குழந்தைகள் தொடர்பான பிரச்னை: பள்ளிகளில் ஆலோசனை பெட்டி

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஜன., முதல் குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாதுகாப்பு ஆலோசனை பெட்டி வைக்கப்பட உள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள், கல்வி, மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள், பள்ளி, வீடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் குறித்து "சைல்டு லைன்" 1098க்கு, நவம்பரில் 104 பேர் அழைத்தனர். இதில் 34 அழைப்புகளுக்கான பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுள்ளது. இரு குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 
மற்ற அழைப்புகளுக்கான விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன. பாலியல் தொல்லை குறித்த, பிரச்னைகள் எதுவும் வரவில்லை. குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் ஜிம் ஜேசுதாஸ் கூறியதாவது:
உடல், மனரீதியாக குழந்தைகள் துன்புறுத்தப்பட்டால், 1098க்கு போன் செய்யலாம். நலக் குழுமம் சார்பில், மதுரை காக்கை பாடினியார் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை பெட்டி அமைக்கப்பட்டது. 
குறிப்பாக பெண் குழந்தைகள் திடீரென ஒரு வாரம் வரை பள்ளிக்கு வராமல் இருந்தால், உடனடியாக கண்காணிக்க வேண்டும். குழந்தைத் திருமணமோ, கடத்தலோ அல்லது வேலைக்கோ அனுப்பப்பட்டிருக்கலாம். மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இம்முறையை பயன்படுத்தினால் கடைசிநேர பிரச்னையை தவிர்த்து, ஆரம்பத்திலேயே தீர்வு காணலாம். 
கல்வி, பொருளாதார ரீதியான பிரச்னைகள், மனநல ஆலோசனைகளும் வழங்கப்படும். கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவின் பேரில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஆலோசனை பெட்டி, வரும் ஜனவரி முதல் அமைக்கப்படும் என்றார்.

மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்களே பொறுப்பு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை

"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்,' என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித விவரம், பள்ளி வளாகத்தில் பிளக்ஸ் பேனராக வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சில பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி வெளியாட்கள் நூழைகின்றனர்; பள்ளிக்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்துகின்றனர் என சில இடங்களில் இருந்து புகார்கள் நேரடியாக வந்தன. தலைமை ஆசிரியர்கள் பொறுப்புடன் பணியாற்றி, இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும்.

பொதுத்தேர்வு வர உள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் கற்பித்தல் பணி பாதிக்கப்படக்கூடாது. தேர்வு பணிகளுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாது. லேப்-டாப், சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது. இப்பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளி வளாகத்துக்குள் பள்ளியை சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பள்ளிக்குரிய பொருட்கள் பாதுகாப்பு குறைவு ஏற்படாத வண்ணம் கவனமாக வைத்திருக்க வேண்டும். இதில், ஏதேனும் குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க வேண்டி வரும்.
இவ்வாறு, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வாக்கிங்'க்கு தடை?
திருப்பூரில், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் "வாக்கிங்' செல்லும் வழக்கம் உள்ளது.

இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்ட போது, ""பள்ளியை சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கூறியுள்ளார். முகம் தெரியாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்பதே அந்த உத்தரவு. "வாக்கிங்' செல்பவர்களை அனுமதிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் விருப்பத்துக்கு உட்பட்டது,'' என்றார்.

இன்றைய டிடோஜாக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்

இன்று (26.12.2014) சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
 
கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கு பெற்றன. பேரணியை ஏற்கெனவே தாங்கள் நடத்திவிட்டோம் எனவும், மீண்டும் பங்கு கொள்ளமாட்டோம் என முக்கிய சங்கம் பாதியிலேயே வெளியேறியது. பின்பு மற்ற 6 சங்கங்கள் கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.  
 
வருகிற 30.12.2013 அன்று தமிழக அரசுடன்  சந்தித்து கோரிக்கை வைக்கப்பட உள்ளது. அதையடுத்து 10.01.2014ல் மாவட்ட அளவில் டிடோஜாக் கூட்டம் நடத்தவும், 11.01.2014 அன்று டிடோஜாக் சார்பில் செய்தியாளர்களுடன் சந்திப்பு (PRESS MEET)ம், 02.02.2014 அன்று மாவட்ட தோறும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வெளியேறிய சங்கத்துடன் மீண்டும் சந்தித்து பேரணியில் பங்க்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி! நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அரசாணையில் 89 அறிவிப்புகளை வெளியிட்டது.
 இதற்கு பின்பும் அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படவில்லை என ஆசிரியர்கள், பட்டு வளர்ச்சி ஆய்வாளர்கள், ஊர்புற நூலகர்கள், சாலை ஆய்வாளர்கள், புள்ளியல் துறை அலுவலர்கள் முறையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீதித்துறையில் சிராஸ்தார், ஏஏஓ, மேலாளர்களுக்கான கிரேடு ஊதியம் ரூ.4,900 லிருந்து ரூ.5,100, நகல் எடுப்போர், பரிசோதகர்களுக்கு ரூ.2,000லிருந்து ரூ.2,400, உதவியாளர், பெஞ்ச் கிளார்க் அலுவலர்களுக்கு ரூ.2,400லிருந்து ரூ.2,800, ரெக்கார்டு கிளார்க், அசிஸ்டென்ட் ரூ.2,000லிருந்து ரூ.2,400 என உயர்த்தி நிதித்துறை ஒப்புதலுடன் துறை ரீதியான அரசாணை நவ. 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள் எப்போதும் நிதித்துறை சார்பில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது நிதித்துறை சார்பில் துறை ரீதியான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.சங்கர் கணேஷ் அவர்கள் கூறுகையில், ‘’இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் நீதித்துறைக்கு தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு இடைநிலை ஆசிரியர்களை வஞ்சித்து வருதாக கருது கிறோம்’’ என்றார்.அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ நீதித்துறை நெருக்குதலின் பேரில் அந்தத் துறைக்கு மட்டும் ஊதிய உயர்வுக்கான அரசாணை துறை ரீதியாக வெளியிட்டுள்ளனர். அனைத்து தரப்பில் உள்ள குறைகளை களைய வேண்டும்’’ என்றார்.

கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்சம் கொட்டியும் பந்தாட்டமா

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்கிறது. ரூ.பல லட்சங்களை கொட்டி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 160 மாணவர்களுக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் பணியில் நியமிக்கலாம். பின், ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் வீதம் கூடுதலாக நியமிக்கலாம். இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனங்கள் இருக்க வேண்டும். மாநில அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.8.2013ன் படி ஆசிரியர்கள், மாணவர்கள் விகித கணக்கெடுப்பு நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது. 
இதையடுத்து, "சர்பிளஸ்' ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாசாரம் அடிப்படையில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய (பணி நிரவல்) பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டார். இதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் இதற்கான பணிநிரவல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ""ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும் என ரூ. பல லட்சம் கொடுத்து, பணியில் சேர்ந்தோம். "சர்பிளஸ்' என்ற பெயரில், இடமாற்றம் செய்தால் குடும்ப சூழ்நிலை பாதிக்கும்,'' என்றனர்.
பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் முருகன் கூறியதாவது: கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் பணிநிரவல் நடத்தினால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு. பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தற்காலிகமாக இம்முடிவை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்கள் எதிர்ப்பையும் மீறி பணிநிரவல் நடத்தப்பட்டால், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு, ஜூனியர் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், என்றார்.
ஒப்புதலில் சிக்கல்:
ஒரு உதவி பெறும் பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு ஆசிரியர் மாற்றப்படும்போது, சம்பந்தப்பட்ட பள்ளி சார்பில், "அந்த ஆசிரியரை ஏற்றுக்கொள்கிறோம் என்ற ஒப்புதல்' அளிக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பல பள்ளிகள், இதற்கான ஒப்புதலை அளிக்க முன்வரவில்லை. தற்போது இருக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையே போதும் என்ற நிலையை எடுக்க உள்ளதாம். இதனால், பணிநிரவல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம், என கல்வித்துறையினர் கூறுகின்றனர்.

மேற்கு ரயில்வேயில் 5775 குரூப் D பணியிடங்கள் ; தகுதி: 10ஆம் வகுப்பு /ITI

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்:
RRC/WR/02/2013

கல்வித்தகுதி:
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு; 18-33 க்குள்ளிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:
Rs.100 இதனை “Assistant Personal Officer (Recruitment) RRC-WR “ என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட போஸ்டல் ஆர்டர் ஆக எடுத்து அனுப்பவேண்டும்.(sc,st பிரிவினர் ,பெண்கள்,சிறுபான்மையினர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:
www.rrc-wr.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்படிவமாதிரியை ஏ4 அளவு தாளில் தாயார் செய்து பூர்த்தி செய்யவும்.Photo ஒட்டவும்.18 வது காளத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழியை ஆங்கில சிறிய எழுத்தில் எழுதி தேவையான இடத்தில் கையொப்பம் இடவும். Sc,st,physicaly handicapped certificate போன்றவற்றை சுய அட்டெஸ்ட் நகல்களை வைத்து அனுப்பவும்.Sc,st பிரிவினர் விண்ணப்பத்தின் முகவரி பகுதில் அருகில் உள்ள ரயில் நிலையத்தின் பெயரை குறிப்பிடவும்.விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய sc,st ,obc பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஆகிய படிவமாதிரிகள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டது .இதயை டவுண்லோடு செய்து பயன்படுத்தவும்.

இணையதளத்தின் முகவரி:
www.rrc-wr.com

விண்ணப்பக் கவரின் மீது “APPLICATION FOR THE POSTS IN PAY BAND I/GP RS.1800-OF WESTERN RAILWAY” என்று ஆங்கில எழுத்தில் எழுதவும்

விண்ணப்பபடிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant personnel officer(Recruitment),
Railway recruitment cell,
Western railwayAlibhai premji marg,
Grant road(east),
Mumbai-400007

கடைசி நாள்: 14.1.2014

பள்ளிக் கல்வித் துறை - பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கருக்கான வினா வங்கி

முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை.

முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 30, 31.12.13 நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 5 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. 
 
மொத்தம் 2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.இதில் தமிழ் பாட தேர்வு முடிவு நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 
 
தேர்ச்சி பெற்றவர்களில் வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில்1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள்அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய (694 தேர்வர்கள் ) விவரம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் °இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.இத் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது.

எஸ்.எம்.எஸ்., தகவல்கள், இனி அரசு அலுவலகங்களில், அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆக்கப்பட உள்ளது. பணம் செலுத்துதல், பதிவு உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு. எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
மத்திய அரசின், 100க்கும் மேற்பட்ட துறைகளில், மொபைல் மூலமான நிர்வாகத்தை அமலாக்கும், பரீட்சார்த்த திட்டம், நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதன்படி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், 241 அப்ளிகேஷன்ஸ் வசதி, நேற்று பரிசோதனை அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. 
 
 இதன்படி, தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி, டைரக்டரி சர்வீஸ் ஆகியவற்றில், இத்திட்டம் முதல் கட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. "மொபைல் சேவா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் குறித்து, மத்திய அரசின், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர், சத்ய நாராயணா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பின், டிக்கெட் உறுதியானதும், மொபைல் போனுக்கு வரும், எஸ்.எம்.எஸ்., தகவல், முழு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 
 
இதை பின்பற்றி, அரசு துறைகளில், எஸ்.எம்.எஸ்., தகவல்கள், முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. மொபைல் போன் மூலமான, இ கவர்னன்ஸ் நடைமுறை, படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது, டிஜிட்டல் முறையில் கையெப்பமிடப்பட்ட சான்றிதழ்கள், ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதே பாணியில், மொபைல் போன் மூலம் அனுப்பப்படும், எஸ்.எம்.எஸ்., தகவல்களும், தகுந்த ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. அனைத்து அரசு துறைகளிலும், டிஜிட்டல் கையெழுத்துகள் ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை, நாங்கள் துவக்கியுள்ளோம். 
 
இது நடைமுறைக்கு வந்ததும், பொதுமக்களுக்கு, இந்த சேவையின் மூலம், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். விண்ணப்பம் பெறப்பட்டதற்கான தகவல், விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கான தகவல் ஆகியவை, எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்பி வைக்கப்படும். இதன் பயனாக, அரசு அலுவலகங்களில், பேப்பர் பயன்பாட்டை குறைக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்

ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 இந்தியன் ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி அவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராவது பயணத்தை மேற்க்கொள்ள முடியும். இதற்காக குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே ரயில் நிலைய மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை கொடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் போன்ற விழாக்களுக்கு குழுவாக செல்பவர்களது டிக்கெட்டுகளையும் மாற்றிக் கொள்ள இற்த திட்டம் அனுமதிக்கின்றது. பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்களும் இந்த வசதியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட அரசு ஊழியர் செல்ல முடியாத போது வேறொரு ஊழியரின் பெயரில் அவரது டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம்.

பயணம் செய்ய உள்ள ஊழியரின் உயர் அதிகாரி மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டை அந்த கல்வி நிறுவனத்தின் முதல்வரின் ஒப்புதலோடு வேறொரு மாணவருக்கு மாற்றிக் கொள்ள முடியும். மாணவர்களின் டிக்கெட்டுகளை மாற்ற ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apply for Voter ID Online - Step by Step Process & Tutorial | இணையதளத்தில் வாக்காளர் அட்டையை பதிவது எப்படி?

Hello , everyone . Today we are going to look at the process of applying for a Voter ID Card . Today, voters ID card is a must for casting vote in India. It also acts as an identity card that helps you to get many services that are meant for law-abiding citizens. Hundreds of youngsters become new voters each year as they turn 18. With just a click of few buttons, you can apply for your election card online. Kindly Read the Guidelines for applying for an Indian Voter ID Card.


To apply for the Voter ID Card Online  , Kindly follow the simple following steps

Step 1 :  Before applying for Voter ID Card online , Make sure you have a valid Phone Number (Other than Landline Number ) & a email id  & a proper internet connection with good internet speed

Step 2 : Open your web browser ( Preferably either Google chrome or Mozilla Firefox )  in your personal computer

Step 3 :   Type the following in the address bar : http://eci-citizenservices.nic.in and press enter button

Step 4 :  The following page will be displayed in the web browser .
Description: Step+1


Step 5:
 Since we are applying for the first time for a voter ID Card online , we need to click on New User Registration  . So kindly click on the New User Registration
Description: Step+2
Step 6 :

Once you click on the new user registration , The following page will be displayed on the screen of your web browser
Description: Step+3
Step 7 :

 As said earlier , we need a working phone number and email id . So enter your Phone number and Email id
Description: Step+4
Step 8 :

 Once you finish entering your email id and Phone number , click on the Register button
Description: step+5
 Step 9 : Once you click the reister button , a message with a verification number will be sent to your mobile . Wait for some time , it may take 2-5 minutes for getting a verification code to your mobile
Description: Step+6
Step 10 :

Once you recieve verification Number , enter the verification number in the space provided  and a new page will be loaded as following , once again enter the Verification code as shown in the below image
Description: Step+7
Description: step+8
After Entering the verification code , Enter Proceed 
Description: step+9
Step 11 :
The above mentioned page will be loaded if you have entered the valid verification code and once you click on your state the following page will be loaded 
Description: step+10
Description: step+11

Step 12 ::
Kindly make sure you fill all the details mentioned on the page and click on Submit . You will be notified immediately if you haven't filled anyone of the column's provided . So make sure you fill all the items and once again click on Submit . Once you submit a page will load which will provide a Application ID Number . Save it for further enquires and to track your application status
And You can have a look at the Guidlines for filling the Application for Voter ID card or Form 6
GUIDELINES FOR FILLING UP THE APPLICATION FORM FOR APPLYING A NEW VOTER ID CARD (FORM 6 )::
Who can file Form-6
1. First time applicant on attaining age of 18years or more on the first day of January of the year with
reference to which the electoral roll is being revised.
2. Person shifting his / her place of ordinary residence outside the constituency in which he / she is already
registered.
When Form-6 can be filed
1. The application can be filed after draft publication of electoral roll of the constituency. The application is to
be filed within the specific days provided for the purpose. Due publicity is given about the above period
when the revision programme is announced.
2. Only one copy of the application is to be filed.
3. Application for inclusion of name can be filed through out the year even when the revision programme is
not going on. During non-revision period, application must be filed in duplicate.
Where to file Form-6
1. During revision period, the application can be filed at the designated locations where the draft electoral roll
is displayed (mostly polling station locations) as well as the Electoral Registration Officer and Assistant
Electoral Registration Officer of the constituency.
2. During other period of the year when revision programme is not going on, the application can be filed only
with the Electoral Registration Officer.
How to Fill the Form-6
1. The application should be addressed to the Electoral Registration Officer of the constituency in which you
seek registration. The name of the constituency should be mentioned in the blank space.
2. Name (With Documentary Proof)
The name as it should appear in the electoral roll and Electors Photo Identity Card (EPIC) should be
furnished. The full name except the surname should be written in the first box and surname should be
written in the second box. In case you do not have a surname, just write the given name. Caste should not
be mentioned except where the caste name is used as part of the elector’s name or a surname. Honorific
appellations like Shri, Smt. Kumari, Khan, Begum, Pandit etc. should not be mentioned.
3. Age (With Documentary Proof)
The age of the applicant should be eighteen or more on 1st January of the year with reference to which the
electoral roll is being revised. The age should be indicated in years and months.
e.g. A person born on or upto 1/1/1991 will be eligible for inclusion in the electoral roll which is being revised with reference to 1/1/2009. Persons born on 2/1/1991 or thereafter upto 1/1/1992 shall be eligible for inclusion during the next revision with reference to 1/1/2010.
4. Sex
Write your sex in full in the space provided e.g. Male / Female. Eunuchs have to choose from one of these
options.
5. Date of Birth (With Documentary Proof)
Fill up the date of birth in figures in the space provided in dd/mm/yyyy.
Proof of date of birth to be attached are as under:
(i) Birth certificate issued by a Municipal Authorities or district office of the Registrar of
Births & Deaths or Baptism certificate; or
(ii) Birth certificate from the school (Govt. / Recognised) last attended by the applicant or
any other recognised educational institution; or
(iii) Illiterate or semi-illiterate applicant who is not in possession of any of the above
document are required to attach a declaration in prescribed format by either of the
parents already included in the electoral roll in support of the applicants age. The
format will be supplied on demand.
N.B. In the case of applicants born on or after 26.01.1989, only birth certificate issued by the
Municipal Authorities or district office of the Registrar of Births & Deaths is acceptable.
6. Place of Birth
In case born in India, please mention name of place like Village / Town, District, State.
7. Relation’s Name:
In case of unmarried female applicant, name of Father / Mother is to be mentioned. In case of married
female applicant, name of Husband is to be mentioned. Strike out the inapplicable options in the column.
8. Place of Ordinary Residence
Fill up the full and complete postal address including PIN code where you are ordinarily residing and want
to get registered, in the space provided.
Proof of ordinary residence to be attached are as under:
(i) Bank / Kisan / Post Office current Pass Book, or
(ii) Applicants Ration Card / Passport / Driving License / Income Tax Assessment Order, or
(iii) Latest Water / Telephone / Electricity / Gas Connection Bill for that address, either in the
name of the applicant or that of his / her immediate relation like parents etc., or
(iv) Postal department’s posts received / delivered in the applicant’s name at the given address.
NOTE: If any applicant submits only ration card as proof of address, it should be accompanied by one more proof of address out of the above categories.
9. Details of Family Members Already Included in the Electoral Roll
Please fill up name and other particulars of immediate family members i.e. Father /
Mother / Brother / Sister / Spouse included in the current electoral roll of the constituency.
Name of any other relation like uncle, aunt, cousin brother / sisters etc. not to be mentioned.
10. Declaration
Please indicate date from which you are residing in the given address. In case the exact date is not known,
fill-up month and year. If your name is already included in the electoral roll of any other constituency, please write legibly the full previous address with PIN code. If you already have been issued with a Photo Identity Card by the Election Commission, please mention the card number (printed on the front side) and date of issue (printed on the back side) of the card in the space provided. Please attach a self-attested photocopy of both sides of the card.

11 .Miscellaneous 
In many places the photograph of the elector is also printed in the electoral roll. You have the option to submit one recent coloured passport-size photograph alongwith the form. The photograph will be used to print your image in the electoral roll and issue of identity card, if required.
Please also give your full name and address on the acknowledgement and intimation portions.
Please give your mobile number and E-mail I.D in the Form , which is optional , as the same ,if given, may be used by the Electoral Registration Officer for further communication with the applicant whenever required
Some of the Most frequently asked questions by the applicants and Answers Explained::
Q 1. For every constituency, there is a list of voters which is called electoral roll. What is the minimum age for enrollment in an electoral roll?
Ans. Eighteen and For every constituency, there is a voters list Article 326 of the Constitution, and Sec. 19 of R. P. Act, 1950 stipulate that the minimum age for registration of a voter is 18 years.
Q 2. Was 18 the minimum voting age in India from the beginning?
Ans. No , Earlier, the age for registration of a voter was 21 years. Through the 61st amendment Act, 1988 of the Constitution read with Act 21 of 1989 amending the R. P. Act, 1950, the minimum age of registration of a voter has been brought down to 18 years. This has been made effective from 28th March, 1989.
Q 3. Which is the relevant date for determining the age qualification of 18 years? Suppose, you have completed 18 years of age today. Can you get yourself registered as voter ?
Ans. According to Section 14 (b) of the R. P. Act, 1950, the qualifying date means the first day of January of the year in which the electoral roll is prepared or revised.
Q 4. Can a non-citizen of India become a voter?
Ans. No , A person who is not a citizen of India cannot be registered as a voter. Article 326 of the Constitution read with Sec. 16 of R. P. Act, 1950 clarify the point.
Q 5. Can a non-resident Indian citizen become a voter?
Ans. According to Section 19 of the R. P. Act, 1950, only a person who is ordinarily resident in a constituency is entitled to be registered in the electoral roll of that constituency. However, such of the non-resident Indian Citizens who are employed under Govt. of India in a post outside India are eligible to be registered as voters in terms of Sec 20 (8) (d) read with Sec 20 (3) of the R. P. Act, 1950.
Q 6. If I am working and living in Delhi, can I be a voter in my native village?
Ans. No , If you are working in Delhi and residing there, you are an ordinary resident of Delhi in terms of Sec 19 (b). Therefore you can be enrolled at Delhi only and not in your native village.
Q 7. Can one be enrolled at more than one place?
Ans. No , A person cannot be enrolled as a voter in more than one place in the same constituency or in more than one constituency in view of the provisions contained under Sec. 17 and 18 of R. P. Act, 1950.
Q 8. How can I get registered/enrolled in the Electoral Roll?
Ans. You have to submit a filled in Form - 6 to the ERO of the Assembly Constituency.
Q. 9. What is the procedure to make corrections in such names / other details that have been misspelt in the Electoral Roll?
Ans. For incorporation of corrections in the Electoral Rolls, You have to submit Form - 8 to the ERO of the Assembly Constituency.
Following are the various forms useful for registration as voter, corrections, change in address etc.
For inclusion of names Form 6
For any objection on inclusion of names Form 7
For correction of entries in the Electoral Rolls Form 8
For transposition of entry in electoral roll Form 8A
Q.10. I have shifted my residence recently. How do I ensure that I am enrolled in my new place of residence and my name is deleted from the old place?
Ans. In case the new residence is in the same constituency please fill Form 8A otherwise form 6 and submit to the ERO (SDM) or the AERO of the area of your new residence.
Q.11. I have shifted my residence recently. I have Photo EPIC Card with the old address. Can I get new EPIC Card for the present address?
Ans. First of all please ensure that you have enrolled yourself in the Electoral Roll of the concerned AC, where you are now residing following the procedure given in Ans. No.10. Subsequently, a new card at the present address will be issued to you.
Q.12. My old EPIC Card is defective. I would like to have a new EPIC Card with correct particulars. What is the procedure?
Ans. You can get your I Card rectified by depositing it in the Office of the ERO concerned or at Photography Centre when the work of preparation of Photo ID card begins.
Q.13. I do not have a ration card. Can I get enrolled without a ration card? What are the other documents, which I can show as proof of my residence?
Ans. Ration Card is not necessary, however, you can show any other proof of residence like Passport, Bank Pass Book, Driving license etc. or any Govt. document to facilitate the work of registration.
Q.14. I am a tenant and my landlord does not want me to get enrolled. How can I get enrolled as a voter?
Ans. To get enrolled in the voter list is your statutory right. Please check the Electoral roll of your area ERO (SDM)/AERO office. If your name is not included please fill up Form 6 and deposit it with the ERO.
Q.15. I have attained / will be attaining the age of 18. What proof do I need to show to get enrolled?
Ans. You can submit the proof of Date of Birth from the authorized agency (Passport, Matric certificate, Date of Birth certificate etc.)
Q.16. When I fill up Form 4, should I attach proof of my residence with Form 4?
Ans. It is not essential but if you attach a proof of residence, it will help early verification of the particulars given by you.
Q.17. An Enumerator has visited my house and taken down the details. How do I ensure that my name is finally included in the electoral rolls?
Ans. He must have handed over to you the record of Enumeration, which is your acknowledgement. You can check your name in the draft roll, which will be published and available at the office of the ERO concerned to confirm that your name exists in the roll.
Q.18. I have lost my old EPIC Card. How can I get a new EPIC Card?
Ans. You can deposit a copy of the FIR lodged at the Police Station. You will get a new EPIC Card after deposit of Rs. 25. The dates for issuing EPIC Cards are published in leading Newspapers.
Q.19. Who is responsible for the preparation of electoral rolls for a Parliamentary or Assembly Constituency?
Ans. The Electoral Registration Officer (ERO). In the case of Delhi, these are the area Sub-Divisional Magistrates/Additional District Magi-states. The Electoral Registration officer is responsible for the preparation of electoral rolls for an Assembly Constituency which itself is the roll for the Parliamentary Constituency in so far as that Assembly Segment is concerned.
Q.20. Who appoints the Electoral Registration officer?
Ans. Under section 13B of the Representation of the People Act, 1950, the Election Commission of India, in consultation with the State/UT Government, appoints an Officer of the Government or the Local Authorities as the Electoral Registration Officer. In addition, the Election Commission of India also appoints one or more Assistant Electoral Registration Officers to assist the Electoral Registration Officer in the performance of his functions in the matter of preparation/revision of electoral rolls
- See more at: http://www.allindiadaily.com/2013/07/apply-for-voter-id-online.html#sthash.NgAUGbWw.dpuf

மதிப்பெண் மட்டும் போதுமா? அரசுப் பள்ளிகள் vs தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளிகள் எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நாங்கள் தான் தரமான கல்வியைத் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. அரசுப் பள்ளிகளில்தான் தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு நலத் திட்டங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை ஊக்கப் படுத்துகிறார்கள்.
தனியார் பள்ளிகளில் தரமான கல்வி வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் இலவச அனுமதியோடு சத்துணவு, சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள், உதவித் தொகையாகப் பணம், உயர் கல்வி பெறும்போது பல்வேறு சலுகைகள். இப்போது இலவச சைக்கிள், லேப்டாப் என்று பல சலுகைகள் கூடி விட்டன. ஆனால், கல்வி தரமானதாக இருக்குமா என்று சந்தேகம். இப்போது பெற்றோருக்கு எந்தப் பக்கம் போவது என்று குழப்பம்.
உள்ளூர்ப் பள்ளிகளெல்லாம் சரியில்லை, திருச்செங்கோடு, நாமக்கல், ஊட்டி, கொடைக்கானல், பள்ளிகளில் சேர்த்து விடுங்கள், உங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆவது உறுதி என்று ஒரு குரல் கேட்கிறது. இதற்கு எதிர்காலப் பலன் ஒன்று உண்டு. அதாவது, அதிக மதிப்பெண் பெற்று பெரிய வேலையில் சேர்ந்தபிறகு பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போவதால் முன்பு நான் விடுதியில் தங்கியிருந்ததுபோல் நீங்கள் விடுதிக்குப் போங்கள் என்று பெற்றோரை அனுப்பிவிடுவதுதான்.
ஒரு காலத்தில் எட்டாக்கனியாய் இருந்த கல்வி இப்போது கரை புரண்டு ஓடுகிறது. மகிழ்ச்சி. எல்லோருக்கும் கட்டாயக் கல்வி. அடடா! இந்தக் கட்டுரையின் நோக்கம், மக்கள் தரமான கல்வி, தரமான கல்வி என்று சொல்கிறார்களே அது என்ன? தரமில்லாத கல்வி என்பது என்ன என்பதைப் பற்றி விவாதிப்பதுதான்.
பணம் கொடுத்து வாங்கும் கல்வி தரமான கல்வி! இலவசமாகக் கிடைக்கும் கல்வி தரமற்றது. இதுதான் மக்களின் மன நிலை. ஏனென்றால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 1. அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். 2. நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.3. ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள்.4. அறிவாளிகளாக இருக்கிறார்கள்.
அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்தானா என்பது ஒவ்வொரு முறையும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வரும்போது தெரிகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமானவர்கள், மற்றவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?
சரி மேற்கண்ட தரமான கல்வி என்பதற்கான விளக்கம் ஒரு பக்கம் இருக்க, மாணவர்களின் உடல் நலன் பற்றிய கேள்விக் குறி பெரிதாக எதிரே நிற்கிறது. தரமான கல்வியைக் கொடுக்கும் பள்ளிகளால் தரமான உடல் நலனைக் கொடுக்க முடியுமா?
மதிப்பெண், மதிப்பெண் என்று மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக்கிய பெருமை மெட்ரிகுலேஷன் பள்ளிகளையே சாரும். போட்டி உலகத்தில் மதிப்பெண் பெறாவிட்டால் மதிப்பிழந்து போவீர்கள் என்று சொல்லிப் பயமுறுத்தி, கட்டாயப்படுத்தி இன்னும் சொல்லப் போனால் பலாத்காரம் செய்து மதிப்பெண் பெற வைத்து மாணவப் பருவத்தைச் சீரழித்தது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான். அவர்களைப் பார்த்து அரசுப் பள்ளி மாணவர்களையும் அதே போல் மதிப்பெண் பெற வைக்க வேண்டிய கட்டாயத்தை ஆசிரியர்கள் மீது அதிகாரிகளும் பெற்றோர்களும் உண்டாக்குகிறார்கள்.
அதிக மதிப்பெண் பெற வைப்பது, அதற்காக உழைப்பது என்பதெல்லாம் முற்றிலும் தவறு என்று நாம் சொல்லவில்லை. அந்த முறைதான் தவறு என்கிறோம். பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலேயே நடத்தத் தொடங்கி விடுவதும், பதினொன்றாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமலே பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை இரண்டாண்டு நடத்துவதும் தனியார் பள்ளிகள் செய்கின்ற அநியாயம். அடித்தளம் இல்லாமல் அடுக்கு மாடி கட்டுகிறார்கள். திரும்பத்திரும்பச் சொல்லிப் பழகி நினைவில் வைத்துக் கொள்வதுதான் அறிவுடைமை! (புரிந்து படித்து விரும்பிப் பதியச் செய்து கொள்வதல்ல.)
துல்லியமாக மனப்பாடம் செய்து திரும்ப ஒப்புவித்தால் பாராட்டு உண்டு! இணக்கமாக இல்லை என்றால் தண்டனை உண்டு.
ஓடியாட வேண்டிய பருவத்தில் படி, படி என்று முடக்கிப்போட்டு விடுகிறார்கள்.
காலை எழுந்தவுடன் படிப்பு........ மாலை முழுதும் விளையாட்டு என்பதைக்கூட பாடப் புத்தகத்தில் மட்டும்தான் தெரிந்து கொள்கிறார்கள். அதனைச் செயல் வடிவம் கொடுக்க அவர்களுக்கு அனுமதியில்லை.
பள்ளியில் விளையாட்டு வகுப்பு கால அட்டவணையில் மட்டுமே. விளையாட அனுமதியில்லை. பள்ளிவிட்டு வந்த பின்னர் பெற்றோர்கள் விடுவார்களா? காசு கொடுத்துப் படிக்க வைக்கும் கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும்? கொடுத்த காசுக்கு மதிப்பெண்ணைப் பெற வைக்க அவர்கள் பங்குக்கு படி, படி, என்று உயிரை எடுப்பார்கள்.
விளையாடாமல் இருப்பதானாலும், பாடச் சுமை தரும் மன அழுத்தத்தினாலும் மாணவர்கள் உடல் பருமன் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். விளையாட்டில் பெறும் வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதுவது போல் எதிர்கால வாழ்க்கையிலும் வெற்றி தோல்விகளைச் சமமாகப் பார்க்கும் மனப் பக்குவம் ஏற்படுகிறது. சிறிய தோல்விகளுக்கும் துவண்டு போவதற்கும் வாழ்க்கையையே முடித்துக் கொள்வதற்கும் மதிப்பெண் எந்திரமாய் மாணவர்களை உருவாக்கும் கல்வி முறைதான் காரணம்.
பல தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்க வேண்டுமானால் பெற்றோர் இருவரும் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மாத வருமானம் பள்ளி சொல்லும் கட்டணத்தையும் இதர செலவுகளையும் தயக்கமின்றி செய்யத் தயங்காத அளவிற்கு இருக்கிறதா என்று பார்க்கின்றனர்.
பத்தாம் வகுப்பில் வேறு பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கட்டண விலக்குக் கொடுத்தும், ஒரு லட்சம் பணம் கொடுத்தும் தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு +2 தேர்வில் எங்கள் பள்ளியின் தரத்தைப் பாருங்கள் என்று விளம்பரம் செய்து, இந்த மாணவருக்குக் கொடுத்த பணத்தை மற்றவர்களிடம் பிடுங்கும் தந்திரம் தனியார் பள்ளிகளுடையது.
சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சொல்வதென்னவென்றால், தன்னுடன் பணிபுரியும் சக விஞ்ஞானிகள் பலரும் அவரவர் தாய் மொழியில் படித்தவர்கள்தான் என்பதுதான்.
அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்களுடைய பின்புலம், வாழ்க்கை முறை, ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பள்ளி விட்டுச் சென்று தன் தந்தையுடன் கடையிலோ தாயாருடன் வீட்டில் செய்யும் கூலி வேலையிலோ உதவி செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளி, கல்வியை மட்டுமல்லாமல் உணவு உடை, பேருந்து, புத்தகம் எல்லாம் இலவசமாகக் கொடுக்கிறது. எதுவுமே இலவசமாக வந்தால் இளக்காரம்தானே? ஏதோ பள்ளிக்குப் போய் வந்தான் என்றால் சரி என்பதோடு அவர்களின் கவனம் முடிந்து விடுகிறது.
நம் மக்களின் கலாச்சாரச் சிந்தனையை இங்கே கவனிக்க வேண்டும். உழைத்துப் பெற வேண்டிய அரிசி, மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இலவசமாகத் தருவார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இலவசமாகப் பெற வேண்டிய கல்வியைக் காசு கொடுத்து வாங்குவதுதான் பெருமை என்று நினைக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளில் காசு கொடுத்துப் படிக்க வைப்பதால் அடிக்கடி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடன் பேசி தன்னுடைய குழந்தையைப் பற்றி விசாரிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் இலவசம் என்பதால் அந்தப் பக்கமே தலை காட்டுவதில்லை. உண்மையில் இலவசம் என்றாலும் அது ஒவ்வொரு பெற்றோரும் மற்றோரும் கொடுக்கக் கூடிய வரிப் பணம்தானே? கல்விக்கென்றே பல பொருட்களின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதே? அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவாவது கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் அரசுப் பள்ளிகளிலும் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்குக் கொடுக்கும் கட்டணம் என்பது அதிகப்படியான இரண்டாவது கட்டணம் என்ற உண்மை இவர்களுக்கு எப்போது புரியும்?
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அங்குள்ள கல்வித்தரம் பற்றியும் கழிப்பிடம், நூலகம், ஆய்வுக்கூடம் போன்ற வசதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளவும், தரமும் வசதியும் சரியில்லை என்றால் கேட்டுப் பெறவும், புகார் செய்யவும், வசதிகளை ஏற்படுத்தச் செய்யவும் உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால், காசு கேட்கும் தனியார் பள்ளிகள் பலவற்றில் பல அடிப்படைக் குறைபாடுகள் இருந்தாலும் கல்வி தரமாக இருக்கிறது என்பதால் (இருப்பதாக நினைத்துக் கொண்டு) வாயை மூடிக் கொண்டு இருந்துவிடுகிறார்கள். வேலூர் அருகே ஒரு தனியார் பள்ளியில் சிமெண்ட் தொட்டியில் குடி நீர் என்று எழுதி வைத்திருந்தது. அதனைக் குடிக்கலாம் என்று வாயில் ஊற்றினால் கடல் நீரைப் போல உப்புக் கரித்தது. அதே பள்ளியின் கட்டடங்களுக்குக் குறுக்கே தாழ்வான உயரத்தில் உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. தனியார் பள்ளி வாகனத்தில் ஓட்டை இருந்துதானே மாணவி பலியானாள்?
இது போல பல பள்ளிகளைப் பற்றி பல செய்திகள் உண்டு. குறை சொன்னால் தன் பிள்ளைகளுக்குச் சரியாகக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்ற பயத்தில் பேசாமல் வந்து விடுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுபவர்கள் இதுபற்றி ஏன் கண்டு கொள்வதில்லை. அடிப்படை வசதிகள் என்றால் வகுப்பிற்கு மாதம் 1000 ரூபாய் கட்டணம் வாங்கும் பள்ளியின் வசதியும் 100 ரூபாய் வாங்கும் பள்ளியின் வசதியும் வேறுபடுவது போல் அரசுப் பள்ளிகளின் வசதிகளும் மாறுபடும்தான். வசதி இல்லை என்றாலும் சும்மா இருக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.
கிராமம் முதல் சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள எல்லா ஆங்கில வழிப் பள்ளிகளிலும் படித்த மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் நன்றாகத் தெரியுமா? முக்கியமாக ஆங்கிலத்தில் நன்றாகப் பேச முடியுமா? ஏனென்றால் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்கூட ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். பேசுவதுதான் முக்கியப் பிரச்சினை.
ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளுக்குச் செல்லும் பெரும்பாலானவர்கள் ஆங்கில வழியில் படித்தவர்கள் என்ற விவரம் எல்லோருக்கும் தெரியும்தானே?
ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்வதற்கு ஆங்கில வழியில் படிப்பதைவிட ஆங்கிலோ இந்தியர்கள் அருகில் இருந்தால் அவர்களுடன் பழகிக் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலோ இந்தியர்கள் வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் பெண்கள் எவ்வளவு ஸ்டைலாக இங்கிலீஷ் பேசுகிறார்கள் தெரியுமா? அவர்கள் அறிவாளிகள் வரிசையில் வருவார்களா?
ஒழுக்கம் என்பதைப் பற்றிப் பேசும்போது அவர்கள் அணியும் உடையைப் பற்றி நிறைய பேர் பேசுவார்கள். வெப்பப் பிரதேசத்தில் ஷூ, டை அணிந்து கொள்வது ஒழுக்கமா? அவஸ்தையா? இன்னொன்று ஆங்கிலத்தில் பேசினால் கெட்ட வார்த்தையாகத் தெரியவில்லையோ என்னவோ? , என்பதும் இன்னும் பலவும் அடிக்கடி ஆங்கில வழி மாணவர்கள் பேசும் வார்த்தைகள்.
இன்றைக்கு டேட்டிங் என்று சொல்லி ஊர் சுற்றுவதும் யார்? இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? சில பள்ளி முதலாளிகள், தன்னுடைய பள்ளி மாணவர்களுக்குச் சொல்லும் அறிவுரை என்ன தெரியுமா? அரசுப் பள்ளி மாணவர்களுடன் சேராதீர்கள். அவர்கள் ஒழுக்கமில்லாதவர்கள், அரசுப் பள்ளி மாணவிகள் முறையற்ற உறவால் கர்ப்பமாகி விடுகிறார்கள் என்று நவீன தீண்டாமையைச் சொல்லித் தருகிறார்கள். கல்விக்கட்டணம் செலுத்த முடியாதவர்களை மனிதர்களாகவே மதிக்காமல் அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்லி மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் இந்தப் புதிய மனுவாதிகள், கல்வியில் வர்ணபேதம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
அரசுப் பள்ளிகள் பற்றிய குற்றச்சாட்டிற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்த்தால், மவுனம்தான். தனியார் பள்ளி ஆசிரியர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இவர்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது. (இது அதிக சம்பளம் என்று சொல்லவில்லை.) ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை தன்னுடைய அறிவையும் தகுதியையும் அதிகப்படுத்திக்கொள்ள நூல்களை வாங்கிப் படிக்கிறார்களா? என்றால், இல்லை! இதனால் இவர்களுக்கே இவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் தன்னுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இதைவிட அசிங்கம் இவர்களுக்கு இல்லை.
இப்போது ஆசிரியர்களாக இருக்கும் பலரும் ஆங்கில வழியில் தனியார் பள்ளியில் படித்தவர்கள்தான். இவர்கள் ஏன் உயர்ந்த பதவிக்குப் போக முடியவில்லை? அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்வாக முடியாமல் போன பல்லாயிரக்கணக்கான பேரும் தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தவர்கள்தான். அவர்களுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை. தமிழும் சரியாகத் தெரியவில்லை. பொது அறிவில் பொதுவாக அக்கறையில்லை.
இப்போது அரசு ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதாவது, அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கப் போகிறார்களாம். தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்று புரட்சிக் கவிஞர் சொன்னது போல் தமிழ்நாட்டின் தமிழ்ப் பள்ளிகளிலும் தமிழ் இல்லாமல் போகப் போகிறது. கல்விச் சந்தையில் அரசுக்கும் தனியாருக்கும் நடக்கும் போட்டியில் விலைபோகாச் சரக்காகிப் போகுமா தமிழ்?
ஆங்கிலத்தை அறிந்து கொள்வதற்குப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டுமே தவிர பாட வழியையே மாற்றுவது பலன் தராது. தாய் மொழியை இலக்கண வகுப்பை நடத்திவிட்டுப் பிறகு பேசக் கற்றுக் கொடுப்பதில்லை. வீட்டருகில் தெலுங்கோ இந்தியோ பேசுகிறவர்கள் இருந்தால் அவர்கள் பேசுவதைக் கவனித்து நாமும் அந்த மொழியை இயல்பாகக் கற்றுக் கொள்கிறோம். அதுபோலவே ஆங்கிலத்தைப் பேசுவதிலிருந்து இயல்பாகக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
அதை விட்டு, முதலில் எடுத்தவுடனே டென்ஸ், வாய்ஸ், என்று ஆரம்பித்தால் நம் மாணவர்களுக்கு டென்ஷனில் வாய்ஸ் வரமாட்டேன்கிறது. அயல் மொழியான ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளும் வேகத்தில் தாய் மொழியைத் தவற விட்டுவிடக் கூடாது. தாய் மொழியைக் காப்பாற்றாத தறுதலை இனமாகத் தமிழினம் தாழ்ந்துவிடக் கூடாது.

Popular Posts