டெங்கு காய்ச்சல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி


சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியில் 250 தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 120 மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை ஆரம்ப நிலையிலேயே ஒழிப்பது குறித்தும், தண்ணீரைத் தேங்க விடாமலும், தண்ணீரை மூடிவைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்தப் பயிற்சியை துணை மேயர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) வெங்கடேஷ், துணை ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் மகேஷ்வரன், கூடுதல் பொது சுகாதார அலுவலர் தங்கராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

Popular Posts