பி.எஸ்.என்.எல்., மற்றும் அரசு ஊழியர்களுக்கு, 10 முதல் 12.5 சதவீத தள்ளுபடியில் "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது.
இவை மூன்று மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. "டிஇசட் 100' -ரூ.10,999, "டிஇசட் 200' -ரூ.6499, "டிஇசட் 300' -ரூ.3999 என்ற விலையில் கிடைக்கிறது. முதல் கட்டமாக டெராகாம் நிறுவன "டிஇசட் 200' மாடல்கள், பி.எஸ்.என்.எல்., முகவர் மூலம் விற்கப்படுகின்றன. இதனுடன், "3 ஜி டேட்டா கார்டு' -ரூ.2100, "கீ பேடு' -ரூ.800, "சிம்கார்டு' -150 என மொத்தம், ரூ.9,549 க்கு விற்கப்படுகிறது.அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு 12.5 சதவீத தள்ளுபடியிலும் இவை வழங்கப்படுகின்றன. இச்சலுகை அக்., 31 ம் தேதி வரை உள்ளது. பொதுமக்கள், தள்ளுபடி இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம்.