தீபாவளி 2012 பண்டிகையின் போது தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாணவர்களுக்கு இறை வணக்கத்தின் பொது விளக்குதல் மற்றும் பிரச்சாரம் செய்தல் குறித்த பள்ளிகல்விக்கான தீயணைப்புத் துறையின் செயல்முறைகள்

முதல் தாளில் தேறியவர்கள் பணி நியமனம்


ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

  இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நாளை (அக்., 31) ஆஜராக வேண்டும்.

  வேலை வாய்ப்பு பதிவு அட்டை சான்றொப்பமிட்ட இரு நகல்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால்டிக்கெட் நகல், அழைப்பு கடித நகல் ஆகியவற்றுடன், வருகை தர வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 1:30 விகிதத்தில் ஆசிரியர்களை நியமிக்க திட்டம்


அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
பெரும்பாலான பள்ளிகளில், 60 முதல் 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகின்றது.
குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுதேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கீழ்நிலைக்கு சென்று விடுகிறது. இவற்றை தவிர்த்து, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பொருட்டு, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, தமிழக அரசு 1: 30 விகிதாச்சாரப்படி மாணவர்களை நியமிக்க, திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அரசு பள்ளிகளில், தற்போது பணியாற்றும் முதுகலை பட்டதாரி, இளங்கலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை; 1:30 விகிதாச்சாரப்படி பள்ளிகளில் தேவைப்படும் ஆசிரியர்கள் விபரம்; ஒவ்வொரு பள்ளிகளிலும்,காலியாக உள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில், 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, பிரிவு வாரியாக தேவைப்படும் ஆசிரியர்கள் விபரங்களை, அரசு சேகரிக்கிறது. 2013 ஜூன்- முதல்,இந்த விகிதப்படி ஆசிரியர்கள் பணியாற்றுவர்" என்றார்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் 01.01.2012 முதல் புதிய ஊதிய நிர்ணயப் பட்டியல்

நிதியுதவி/ சுயநிதி தரம் உயர்த்துதல் / தற்காலிக அங்கீகாரம் புதுப்பித்தல் - நிர்ணயிக்கப்பட்ட நில அளவு உள்ள/ அல்லாத பள்ளிகள் விவரம் கோரி - இயக்குனர் உத்தரவு

Constitution of District Level Vigilance Committee and State Level Scrutiny Committee to verify the genuineness of community certificate

New Pension Scheme - Offer Document

Pupil –teacher ratio as per RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT-2009 and NORMS AND STANDARDS FOR A school

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ரூ.2000/-க்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மாநில அளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் வாங்க வரைவோலை எடுத்து அனுப்பும் பணி நிறுத்தி வைப்பா ?

SSA திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளி பராமரிப்பு நிதியாக, 5000 ரூபாய், வளர்ச்சி நிதியாக, 5,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.10000/-மும் அதிகபட்சம் ரூ.15000/-மும் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ரூ.2000 /- க்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மாநில அளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் வாங்க வரைவோலை எடுத்து அனுப்பப்பட்டு பெரும்பாலான மாவட்டங்களில் புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் , 
வரைவோலை அனுப்பும் பணி நிறுத்தி வைப்பு என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே மாவட்ட திட்ட அலுவலகத்தில் இருந்து வரைவோலைகள்  சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தால் அதையும் திருப்பி அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால் ஏற்கனவே புத்தகங்களை பெற்ற பள்ளிகளின் நிலை என்ன என்பது குழப்பமாகியுள்ளது. எனவே இது குறித்து அதிகாரபூர்வமான தகவலை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியிட்ட பிறகே இது குறித்து தெளிவான நிலையை அறிய முடியும்.


Click Here

HIGH & HR.SEC.SCHOOL HM TO DEO PANEL

DSE seeks High to Higher Secondary school 2013-14 upgrade proposals

தனியார் மழலையர் / தொடக்கப்பள்ளிகளின் கட்டணங்களை பரிசோதிக்க இரு நபர் குழு அமைத்து ஒரே நாளில் அறிக்கை தர உத்தரவு :

Observance of Vigilance Awareness week from 29.10.12 to 03.11.12

SMC கூட்ட நிகழ்வுகள் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் விவரம் வழங்க உத்தரவு :

19 மாவட்டங்களுக்கான மாநில கணக்காயர் தணிக்கை :

ஒரு நாள் RTI பயிற்சி (8 மாவட்டங்களுக்கு PA, Office Asst, Aeeo)

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி இலக்குகள் மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகள் பற்றி ஆய்வுக் கூட்டம் நடத்துதல்

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி அறிக்கையினை (JOB CHART) ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் சமர்பிக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

பட்ட படிப்புகளுக்கான (பொது மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு) தேர்வு எழுதும் போது தேர்விற்கு தற்செயல் விடுப்பை தூயக்கலாம் - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் - தொடக்கக்கல்வி இணை இயக்குனர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசு/நிதியுதவி / தனியார் பள்ளி - வளாகம்/ சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தலில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் - பள்ளிக்கல்வி அரசாணை வெளியீடு

10 மாவட்டங்களை சேர்ந்த 75 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள RIEST நிறுவனத்தால் அளிக்கப்படும் 30 நாட்கள் (02.11.2012 முதல் 30.11.2012 முடிய) ஆங்கிலப் பயிற்சியில் பங்கேற்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

அரசு ஊழியருக்கு "லேப்டாப்' : பி.எஸ்.என்.எல்., சலுகை


பி.எஸ்.என்.எல்., மற்றும் அரசு ஊழியர்களுக்கு, 10 முதல் 12.5 சதவீத தள்ளுபடியில் "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது.
இவை மூன்று மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. "டிஇசட் 100' -ரூ.10,999, "டிஇசட் 200' -ரூ.6499, "டிஇசட் 300' -ரூ.3999 என்ற விலையில் கிடைக்கிறது. முதல் கட்டமாக டெராகாம் நிறுவன "டிஇசட் 200' மாடல்கள், பி.எஸ்.என்.எல்., முகவர் மூலம் விற்கப்படுகின்றன. இதனுடன், "3 ஜி டேட்டா கார்டு' -ரூ.2100, "கீ பேடு' -ரூ.800, "சிம்கார்டு' -150 என மொத்தம், ரூ.9,549 க்கு விற்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு 12.5 சதவீத தள்ளுபடியிலும் இவை வழங்கப்படுகின்றன. இச்சலுகை அக்., 31 ம் தேதி வரை உள்ளது. பொதுமக்கள், தள்ளுபடி இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம்.

எஸ்.எஸ்.ஏ., தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்பு


அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000 தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என, இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில் எஸ்.எஸ்.ஏ., திட்டம், 2002ல் துவக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், மாவட்ட, ஒன்றிய அளவில், 5,000 பேர், கட்டட பொறியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கம்ப்யூட்டர் புரோகிராமர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், பணி புரிகின்றனர்.

இவர்களுக்கு, 6,000 முதல், 13 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப் படுகிறது. 10 ஆண்டுகளாக தொகுப்பூதிய நிலையில் பணிபுரிந்து வரும் இவர்கள், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, தமிழக அரசை, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பணி வரன்முறை குறித்த அறிவிப்பை, ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் மற்றும் சட்டசபை கூட்டத்தொடரில், ஊழியர் எதிர்பார்க்கின்றனர்; ஆனால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., இயக்கக வட்டாரம் கூறுகையில், ""ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, தொகுப்பூதிய அடிப்படையில், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனவே, அவர்களை, பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. எனினும், மத்திய அரசின் வேறு திட்டங்கள் தொடர்ந்து வரும் என்பதால், அவர்களுடைய வேலைவாய்ப்பு பாதிக்காது,'' என, தெரிவித்தன.

TNPTF நவம்பர் 07 மாநிலம் தழுவிய வட்டார தலைநகர் ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்

தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) மத்திய அரசு ஊழியர்களில் இறந்த / இயலாமை ஆகிய காரணங்களால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் நிவாரணம் (DCRG, COMMUTATION, FAMILY PENSION & DEARNESS RELIEF) வழங்கி மத்திய அரசு உத்தரவு.

சுற்றுச்சூழல் மன்றங்கள் துவங்க பள்ளிகளுக்கு நிதி


மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மன்றங்கள் துவங்க, 59 பள்ளிகளுக்கு ரூ.1.47 லட்சம் வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மரம் நடுதல், விழிப்புணர்வு கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்துவது, களப்பணிகளில் ஈடுபடுவதற்காக, பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.1.47 லட்சம் ஒதுக்கப்பட்டது.
சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்த விழாவில், 59 பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் தலா ரூ.2,500 க்கான காசோலைகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி வழங்கினார்.

"மாவட்டத்தில் இதுவரை 40 நடுநிலை பள்ளிகளில் இம்மன்றங்கள் உள்ளன. மேலும் 59 பள்ளிகளில் மன்றம் துவங்கப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் 50 மாணவர்களை தேர்வு செய்து, அப்பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியர், மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர்,&'&' என, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தெரிவித்தார்.

Fundamandal Rules

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அதிமுகவும் திமுகவும் பெயரளவிற்கே எதிர்க்கின்றன-ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை அக்.19-

மத்திய அரசு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்த தற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் பெயரளவிற்கே தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முத லீடு, டீசல் விலை உயர்வு, குடும்பத்திற் கான சமையல் எரிவாயு சிலிண்டர் குறைப்பு, பொதுத்துறைப் பங்கு விற்பனை, தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு, டெங்குக் காய்ச்சல் பரவ லைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 16-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக் கம் நடைபெற்று வருகிறது.


இப்பிரச்சார இயக்கம் வெள்ளிக்கிழ மையன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு வந்தது. அங்கு பிரச்சாரக் குழுவிற்கு தலைமையேற்று வந்த ஜி.ராம கிருஷ்ணன் பேசியதாவது:

சுமார் 20 கோடி மக்களின் வாழ்வாதா ரத்தைப் பறிக்கும் வகையில் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீட் டிற்கு அனுமதித்துள்ளது மத்திய அரசு. இதை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த செப்டம்பர் 20 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை நடத்தின. இப்போ ராட்டத்தால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் முற்றிலுமாக இயங்கவில்லை.

இவ்வளவு எதிர்ப்பையும் மீறி தனது நாசகரக் கொள்கைக்கு அனுமதி வழங் கியதோடு, அதை நியாயப்படுத்தியும் பேசி னார் மன்மோகன்சிங். மத்திய அரசில் அங் கம் வகிக்கும் திமுக அமைச்சரவையில் இக்கொள்கைக்கு ஒப்புதல் தந்துவிட்டு, வெளியில் எதிர்ப்பதாக பாசாங்கு செய்தது. தமிழகத்தை ஆளும் அதிமுக அந்நிய முத லீட்டை எதிர்ப்பதாக அறிக்கை மட்டும் தந்துவிட்டு, பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண் டது. பொருளாதாரக் கொள்கையில் திமுக வும், அதிமுகவும் காங்கிரஸ், பிஜேபியின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களை பின்பற்றி வந்ததே கடந்தகால வரலாறு. 

தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டால் சிறு, குறு தொழில் நிறுவ னங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய விசைத் தறி நிறுவனங்கள் அசைவற்றுக் கிடக் கின்றன. திருப்பூர், கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் இயங்காததால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கின்றனர். இப்பொழுதுதான் முதல்வர் குழு அமைத்துள்ளார். எங்களுக்கு குழு முக்கியமில்லை. மின் வெட்டுப் பிரச் சனை தீர உருப்படியான நடவடிக்கை தேவை. இப்படிப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கை களைக் கண்டித்து நாட்டு மக்கள் கிளர்ந் தெழ வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ் ணன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இப்பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.சுகந்தி, ஜி.சுகுமாறன், மாவட்டச் செயலாளர் எம். சின்னத்துரை, முன்னாள் எம்எல்ஏ., எஸ். ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், கரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இலக்குவணன், ஒன்றியச் செயலாளர் எம்.சண்முகம், நகரச் செயலாளர் ஆர்.எம்.ஜெயராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.எம்.சங் கர், ஏ.பழனிச்சாமி, எஸ்.லெட்சுமணன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்வித் துறையிலும் அந்நியர் நுழைவு

புதுதில்லி, அக். 19-

“பொருளாதாரச் சீர் திருத்தம்” என்ற பெயரில் நாட்டு மக்கள் மீது ஈவிரக் கமற்ற தாக்குதலை கட்ட விழ்த்துவிட்டுள்ள மன் மோகன் சிங் தலைமை யிலான காங்கிரஸ் கூட் டணி அரசு, அடுத்ததாக கல் வித்துறையை குறிவைத் துள்ளது.

உயர்கல்வித்துறையை அந்நியருக்கு திறந்துவிட்டு, முற்றிலும் தனியார்மயமாக் கிட துடித்துவரும் மன்மோ கன் அரசு ஏற்கெனவே இட துசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நிறைவேற்ற முடியாமல் வைத்திருக்கிற அந்நியப் பல்கலைக்கழகங் கள் மசோதா உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த மூன்று மசோதாக்களை எப்படி யேனும் நிறைவேற்றுவது என தீர்மானித்துள்ளது. 

தங்களது “சீர்திருத்த” நடவடிக்கைகள், கல்வித் துறையை அந்நிய முதலீட் டிற்கு ஆதரவாக திறந்து விடாமல் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டாது என மத்திய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். 

இந்த வரிசையில் நிலு வையில் நிற்கும் மசோதாக் களை எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுடன் பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

உயர்கல்வி மதிப்பீட்டு மசோதா, கல்வித்துறையில் நியாயமற்ற நடவடிக்கை கள் தொடர்பான மசோதா மற்றும் அந்நிய கல்வி நிறு வனங்கள் மசோதா ஆகிய வை பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் கபில் சிபல், இந்த மசோ தாக்கள் நிறைவேற்றப்படா ததால் உயர்கல்வித்துறையில் அந்நிய நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பெருமளவிற்குவரவேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறாமல் தள்ளிப் போகிறது என்று வருத்தப் பட்டுக்கொண்டார்.

“குளிர்கால கூட்டத் தொடரில் இம்மசோதாக் களை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தரும் என்று நம்பு கிறேன்” எனவும் அவர் கூறி னார். 

தில்லியில் வெள்ளி யன்று நடைபெற்ற இந்தி யா-நியூசிலாந்து கல்விக் கவுன்சிலின் முதலாவது கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றவந்த கபில்சிபல், செய்தியாளர்களிடம் பேசு கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

2020ம் ஆண்டில் 4.5 கோடி மாணவர்கள் பல்க லைக்கழகங்களுக்குச் சென்று உயர்கல்வி பெறுப வர்களாக அதிகரித்திருப் பார்கள் என்றும், இவ்வ ளவு பேருக்கும் உயர்கல்வி அளிக்க அரசாங்கத்தால் முடியாது என்றும் கபில் சிபல் கைவிரித்தார். (பிடிஐ)

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து பணியிடங்களையும் விரைவாக நிரப்பப்பட்டு வருகிறது - பள்ளிக்கல்வி இயக்குநர்

IGNOU Convacation Form

மாற்றுத் திறனாளிகளுக்கான 12ம் தேசிய நீச்சல் போட்டி 6 முதல் 9.12.12 வரை நடத்தவும் அதில் உரிய மாணவர்களை பங்கெடுக்க நடவடிக்கை எடுக்க - அரசு கடிதம் வெளியீடு

நிதியுதவி பள்ளிகளில் உள்ள உடற்கல்வி இயக்குனர் நிலை 2 லிருந்து நிலை 1க்கு தரம் உயர்த்த கருத்துருக்கள் கோரி - பள்ளிகல்வி இயக்குனர் உத்தரவு

விஜயதசமி 2012ஐ முன்னிட்டு அக்டோபர் மாதத்தை மாணவர் சேர்க்கை மாதமாக அறிவித்து அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

6th Pay Commission - Extension of the Tenure of Pay Grievance Redressal Cell

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு (CPS) விதிகளோ அல்லது அரசாணையோ இல்லை - தகவல் அறியும் உரிமைச் சட்டம்

TET PAPER I and II Key

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களே மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களே மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.


இதனால்  கடலோர மாவட்டங்களில்  பலத்த மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்யும். சென்னையில்  சில நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும். மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் நீர்மட்டம் உயர்ந்தது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கும், புதுவை மாநிலத்திலும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு தகுந்தார்போல மற்ற கடலோர மாவட்டங்களில் விடுமுறை பற்றிய முடிவுகளை கலெக்டர்கள் எடுக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேவகோட்டையில் விடுமுறை 

 தூத்துக்குடியில் விடுமுறை
 தொடர்மழை; புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை அக்டோபர்
 நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை

2012 - 13ஆம் நிதி ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.6% ஆக உயர்கிறது. வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011-12  நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.25 சதவீதத்தை விட அதிகமாக தற்பொழுது 2012-13 நிதி ஆண்டிற்கான காலத்தில் பி.எப் சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டிற்கு 8.6% முதல் 8.8% வரை பெறப்பட கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலத்தில் 2011-12 நிதி ஆண்டில் சதவீதம் 8.25 
சதவீதமாகவும், அதற்கு முன், 2010-11 ஆண்டில் 9.5 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இதே வட்டிவிகிதம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சந்தாதாரர்களுக்கும் பொருந்தும் எனவும் இந்த வட்டி விகித உயர்வு 01.04.2012 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 

ஓவியம் மற்றும் உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 1,524 பேர் நியமனம் , ஆசிரியர் தேர்வு வாரியம் பெயர்கள் வெளியீடு



ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பள்ளி கல்வித் துறையில், உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட பிரிவுகளில், 1,524 சிறப்பு ஆசிரியர்கள்; அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர்கள்; அரசு, "பாலிடெக்னிக்' கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் இன சுழற்சி அடிப்படையிலான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம், 1ம் தேதி, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், நிரப்பப்பட உள்ளன.தேர்வு பட்டியலில் இடம் பெற்றோருக்கு, விரைவில் கடிதம் அனுப்பப்படும்.
Direct Recruitment of Special Teachers 2010 - 2011 and 2011 -2012 Vacancies through Employment Registration State Seniority
Revised Results for Physical Educational Teacher and Drawing
For Recruitment of Special Teachers (2010-2011 and 2011 – 2012) Vacancies through Employment State Seniority, Certificate Verification was held from 21.04.2011 to 28.04.2011 and 11.05.2011 and result was published on 27.07.2012. Due to some technical reasons the results of Physical Educational Teachers and Drawing Teachers was withdrawn. The Board is now releasing the list of provisionally selected candidates for the same. The selection list prepared based on the list sponsored by and received from the Director of Employment and Training, in the ratio of 1: 5. The said selection was purely carried on the basis of
Employment State Seniority, communal rotation and certain priorities laid down by the Government of Tamil Nadu. The formal selection intimation will be sent to them by post. Further communication will be issued by the Director of School Education regarding posting and placement.
Department
PET
Drawing
School Education 
1023
304
Elementary Education 
10
--
Corporation of Chennai 
08
--
Corporation of Madurai
01
03
Adi-Dravida Welfare Department 
47

பகுதி நேர பயிற்றுனர் இடமாறுதல் செய்ய வழிவகை இல்லை, முழு நேர பயிற்றுனர்களாக மாற்றுவது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என அனைவருக்கும் கல்வி இயக்கம் இயக்குனர் அறிவுரை வழங்கி உத்தரவு

DEE - EMIS - TEACHERS PROFILE FORMAT, FILLING INSTRUCTIONS MANUAL & POWERPOINT SLIDE SHOW - LATEST

அனைத்து CEO/DEEOs கலந்து கொள்ளும் ஆய்வுகூட்டம் 22.10.2012 அன்று சென்னையில் பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்களால் நடத்தபடவுள்ளது குறித்த இயக்குனரின் செயல்முறைகள்

ஒவ்வொரு வகுப்பிலும் புகார் பெட்டி: தேசிய ஆணையம் உத்தரவு


 "அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா உத்தரவிட்டார்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிகழ்ந்த குழந்தை உரிமை மீறல்கள் குறித்த, இரண்டு நாள் பொது விசாரணை, சென்னையில் நேற்று துவங்கியது. இதற்காக, குழந்தை உரிமை மீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், விசாரணை செய்த போலீசார், கல்வித்துறை அதி காரிகள் உள்ளிட்ட பலதுறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொது விசாரணையில் ஆஜராக வேண்டும் என, தேசிய கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், விசாரணைக்கு வந்தனர்.

62 உரிமை மீறல்கள்: இரு மாநிலங்களிலும் நிகழ்ந்த, 62 உரிமை மீறல்கள் குறித்த சம்பவங்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், கல்வி உரிமை மறுத்தல், குழந்தை தொழிலாளர், உடல் ரீதியான தண்டனை அளித்தது, குழந்தை கடத்தல், பாலியல் கொடுமைகள் என, பல்வேறு உரிமை மீறல் சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, செத்தவரை கிராமத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, கடந்த ஏப்ரல் மாதம், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து, விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, பேச முடியாமல் அழுததைக் கண்டு, பார்வையாளர்கள் கடும் வேதனை அடைந்தனர்.

மிரட்டல் புகார்: "போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை; உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை&' என, சிறுமியின் தாய் குற்றம் சாட்டினார்; மேலும், தங்களுக்கு, தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்தார். 

இதற்கு டி.எஸ்.பி., அளித்த பதில் திருப்தி அளிக்காததால், ""பாதிக்கப்பட்ட சிறுமிக்கென தனியாக வக்கீலை நியமித்து, அவருக்கு உரிய நீதி கிடைக்க, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சாந்தா சின்கா உத்தரவிட்டார்.

மேலும், "சிறுமி விரும்பும் பள்ளியில், கல்வியைத் தொடர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, அவர் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா பேசுகையில், "சிறுமி, எந்தப் பள்ளியில் சேர விரும்பினாலும், அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

புகார் பெட்டி : இரண்டாவதாக, சென்னை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த, 11 வயது சிறுமி, அருகில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவிபெறும் பள்ளி) படித்து, பள்ளி ஆசிரியையின் கொடுமைக்கு ஆளாகி, ஜூனில், "கெரசின் ஊற்றி தீ வைத்து, தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளை, சாந்தா சின்காவும், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும், கடுமையாக கண்டித்தனர். மாணவியரை ஆசிரியை கொடுமைப்படுத்தியது குறித்து, தங்களுக்கு எதுவும் தெரியாது என, பள்ளி தாளாளர் தெரிவித்தார். 

இதற்கு, "பள்ளியில் நடப்பது எதுவுமே தெரியாமல், எப்படி ஒரு நிர்வாகம் இருக்க முடியும்? மாணவியரிடம், குறைகளை கேட்டறியும் வழக்கத்தை கடைபிடித்தீர்களா?" என, பல்வேறு கேள்விகளை, வசந்திதேவி கேட்டார்.
இதையடுத்து, ஆணைய தலைவர் சாந்தா சின்கா கூறியதாவது: சம்பந்தபட்ட பள்ளி மட்டுமில்லாமல், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒவ்வொரு வகுப்பிலும், புகார் பெட்டி அமைப்பதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ, மாணவியரிடம், முறையாக குறைகளை கேட்டறிந்து, அதை நிவர்த்தி செய்ய, பள்ளி நிர்வாகங்களும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சாந்தா சின்கா தெரிவித்தார்.

மாற்றுத்திறனுள்ள மாணவர்களை இயல்பான பள்ளியில் சேர்க்கும் பொருட்டு துவக்கப்பட்டுள்ள பகல் நேர பயிற்சி மையங்கள் சிறப்புற செயல்பட அறிவுரைகள் வழங்கி ssa மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக காலி எற்படும் பொது அப்பள்ளியின் தேவை , தகுதியின் அடிப்படையில் தேவையான பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றிக்கொள்ளவும் பின்னர் அவை மாற்றப்படக்கூடாது எனவும் வெளியிடப்பட்ட அரசாணை

அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளின் விவரங்கள் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

டெங்கு காய்ச்சல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி


சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியில் 250 தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 120 மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை ஆரம்ப நிலையிலேயே ஒழிப்பது குறித்தும், தண்ணீரைத் தேங்க விடாமலும், தண்ணீரை மூடிவைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்தப் பயிற்சியை துணை மேயர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) வெங்கடேஷ், துணை ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் மகேஷ்வரன், கூடுதல் பொது சுகாதார அலுவலர் தங்கராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

TN-TET Re-Exam Paper - Answer Keys (Exam Held on 14.10.12)

அஞ்சல் வழி கற்கும் பாடங்களில் அங்கீகரிக்கப்படுபவவை எவை?: அரசு விளக்கம்


அஞ்சல் வழியாக கற்கும் பாடங்களில் அரசு பணி நியமனத்தின்போது ஏற்றுக் கொள்ளக் கூடிய படிப்புகள் எவை என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் எம்.ஏ. (இங்கிலீஷ் மற்றும் கம்யூனிகேஷன்) படிப்பு, அரசு பணி நியமனத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்புக்கு சமமான படிப்பாக கருதப்படும்.


- கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்குகிற எம்.ஏ. அப்ளைடு சைக்காலஜி, கவுன்சிலிங் மற்றும் கைடன்ஸ் படிப்பு, மருத்துவக் கல்விப்பணியில் உதவி பேராசிரியர் மற்றும் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியான முதுநிலை உளவியல் படிப்புக்கு இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.


- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. அப்ளைடு எக்கனாமிக்ஸ் படிப்பு, எம்.ஏ. பொருளாதாரம் படிப்புக்கு சமமாக கருதப்படும்.

- கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி மற்றும் பிளான்ட் பயோடெக்னாலஜி படிப்பானது, பி.எஸ்சி. தாவரவியல் படிப்புக்கு இணையானதாகவும், இதே பல்கலைக்கழகத்தின் பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா படிப்பு, பி.ஏ. வரலாறு பட்டப் படிப்புக்கு சமமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பி.லிட் (தமிழ்) படிப்பு, சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட். (தமிழ்) படிப்புக்கு இணையானதாகவும், இதே பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. அப்ளைடு சைக்காலஜி படிப்பானது, எம்.ஏ. சைக்காலஜி படிப்புக்கு சமமாகவும் கருதப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்காதீர்:கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை


பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
 மதுரை டிவிஎஸ் மெட்ரிக். பள்ளியில் மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

 எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக அளவாக ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் எவ்வித சிரமமும் அடையக் கூடாது என்பதற்காக பாடப்புத்தகங்களில் இருந்து அனைத்தையும் முதல்வர் ஜெயலலிதா இலவசமாக வழங்கி வருகிறார். வேறெந்த துறைக்கும் இல்லாத சிறப்பு, சமூகத்தை நல்வழிப்படுத்தக் கூடியதாக பள்ளிக் கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, அதன் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.


 இத்தகைய துறையில் பணியாற்றக் கூடிய ஒவ்வொருவரும் அதே ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்ற வேண்டும். அரசின் திட்டங்கள் மாணவர்களை முழுமையாகச் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகள் அனைத்தும் நூறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை அடைய ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதியேற்க வேண்டும்.
 சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் ஏராளமாக வருகின்றன. இனிவரும் காலங்களில் பள்ளிகளில் எவ்விதப் புகாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது.
 ஆசிரியர்களின் வருகையை, அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கல்வித் துறை அலுவலர் ஆசிரியர்களை நல்ல முறையில் நடத்துவது அவசியம் என்றார்.
 பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபீதா, மதுரை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, பள்ளிக் கல்வி இயக்குநர் கு.தேவராஜன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சு.நாகராஜமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அ.கருப்பசாமி நன்றி கூறினார்.

 ஆய்வுக் கூட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் சிறந்த பள்ளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் கேடயங்களை வழங்கினார்.

 மாணவர் சேர்க்கை, கல்வித் தரத்தை மேம்படுத்துவது, ஆங்கில வழிப் பிரிவு துவக்கம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்துவது, மாணவர்கள்-ஆசிரியர் தகவல் தொகுப்பு, அலுவல் நடைமுறைகள் உள்ளிட்ட அறிவுரைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைச் செயலர் சபீதா வழங்கினார்.

நவம்பர் இறுதியில் ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள்


ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வரும் நவம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.


அதற்கடுத்த ஒரு மாதத்தில் புதிய தேர்வு முறையின் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு டிசம்பரில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்தப் புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வழக்கத்தைவிட கூடுதலாக நேரம் ஆகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
6 லட்சம் பேர்: தமிழகம் முழுவதும் 1,094 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்வை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். எந்தவொரு பிரச்னையும் இன்றி இந்தத் தேர்வு மிகவும் அமைதியாக நடந்து முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தேர்வின் அடிப்படையில் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதற்காக ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

காலையில் நடைபெற்ற முதல் தாளை 2 லட்சத்து 74 ஆயிரம் பேர் எழுதினர். பிற்பகலில் நடைபெற்ற இரண்டாம் தாளை 3 லட்சத்து 73 ஆயிரம் பேர் எழுதினர். சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரண்டு தாள்களையும் எழுதினர்.

தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டது குறித்து பெரும்பாலான தேர்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். முதல் தாளில் ஆங்கிலமும், இரண்டாம் தாளில் தமிழும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
3 வாரங்களுக்குப் பிறகு விடைகள் வெளியீடு: தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னைக்கு இந்த விடைத் தாள்கள் அனைத்தும் கொண்டுவரப்படும். அதன் பிறகு மூன்று வாரங்கள் இந்த விடைத் தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி நடைபெறும். 

விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, கேள்விகளுக்கு உரிய சரியான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஜூன. 2010ல் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூனில் நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு என்று 4 மாதங்களில் 2 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

எனவே, இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ மற்றொரு தேர்வை நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இப்போதுள்ள அரசாணையின்படி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக இதுவரை அரசாணை பெறப்படவில்லை. விரைவில் இந்த அரசாணையைப் பெறுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 2,448 பேருக்கு ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதில் 202 பேர் உரிய தகுதிகளுடன் இல்லை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அனைவரது மதிப்பெண்ணையும் மீண்டும் சரிபார்க்க வேண்டியுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற 2,246 பேருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

"ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாவிட்டால் பள்ளிகளை மூடுங்கள்"


"துப்புரவு தொழிலாளர்களை விட, ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது; நியாயமான சம்பளம் வழங்க முடியாவிட்டால், பள்ளிகளை மூடிவிடலாம்" என, கேரள அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில், மழலையர் பள்ளிகளை (ப்ரீ பிரைமரி), பெற்றோர் - ஆசிரியர் கழகம் நடத்தி வருகிறது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தொகுப்பூதியமாக, குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது; இதுதொடர்பாக, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "மழலையர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மாதம், 5,000 ரூபாயும், அங்கு குழந்தைகளை பராமரிக்கும் ஆயாக்களுக்கு, 3,500 ரூபாயும் சம்பளம் வழங்க வேண்டும்&' என, கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, கேரள அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. நீதிபதிகள், சவுகான் மற்றும் கேகார் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தது. இறுதியில், கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கேரளாவில், மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களை விட, குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்களுக்கு, வழங்க வேண்டிய சம்பளம் குறித்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே.
மழலையர் பள்ளிகளை, பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் தான் நடத்தி வருகின்றன. இருந்தாலும், ஆசிரியர்கள் மற்றும் ஆயாக்களுக்கான தொகுப்பூதியம், அரசு சார்பில் வழங்கப்படுகிறது. அதேபோல், மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில், இலவசமாக உணவும் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை, அரசால் வழங்க முடியாவிட்டால், மழலையர் பள்ளிகளை மூடி விடலாம். இந்த பிரச்னையை, கேரள மாநில அரசு நினைத்திருந்தால், 10 நிமிடத்தில் பேசி முடித்திருக்கலாம்; ஆனால், இதற்காக, டில்லி வரை வந்துள்ளனர்.
சம்பள உயர்வை அமல்படுத்த, கேரள அரசுக்கு கால அவகாசம் தேவை எனில், அதுகுறித்து உய்ர் நீதிமன்றத்தில் முறையிடலாம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.2000லிருந்து ரூ.5000/- ஆக உயருமா ?

 இடைநிலை ஆசிரியர்களுக்கான தர ஊதியம் 4,200 ஆக உயர்வு , தன் பங்கேற்பு ஓய்வூதியம் (CPS) இரத்து போன்றே பண்டிகை முன்பணம் உயர்வு அறிவிப்பும்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அறிவிப்புகளை ஓப்பிடுகையில் பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க சாத்திய கூறுகள் அதிகம் இருந்தாலும், 
முறையான அறிவிப்பிற்கு இதை அறுதியிட்டு கூற முடியும். விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால் அதற்குள் இது சார்ந்த அறிவிப்புகள்  வரலாம்!...  அதுவரை இது எதிர்பார்பாகவே இருக்கும்.

உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆண்டுகள் பணி முடித்த பகுதி நேர / தினக்கூலி / சில்லறை பணியாளர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி முறையான ஊதிய விகிதம் பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குதல் சார்பு - பள்ளிக்கல்வித்துறை செயல்முறை

6 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இட மாற்றம், 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு


6வது ஊதியக் குழு - அரசு ஊழியரின் பழைய பதவியின் ஊதிய விகிதம், தர ஊதியமும் புதிய பதவியுயர்வு பணியிடத்தின் ஊதிய விகிதம், தர ஊதியமும் ஒத்த நிலையில் இருந்தாலும்பதவியுயர்வின் பொது பழைய பதவியின் (Pay Band+Grade Pay)க்கு 3% ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் - அரசு விளக்கக்கடிதம் வெளியீடு

N-TET Re-Exam Paper - II Keys (Exam Held on 14.10.12)

2011-12 ஆம் கல்வியாண்டு - 3 முதல் 6 வகுப்பு வரை SC/ ST பெண் குழந்தைக்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - விலையில்லா புத்தகப் பைகள் மற்றும் மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் வழங்க மாணவர்களின் எண்ணிக்கை கோருதல்- இயக்குனரின் செயல்முறை

மாநில கணக்காயர் தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்வது குறித்து 19 மாவட்டங்களுக்கான கூட்டமர்வு (JOINT SITTING MEETING) நடத்துதல் சார்பு - தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை

SSA - Free Cleft Lip Surgery

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) - 5 ஆண்டுக்கு மேல் ஆசிரியர் பயிற்றுநராக பணிபுரிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு இறந்து 2 ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் எந்தவித பணப்பலங்களும் வழங்கப்படவில்லை - தகவல் அறியும் உரிமைச் சட்ட விளக்கம்

புதியதாக எளிமைப் படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் (SABL) அட்டைகள் மற்றும் ஏணிப்படிகள் மாற்றங்கள் குறித்து இரு நாள் முன் ஆயுத்த கூட்டம் அனைத்து DPC / ADPCக்களுக்கு 30 & 31.10.2012 திருச்சியில் நடத்த உத்தரவு -SSA மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

TRB - TNTET EXAMINATION ON 14.10.2012 - IMPORTANT INSTRUCTIONS

உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு - 30 ஆலோசனைகள் வழங்கி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

RTE 2009ன் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் கோரி அவற்றை தர மறுத்தாலோ / தாமதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் / பொறுப்பு ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் உத்தரவு

அஞ்சல் வழி கற்கும் பாடங்களில் அங்கீகரிக்கப்படுபவவை எவை?: அரசு விளக்கம்


அஞ்சல் வழியாக கற்கும் பாடங்களில் அரசு பணி நியமனத்தின்போது ஏற்றுக் கொள்ளக் கூடிய படிப்புகள் எவை என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் எம்.ஏ. (இங்கிலீஷ் மற்றும் கம்யூனிகேஷன்) படிப்பு, அரசு பணி நியமனத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்புக்கு சமமான படிப்பாக கருதப்படும்.


- கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்குகிற எம்.ஏ. அப்ளைடு சைக்காலஜி, கவுன்சிலிங் மற்றும் கைடன்ஸ் படிப்பு, மருத்துவக் கல்விப்பணியில் உதவி பேராசிரியர் மற்றும் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியான முதுநிலை உளவியல் படிப்புக்கு இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.


- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. அப்ளைடு எக்கனாமிக்ஸ் படிப்பு, எம்.ஏ. பொருளாதாரம் படிப்புக்கு சமமாக கருதப்படும்.

- கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி மற்றும் பிளான்ட் பயோடெக்னாலஜி படிப்பானது, பி.எஸ்சி. தாவரவியல் படிப்புக்கு இணையானதாகவும், இதே பல்கலைக்கழகத்தின் பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா படிப்பு, பி.ஏ. வரலாறு பட்டப் படிப்புக்கு சமமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

- அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பி.லிட் (தமிழ்) படிப்பு, சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட். (தமிழ்) படிப்புக்கு இணையானதாகவும், இதே பல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. அப்ளைடு சைக்காலஜி படிப்பானது, எம்.ஏ. சைக்காலஜி படிப்புக்கு சமமாகவும் கருதப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நிதியுதவி / தனியார் பள்ளிகளின் தற்காலிக/நிரந்தர அங்கீகார புதுப்பித்தல் விவரம் கேட்டு - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் - குழந்தை பாலியல் கொடுமை தடுப்பு - கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க உத்தரவு

CPS ஒரு பயனற்ற ஓய்வூதிய திட்டம் - பழைய , புதிய ஓய்வூதிய திட்டம் - ஒரு ஒப்பீடு

RMSA - 2011-12 நிதி ஆண்டிற்கான பள்ளி அலுவலக தணிக்கை தயார் செய்வதற்கான வழிக்காட்டுதல்கள் மற்றும் படிவங்கள்

இணையதளத்தில் வெளியிட பள்ளிகளின் புள்ளிவிவரம் சேகரிப்பு


தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியை, வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.

தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 55 ஆயிரத்து 667 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 5.49 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 1.35 கோடி மாணவ, மாணவியர், படித்து வருகின்றனர். அனைத்துப் பள்ளிகள், அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி, அவை, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. 

இந்த விவரங்களின் அடிப்படையில், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களை தீட்டவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை, ஆண்டுதோறும் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 32 பக்கங்கள் அடங்கிய படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. 

ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககத்தின் சார்பிலும், இதர வகுப்புகளுக்கு, மத்திய இடைநிலை கல்வித்திட்டம் சார்பிலும், விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவத்தில், தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அதற்கு, சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

மேலும், இனசுழற்சி என்ற அடிப்படையில், பல்வேறு இன மாணவர்கள் பங்கேற்கும் நடைமுறை விவரம், ஒப்பந்த ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களைப் பற்றிய விவரங்கள், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் உட்பட, பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

TET- புதிய விதிமுறைகளால் தேர்வர்கள் அதிருப்தி


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளால், தேர்வர் மத்தியில், எப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

 
வெயிட்டேஜ் அடிப்படையில், 100 மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. டி.இ.டி., தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 60 மதிப்பெண்களை பெற, தேர்வில், 150க்கு, 135 மதிப்பெண்கள் பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம், தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் அமலான பின், டி.இ.டி., தேர்வு முறை அமலுக்கு வந்தது.

கடந்த ஜூலையில் நடந்த இத்தேர்வு, வழக்கத்திற்கு மாறாக, அதிக சிந்திக்கும் திறனையும், அதிலும், ஒரு நொடியில், சரியான விடையை கணிக்கும் திறன் படைத்தவர்களால் மட்டுமே விடை அளிக்கும் வகையிலும் அமைந்து இருந்தது. அதேபோல், தேர்வெழுதிய, 6.5 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

தங்களை சமாதானப்படுத்தி, அடுத்த, டி.இ.டி., தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், டி.இ.டி., தேர்வுக்குப் பின், ஆசிரியரை நியமனம் செய்ய, புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில், ஆசிரியர் பணி நியமனம் நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, பி.எட்., மற்றும் டி.இ.டி., தேர்வு என, தனித்தனியே மதிப்பெண்கள் பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள், வெயிட்டேஜ் மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர கல்வித் தகுதிகளில், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 40மதிப்பெண்கள் வழங்கப்படும்.

புதிய முறையின்படி, பெரும்பாலான தேர்வர்களுக்கு, 40 மதிப்பெண்கள் சுளையாக கிடைக்கலாம். ஆனால், இது மட்டுமே, வேலையை உறுதி செய்யாது. டி.இ.டி., தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, 60 மதிப்பெண்களில், எவ்வளவு மதிப்பெண்களை தேர்வர் பெறுகின்றனரோ, அதைப் பொறுத்தே, ஆசிரியர் வேலை கிடைக்கும். எனவே, டி.இ.டி., தேர்வு மதிப்பெண்களே, வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

டி.இ.டி., தேர்வுக்கு, மொத்தம் 150 மதிப்பெண்கள். இதில், 60 சதவீதம் (90 மதிப்பெண்) பெற்றால், தேர்ச்சி என்ற நிலை இருக்கிறது. கடந்த தேர்வில், இந்த, 60 சதவீத மதிப்பெண்களை பெற்றவர் எண்ணிக்கை வெறும், 2,448 தான். இனி, புதிய வழிமுறையின்படி, டி.இ.டி., தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 60 மதிப்பெண்களையும், முழுவதுமாக பெற வேண்டுமெனில், 90 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற வேண்டும். அதன்படி, 150க்கு, 135 மதிப்பெண்கள் பெற்றால்தான், 60க்கு, 60 பெற முடியும். 90 மதிப்பெண்களை பெறவே,சிக்கலைச் சந்தித்த பலருக்கு, 135 மதிப்பெண்களை எடுப்பது சுலபம் அல்ல.

பணி நியமனம் நடக்கும்போது, தேர்வர் மத்தியில் கடுமையான போட்டி ஏற்படும். மொத்தத்தில், ஆசிரியர் வேலை, இனி தகவல் தொடர்புத்துறையில் ஆள் சேர்ப்பு போல தகுதிப் போட்டி அதிகரிக்கும். மதிப்பெண் என்பதை விட, தகுதி என்ற நிலை வரும்போது, அதிக அளவில் வடிகட்டும் நடைமுறைகளும் உருவாகும். அரசு பள்ளிகளில், நிரந்தர பணிகளில் சேரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம், பென்ஷன் மற்றும் அரசு விடுமுறைகள் வசதி மட்டும் அல்ல, பணிப் பளு, பொறுப்பு அதிகரிப்புக்கும் இத்தேர்வு முறை வழிகாட்டி இருக்கிறது என்ற கருத்தும் உள்ளது.

கலை மற்றும் அறிவியல் - இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு அரசுப் பணிகளில் வாய்பளிக்க இணையான பட்டப்படிப்புகளுக்கு அனுமதியளித்து அரசாணைகள் வெளியீடு

EMIS - ஆசிரியர் , மாணவர் மற்றும் பள்ளி விவரங்களை திரட்டுவது குறித்து நடந்த ஆய்வுக்கூட்ட குறிப்புகள்

தொடக்க மற்றும் உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான அக்டோபர் 2012க்கான குறுவள மைய பயிற்சி 20.10.2012 அன்று " உள்ளடங்கிய கல்வி" என்ற தலைப்பில் நடத்த - SSA மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

இன்று இரவு 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைகாட்சியில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வழிமுறைகள் குறித்த விவாதம் "நேர்பட பேசு" என்ற நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட இருக்கிறது

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த நிதியாண்டுக்குள் அனைத்து அரசு மற்றும் நிதியுதவிப் பள்ளிகளிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து 12.10.12 அறிக்கை அனுப்ப - ssa திட்ட இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - மாவட்டத்தில் உள்ள சிறார் இல்லங்கள், பயனடையும் சிறார்களின் எண்ணிக்கை, முகவரி மற்றும் மான்யம் போன்ற விவரங்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

TET Easy Weightage Calculation Excel File for BTs/ SGTs for 100 cut off

மதுரை மண்டல (8 மாவட்டங்கள்) தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 11.10.2012

புகையிலை நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்க வைக்க கூடாது - பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

ஓய்வூதிய துறையில் அன்னிய முதலீடு- மத்திய அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியம், காப்பீடு பொதுத்துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






ஓய்வூதியம், காப்பீடு பொதுத்துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி குழு தலைவர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன பொது செயலாளர் முத்துசுந்தரம், மாநில செயலாளர் அன்பரசு பேசினர்.


எழிலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி குழு தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வெற்றிராஜன், மாவட்ட செயலாளர் டேனியல்ஜெயசிங் பேசினர். வணிகவரித்துறை அலுவலகத்தில் பகுதி குழு செயலாளர் சந்திரன் தலைமையிலும், கிண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பகுதி குழு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், டிபிஐ அலுவலகத்தில் பகுதி குழு பொருளாளர் வினோத் தலைமையிலும் ஆர்ப் பாட்டம் நடந்தது.  கலெக்டர் அலுவலகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு


பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.


 ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.

 இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

 அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

 இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

 இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.

 அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
 அதன் விவரம்:
 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

 பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

 பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 

 இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
 இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

 வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?
 இடைநிலை ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
 90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை.............-12
 70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
 60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
 50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
 ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
 70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
 50 முதல் 70 சதவீதம் வரை............- 20
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 50 சதவீதத்துக்கும் கீழே................- 10
 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4

Popular Posts