TNTET PAPER : 1 இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013

Click Here

Click Here

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - 2012 - 2013
Provisional Selection List of Candidates (DEE)
Teachers Recruitment Board has issued Notification for the Direct recruitment of Secondary Grade Teacher vide Notification No. 6/2014, dated 21.08.2014. The Board has also decided to accept the option of “willingness to join Government Service” already submitted by the candidates at the time of certificate verification of TNTET-2012 and 2013 as application for the post of Secondary Grade Teacher.

Board had also conducted clarification camp from 11.08.2014 to 14.08.2014 and Certificate Verification for absentees candidates. After verification, the documents produced by the candidates in the clarification camp have been updated in the Certificate Verification data base. Based on that a final database was arrived from TNTET 2012, 2013 Paper – I Certificate Verification details.

Now, the provisional selection list for Department of Elementary Education (DEE) is prepared as per the guidelines laid down in the G.O.Ms.No. 71 School Education (TRB) department, dated 30.05.2014 and duly following the rule of reservation in vogue and the same is hereby released.

This is provisional selection list only and appointment order to the candidates will be issued separately by the user department upon verification of their original certificates, degree, etc.
Also the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions / Writ Appeals pending before the Hon’ble High Court of Madras and Madurai including W. A. 707 and 708 and M.P.1 of 2014.

The appointment order for the selected candidates satisfying all conditions will be issued by the concerned department separately after due process.


Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.5,000 : 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி

அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதி வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது.
 
 
         அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிற்றல் கல்வி தவிர்த்தல், உயர்கல்வியை தொடரும் வகையில் 2011-12ம் கல்வியாண்டில் முறையே ஆண்டுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ்-1விற்கு ரூ.1,500, பிளஸ்2 விற்கு ரூ.2 ஆயிரம் , வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இத்தொகை மாணவர்களுக்கு நேரடியாக சேர வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கி, அதற்கான விவரங்களை பள்ளிக்கல்வித்துறைக்கு சி.இ.ஓ., அலுவலகங்கள் அனுப்பியது.
 
 ஆனாலும், அந்தந்த கல்வியாண்டிற்குரிய தொகை மாணவர்களுக்கு கணக்கில் செலுத்தாமல் தாமதமானது. இந்நிலையில், மீண்டும் மாணவர்களின் வங்கி கணக்கு புள்ளிவிவரம் சேகரித்த நிலையில், 2013-14 கல்வியாண்டு வரை 3 ஆண்டுக்குரிய கல்வி ஊக்கத் தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 32 மாவட்டத்திற்கு ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2011 முதல் 2014 வரை 3 ஆண்டுக்கு வட்டியோடு சேர்த்து, தகுதியான ஒவ்வொரு மாணவருக்கு தலா ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் கிடைக்கும் என, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன?

நம் சட்டம்..நம் உரிமை...அரசு விதிகளின்படி எது கலப்புத் திருமணம்

கலப்புத் திருமணம் பற்றியும், கலப்புத் திருமணம் செய்வோருக்கான முன்னுரிமைகள் குறித்தும் விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி.
கலப்புத் திருமணம் செய்துகொள்ள நிபந்தனைகள் ஏதும் உண்டா?


அரசு விதிகளின்படி, தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர், அருந்ததியர் அல்லது பழங்குடியினராக இருந்தால் மட்டுமே அது கலப்புத் திருமணம். பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட ஒரே பட்டியலுக்குள் வரும் சாதியினர் திருமணம் செய்துகொண்டால் அது கலப்புத் திருமணம் ஆகாது. மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும்.

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டியசான்றுகள் என்ன?

கலப்புத் திருணம் செய்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை உண்டு. இதற்கு தம்பதியரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருவருடைய குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், திருமண பதிவுச் சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் இரு நகல்கள் தேவை. வட்டாட்சியர் அளவில் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலை இணைத்து மனு எழுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் நீங்கலாக, அனைத்து சான்று நகல்களிலும் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

முன்னாள் படைவீரரைச் சார்ந்தோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற என்ன சான்று வழங்க வேண்டும்?

முன்னாள் படைவீரர் வாரிசு சான்றிதழ் 2 நகல், குடும்ப அட்டை சான்றிதழ் நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் முன்னுரிமை கேட்டு எழுதப்பட்ட மனு ஆகியவற்றை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நகல்களில் சான்றொப்பம் தேவை.

மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற பதிவு செய்ய வேண்டிய சான்றுஎன்ன?

குடும்ப அட்டை நகல், மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் முன்னுரிமை கேட்டு விண்ணப்பம் செய்யும்மனு ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளி என்பதற்கான தேசிய அடையாள அட்டையில் சான்றொப்பம் தேவை.

வேறு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து செல்லும்போது வேலைவாய்ப்பு பதிவை மாற்ற முடியுமா?

வட்டாட்சியர் அளவில் பெறப்பட்ட குடிப்பெயர்ச்சி சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNTET - "SELECT" ஆகாத ஒரு "SENIOR" ஆசிரியரின் மடல்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் select ஆகாத ஆசிரியை. நான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. இப்போது உள்ள weightage system அறிவித்தபோதே இதனால் பாதிப்பு வரும் என நாம் அறிவோம். நம்முடைய friends circle லில் இதனைப் பற்றி விவாதித்திருப்போம். அப்போதே TET எழுத உள்ள அனைவரும் சேர்ந்து இந்த weightage system வேண்டாம் . யாரும் பாதிக்கப்படாத weightage system பின்பற்ற வேண்டும் என போராட தவறியதின் விளைவு தான் இது. 

2. a) 15 , 20 வருடங்களாக posting வாங்காம என்ன செய்தீர்கள் ? உங்க காலத்தில் வந்த trb exam எழுதி posting போயிருக்க வேண்டியதுதானே ? b) இப்போ உள்ள மாணவர்களின் மனநிலையை புரிந்து உங்களுக்கு பாடம் நடத்ததெரியாது என ஏகப்பட்ட comments போடுகிறார்கள். அதற்கு என்னுடைய தனிப்பட்ட பதிலை கூற விரும்புகிறேன்.
a ) 15 , 20 வருடங்களுக்கு முன்பு வரை seniority அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை தான் பணி அமர்த்தினார்கள். அதனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு seniority அடிப்படையில் குறைந்த அளவிலேயே பணி நியமனம் செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் தான் UG TRB நடத்த பட்டது. மீண்டும் 2006 ல் UG TRB நடத்த பட்டது. அதன் பின் மீண்டும் seniority அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. 2009 கல்வி உரிமை சட்டம் வந்த பின் 2012 முதல் தகுதிதேர்வு கட்டாயமாக்க பட்டது.
தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் இப்போது உள்ள weightage system தால் பணி கிடைக்காததால் தான் இந்த போராட்டம். இப்போது உள்ள weightage system மாறினால் உடனே அனைவருக்கும் posting கிடைக்கப்போவது இல்லை. ஆனால் இப்போது உள்ள weightage system மாறாத வரை 15 , 20 வருடங்களுக்கு முன்பு படித்தவர்கள் TET ல் 130 மதிப்பெண் எடுத்தால் தான் பணி கிடைக்கும்.
ஒரு வருடம் காத்திருக்கும் உங்களுக்கே மனம் இவ்வளவு வேதனை படுகிறது என்றால் 15 , 20 வருடங்களாக காத்திருந்து தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் பணி கிடைக்கவில்லை என்றால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைபடும். அவர்களின் நிலையில் இருந்து சிந்தியுங்கள்.
b) for example 40 வயதை கடந்தவர் என்றால் அவர் 39 வயதுவரை உள்ள மனநிலை எப்படி இருக்கும் என அறிந்தவர் அதனால் அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்த தெரியும் . பள்ளியில்driver வேலைக்கு 5 வருட பணி அனுபவம் வேண்டும் என கேட்கும் போது ஆசிரியர்களுக்கு அனுபவம் தேவை இல்லையா?. sofrware company எல்லாவற்றிலும் interview ல் அவர்கள் கேட்கும் கேள்வி experience என்ன?
3. 5 % தளர்வில் seniors benefit அடையவில்லையா? weightage system தால் juniors பாதிப்பு அடையவில்லையா? seniors or juniors நம்முடைய ஒரே தடைக்கல் இப்போது உள்ள weightage system தான். அதை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஆசிரிய குடும்பம் . நமக்குள் சண்டை வேண்டாம்.
THANK YOU
BY
Princess

தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு


முது நிலை பட்டதாரி ஆசிரியராகவும் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளவர்களிடம் விருப்பம் பெற்று பெயரை நீக்க டி.ஆர்.பி.யிடம் மனு



PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)



Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)



சிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை???

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். 
 
இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில்   தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 

அதில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் & 2009 பொருந்தாது என கடந்த 6.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சியின்றி பணியமர்த்தப்பட்ட எங்களை, பணியில் இருந்து நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். பின் அவர் பிறப்பித்த உத்தரவில் 4 ஆசிரியர்களையும் பணியில் இருந்து நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தார். இதுதொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.

2014-15-ம் ஆண்டில் 500 ஆசிரியப்பயிற்றுநர்களுக்கு பள்ளிக்கு பணிமாறுதல் வழங்குவது சார்ந்து ஒப்புதல் வேண்டி மாநிலத்திட்ட இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது


TRB-TNTET paper- 1 notification

கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு - தி இந்து ‎



புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழக அரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.

புதிய பென்ஷன் திட்டத்தின்படி, அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம், அக விலைப் படி ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் (சி.பி.எப்.) சேர்க் கப்படுகிறது. அதே தொகைக்கு இணையான தொகையை அந்த ஊழியரின் கணக்கில் செலுத்து கிறது. இவ்வாறு சேரும் தொகை யில் 60 சதவீதம், அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது மொத்தமாக வழங் கப்படும். மீதமுள்ள 40 சத வீதத் தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதாமாதம் ஓய்வூதியமாக அவருக்கு அளிக்கப்படும்.
ராணுவத்தினருக்கு விதிவிலக்கு
இதில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கப் படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டப்பணியை மத்திய அரசின் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.) என்ற அமைப்பு கவனித்து வருகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ராணுவத்தினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்கள் மட்டும் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றவில்லை. நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள அரசுகூட கடந்த ஆண்டு முதல் புதிய பென்ஷன் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது.
கிராஜுவிட்டி ரத்து
அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும்போது கிராஜுவிட்டி (பணிக்கொடை) கிடைக்கும். பணிபுரிந்த ஒவ்வோர் ஆண்டுக்கும் 15 நாள் சம்பளம் என்ற அடிப்படையில் கணக் கிடப்பட்டு அதிகபட்சம் 16.5 மாதங் களுக்கு இணையான சம்பளம் (உச்சவரம்பு ரூ.10 லட்சம்) பணிக்கொடையாக வழங்கப்படும்.
அதேபோல், 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் முழு ஓய்வூதியம் அதாவது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வூதியதாரர் மரணம் அடைந்தால் அவரது மனைவி அல்லது வாரிசுகளுக்கு 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்நிலையில், பிஎப்ஆர்டிஏ அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதியம் இல்லை
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்று தமிழக அரசு கடந்த 6.8.2003 அன்று அரசாணை வெளியிட்டது. அதேபோல், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் (ஜிபிஎப்) பொருந்தாது என்று 27.5.2004 அன்று அரசாணை மூலம் தெரிவித்தது. தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 பொருந்தாது என்பதால் அதன்கீழ் வழங்கப்படும் கிராஜுவிட்டி மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரத்தாகிவிடும்.
தமிழகத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பு
புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.

Popular Posts