தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை

பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.


🌟தொடக்கக்கல்வித்துறையில் கடந்த 2017 மே மாதம் நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப் பின்பு ஏற்பட்டுள்ள ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2017 தேர்ந்தோர் பட்டியலின் படி இரண்டாம் கட்ட பதவி உயர்வுக் கலந்தாய்வு 19.03.2018 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  ந.க.எண்.009464/ டி1/ 2017 நாள்: 15.03.2018 ன் படி அறிவிக்கப்பட்டது.


🌟ஆனால் செயல்முறை ஆணை வெளியான மறுநாளே எவ்விதக் காரணமுமின்றி மேற்படி கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியானது, இது தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 01.01.2017 தேர்ந்தோர் பட்டியலின்படி பதவி உயர்வு வழக்கிட வேண்டுமெனில் 31.03.2018 க்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்திட வேண்டும். பதவி உயர்வு கலந்தாய்வு தாமதமானதற்கு தொடக்கக்கல்வித்துறையே முழுக்க முழுக்க பொறுப்பாகும். இதனால் தகுதியுள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.


🌟இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரிடம் நமது இயக்கத்தின் சார்பில் இன்று (22.03.2018) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.


🌟எனவே, தொடக்கக்கல்வித்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 27.03.2018 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் முன்பு வட்டார அளவில் ஆர்பாட்டம் நடத்திட மாநில மையம் முடிவெடுத்துள்ளது.


🌟நீதியை நிலைநாட்டிட, நியாயத்தைப் பெற்றிட நடைபெறும் இப்போராட்டத்தைப் பேரெழுச்சியுடனும், நமது இயக்கத்திற்கேயுரிய இலக்கணத்தோடும் நடத்திட அனைத்து வட்டார,  நகரக்கிளைகளையும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.


⚡தோழமையுடன்;                      

ச.மயில்,

பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

DSE PROCEEDINGS-கரும்பலகையில் எழுதும் அளவு குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்



SABL முறையில் வகுப்பு 1 முதல் 4 வரை பாடத்திட்டம் எழுத தேவையில்லை-RTI




DEE -ஆண்டு விழாக்கள் மாலை 6 மணிக்குள் முடிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!


கல்வித்துறையில் SC/ST ஆசிரியர்கள் மேல் வன்கொடுமைகள் நடைபெறுவதை தடுத்து ஒழுங்கு மற்றும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் 1989, திருத்த விதிகள் 2016ன் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கும்படி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு:-



தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தான் பணிபுரியும் பள்ளியில் உள்ளூர் விடுமுறை விடப்படும் நாளன்று பணியிடைப் பயிற்சியில் பங்கேற்க நேரிடின், அன்னார் அப்பயிற்சி பெற்ற நாளை ஈடு செய் விடுப்பாக துய்க்க முடியுமா? RTI மூலம் பெறப்பட்ட தகவல்!!!



ஒரு ஆசிரியர் தமது பணிக்காலத்தில் எத்தனை முறை பதவி உயர்வு பணித்துறப்பு (தற்காலிக உரிமை விடல்)மேற்கொள்ள முடியும்? RTI தகவல்


யாருக்காவது நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளீர்களா..? எப்போது சிக்கல் வரும் தெரியுமா..?

சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்
கேரன்டி கையெழுத்து

வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலு த்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.

கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக் கிறது.

ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவண த்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவண த்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவண த்தில் கையெழுத்து போடுகையில் விதி விலக்கு உண்டு)

சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்?

நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல் லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது. அல்லது புரோ நோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும் போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதி மன்றம் விசாரணைக்கு வரச்சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது.

அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.

நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற் பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

பழைய புத்தகங்கள் சேகரிக்க இயக்குனர் உத்தரவு


Alagappa University B.Ed (DDE) Admission Notification 2018-2020


உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (மறுபதிப்பு)

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை

1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/-
2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.500/-
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/-

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -ரூ.200/-
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- ரூ.1000/-
6. பாரதியார் பல்கலைக் கழகம்- ரூ.500/-
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -ரூ.1000/-
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -ரூ.1500/-
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ரூ.500/-
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்-
ரூ.500/-
12. பெரியார் பல்கலைக் கழகம்- ரூ.250/-
13. Tamilnau Teacher Education University ரூ.350/-
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- ரூ.500/-

தமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்படும் ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். என்றால் என்ன?


DEE -தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி BEd சேர்க்கை- தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!


வருமான வரிப் படிவத்தில்/ ஊதியத்தில் CPSக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் 50,000ஐ 80CCD1(B) ன் கீழ் பிரித்து காட்டுவதற்கான தெளிவுரை


அரசு உதவி பெரும் பள்ளியில் ஒரு ஆசிரியர் பணிபுரிந்து பணிதுறப்பு (Resign ) செய்து மற்றொரு அரசு உதவி பெரும் பள்ளியில் பணிமுறிவின்றி சேர்ந்தால் முன்னர் பணிபுரிந்த பள்ளியில்பெற்ற ஊதியத்தையே தொடர்ந்து பெறலாம் -என்பதற்கான அரசாணை


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில் இருப்புத்தொகை ரூ.5000/- பராமரிப்பு செய்ய வேண்டுமா? இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுமா?


த.அ.உ.சட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு குறித்த அரசுக் கடிதம்


ஊதிய நிர்ணயம் - விதி 4(3) - மாநிலக்கணக்காயர் தற்போது நடைமுறையில் இல்லை என்ற உத்தரவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது; அரசு இதுவரை விதி 4(3) ஐ வாபஸ் பெற்று உத்திரவிடாததால் நடைமுறையிலிருப்பதாகவே கருத வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு




தொடக்கக் கல்வி - அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை தமிழில் மட்டுமே எழுத வேண்டுமென இயக்குனர் உத்தரவு


தணிக்கை - ஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04.2014க்குப் பின்னர் அரசு தகவல் தொகுப்பு, விவர மைய அலுவலகத்திலிருந்து, மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செயதல் - 31.03.2014 வரை நிலுவை இருப்பின் நடவடிக்கை தொடர கோரி இயக்குனர் உத்தரவு


ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

SG/MG பெறும் வங்கி கணக்கை, VEC கணக்கிலிருந்து பள்ளி மேலாண்மை குழு கணக்காக பெயர்மாற்றம் செய்திட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


Popular Posts