அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ரூ.2000/-க்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மாநில அளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் வாங்க வரைவோலை எடுத்து அனுப்பும் பணி நிறுத்தி வைப்பா ?

SSA திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளி பராமரிப்பு நிதியாக, 5000 ரூபாய், வளர்ச்சி நிதியாக, 5,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.10000/-மும் அதிகபட்சம் ரூ.15000/-மும் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ரூ.2000 /- க்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மாநில அளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் வாங்க வரைவோலை எடுத்து அனுப்பப்பட்டு பெரும்பாலான மாவட்டங்களில் புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் , 
வரைவோலை அனுப்பும் பணி நிறுத்தி வைப்பு என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே மாவட்ட திட்ட அலுவலகத்தில் இருந்து வரைவோலைகள்  சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தால் அதையும் திருப்பி அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால் ஏற்கனவே புத்தகங்களை பெற்ற பள்ளிகளின் நிலை என்ன என்பது குழப்பமாகியுள்ளது. எனவே இது குறித்து அதிகாரபூர்வமான தகவலை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியிட்ட பிறகே இது குறித்து தெளிவான நிலையை அறிய முடியும்.


Click Here

Popular Posts