைமையாசிரியரே அனுமதி வழங்கலாம் - அரசு உத்தரவு


2014-2015 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து  பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. முப்பருவ கல்வி முறை  தமிழ்கல்வி முறையில் தான் செயல்பட்டு வருகிறது. 

இந்த கல்வி  ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ கல்வி முறையில்  ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்  என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏழை மாணவர்களின் கல்வி  தரத்தை உயர்த்தும் வகையில் 2013ம் ஆண்டு ஆங்கிலவழி முப்பருவ  கல்வி திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. 

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால்  தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை மக்களை  பாதுகாக்க முடியும். 


 அரசு பள்ளிகளில் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியை அரசு  கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க  தொடங்கும். இத்திட்டத்தில் முதல் பருவத்தேர்வு, இரண்டாம்  பருவத்தேர்வு, மூன்றாம் பருவத்தேர்வு என்று மூன்று பருவத்தேர்வுகள்  நடத்தப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசின் செலவினங்கள் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: பொது வருங் கால வைப்பு நிதியின் வட்டியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, அதன் பயனாளி களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.7 சதவீதமாகத் தொடரும். 2014-15 நிதியாண் டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஜி.பி.எஃப் வட்டி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

Excess BTs/ SGT Details Called by DEE | ஊராட்சி/ நகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2013ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைப் படி உபரியாக உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு

TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet, மதிப்பெண் % கொடுத்தால் போதும்..

புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Click Here For Excel File Download


     இதில் முதல் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here & Enter your DTED Overall % Here) என்றபகுதியில்   +2, மற்றும் பட்டயபடிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

      அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு  மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...

      இதில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here ,Enter Your UG % Here & Enter your B,ed Overall % Here) என்றபகுதியில்   +2, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் படிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

     அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு  மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...

TET புதிய முறையில் WEIGHTAGE கணக்கிடுவது எப்படி?

கணக்கிடும் முறை

முதலில் தாள் இரண்டுக்கு கணக்கிடும் முறை குறித்து காணலாம்

முதலில் உங்களின் +12 மதிப்பெண்
உதாரணமாக  1050,   1050/1200*100=87.5      87.5/100*10=8.75
 பட்டம்         52%  so                                                  52/100*15=7.8
பட்டயம்     86%                                                        86/100*15=12.9
TET         102                 102/150*100=68                    68/100*60=40.80

TOTAL                                                                                            70.25.



தாள் 1 க்கான வழிமுறை

+12 மதிப்பெண்   1050  1050/1200*100=87.5      87.5/100*15=13.25
பட்டயம்     86%                                                        86/100*25=21.5
TET               91                                                            91/150*60=36.4

TOTAL                                                                                           71.15

TNTET - 5% மதிப்பெண் தளர்வினை 2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும்

TET ஆசிரியர் தேர்வில், 2013 தேர்வுக்கு அரசின் 5 மதிப்பெண் சதவீத தளர்வு செல்லும்.2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும், என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்,தகுதி தேர்வைநடத்துகிறது. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 60சதவீதம்பெற வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்காக 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என, பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்த 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது. 5 சதவீத மதிப்பெண்தளர்த்தப்பட்டதை எதிர்த்தும், 2012ல் நடந்த தேர்வுக்கு, மதிப்பெண் தளர்வை விரிவுபடுத்த கோரியும்,சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தேர்ச்சி மதிப்பெண்ணை, 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என, பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்து, மதிப்பெண் தளர்த்துவதில்,கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு பதிலளித்துள்ளது. எனவே, அரசு பரிசீலிக்கவில்லை எனக்கூற முடியாது.


தகுதி தேர்வு, போட்டி தேர்வு அல்ல; அது, தகுதி பெறுவதற்கான தேர்வு.மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள, ஆசிரியர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம்.இடஒதுக்கீடு பிரிவினருக்காக, தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைப்பதற்கு, அரசு, கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் அதிகாரத்தை எதிர்த்து, வழக்கு தொடரப்படவில்லை.
எனவே, 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது செல்லும். மதிப்பெண் தளர்த்தியதை, 2012ல் நடந்த, ஆசிரியர்தகுதி தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது. முன் தேதியிட்டு அமல்படுத்தினால்,குழப்பம் ஏற்படும். ஏற்கனவே நியமனம் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர்.இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் 200% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் தற்போது அகவிலைப்படி 200 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஊதியக்குழு அமைக்கப்பட்டது. 6வது ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலருக்கு உயர்த்தப்பட்ட ஊதியம், அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. 
 
ஊதியக்குழு பரிந்துரைத்தாலும், பணி இடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கை, சொந்த பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதை பெற முடியவில்லை. எனவே அவர்கள் அனைவருமே 2006ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் மற்றும் அகவிலைப்படியைத்தான் பெறலாம்.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட்டது, 6வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தியது. 2006ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் பெறுபவர்களுக்கு, கடந்த 3ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்ட அகவிலைப்படி உயர்வை பெற முடியாத நிலையில் இருந்தனர். அவர்களின் அகவிலைப்படி 183 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்ந்து நீடித்தபடி இருந்தது.
தற்போது அவர்களுக்கும், அகவிலைப்படியை 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக உயர்த்தி தனியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக நிதித்துறை (செலவினம்) செயலாளர் த.உதயசந்திரன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.
 
 அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் ஊதிய விகிதங்களுக்கு கீழ்வரும் அலுவலர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், எழுத்தர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

NTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet, மதிப்பெண் % கொடுத்தால் போதும்..

புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Click Here For Excel File Download


     இதில் முதல் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here & Enter your DTED Overall % Here) என்றபகுதியில்   +2, மற்றும் பட்டயபடிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

      அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு  மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...

      இதில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here ,Enter Your UG % Here & Enter your B,ed Overall % Hereஎன்றபகுதியில்   +2, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் படிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...

     அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு  மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...

ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் இறுதியில் நடைபெறும் - பத்திரிக்கை செய்தி


மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படிக்கவும்

இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். 
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது. 
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர். 
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். 
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக 
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html 
ஆதங்கமாக தெரிவித்துள்ளார். 
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. 
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman } 
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை
PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

சமூக நலம் - குழந்தைகள் நலம் - ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்கும் மாநில அரசுப் பெண் பணியாளர்களுக்கு 180 நாட்கள் குழந்தை தத்தெடுப்பு விடுப்பு ஆணை வெளியீடு



Popular Posts