ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நாளை (அக்., 31) ஆஜராக வேண்டும்.
வேலை வாய்ப்பு பதிவு அட்டை சான்றொப்பமிட்ட இரு நகல்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால்டிக்கெட் நகல், அழைப்பு கடித நகல் ஆகியவற்றுடன், வருகை தர வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது.