நவ. 16-அரசு உதவி பெறும் பள்ளிகளில்
நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப் பெண் பெற
வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க
பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் கிளை உத்தர விட்டுள்ளது.
நெல்லை பாளையங் கோட்டை மிலிட்டரி லைன்
சி.எம்.எஸ்.மான் கோமரி தொடக்கப் பள்ளி தாளாளர் கிப்சன் உயர்நீதிமன்ற
கிளையில் தாக்கல் செய்த மனு:
சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளி நெல்லை சிஎஸ்அஸ். டயோசி சன் கீழ் இயங்கி வருகிறது.
கடந்த தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்
வெளியிட்ட அறிவிக்கை அடிப் படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர்
தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்ய
வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுத்து விட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து தரப்பினரும் 60 சதவீத மதிப் பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
தகுதித் தேர்வு தொடர்பாக தேசிய ஆசிரியர்
கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் அரசு உதவி பெறும் தனியார்
பள்ளிகளில், சிறுபான்மை பள்ளிகள், தங்களது பள்ளிகளில் ஆசிரியர் பணியி
டங்கள் காலியாகும் போது, அந்த பணியிடத்திற்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள்
குறைந்தபட்சம் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை அந்தந்த
பள்ளி நிர்வாகிகளே முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகள்,
சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில்
கண்டிப்பாக 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அரசு நிர்பந்தம்
செய்யக் கூடாது. தகுதித் தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக மதிப் பெண்
பெற்றவர்களை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், சிறு பான்மை பள்ளிகளில்
ஆசிரியராக நியமிக்க உரிய அனுமதி வழங்க பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர், பள்ளி கல்வித்துறை முதன்மை
செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க தாக்கீது அனுப்ப
நீதிபதி உத்தரவிட்டார்.