கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி

-ஜி. ராமகிருஷ்ணன்
கல்வி கற்பதற்கான உரிமைக் குறியீடு களை எய்துவது குறிப்பாக மொத்தப் பள்ளிச் சேர்க்கை மற்றும் இடை நிற்றல் அளவு களில் மிகச் சிறப்பாகக் கருதப்படும் மாநிலங் களுள் தமிழகம் ஒன்று என மாநில நிதிய மைச்சர் சமர்ப்பித்த நடப்பாண்டுக்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூற்று சரியானதே. இருப்பினும் தமிழ கத்தில் பள்ளிக் கல்வி நிலை குறித்து நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. திருப்தி அடைந்தால் இத்துறையில் உள்ள குறைபாடு களைப் போக்கிட முடியாது. உதாரணமாக, “அசர்’ (ஆய்வு நிறுவனம்) செய்த ஆய்வின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு மாணவர் களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண் டாம் வகுப்பிற்கான பாடத்தை வாசிக்க இய லாத நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இந்த விழுக்காடு 58 சத விகிதமாக இருந்தது. மேலும், மாணவர் சேர்க் கை விகிதத்தைப் பொருத்தவரை மக்கள் அரசுப் பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளி களை நாடும் போக்கு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் நிலவும் மேற்கண்ட குறைபாட்டுக்கு கல்வித் தரம் உயராதது முக் கியமான காரணங்களில் ஒன்று. கற்பிக்கும் முறை, கல்வி பெறும் சூழல், தாய்மொழியில் திறன், குழந்தைகளின் வாசிப்புத் திறன் போன்ற அம்சங்களைக் கொண்டே கல்வித் தரம் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த அம் சங்கள் அல்லாமல் பள்ளிகளில் அடிப் படைக் கட்டுமானங்களும் கல்வித் தரம் உயர அவசியம்.

கல்வித் தரத்தை உயர்த்துவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாறி வரும் சூழலுக் கேற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சி, தேவை யான அடிப்படைக் கட்டுமானங்களை உரு வாக்குவது, ஆசிரியர்களை ஊக்குவிப்பது, பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது போன்றவைகளுக்கு ஆசிரியர்களை அரவ ணைத்து மாற்றங்களை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

கல்வித்தரம் உயர மாநில, மாவட்ட அளவிலான இத்துறை சார்ந்த அதிகாரிகளுக் கும் பொறுப்பு உள்ளது. கல்வித் தரம் சம்பந்தப் பட்ட ஒவ்வொரு அம்சத்திலும் “அசர்” போன்ற ஆய்வு சுட்டிக்காட்டும் குறைபாடு களைப் போக்கிட இத்துறை சார்ந்த அதிகாரி களின் தலையீடும் அவசியமானது.

கல்வித் தரம் உயர தேவையான பல அம் சங்களில் ஆசிரியர்களின் பங்கும் முக்கிய மான ஒன்று. ஆசிரியர்களின் பாத்திரம், பங்க ளிப்பு சிறப்பாக உள்ள பள்ளிகளில் தரமும் உயர்கிறது. அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல் லும் போக்கும் தடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஒன்றான இராமம் பாளையம் ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு இக்கட்டுரையாளருக்குக் கிடைத் தது. கோவை மாவட்டத்திலுள்ள ஜடையன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இராமம் பாளையம் கிராமம். கோவையிலிருந்து 38 கி. மீட்டர் தொலைவிலுள்ள இராமம்பாளை யம் அரசு ஆரம்பப்பள்ளி தற்போது அனைவ ரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்பள்ளி 1930-இல் துவங்கப்பட்டது. சுமார் 1,000 பேர் வசிக்கக் கூடிய இக்கிராமத்திலுள்ள மக்கள் சமீப காலம் வரை தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்காமல் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கி னார்கள்.

இந்நிலை இராமம்பாளையத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு மட்டுமல்ல, தமிழகத்தி லுள்ள பெரும்பான்மையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இதே நிலைமைதான். காரமடை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஐந் தாண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 3 வகையான அர சுப்பள்ளிகளில் 1,898 மாணவர்கள் எண் ணிக்கை குறைந்துள்ளது. இது கவலையளிக் கக்கூடியது. ஒருபகுதி மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறபோது ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த, குறிப்பாக தலித் மற் றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் வேறு வழியில்லாத நிலையில் அரசுப் பள்ளிகளில் சேர்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக ளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது காரமடை ஒன்றியத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான். இந்நிலைமையை மாற்றிட அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது, ஆசிரியர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்கள் முயன் றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைவதை தடுப்பது மட்டுமல்ல, எண்ணிக்கையை உயர்த்தவும் முடியும் என்பதற்கு இராமம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

இராமம்பாளையம் பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 27 மட் டுமே. நடப்பு ஆண்டில் மாணவர்கள் எண் ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இதில் தலித் மாணவர்கள் 53 பேர். பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் 8 பேர், மலைவாழ் வகுப்பைச் சார்ந் தவர் 1. மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிக ளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிற நிலையில், இராமம்பாளையம் பள்ளி யில் மட்டும் உயர்வதற்கு என்ன காரணம்?

தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல் படும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 56 வயதுடைய சரஸ்வதியும், உதவி ஆசிரி யராக 35 வயதான இளைஞர் பி.பிராங்ளின் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள். தலை மை ஆசிரியர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற உள்ளார். கணிதம் படித்து ஆசிரிய ராகப் புதிதாகப் பணியில் சேர்ந்த பிராங்ளின் கல்வித் தரத்தை உயர்த்துவது என்ற முடி வோடு பணியைத் துவங்கினார். இந்த இரண்டு ஆசிரியர்களும் எடுத்த முயற்சிதான் மேற்கண்ட மாற்றத்திற்கு காரணம். இளம் ஆசிரியர் பிராங்ளின் எடுத்த முயற்சிக்கு தலைமை ஆசிரியர் முழு ஒத்துழைப்பு கொடுத்து செயலாற்றியதும் ஆசிரியர்கள் முயற் சிக்கு இராமம்பாளையம் கிராம மக்கள் ஆதரவு அளித்ததும்தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.

குழந்தைகள் எளிதில் அமர்ந்து கல்வி கற்க ஏதுவான வட்ட மேசையும், குழந்தை கள் உட்கார இருக்கையும், இருக்கையில் புத் தகங்களை வைத்துக்கொள்ள சிறிய காப் பறையும் உள்ளன. குழந்தைகள் தங்கள் புத்த கங்களை வீட்டுக்குச் செல்கிறபோது சுமந்து செல்ல வேண்டியதில்லை. தேவையான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துச் சென்றால் போதும். தரையிலிருந்து குழந்தை களுக்கு எட்டும் உயரம் வரை சுவற்றிலேயே கரும்பலகை, சுவர்முழுவதும் பசுமையான பின்னணியில் வனம் மற்றும் பல விலங்கு களின் ஓவியம், டைல்ஸ் பதித்த தரை என குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் வகுப் பறையில் விரும்பி மகிழ்ச்சியாகக் கற்க ஏது வான சூழலில் இரண்டு வகுப்பறைகளும், திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

கோடை காலத்தில் பயன்படுத்த குளிர் சாதன வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வகுப்பறையில் நுழைவு வாயிலிலேயே ஆள் உயரக் கண்ணாடி, சமச்சீர் கல்வி முறை, குழந் தைகளுடன் சரிசமமாக அமர்ந்து கல்வி கற் பிக்கும் முறை ஆகியவை வகுப்பறையின் ஒட் டுமொத்த சூழலையே முற்றாக மாற்றிவிட்டது. மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, நாளி தழ்களை வாசிக்கப் பழக்கப்படுத்துவது என சிறப்பு முயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற் கொண்டுள்ளனர். இதனால் கற்பது சுமை யல்ல, கற்பது கற்கண்டே என்ற உணர்வை மாணவர்களுக்கு உருவாக்கிவிட்டார்கள்.

ஆசிரியர்களுக்கென்று தனி மேசை, நாற்காலி பள்ளியில் இல்லை. பாடப் புத்தகங் கள் வைப்பதற்கும், கற்பதற்கான புத்தகங்க ளும் அதற்காகவே உருவாக்கப்பட்ட ரேக்கு களில் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டி ருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

11 கணிப்பொறிகள் கொண்ட தனியான அறையும், எல்சிடி புரொஜக்டருடன் கூடிய கணிப்பொறி அமைப்பும் உள்ளன. கணினி அறை மற்றும் வகுப்பறைகளுக்கு தடை யில்லா மின்சாரம் கிடைக்க யுபிஎஸ் ஏற்பா டும் செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளே விரும்பி கடைப்பிடிக்கும் அளவிற்கு தூய்மையாக இருக்க வேண்டி யதன் தேவை உணர்த்தப்பட்டதால் டெட் டால் போட்டு கைகழுவும் பழக்கமும், குப் பைகளைத் தவறாமல் குப்பைக் கூடையில் சேகரிக்கும் வழக்கமும் உள்ளன.

கடந்த 4 - 5 ஆண்டுகளாக பிராங்ளின் மற்றும் தலைமையாசிரியர் சரஸ்வதி ஆகி யோர் எடுத்த முன்முயற்சியால் ஓர் அரசுப் பள்ளி இவ்வளவு வியத்தகு முன்னேற்றங் களை கண்டுள்ளது. அடிப்படையில் விவசா யிகளாக இருக்கும் இவ்வூர் மக்கள் அனை வரும் ஆசிரியர்களின் சீரிய முயற்சிக்கு மேலான ஒத்துழைப்பை அளித்து வருகின் றனர்.

குறிப்பாக கிராமக் கல்விக்குழு தலைவர் மகேஷ், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆர்.ஆர்.ஈஸ் வரன் மற்றும் கிராமத்தைச் சார்ந்தவர்கள் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக உள்ளனர். ஜடையம்பாளையம் ஊராட்சித் துணைத் தலைவராக உள்ள ஆர்.கே.பழனிச்சாமி பள்ளிக்கு நிதியுதவி செய்து வருகிறார். ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மாதிரி வகுப்பறை உருவாக்கப்பட்டு செயல்படத் துவங்கிய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் இதே போல் இன்னொரு வகுப்பறையை உருவாக்க ரூ.3 லட்சம் நிதியை ஒதுக்கித் தந்துள்ளார். பள்ளிக்கான சுற்றுச் சுவரும் ஊர்மக்களின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக ளில் சேரும் குழந்தைகள் தலித் மற்றும் பிற் படுத்தப்பட்ட ஏழைக் குடும்பங்களைச் சார்ந் தவர்கள்தான். இப்பள்ளிகள் தரமானதாக இருந்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். ஏழைக் குழந்தை களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது.

இராமம்பாளையம் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினால் மேலும் வகுப்பறை கள் கட்டுவதற்கான இடத்தை வழங்கவும் ஊர் மக்கள் தயாராக உள்ளார்கள். தமிழகத் தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் எல்லாம் இராமம்பா ளையம் பள்ளிகளாக உருவாகிட ஆசிரியர்க ளின் முயற்சி முக்கியமானது. இராமம்பாளை யம் பள்ளி மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் சமூகத் திற்கும் உணர்த்தும் பாடத்தைப் புரிந்து கொண்டால் மாற்றம் நிச்சயம்.

அரசின் ஆதரவு, ஊர் மக்களின் உதவியும் அடிப்படையானது. இராமம்பாளையம் ஆரம் பப்பள்ளி நல்லாசிரியர்களைப் போற்றுவோம். அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப் புகள் நடத்தும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இதுபோன்று மாறட்டும்.

நன்றி : தினமணி (29.3.2013)

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம்

2013 - 14 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். 
          இதே போல் ஆண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஆணாசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிக்கு இருபால் ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் வழங்கலாம். ஆனால் தற்போது பணிபுரியும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது என அரசு முதன்மைசெயலர் உத்தரவிட்டு உள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013 அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மே 30-ல் முதல்வரிடம் மனு அளிக்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மே 30-ம் தேதி மனு அளிப்பது என வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராக. ராமு தலைமை வகித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆசிரியர் நியமன நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்பட்டவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு என்பதை சிறப்பு அரசாணை மூலம் அறிவித்து உடன் பணி வழங்க வேண்டும்.

மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் பழைய விதிமுறைகளின்படி 2001-க்கு முன்பு ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30-ம் தேதி முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.கே. சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்றார்.
அரியலூர் மாவட்டத் தலைவர் இளவரசன் நன்றி கூறினார்

தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிபுரியும் பள்ளியிலேயே பதவி உயர்வு : கல்வித்துறை முடிவு - தினகரன் செய்தி


டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

"டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்' என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியபோதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

பல மாநிலங்களில் சலுகை : அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.


இதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.

சட்டசபையில் கோரிக்கை : கடந்த, 10ம் தேதி, சட்டசபையில், பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், பல எம்.எல்.ஏ.,க்கள், டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

அறுபது சதவீத மதிப்பெண்கள் என்ற அளவால், சமுதாயத்தில் பின் தங்கிய தேர்வர்களால் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது என்றும், குறிப்பாக, 55 சதவீதம், 58, 59 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் தேர்வர்கள் கூட, தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சுட்டிக் காட்டினர். அப்போது, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், "இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது' என, தெரிவித்தார். இதனால், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான, டி.இ.டி., தேர்வு அறிவிப்பில், தகுதி மதிப்பெண்கள் குறைப்பு செய்யப்படவில்லை. வழக்கம் போல், தகுதி மதிப்பெண்களாக, 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அரசு தவறு செய்கிறது : இது குறித்து, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழக அரசின் அறிவிப்பு, மிகவும் தவறானது. ஆந்திரா உட்பட பல மாநிலங்கள், தகுதி மதிப்பெண்கள் அளவை குறைத்துள்ளன. "தகுதி மதிப்பெண்கள் அளவை, மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம்' என, என்.சி.டி.இ., அனுமதி வழங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது, தமிழக அரசு மட்டும், ஏன் இப்படி செயல்படுகிறது என, புரியவில்லை.

ஒரே தகுதியை, அனைத்து தேர்வர்களும் பெற வேண்டும் என்பது சரியல்ல. இதனால், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

TRB - TN TET 2013 Announced | ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 அறிவிப்பு

 TET - 2013 EXAM ANNOUNCED.

Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm

Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm

Recruitment Post = 13,000 (SGT+BT)

Application Sales Starts From 17.06.2013 to 01.07.2013

முதல் தாள் தேர்வு : 17.08.2013
இரண்டம் தாள் தேர்வு : 18.08.2013
தேர்வு நேரம் : காலை 10 முதல் 1 வரை ( 3மணி நேரம்)  

Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500 
SC/ST/Disabled Fees: Rs. 250 
click here to download the TRB - TN-TET announcement  Notification



ஆகஸ்ட் 17, 18ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜுன் 17ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ம் தேதி ஆகும். 

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஆகஸ்ட் 17ம் தேதியும், இரண்டாம் தாள் ஆகஸ்ட் 18ம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 1,100 உதவிப் பேராசிரியர் நியமனத்தை முடித்திடவும், டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது. தமிழக அரசு அறிவித்து, இரு ஆண்டுகள் ஆகியும், இன்னும் இந்தப் பணி நியமனம் நடக்கவில்லை. இந்த விவகாரம், சென்னை, ஐகோர்ட்டுக்கு சென்ற நிலையில், ஒன்பது மாதங்களுக்குள், உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை முடிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைக்கால ஆசிரியர் நியமன முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

தொடக்கப் பள்ளிகளில் இடைக்கால ஆசிரியர்களை நியமிப்பதில் கல்வித் தகுதி உள்ளிட்ட வரைமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றாதது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.


கல்வி உதவியாளர் நியமனம் குறித்து குஜராத் அரசு தாக்கல் செய்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.செüஹான், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டது:

கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பும் இடைக்கால ஆசிரியர் நியமன முறை தொடர்வது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற ஜனரஞ்சகமான திட்டங்கள் நாட்டின் வருங்காலத்தையே பாழாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி உரிமையை அளிக்கும் 21-ஏ பிரிவு இருக்கும்போது இதுபோன்ற நடைமுறைகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்? முறையான கல்வித் தகுதி இல்லாதவர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமிப்பதால் கல்விகற்பிக்கும் முறையையே பாழடித்துவிடுகிறோம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இடைக்கால முறையில் நியமிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். 

இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

List of Current Notifications
S No.Advt. No./ Date of NotificationName of the PostOnline RegistrationDate of ExaminationActivity
FromTo
NOTIFICATIONS - 2013
1
8/2013 17.05.2013
17.05.2013
10.06.2013
03.08.2013
Apply Online
கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் நிலையில், காலியாக உள்ள, 17 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 3ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17ம் தேதி முதல் (நேற்று), ஜூன் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும், கூட்டுறவு சங்கங்களில், 13, "சூப்பர்வைசர்" பணிகளை நிரப்பவும், மேற்கண்ட தேதிகளுக்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில், 18, "ஸ்டோர் கீப்பர் - கிரேடு - 2" பணியிடங்கள், தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையில், 2, "ஸ்டோர் கீப்பர்" பணியிடங்களுக்கும், விண்ணப்பிக்கலாம். அனைத்து தேர்வுகளும், ஆகஸ்ட், 3ம் தேதி, காலை, 10:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடக்கும்.


"ஆப்ஜக்டிவ்" முறையில், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். இத்துடன், 40 மதிப்பெண்களுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய....

அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய....

2010, 2011 மற்றும் 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் மூன்று விதமான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 2010ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆதார் அட்டைக்கான கண் விழித்திரை பதிவு, கை ரேகைகள் பதிவு மற்றும் Bio-Metric முறையில் புகைப்படம் ஆகியவை தற்போது நாடு முழுவதும் முகாம்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டு வருகிறது. 


இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு பதிவுச்சான்றாக ஒரு நகல் அளிக்கப்பட்டது. அதில் Enrollment Number, date மற்றும் time ஆகியவை குறிக்கப்பட்டு இருக்கும். அதனைக்கொண்டு நம் அட்டையின் தற்போதைய நிலையை அறிந்துக்கொள்ளலாம். 

நம் அட்டையின் நிலையை அறிந்துக்கொள்ள கீழ் காணும் லிங்கை click செய்து தற்போதைய நிலையை அறிந்துக்கொள்ளவும்.

மேல்நிலைக்கல்வி - உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் 50% க்கு குறைவாக மதிப்பெண் பெற்று ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று பள்ளிகளில் பணியாற்றி வரும் 652 கணினி பயிற்றுனர்களுக்கு பணியிலிருந்து நீக்க காரணம் கேட்கும் தாக்கீது (show cause notice) அனுப்பப்பட்டுள்ளது.


எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்க திட்டம்: அமைச்சர் தகவல்


"அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். சட்டசபையில், நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்...

தே.மு.தி.க., - சுபா: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பணியிட மாறுதல் வழங்குவதில்லை. மற்ற துறை ஆசிரியர்களைப் போல், அவர்களுக்கும், கலந்தாய்வு நடத்தி, பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

வைகைச் செல்வன் - பள்ளிக்கல்வி அமைச்சர்: இந்த கோரிக்கையை, அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும்.

சுபா: தனியார் பள்ளிகளில், கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில், மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. அரசு விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை, மழலையர் பள்ளிகளாக மாற்றி, அங்குள்ள குழந்தைகளுக்கு, ஆங்கிலவழி கல்வியை வழங்க, அரசு முன்வர வேண்டும்.

அமைச்சர்: எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்க வேண்டும் என, எம்.எல்.ஏ., கூறுகிறார். இது, நல்ல ஆலோசனை. இத்திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.

சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும். மாநில அரசுகள், இந்த தகுதி மதிப்பெண்களை குறைத்துக் கொள்ளலாம் என, தேசிய ஆசிரியர் கல்விக் குழுவும் தெரிவித்துள்ளது.

அமைச்சர்: தரமான ஆசிரியர்களை நியமனம் செய்தால் தான், தரமான கல்வியை, மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவே, 60 சதவீத மதிப்பெண்களை, தகுதித்தேர்வில் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சுபா: தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா, பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்க, பள்ளிகள் தோறும், புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும் என, தெரிவித்திருந்தார். இந்த விஷயத்தில், அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

அமைச்சர்: பள்ளிகளில், புகார் புத்தகங்கள் உள்ளன. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவரை, "சஸ்பெண்ட்" செய்யாமல், "டிஸ்மிஸ்" நடவடிக்கையே எடுக்கிறோம்.

முதல்வர் ஜெயலலிதா: பள்ளிகள்தோறும், "சைல்டு ஹெல்ப் லைன்" என்ற திட்டத்தின் மூலம், தொலைபேசி சேவை, ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இது, கட்டணமில்லா தொலைபேசி. மாணவர்கள், இதில் புகார் செய்தால், உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு விவாதம் நடந்தது.

அரசுப் பள்ளிகளில் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் - இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம்:


"அரசுப் பள்ளிகளில், 3,711 ஆசிரியர்களும், 1,146 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், நடப்பு கல்வி ஆண்டில் நிரப்பப்படும்" என பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.


சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த, 2011-12, 12-13 ஆகிய ஆண்டுகளில், 63 ஆயிரத்து, 125 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வி ஆண்டில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 313; துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 380; முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 880; பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 1,094; இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 887; சிறப்பாசிரியர் பணியிடங்கள், 156 என, 3,711 பணியிடங்கள் நிரப்பப்படும்.

மேலும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், 16 பேர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், இரண்டு பேர், விரிவுரையாளர்கள், 99 பேர், உடற்கல்வி இயக்குனர்கள், எட்டு பேர் என, 125 பேரும் நியமனம் செய்யப்படுவர்.

ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்:உதவியாளர்கள் (நேரடி நியமனம்), 850 பேர்; சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 18 பேர்; இளநிலை உதவியாளர்கள், 188 பேர் மற்றும் தட்டச்சர்கள், 90 பேர் என, 1,146 பேரும், நடப்பு கல்வி ஆண்டில் நியமனம் செய்யப்படுவர்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி - பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன்


"அனைத்து அரசுப் பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்படும்" என பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். 
கடந்த கல்வி ஆண்டில், 320 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, சட்டசபையில் அறிவித்தார்.

கடந்த கல்வி ஆண்டு, 320 அரசு பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில், தலா, இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. 640 பிரிவுகள் துவங்கப்பட்டு, அதில், 22 ஆயிரத்து, 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
வரும் கல்வி ஆண்டு முதல், தேவைப்படும் அனைத்து அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்படும். இதனால், ஆண்டுக்கு, 1.5 லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார். 

அமைச்சர் அறிவிப்பின்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 1 மற்றும் 6ம் வகுப்புகளில், தலா இரு பிரிவுகள், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்படும். ஆங்கில வழி வகுப்புகள் கூடுதலாக துவங்கப்படும் போது, அதற்கென, ஆசிரியர்களும், கூடுதலாக நியமனம் செய்ய வேண்டும். ஆனால், கூடுதல் ஆசிரியர் நியமனம் குறித்து, அமைச்சர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

வழக்கமாக, பள்ளிகளில் ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மட்டுமே, அமைச்சர் வெளியிட்டார்.

3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத கட்ஃஆப் மதிப்பெண்ணைக் குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் வைகைச்செல்வன்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்களான 60 சதவீதத்தைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.


சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது: 
பணி தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்வு


"ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை பயிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களின், கல்வி உதவித் தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.


சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் கல்வி பட்டப் படிப்பு வரை படிக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு, 500 ரூபாய் முதல், 3,500 ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்.

இதேபோல், பார்வையற்ற மாணவர்களின், வாசிப்பு உதவியாளர்களுக்கு, அவர்கள் படிக்கும் வகுப்புகளுக்கு ஏற்ப, 1,500 முதல், 3,000 ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இத்தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும். கால்கள் பாதிக்கப்பட்ட, 400 மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்கூட்டர், இனி, 1,000 பேர்களுக்கு வழங்கப்படும். 

மனவளர்ச்சி குன்றியோருக்கு, சிகிச்சை அளிக்க, 32 நடமாடும் சிகிச்சை பிரிவுகள் துவங்கப்படும். பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர்கள், முடநீக்கு வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்டு, இப்பிரிவு செயல்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.

பி.சி., - எம்.பி.சி., கல்வி உதவி தொகை: வருவாய் வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு


"கல்வி உதவித் தொகை பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினரின் ஆண்டு வருவாய் வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்" என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

 
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கான, 68 விடுதிகளுக்கு, நடப்பாண்டில் சொந்த கட்டடங்கள், 87 கோடி ரூபாயில் கட்டப்படும். இதில், 47 விடுதிகள், 100 மாணவர்கள் தங்கும் வகையிலும், 21 விடுதிகள், 50 மாணவர்கள் தங்கும் வகையிலும் கட்டப்படும். 

இவற்றில், சூரிய மின் உற்பத்தியும் அமைக்கப்படும். மேலும், ஐந்து பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், மூன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், ஒரு சீர் மரபினர் விடுதிகள், 2.50 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்படும். 767 விடுதிகளைப் பராமரிக்க, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், கல்வி உதவித் தொகை பெற, ஆண்டு வருவாய், 1 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். 

இந்த இனத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஆழ்துளை கிணறுகள் அமைக்க, 50 சதவீத மானியம் அளிக்கப்படும். இதன் மூலம், 785 விவசாயிகளுக்கு, 3.84 கோடி ரூபாய் வழங்கப்படும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துக்கு, சென்னை, எழும்பூரில், 4.27 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று கிரவுண்டு நிலம் கிரயமின்றி அளிக்கப்படும். இந்த நிலத்தில், 4 கோடி ரூபாயில், அலுவலகக் கட்டடம் கட்டப்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த சில ஐயங்களும் - TNPTF மாநில பொது செயலாளரின் விளக்கமும்


1. இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு உண்டா?

இரட்டை பட்டம் பதவியுயர்விற்கு தகுதி சார்ந்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும், அதன் விசாரணை ஜுன் 10ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும், அதுவரை பதவியுயர்வு நடத்த மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், தற்போதைய அட்டவணையில்  இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு இல்லை. வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு பின்பே இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.


2. சென்ற ஆண்டு பயன்படுத்திய மாறுதல் விண்ணப்பப் படிவத்தையே இந்த ஆண்டும் பயன்படுத்தலாமா?

இன்றோ, நாளைக்குள்ளோ இயக்குனரகம், கலந்தாய்வு விதிமுறைகள் குறித்த முழுமையான செயல்முறையையும் படிவத்தையும் வெளியிடும். அதுவரை காத்திருந்து அதை பின்பற்றுவதே சரியாக இருக்கும்.

3. இந்த வருட கலந்தாய்வு இணைய (ONLINE) வழியில் நடைபெற வாய்ப்புண்டா? 

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கலந்தாய்வு தேதிகள் ஒரே தேதியில் இல்லாமல் வெவ்வேறு தேதிகளில் நடைபெறுவதால், இணையவழியில் நடைபெற நிறைய வாய்ப்புள்ளது.

தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 அட்டவணை


24.05.13- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
25.05.2013-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல்
28.05.2013 காலை-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் / பதவி உயர்வு
28.05.2013 மதியம்-பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (ஒன்றியத்திற்குள்)
29.05.2013 காலை-தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்

29.05.2013 மதியம் -தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
30.05.2013 காலை - இடைநிலை ஆசிரியர் மாறுதல்  (ஒன்றியத்திற்குள்)

30.05.2013 மதியம் - இடைநிலை ஆசிரியர் மாறுதல்  (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
31.05.2013 - இடைநிலை ஆசிரியர் மாறுதல்(மாவட்ட விட்டு மாறுதல்)

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 2013 - நம் இணையதளத்தில் இன்னும் சற்று நேரத்தில் (09.05.2013) காலை 10.00 மணிக்கு வெளியிடப்படும்

பள்ளிக்கல்வித்துறை - 15.03.2013ன் படி கண்காணிப்பாளர் மற்றும் இருக்கை கண்காணிப்பாளர் முன்னுரிமைப் பட்டியல்

மகன் இறந்ததால் தந்தைக்கு ஓய்வூதியம் : ஐகோர்ட் உத்தரவு


வெளிநாடு செல்ல விரும்பும் ஆசிரியரை அலைக்கழிக்க கூடாது : கல்வித்துறை உத்தரவு


நீதிமன்ற தீர்ப்பாணைக்குட்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988-க்கு முந்தைய பணிக்காலத்தை தேர்வு நிலை / சிறப்புநிலை வழங்குவதற்கான அரசாணை நடைமுறைப்படுத்த அரசு விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு



ஐந்தாவது ஊதியக் குழுவின் காலமான 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியராக பதவியுயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.06.1988 முந்தைய பணிக்காலத்தை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை/ சிறப்பு நிலை நிர்ணயிக்க விவரம் கோரியுள்ளதாக அறியப்படுகிறது.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இறப்பு / இயலாமையால் ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை பெற தற்காலிகமாக அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவு

Click Here


புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ நமோ நாராயன் மீனா அவர்கள் அளித்த பதில் உரையில், ஏற்கெனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய விதிகளின் படியே புதிய பங்களிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்களில் இறப்பு / இயலாமைஆகிய காரணங்களால் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர் / ஊழியர் குடும்பங்களுக்கு பணிக்கொடை தற்காலிகமாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், ஓய்வூதியத்தில் மட்டும் தான் மாற்றம் கொண்டுவரப்பட்டதே தவிர பணிக்கொடை மற்றும் ஏனைய பலன்களில் எவ்வித மாற்றமும் மத்திய அரசு செய்யவில்லை என்று நேற்று மக்களவையில் தெரிவித்தார்.

 இது குறித்த மத்திய அரசு சுற்றறிக்கை எண்.38/41/06-P & PW(A) நாள்.5.5.2009 அன்றைய தேதியில் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். 

ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை பெற  குறைந்தபட்சம் 5 வருடம் அரசு பணியில் பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கொடையானது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு 1/2(சம்பளம்)வீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மொத்த ஊதியத்தில் 16-1/2மடங்கு(கடைசியாக பெற்ற ஊதியம்) அல்லது ரூ.10 லட்சம், இவற்றில் எது குறைவோ அந்த தொகை ஓய்வோ பெறுபவருக்கு வழங்கப்படும். பணியின் போது ஒரு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்திற்கு கீழ்கண்ட கணக்கின் படி பணிக்கொடை வழங்கப்படும்.
 
:
Sl. No.
Length of Qualifying Service
Rate of Death Gratuity
1.Less than one year2 times of emoluments
2.One year or more but less than 5 years6 times of emoluments
3.5 years or more but less than 20 years12 times of emoluments
4.20 years or moreHalf of emoluments for every completed
six monthly period of qualifying service
subject to a maximum of 33 times of emoluments.
Maximum amount of Death Gratuity admissible is Rs, 10 lakh with effect from 1.1.2006. 

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல் 32 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது.


விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரத்தைச் சேர்ந்த ஜெயசாந்தி உள்ளிட்ட 32 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு 2010 ஏப். 1-இல் கொண்டு வந்தது.

அதற்கு முன்பே எங்களை ஆசிரியர்களாக பணிகளில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்பதல் அளித்தனர். இருப்பினும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால், எங்கள் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஏற்க மறுத்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாத நிலை ஏற்பட்டால், ஓராண்டு காலத்தில் மத்திய அரசை, மாநில அரசு அணுகி தகுதியில் இருந்து விதிவிலக்கு பெறவேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு கோரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
மத்திய அரசின் சட்ட விதிப்படி படி, ஆசிரியர்களை பணியில் நியமிக்கமுடியாத நிலை ஏற்பட்டால், மாநில அரசு அதற்கான காலக்கெடுவுக்குள் விதிவிலக்கு கோரி விண்ணப்பித்து இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் இல்லாத நிலை ஏற்பட்ட போதும் அரசு அதற்காக மத்திய அரசை அணுகவில்லை. இந்தச் சூழ்நிலையில்  32 மனுதாரர்களையும் ஆசிரியர்களாக பணியில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததில் தவறு காணமுடியவில்லை. எனவே, 32 பேருக்கும் அதிகாரிகள் தாற்காலிக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அதற்கான ஊதியம் பெறுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களை நீக்கம் செய்து தகுதியானவர்களை நியமிக்கலாம். மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு அவ்வப்போது தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை ஜூன் 6-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலரி லிருந்து உயர்நிலைப் பள்ளி த.ஆ, முதுகலை ஆசிரியரி லிருந்து மேற்பார்வையாளர், இ.நி.ஆ இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு இணையதளங்கள்

 மே 9-ஆம் தேதி 10 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

http://tnresults.nic.in

 http://dge1.tn.nic.in

 http://dge2.tn.nic.in

 http://dge3. tn.nic.in 

அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்


ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம், புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகளை பார்ப்போம்.

அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி 2.8.2006 தேதியிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்.114, 66, 89, பற்றி தெரிந்து கொள்வோம்.

அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கடிதம் கொடுக்கும் போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் உடனே வாங்கி கொண்டதற்கான ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்) மனுதாரருக்கு கொடுக்க வேண்டும்.

அரசு அலுவலர் கொடுக்கும் ஏற்பு ரசீதில் மனுதாரரின் பெயர், முகவரி, யாருக்கு என்ன விசயமாக அனுப்பபட்டுள்ளது என்ற விவரமும், கடிதம் வாங்கும் அலுவலரின் கையெழுத்தும், அவர் வகிக்கும் பதவியின் பெயரும், அலுவலக முத்திரையும் தேதியுடன் இருக்க வேண்டும்.

தபால் மூலம் கடிதம் அனுப்பும் போதும் அதற்கான ஏற்பு ரசீது மனுதாரர்க்கு அதிக பட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கபட வேண்டும்.

அனுப்பும் புகாரின் மீது அதிகபட்சம் 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க 60 தினத்திற்கு மேல் ஆகும் என்றால் இடைக்கால பதிலும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையும், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் 60 தின்ங்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகள்படி கடிதங்களை கையாள அரசு, ஆணை 114 வலியுறுத்துகிறது. [அரசு ஆணை 114 என்பது அரசு ஆணை 66(23.02.1983) அரசு ஆணை 89(13/05/1999) மற்றும் மத்திய அரசு ஆணை 13013/1/2006(5.5.2006) ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது] எனவே, இனி நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு கடிதம் கொடுத்தால் அரசாணை எண்கள்: 114, 66, 89-ன் படி ஏற்பு ரசீது கேட்டு வாங்குங்கள். இதுவே நமக்கு இறுதி நிவாரணம் கிடைக்க வழி வகுக்கும்.

Popular Posts