தமிழகத்தில், இதுவரை நடத்தப்பட்ட 3 ஆசிரியர் தகுதி தேர்விலும் குறைந்த
அளவிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம்
3ம் முறையாக நடத்தப்பட்ட தகுதி தேர்வில் முதல் தாளில் 12 ஆயிரத்து 596
பேரும், 2ம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், 11 ஆயிரத்து 922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2 ஆயிரத்து 881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஆயிரத்து 821 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது. மொத்தம் 16 ஆயிரத்து 624 ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கல்விச் சான்று மற்றும் பிற தகுதிகள் உள்ளிட்டவைகளை சரிபார்த்து தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் பணி வழங்கப்படும் என தெரிகிறது.