அமைச்சர்கள் மீது பண மழை: குஜராத்தில் பரபரப்பு



ஆமதாபாத்,: குஜராத்தில் தொண்டு நிறுவனத்தினர் நடத்திய விழாவில், அமைச்சர்கள் மீது பண மழை பொழிய வைக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.குஜராத் மாநிலம், ஜுனாகர் பகுதியில், தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, கோசாலை அமைத்து, பசுக்களை பாதுகாத்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பில், கடந்த சனிக்கிழமை, விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மாநில உள்துறை அமைச்சர், ரஜினிகாந்த் படேல், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், கோவிந்த்பாய் படேல், மாநில பா.ஜ., தலைவர், ஆர்.சி.பல்து மற்றும் பல பிரபலங்களும், செல்வந்தர்களும் கலந்து கொண்டனர்.விழா நிறைவில், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பா.ஜ., தொண்டர்கள், 1,000 ரூபாய் நோட்டுகளை, அமைச்சர்களின் மீது மழையாய் பொழிந்தனர். "ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசுவது சட்டப்படி குற்றம்' என்பதை அறியாத மாநில அமைச்சர்கள், தங்கள் மீது பண மழை பொழிய வைக்கப்பட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.அத்துடன், கோசாலையை நடத்தி வரும், தொண்டு நிறுவனத்திற்கு, தங்கள் பங்களிப்பாக பெரும் தொகையை நன்கொடையாக வழங்கினர். அமைச்சர்களைப் பார்த்து, அவர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த, முக்கிய பிரமுகர்களும், செல்வந்தர்களும், தங்கள் பங்கிற்கு, கணிசமான தொகையை வழங்கினர். இதனால், சில நிமிடங்களில், தொண்டு நிறுவனத்திற்கு, 1 கோடி ரூபாய்க்கு மேல், நன்கொடை கிடைத்தது.குஜராத் மாநிலத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அகவிலைப்படி உயர்வு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு


மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு ஊழியர்களும்,எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும் இரு முறை அகவிலைப்படி உயர்வு (டி.ஏ.,) வழங்கப்படும். 

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெளியாகும் அறிவிப்பு, இந்த ஆண்டு ஏப்ரல் 18 ல், 8 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 72 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இதை 8 சதவீதம் உயர்த்தி 80 சதவீதமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அறிவிப்பு வெளியான உடன், அதை அனுசரித்து மாநில அரசும் அறிவிப்பு வெளியிடும். மத்திய அரசு ஏற்கனவே தாமதமாக அறிவித்துள்ள நிலையில், விரைவில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த, அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு


"கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி, நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு ஆகும்," என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர், பல்லம் ராஜூ பேசினார். 
 
திண்டுக்கல், காந்திகிராம் பல்கலையில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து அவர், பேசியதாவது:

மக்கள் தொகையில், அதிகமானோர் கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்களில், 65 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். தற்போது, விவசாய பரப்பு மிகவும் சுருங்கி வருவது கவலையளிக்கிறது. விவசாயத்தை பாதுகாப்பதன் மூலம் தான், நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய முடியும். இதற்கு கிராம பொருளாதாரம் வலுவாக இருக்க வேண்டியது அவசியம்.

கிராமம் மற்றும் கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு, அதிக விழிப்புணர்வு தரப்பட வேண்டும். கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி, நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு ஆகும். இவ்வாறு, பல்லம் ராஜூ பேசினார்.

மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள்


* இவ்வாண்டு மாறுதல் / பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும் நடக்கலாம் அல்லது வழக்கமான முறையிலும் நடக்கலாம். எப்படியாயினும் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை உரிய முறையில் சமர்ப்பிப்பதும் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் வரிசை முறைப்படி உள்ளதைச் சரிபார்த்துக் கொள்வதும் ஆசிரியர்களின் கடமையாகும்.
 
 
* மாறுதல் குறித்த அரசாணையும் இயக்குநரகத்தால் வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியான பின்னரே கலந்தாய்வு பற்றித் தெளிவான நிலைக்கு வரமுடியும். ஆனாலும் ஆசிரியர்கள் சற்று முன்னேற்பாடாகவும் விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியம்.

* சிறப்பு முன்னுரிமைக்கான சான்றுகள், வாழ்க்கைத் துணைவரின் பணிச்சான்று போன்றவற்றை முன்கூட்டியே பெற்று வைத்துக் கொள்ளவும். ஒருசில வருடங்களில் நடந்த மாறுதலின்போது கணவன் / மனைவி பணிபுரியும் இடங்களுக்கு இடையேயான தொலைவு குறும அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் குறிப்பிட்ட தொலைவுக்கிடையே பணிபுரியும் தம்பதியர் இம்முன்னுரிமையை இழந்தனர். மேலும் ஒருமுறை இச்சலுகையைக் கொண்டு மாறுதல் முன்னுரிமை பெற்றவர்கள் அடுத்துவரும் மூன்றாண்டுகளுக்கு மீண்டும் அதே முன்னுரிமையைப் பெற முடியாது என்பது போன்ற நெறிமுறை விதிகள் வெளிவர வாய்ப்புண்டு. பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் (பேனல்) உள்ளவர்கள் அசல் மற்றும் இரண்டு செட் கல்விச் சான்றுகளைத் தயாராக வைத்திருக்கவும்.

* தற்போதுள்ள நிலவரத்தை மட்டுமே வைத்து காலிப்பணியிடங்களை அறுதியிட்டுக் கூற இயலாது. முதல் கட்டக் கலந்தாய்வின் பின் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நீங்கள் எதிர்பாராத வகையில் மாற்றத்திற்குட்பட்டது. அதனால் மாறுதல் கல்ந்தாய்வில் கலந்து கொண்டாலும் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டாலும் மாறுதல் விண்ணப்பத்தினை உரிய காலத்தில் ஒப்படைப்பது உசிதம். ஒருவேளை உங்களுக்குத் தோதான இடம் பின்னர் காலியாகும் நேர்வில் "அடடா நாம் முன்னரே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தால் இந்த இடத்திற்கு மாறுதல் பெற்றிருக்கலாமே, வாய்ப்பு கைநழுவி விட்டதே!" என்று பின்னர் வருத்தப்படக்கூடாது.

* மாறுதல் விண்ணப்பத்தை ஒப்படைக்கும் போதே அத்தாட்சிக்கான ஒரு விண்னப்பத்தைச் சேர்த்தே வழங்க வேண்டும். அதில் அலுவலரின் கையொப்பம் பெற்றுப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருவோருக்கு இது மிகவும் அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்க.

* ஒன்றியத்திற்குள் மாறுதல் கோருவதற்குத் தனியாகவும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் / மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருவதற்கும் தனித்தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

* மாறுதல் விண்ணப்பங்கள் பெற்றபின் அலுவலகத்தில் 'அ' பதிவேடு, 'ஆ' பதிவேடு போன்ற தொகுப்புப் பட்டியல்கள் தயாரிக்கப்படும். அதில் மாறுதல் கோருவோரின் விவரங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ளவும்.
-- 2 --

* மனமொத்த மாறுதல் கோருவதென்றால் வழக்கமான மாறுதல் விண்ணப்பப் படிவத்துடன் முகப்புக் கடிதம் ஒன்றையும் இணைத்துப் பணிந்தனுப்ப வேண்டும். முகப்புக் கடிதத்தில் அனுப்புநர் முகவரியில் தற்போது பணிபுரியும் பள்ளியையும் கடித விவரத்தில் மாறுதல் கோரும் பள்ளியையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

பெறுநர்: மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்.
வழி: 1. தலைமையாசிரியர்,
2. உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிவோருக்கு
பெறுநர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
வழி: 1. தலைமையாசிரியர்,
2. மாவட்டக் கல்வி அலுவலர்.
இதற்கும் ஒரு அத்தாட்சி பெற்று வைத்துக் கொள்ளவும்.

* மாறுதல் / பதவி உயர்வு பெறும் பள்ளிக்கும் தற்போது பணிபுரியும் பள்ளிக்கும் இடையே குறைந்த பட்சம் 8 கி.மீ தொலைவு இருந்தால் பணியேற்பிடைக்காலம் (குறைந்தது 5 நாட்கள், தொலைவைப் பொறுத்து அதிகரிக்கும்) கிடைக்கும் இதை அனுபவிக்கலாம் அல்லது ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

* மாறுதல் / பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நாளன்று உரிய நேரத்திற்கு முன்னதாகவே கலந்தாய்வு நடக்கும் இடத்திற்குச் சென்று விடுங்கள். உயர்கல்வித் தேர்வு, பயிற்சிப் பணிமனை, மருத்துவ சிகிச்சை போன்ற காரணத்தால் நீங்கள் செல்ல முடியாத சூழல் எனில் உங்கள் கணவர் / மனைவி / பெற்றோர் / உடன்பிறந்தோர் எவரையேனும் அனுப்புவதாக இருந்தால் ஒரு தாளில் நீங்கள் வர முடியாமைக்கான காரணத்தைக் குறிப்பிட்டு உங்கள் சார்பாக உங்களால் பரிந்துரைக்கப்படும் நபர் கலந்துகொள்ள அனுமதி வேண்டி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பம் எழுத வேண்டும். அதில் உங்களுக்குப் பதிலாகக் கலந்து கொள்வோரின் பெயர், உறவுமுறை குறிக்கப்பட்டு மாதிரிக் கையொப்பம் பெறப்பட்டு அதன்கீழ் உங்களால் கையொப்பமிடப்பட வேண்டும். துறை உயர் அதிகாரியின் அனுமதி இருப்பின் விதிகளுக்குட்பட்டு இம்முறை ஆவன செய்யப்படலாம்.


* கலந்தாய்வு முறையைக் கல்வித்துறையில் அறிமுகப்படுத்திய இந்த அரசு, இவ்வாண்டு நேர்மையான முறையில் அனைத்துத் தரப்பு ஆசிரியர்களும் நம் அமைப்புகளும் பாராட்டும்படியான வெளிப்படையான ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வினைச் சிறந்த முறையில் நடத்தும் என்ற நம்பிக்கையோடு மாறுதல் கோரும் அனைவரும் தாங்கள் விரும்பும் இடத்திற்கு மாறுதல் பெறவும், பதவி உயர்வு பெறுவோரின் பணி மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துகிறோம்..!!!

சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு


சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.

சத்துணவுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணை, முட்டை ஆகியவற்றை அரசே வழங்குகிறது. காய்கறி, மசாலா பொருட்கள் மற்றும் சமைக்கத் தேவையான விறகு ஆகியவற்றுக்காக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 69.50 காசுகளும், ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 79.50 காசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. "விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளதால், இத்தொகையை அதிகரிக்க வேண்டும்" என்று சத்துணவு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து, அனைத்து மாவட்ட சமூகநல அலுவலகங்களுக்கும் ஒரு புதிய உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதில், சத்துணவுக்கு, ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவர்களுக்கு, பருப்புடன் சாதம் வழங்கும் நாளில் ஒரு மாணவனுக்கு ரூ.1.30 எனவும், பலவகை சாதம் வழங்கும் நாட்களில் ஒரு மாணவனுக்கு ரூ.1.70 காசுகள் எனவும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவனுக்கு பருப்புடன் சாதம் வழங்கும் நாளில், ஒரு மாணவனுக்கு ரூ.1.40 ஆகவும், பல வகை சாதம் வழங்கும் நாட்களில், ரூ.1.80 காசுகள் ஆகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை, விறகு உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் அரசு மானியத்தொகையை உயர்த்தியுள்ளது. எனினும், அரசு உயர்த்திய இத்தொகை போதுமானதல்ல என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒரு மாணவனுக்கு நான்கு ரூபாய் ஒதுக்கினால்தான், சிரமமில்லாமல் சத்துணவு வழங்க முடியும் என இச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

09.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 1.6.1988 முதல் 31.12.1995 வரை பணியிலிருந்து ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டார ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் உள்பட ஏராளமான ஓய்வூதியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஓய்வூதியர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தாலும், அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஓய்வூதியர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெவ்வேறு காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வெவ்வேறு ஓய்வூதியக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஓர் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான 9.8.1989ஆம் தேதியிட்ட அரசாணை செல்லாது என்று கூறி அதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பாரபட்சமற்ற, ஒரேவிதமான ஓய்வூதியக் கணக்கீட்டு முறையை அரசு பின்பற்றுமாறு தனது தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் 1.6.1988-ம் தேதிக்கும் 31.12.1995-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வுபெற்ற ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம்


வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த, 32 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், பகுதி வாரியாக தொடக்க கல்வித்துறை, சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த, 15ம் தேதி முதல், இந்த ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன.
ஒரு நாளைக்கு, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்கள் வீதம், வரும், 30ம் தேதி வரை, கூட்டங்கள் நடக்கும். தொடக்க கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில், அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், மாணவர்களுக்கான, அரசின் பல்வேறு இலவச நலத்திட்டங்களை செயல்படுத்துதல், கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. ஆங்கிலவழி வகுப்புகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், எந்தெந்த பள்ளிகளை சேர்ப்பது என்பது குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மாணவர்களிடம், ஆங்கிலவழி கல்விக்கு, அதிக வரவேற்பு இருப்பதை கருத்தில்கொண்டு, முதல் கட்டமாக, கடந்த ஆண்டு, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 308 பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்பட்டன.
இத்திட்டம், வரும் கல்வி ஆண்டில், மேலும், 400 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்படும். இது குறித்த அறிவிப்பு, பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின்போது, சட்டசபையில் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்: ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
   ஆசிரியர் தகுத்தேர்வு என்பது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு. ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனை பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனை பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர். அ.சவுந்தரராசன் (மார்க்சிஸ்ட்): வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு தகுதி மதிப்பெண்கள் குறைவாக உள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் நிர்ணயிக்க வேண்டும். தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும் அதிகமாக ஒருவர் பெற்றால் அவரை பொதுப்பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை. அவரை இட ஒதுக்கீட்டிற்குள் வைக்காமல் பொதுப் பிரிவுக்கு கொண்டு சென்றால், இட ஒதுக்கீட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஒன்றிரண்டு இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
வங்கி போன்ற தேர்வுகளில் ஒதுக்கீட்டில் உள்ளவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றால் அவர்கள் ஒதுக்கீட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நடைமுறையை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும். உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன்: இந்தப் பிரச்னை முதல்வரின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்


image001
ஆரம்பக் கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் நிலைத்த தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கச்செய்ய வேண்டி யது அரசின் கடமை என்று வகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறை யில் இது எத்தனையளவு சாத்தியமாகியிருக்கிறது? இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி மூலம் அடித்தட்டு வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், குறிப் பாக, கிராமப்புறங்களில் உள்ளவர்களின் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறதா? இல்லையா?

 தாய்மொழியின் மாண்பு, தாய்மொழி வழிக்கல்வியின் தேவை ஆகியவை குறித்து மேடையில் முழங்கினால் மட்டும் போதாது. உண்மை யிலேயே இன்றைய குழந்தைகள் தாய்மொழித் தேர்ச்சி பெற கல்விக் கூடங்கள் எந்த அளவுக்குத் துணைசெய்கின்றன, என்பன போன்ற விஷயங் களை அலசியாராயவும், மதிப்பாய்வு செய்யவும், கல்வி கற்பித்தலில் நிலவும் குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், பரவலாக் கவும் ப்ரதம் [Pratham] என்ற அரசு சாரா அமைப்பின் முன்முயற்சியின் பயனாய் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதிலுமுள்ள கிராமப்   புறப் பகுதிகளில் ‘அஸெர்’ சுற்றாய்வு மேற் கொள்ளப்பட்டுவருகிறது. ஐந்தாம் வகுப்பு மாணாக்கர்களில் இரண்டாம் வகுப்புப் பாடநூல்களைக்கூட படிக்க இயலாதவர்கள் இருக்கிறார்கள், தமிழ்மொழியின் எழுத்துகளைக்கூட அடை யாளங்காண முடியாதவர்களாய் பக்கம் பக்கமாக மிகுந்த பிரயத்தனத்துடன் எப்படியோ மனப்பாடம் செய்து ஒப்பேற்றிவருவதும், இந்த மாணாக்கர்கள் ஆசிரியர்களாலும், பள்ளி நிர்வாகத்தாலும் கல்வி சார் அனைத்துவிதமான செயல்பாடுகளிலும் ஒதுக்கப்பட்டுவரும் நிலையே நிலவி வருவதும் ASER சுற்றாய்வின் மூலம் தெரியவந்தபோது, பொறுப்பிலுள்ளவர்கள் அஸெர் ஆய்வறிக்கையைப் பொருட்படுத்தாமலிருக்கவே முயன்றனர். அஸெர் ஆய்வு முறையில் குறைகாணவே முயன்றனர். ஆனால், அஸெர் குழுவினர் கருமமே கண்ணாய் இந்தச் சுற்றாய்வை வருடாவருடம் மேற்கொண்டு வருவதும், மிகவும் வெளிப்படையாய் தங்களுடைய ஆய்வுமுறைகளையும், முடிவுக ளையும், அவை சார்ந்த உரையாடல்களையும் நடத்திவரும் காரணத்தால் இன்று நாடெங்கும் அஸெர் ஆய்வறிக்கை மீதான கவனம் அதிகரித்துவருகிறது.

ஆனால், கல்விபெறும் உரிமைச் சட்டம் எட்டாம் வகுப்பு வரை குழந்தைகள் கல்வி பெறுவதை அவர்களுடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக நிறுவி யுள்ளது. ஆனால், இது நடைமுறையில் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது? பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராகத் திகழும் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைத்துவருகிறதா? இந்த விவரங் களைத் திரட்டி, பரவலாக்கி சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத் துடன் அஸெர் சுற்றாய்வு வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

வருடாவருடம் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறதா அல்லது குறைந்துகொண்டுவருகிறதா, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புகிறார்களா, அரசுப்பள்ளிகளில் சேர்க்கவிரும்புகிறார்களா, ஆங்கிலமொழி, தமிழ்மொழி, கணிதம் ஆகிய பாடங்களில் 5-16 வயதுப் பிரிவுகளில் மாணாக்ககர்களின் தேர்ச்சியும் பயிற்சியும் எப்படி உள்ளது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு உள்ளன, குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான விதிமுறைகள் சரிவரப் பின்பற்றப்பட்டுவருகின்றனவா போன்ற விவரங்கள் இந்தச் சுற்றாய்வின் மூலம் திரட்டப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் தனித்தனியாக பெரிய அளவில் வருடாவருடம் நடத்தப்பட்டுவரும் சுற்றாய்வுகளில் இதுவும் ஒன்று.

இதை நடத்துவதில் ‘ப்ரதம்’ என்ற தன்னார்வ அமைப்பு முக்கியப் பங்கு வகித்துவருகிறது. 1994-ம் ஆண்டு மும்பை குடிசைப்பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கியது இந்த அமைப்பு. ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள்ளாகவே அவர்கள் நடத்திவந்த 150 பால்வாடிகள் 2000 அ அக உயர்ந்தன. விரைவிலேயே பள்ளிக்குச் சென்று கல்விகற்காத குழந்தைகள் ஒருவகையென்றால் இன்னொரு வகை ‘கண்ணுக்குப் புலனாகாத’ கல்வித் தேவை அந்தக் குழந்தைகள் மத்தியில் இடம்பெற்றிருப்பதை அவர்களால் உணர முடிந்தது. அதாவது, பள்ளிக்குச் சென்றும் பல்வேறு காரணங்களால், சூழல்களால், கற்பித்தல் சார் குறைபாடுகளால், கல்வித் திட்டத்திலுள்ள குறை பாடுகளால் கற்கவியலாத நிலையில் உள்ள குழந்தைகள். எனவே, 2002-ல் ’ப்ரதம்’ அமைப்பு மேற்குறிப்பிட்ட வயதுப்பிரிவுகளைச் சேர்ந்த ’பள்ளி செல்லும் குழந்தைகள் ’மொழிப்பாடங்களிலும், கணிதப்பாடத்திலும் பெற்றிருக்கும் பயிற் சியை  சில எளிய, சுயமாக உருவாக்கப்பட்ட  கற்றல் சார் உபகரணங்களின் மூலம் கண்டறியும் முயற்சியை மேற்கொள்ளத் தீர்மானித்தது.

’அஸெர்’ மற்றும் தரமான கல்வி அனைத்துப்பிரிவுக் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒத்தநோக்குடைய வேறு சில தன்னார்வ அமைப்பு கள் ஒன்றிணைந்து இந்திய மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களுக்குத் தங்கள் ஆய்வுக்குழுவை அனுப்பி அங்குள்ள கிராமங்களில் இருக்கும் ‘பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை’ அணுகி அவர்களோடு நட்பு முறையில் பேசி அவர்களைத் தங்களுடைய சுற்றய்வில் பங்கேற்கச்ச் செய்து அதன்மூலம் அந்த மாணாக்கர்களின் கல்வி சார் தேர்ச்சிக்குறைபாடுகளையும், தேவைகளை யும் அறிந்துகொண்டுவருகிறார்கள். பின், அவற்றைக் களையத் தேவையான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பள்ளிகளுக்குச் சென்று இந்த சுற்றாய்வு மேற்கொள்ளப்படுவதில்லை. காரணம், பள்ளிகள் தங்களிடமுள்ள மாணாக்கர்க ளில் நன்றாகக் கற்பவர்களையே இத்தகைய ஆய்வுகளுக்கு அனுப்பித் தருவது வழக்கமாக உள்ளது. எனவே, பள்ளிகளில் நிலவும் உண்மையான கல்வித் தரத்தை, கற்றல்-கற்பித்தல் சார் தேவைகளை அறிந்துகொள்ள முடிவதில்லை.

2005-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடம் தேசிய அளவிலும், பல்வேறு மாநிலங்களின் அளவிலும் இந்த அஸெர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவு கள் வெளியிடப்பட்டுவருகின்றன.

இந்த வருடம், பிப்ரவரி 8-ம் தேதி தமிழ்நாட்டைப் பொறுத்தவரையான 2012-ம் ஆண்டுக்கான அஸெர் சுற்றாய்வின் முடிவுகள் சென்னை மியூசிக் அகாதெமி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியிடப்பட்டன. தரமான கல்வி குழந்தைகளுக்குக் கிடைக்கவேண்டும், மாநிலத்தின் கல்வித்தரம் உயரவேண்டும் என்பதில் அக்கறையுள்ள, அதைநோக்கி அர்ப்பணிப்புடன் செயல் பட்டுவருகின்ற கல்வியாளர்கள், சேவை அமைப்புகள், சமூகப் பணியாளர்கள், அறிஞர்கள் அச்சு ஊடகம், ஒளி-ஒலி ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், பத்திரிகை யாளர்கள், சமூகப்பிரக்ஞை மிக்க வெகுமக்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
image002
Vசிறந்த கல்வியாளரும் தன்னளவில் முன்மாதிரி ஆசிரியராகவும், தலைமையா சிரியராகவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திறம்படப் பணியாற்றியவரு மான, தரமான கல்விக்கான தேவையை, தரமான கல்வி  சமூகத்தின் நலிந்த பிரிவினருக்குக் கிடைக்கவேண்டிய தேவையை வலியுறுத்தி தொடர்ந்து எழுதி வருபவருமான திரு.எஸ்.எஸ்.ராஜகோபாலன் [இவருடைய சகோதரர் திரு எஸ்.எஸ். கண்ணனும் அவருடைய துணைவியாரும் பார்வையற்ற மாணவர்க ளின் கல்விக்காக அரும்பணியாற்றியவர்கள்], எய்ட் இண்டியா என்ற அமைப்பின் தலைவரும் முன்னாள் மணோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவி அவர்கள், பத்திரிகையாளரும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்துவருபவருமான ’பரீக்‌ஷா’ ஞாநி, ‘தி ஹிந்து’ நாளிதழின் ஆசிரியரும், இருபதாண்டுகளுக்கும் மேலாக பொருளா தாரவியலைக் கற்பித்துவருபவரும் அது குறித்து பல எழுத்தாக்கங் களை வெளியிட்டிருப்பவருமான திரு.சித்தார்த் வரதராஜன், ’பீப்பிள்ஸ் வாட்ச்’ என்ற மனித உரிமை அமைப்பின் செயலாண்மைத் தலைவரான ஹென்றி டிபாக்னே [Mr.Henry Tipagne], எய்ட் இண்டியா அமைப்பின் தலைமை செயலாண் மைத் தலைவரும், செயலருமான திரு. பாலாஜி சம்பத், இந்த அமைப்பின் இணைச் செயலரான திரு. ரவிசங்கர் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அஸெர் ஆய்வறிக்கை 2012 – சில முக்கியத் தகவல்கள் – குறிப்பாக, தமிழகத்தில் நிலவும் கல்வித்தரம் குறித்து
[ASER REPORT 2012 – Some important points to ponder with special reference to Tamil Nadu 
image003
அஸெர் – 2012 சுற்றாய்வு இந்தியா முழுமையிலும் நடத்தப்படுவது. அதன் 16 மாநிலங்கள் அமைந்துள்ள 567 மாவட்டங்களைச் சேர்ந்த 16,166 கிராமங்கள் இதில் இரம்பெறுகின்றன. மொத்தம், 5,96,846 குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், இந்த மாநிலத்தைச் சேர்ந்த 28 மாவட்டங்களில் அமைந்துள்ள  811 கிராமங் களை உள்ளடக்கிய அளவில்,  22844 கிராமப்புறக் குழந்தைகள் இந்தச் சுற்றாய்வில் இடம்பெற்றனர். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெறும் 21 தன்னார்வ அமைப்புகளிலிருந்து 690 தன்னார்வப் பணியாளர்கள் இந்தச் சுற்றாய்வைத் திறம்பட நடத்திமுடித்தனர்.

1]Award Trust 2] Foundation of His Sacred majesty 3] Gramodaya Social Service Society 4] Grass Roots Foundation 5] Institute of Human Rights Education 6] Jeeva Anbalayam Trust 7] Manitham Charitable Trust 8] NEEDS Trust 9] New Life – Villipuram 10] NEWS Trust 11] Nilam Trust 12] PRESS Trust 13] Raise India Trust 14] READ Trust 15] RIGHTS Trust 16] RWDT                   17] SODEWS 18] Udhavum Manasu Trust 19] Valarum Vandavasi 20] VEPADA 21] WORLD Trust.

இந்த்ச் சுற்றாய்வில் ஒன்றாம் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளுக்கு எளிய தமிழில் ஒரு பத்தி தரப்பட்டு அதை அவர்கள் சுலபமாகப் படிக்க முடிகிறதா என்று பார்க்கப்படுகிறது. அதேவிதமாய் இரண்டாம் வகுப்பு மாணாக்கர்களிடம் எளிய ஆங்கிலப் பத்தி தரப்பட்டு அதை வாசிப்பதில் அவர்களுக்கு உள்ள தேர்ச்சி-தேர்ச்சியின்மை அறியப்படுகிறது. இரண் டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இரண்டு இலக்க கழித்தல் கணக்குகள் தரப்பட்டு குழந்தைள் கணிதப்பாடத்தில் எந்த அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள் ளார்கள் என்பது அறியப்படுகிறது.

மதிப்பாய்வுத் தாள் 1-ல் தமிழில் சில எழுத்துகளும், இரண்டு எழுத்துகளைக் கொண்ட எளிய சொற்களும் தரப்படுகின்றன. மதிப்பாய்வுத் தாள் 2-ல் எளிய தமிழில் பத்துவரிகளைக் கொண்ட கதையொன்றும் 4 வரிகளைக் கொண்ட இரண்டு பத்திகளும் தரப்படுகின்றன.

அஸெர் 2012 ஆய்வறிக்கையில் கண்டுள்ள அளவில், தமிழகத்தில் முதல் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 43.4%  மட்டுமே தமிழ் எழுத்துகளை அடையாளங்காண முடிந்தவர்களாய் இருக்கிறார்கள். இரண்டாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 43.6% மட்டுமே எளிய தமிழ் சொற்களை வாசிக்கமுடிந்தவர்களாய் இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பில் படிக்கும்மாணாக்கர்களில் 29.9% மட்டுமே எளிய தமிழ்க் கதையை [இரண்டாம் வகுப்புப் பாடநூலில் இருக்கக்கூடிய]ப் படிக்கமுடிந்தவர்களாய் இருக்கிறார்கள்.

இந்தியா அளவில் எடுத்துக்கொண்டால் 3-5 வகுப்புகளில் படித்துவரும் பிள்ளைகளில் தாய்மொழியில் தரப்பட்டுள்ள எளிய பத்தியைப் படிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 66.4% என்பதிலிருந்து 54% என்பதாகச் சரிவடைந்திருக்கிறது.

தமிழகத்தில், 3-5 வகுப்புகளில் படித்துவரும் குழந்தைகளில் தாய்மொழியில் எழுதப்பட்டுள்ள எளிய பத்தியை சரியாக வாசிப்போரின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 49.2% என்பதிலிருந்து 48.9% என்பதாகச் சரிவடைந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட கற்றல்திறன் அளவுமட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ அதேயளவாய் [சுமார் 40% என்ற அளவில்] இருந்துவருகின்றன.

முதல் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் 53.9% பேர் மட்டுமே 1-9 வரையான எண்களை சரியாக அடையாளங்காணக்கூடியவர்களாய் இருக்கிறார்கள்.

இரண்டாம் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் 54.2% பேரால் மட்டுமே 11 முதல் 99 வரையான எண்களை சரியாக அடையாளங்காண முடிகிறது.

ஐந்தாம் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் 13.0% பேரால் மட்டுமே வகுத்தல் கணக்குகளை சரியாகப் போட முடிகிறது.

இந்தியாவில், 3-5 வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் எளிய கழித்தல் கணக்குகளை சரியாகச் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 59.4% என்பதிலிருந்து 40.7% என்பதாகச் சரிவடைந்துள்ளது.

தமிழகத்தில் 3-5 வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் எளிய கழித்தல் கணக்குகளை சரியாகச் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 43% என்பதிலிருந்து 38.6% என்பதாகச் சரிவடைந்துள்ளது.

தமிழகத்தில், ஐந்தாம் வகுப்பில் படித்துவரும் பிள்ளைகளில் 57.1% பேரால் மட்டுமே எளிய ஆங்கில வார்த்தைகளை வாசிக்க முடிகிறது.

கல்விபெறும் உரிமைச் சட்டத்தில் வகுத்துரைக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் _ 

மற்ற மாநிலங்களோடு ஒப்பிட, தமிழகத்தில் இந்த விதிமுறைகள் அதிக அளவு பள்ளிகளில் பின்பற்றப்பட்டுவருகின்றன.

தமிழகத்தில் மாணவிகளுக்கான ’பயன்படுத்தத் தகுந்த அளவிலான கழிப்பறை வசதிகள் 2010-ல் 35.1% என்று இருந்த அளவு 2012-ல் 62.2% என்பதாக மேம்பட்டுள்ளது. அகில இந்திய சராசரி அளவோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் அளவுமட்டம் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக உள்ளது.

image005
தரமான கல்விக்கான தேவையையும் நடப்பில் அது குறித்த கவனமும் அக்கறையும் கிடப்பில் போடப்பட்டிருப்பதையும் குறித்து உரையாற்றிய கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், பல வருடங்களுக்கு முன்பு தான் ஒரு குக்கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த காலத்தில் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவாகவே இருந்ததையும், மாணாக்கர்களில் பெரும்பாலோர் முதன்முறையாக பள்ளிக்கு வரும் தலைமுறையினராக இருந்ததையும் நினைவுகூர்ந்து அதையெல்லாம் மீறி அப்போது கல்வி தரமாக அமைந்திருந்த தன்மையை, ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு பணியாற்றிய தன்மையை எடுத்துரைத்தார். ஆனால் இன்று பள்ளிக்கூடங்களில் முறையாகப் பயிற்சிபெற்ற ஆசிரியர்களே பணியிலமர்த்தப் படுகிறார்கள். பள்ளிகளில் மேம்பட்ட உள்கட்டமைப்புவசதிகள் இடம்பெற்றிருக் கின்றன. இருந்தும் மாணாக்கர்களின் கற்றல்-திறன்  மேம்படவில்லை என்ரு வருத்தத்துடன் கருத்துரைத்த திரு. ராஜகோபாலன் இதற்காக மாணாக்கர்களைக் குறைகூறுவது சரியல்ல என்றார். ஒர் நியாய விலைக் கடை சரியாக இயங்கவில்லையென்றால் நாம் முனைப்பாகப் போராடுவதைச் சுட்டிக்காட்டிய திரு.ராஜகோபாலன் அதுபோலவே கல்வித்தரம் சரியாக இல்லாத போதும், பள்ளிகள் குழந்தைகளுக்கு, அதுவும்  நலிந்தபிரிவுகளைச் சேர்ந்த குழந்தை களுக்குக் கல்வி கற்பிப்பதில் முறையாக இயங்காதபோதும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் என்று வலியுறுத்திக்கூறினார்.

அஸெர் ஆய்வறிக்கை போன்று சுயமாக, சமூகப்பிரக்ஞையுள்ளவர்களால் மேற் கொள்ளப்படும் ஆய்வின் வழியாகப் பெறப்படும் முடிவுகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளவும், அவை தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கைகளை, மாற்றுவழிகளை காலந்தாழ்த்தாமல், மேற்கொள்ளவும் மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்று எடுத்துக்கூறிய அவர் இத்தகைய ஆய்வுகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்போது அவை பெரும்பாலும் உண்மைநிலையை பிரதிபலிப்பதில்லை என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.  அஸெர் ஆய்வு போன்று சுயமாக சமூக அக்கறையுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை அரசுகள் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளாய் பாவிக்கத் தேவையில்லை என்றும், மாறாக, அரசுப்பணிகள் சிறக்கச் செய்ய உதவிபுரி வதாய் அவற்றை பாவித்து, உரிய அளவாய் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஊக்குவிக்கவேண்டும் என்றும், அவற்றின் அடிப்படையில் தேவைப்படும் மாற்றங்களைக் கல்வித்துறையில் செயல்படுத்தவேண்டும் என்றும், அப்பொழுது தான் ‘மக்கள் நல அரசு’ என்ற சொற்றொடர் அர்த்தம்செறிந்ததாக அமையும் என்றும் கருத்துரைத்தார்.

மேலும், எப்பொழுதெல்லாம் அரசு மாறுகிறதோ அப்பொழுதெல்லாம் அதற்கு முந்தைய அரசு கொண்டுவந்த நல்ல செயல்திட்டங்கள் கூட கிடப்பில் போடப் பட்டுவிடுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய திரு.ராஜகோபாலன், இந்த அணுகு முறை தவறு என்றார். அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் போதுமான அளவு இருப்பதில்லை என்று குறிப்பிட்ட திரு.ராஜகோபாலன்மாவட்ட கல்வி அதிகாரிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். அஸெர் அறிக்கை போன்ற முன்முயற்சிக ளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுகள் ஒரு கண்காணிப்புக்குழுவை அமைக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் பள்ளிகளில் முறையான முன்னறிவிப்போடு மேற்கொள்ளப்படும் ஒரு ‘இன்ஸ் பெக்‌ஷனுக்கு மூன்று திடீரென்று முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்படும் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வழிவகுக்கப்பட்டிருக்கிறது  என்றாலும்  இந்த நடைமுறை பின்பற்றப்படுவதேயில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், அரசுகள் மனது வைத்தால்,அதிகாரத்திலுள்ளவர்கள் மனதுவைத்தால் கட்டாயம் கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும் என்று எடுத்துரைத்தார்.

 நன்றி : புது திண்ணை 

அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லியில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 80% . 50% அகவிலை படியை அடிப்படை ஊதியத்தில் சேர்க்கக்கோரி மத்திய  அரசு ஊழியர்கள் போராட ஆயத்தம் .. 

2013-14ஆம் நிதியாண்டுக்கான அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8%ல் இருந்து 8.7% ஆக குறைப்பு


2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் வெளியிடப்படப்பட்ட  மத்திய நிதி அமைச்சக உத்தரவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த வைப்பு நிதிக்கு  2013-14ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7 சதவீதமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
 கடந்த நிதியாண்டில்(2012-13) பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8%ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விதமானது 01.04.2013ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வுத்தரவானது கீழ்காணும் நிதி அமைப்புகளுக்கு பொருந்தும்:-
1. பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்).
2. பங்களிப்பு சேம நல நிதியம் (இந்தியா).
3. அனைத்து இந்திய சேவைகள் சேம நல நிதியம்.
4. மாநிலம் ரயில்வே சேம நல நிதியம்.
5. பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்).
6. இந்திய ராணுவ தளவாட துறை சேம நல நிதியம்.
7. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
8. இந்திய கடற்படை கப்பல் பட்டறை workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
9. பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் சேம நல நிதியம்.
10. ஆயுதப்படைகள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி.

தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை இரத்து மற்றும் பணி நியமன நாள் முதல் கால முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி 21.04.2013 அன்று ஈரோட்டில் காலை 9.00 முதல் மாலை 4.00 மணிவரை TNGTF மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்


பொது சேமநல நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு


பொது சேமநல நிதி, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.

சிபாரிசு
சிறுசேமிப்பு ஆதாயங்கள், சந்தை மதிப்புக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று சியாமளா கோபிநாத் கமிட்டி கடந்த ஆண்டு சிபாரிசு செய்தது. அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.இந்நிலையில், அடுத்த நிதி ஆண்டு (2013–2014) தொடங்க உள்ளதால், அந்த ஆண்டுக்கான சிறுசேமிப்பு வட்டி விகிதங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது.

வட்டி குறைப்பு
அதன்படி, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் பொது சேமநல நிதிக்கான (பப்ளிக் பிராவிடண்ட் பண்ட்) வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இது, வருகிற 1–ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. வருகிற நிதி ஆண்டு முழுவதற்கும் இது பொருந்தும்.பொது சேமநல நிதிக்கான வட்டி விகிதம், 8.8 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் முதிர்வடையும் தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான (என்.எஸ்.சி.) வட்டி விகிதம், 8.5 சதவீதமாகவும், 10 ஆண்டுகளில் முதிர்வடையும் தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8.8 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம், 9.3 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மாற்றம் இல்லை
அதே சமயத்தில், அஞ்சலகங்களில் ஓராண்டு வரையிலான சேமிப்பு டெபாசிட் திட்டங்கள் மற்றும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவை முறையே 4 சதவீதமாகவும், 8.2 சதவீதமாகவும் நீடிக்கும்.அதுபோல், 5 ஆண்டுகளில் முதிர்வடையும் மாதாந்திர வருவாய் திட்டத்துக்கான வட்டி விகிதத்திலும் (8.4 சதவீதம்) மாற்றம் இல்லை.

ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த பழைய தெளிவுரை

நினைவூட்டலுக்காக , ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும்போது ரூபாயை தொடர்ந்துவரும் பைசா தொகை 99 பைசாவுக்கு குறைவாக வந்தால் அதனை கணக்கில் கொள்ளகூடாது. ஒரு ரூபாய் அல்லது அதற்கு மேல்வரும் தொகையை அதற்க்கு அடுத்த பத்து ரூபாயாக கணக்கில் கொள்ளவேண்டும். 

உதாரணமாக ரூ.750.70 என வந்தால் 750 என கணக்கில் கொள்ளவேண்டும். ரூ.751 என வந்தால் மட்டுமே ரூ.760 ஆக கணக்கில் கொள்ளவேண்டும். 

இவ்வாறான விளக்கம் Letter No.34124 (Paycell) 2009-1, Dated.26.6.2009 - இல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2012-13 ஆண்டிற்கான காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்கள் கேட்பு

தொடக்ககல்வி துறையின் கீழ் இயங்கும் நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 2012-13 ஆண்டிற்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிட விவரங்களை உரிய படிவத்தில் 12.04.2013க்குள் அனுப்ப மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா?


தமிழக அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் அளிப்பதன் மூலம் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்க, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆகஉயர்த்துவது குறித்து தமிழ அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இந்த சட்டசபை கூட்டத்  தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது.
 
தமிழகத்தில் நிதித்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட 44 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 15 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர் கள் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளில் பணியாற்று கின்றனர். இந்த ஊழியர் களுக்கு அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. இதைத்தவிர ஆசிரியர்களும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் அரசு ஊழியர்க ளாகவே கருதப்படுகின்றனர்.

கடந்த 1980 முதல் 84 வரை லட்சகணக்கான ஊழியர்கள் அரசு துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறிப்பாக 1984ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அரசு ஆணை 996ன்படி சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றியவர்கள் அரசு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அப்போது பணியில் சேர்ந்தவர்களில் 58 வயதை கடந்தவர்கள் தற்போது ஓய்வு பெற்று வருகின்றனர். இதில் 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஓட்டுமொத்தமாக பலர் ஓய்வு பெறுகின்றனர்.

2012ம் ஆண்டு ஏராளமானவர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்களை ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. 2012ம் ஆண்டை விட 2013, 2014ம் ஆண்டில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அதாவது, 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் ஓய்வு பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஸி8 லட்சமும், ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி10 லட்சமும், ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி15 லட்சமும், ‘ஏ’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி20 லட்சம் வரையிலும் ஓய்வூதிய பணப்பலன்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்க அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, சட்டத்துறையில் உயரதிகாரிகள் அரசுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். அதில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தலாம் என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஓய்வு வயது 60ஆக உள்ளது. எனவே, அதேபோல் இங்கும் மாற்றுவதற்கு அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை பரிசீலனை செய்து வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தும் போது, ஓய்வு கால பணப்பலன்களை சில ஆண்டுகள் தள்ளி போட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் கருதப்படுகிறது. எனினும் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக இறுதி கட்ட முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கான அறிவிப்பு நடந்து வரும் சட்ட பேரவை கூட்டத் தொடரிலேயே வெளியிடப்படலாம்  என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

15 லட்சம் ஊழியர்கள்

தமிழகத்தில் அனைத்து சலுகைகளை பெறக்கூடிய தகுதியில் 4 லட்சம் ஊழியர்களும், சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் 3.15 லட்சம் பேரும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 7 லட்சம் பேரும், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஊழியர்களும் என மொத்தம் 15 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்


"கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. 
மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர்.
 இதையடுத்து, "பல்கலைக் கழகங்கள் நடத்தும், கூடுதல் டிகிரியை, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த ஐகோர்ட், "ஓராண்டு படிப்பு மூலம் பெறும், கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு படிப்பு மூலம் பெறும் பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது.
எனவே, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும், இந்த ஓராண்டு பட்டப் படிப்பை, அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிட்டது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரேமகுமாரி என்பவர் உள்ளிட்ட, இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த, அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது: தனி நீதிபதி பின்பற்றியுள்ள, பல்கலைக்கழக மான்யக் குழு விதிமுறைகள், 1985ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது. அந்த விதிமுறைகள், 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகள் மூலம், ரத்து செய்யப்பட்டு விட்டது. 
"யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக கருதி, கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஓராண்டு படிப்பின் மூலம், கூடுதல் டிகிரி பெறுவதை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. யு.ஜி.சி.,யே இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது, ஐகோர்ட் உத்தரவானது, யு.ஜி.சி.,யின் கொள்கைக்கு எதிராக உள்ளது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் கூடுதல் டிகிரியை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அங்கீகரித்துள்ளது. மூன்றாண்டு பட்டப் படிப்பு முடித்தவர்கள் தான், கூடுதல் டிகிரி படிப்பில் சேர, தகுதி உள்ளது. இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அதுவரை, தடை விதிக்க வேண்டும். 
 இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை, நீதிபதிகள் தர்மாராவ், விஜயராகவன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் வாதாடினார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. அப்பீல் மனுவுக்குப் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்


"கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. 
 
மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர்.
 
 இதையடுத்து, "பல்கலைக் கழகங்கள் நடத்தும், கூடுதல் டிகிரியை, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த ஐகோர்ட், "ஓராண்டு படிப்பு மூலம் பெறும், கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு படிப்பு மூலம் பெறும் பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது.
 
 
எனவே, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும், இந்த ஓராண்டு பட்டப் படிப்பை, அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிட்டது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரேமகுமாரி என்பவர் உள்ளிட்ட, இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த, அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது: தனி நீதிபதி பின்பற்றியுள்ள, பல்கலைக்கழக மான்யக் குழு விதிமுறைகள், 1985ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது. அந்த விதிமுறைகள், 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகள் மூலம், ரத்து செய்யப்பட்டு விட்டது. 
 
"யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக கருதி, கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஓராண்டு படிப்பின் மூலம், கூடுதல் டிகிரி பெறுவதை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. யு.ஜி.சி.,யே இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது, ஐகோர்ட் உத்தரவானது, யு.ஜி.சி.,யின் கொள்கைக்கு எதிராக உள்ளது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் கூடுதல் டிகிரியை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அங்கீகரித்துள்ளது. மூன்றாண்டு பட்டப் படிப்பு முடித்தவர்கள் தான், கூடுதல் டிகிரி படிப்பில் சேர, தகுதி உள்ளது. இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அதுவரை, தடை விதிக்க வேண்டும். 
 
 இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை, நீதிபதிகள் தர்மாராவ், விஜயராகவன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் வாதாடினார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. அப்பீல் மனுவுக்குப் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி


"அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதற்காக, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில், மே மாதம் பள்ளிக்கு வரவேண்டும்" என, நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், மே மாதம் முதல் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று, அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்த வேண்டும்.

பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பயிலுவதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த எடுத்துக் கூற வேண்டும் என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிக்கப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டம், பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே வேளையில் மே மாதம் பி.எட்., உள்ளிட்ட உயர் கல்வி தேர்வுகள் வருவதால், அவற்றை படிக்கும் ஆசிரியர்களின் கல்வி பாதிக்கும் எனவும், ஆசிரியர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மே மாதம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வரவேண்டும் என, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும் உத்தரவிட்டுள்ளனர். 

அதன்படி பள்ளிக்கு செல்லும் ஆசிரியர், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் சலுகை விவரம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில், மே மாதம் உயர்கல்வி தேர்வு உள்ளிட்டவை இருக்கும். உயர்கல்வி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு மே மாதம் பணி இருந்தால், அவர்களது கல்வி பாதிக்கும். எனவே, உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு இதில் விதி விலக்கு அளிக்க வேண்டும். அல்லது மே மாத இறுதியில் இத்திட்டத்தை செயல்படுத்தினால், எவ்வித பிரச்னையும் இருக்காது, என்றனர்.

5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை மாநாடு


7th CPC News : 7th Pay Commission Projected Pay Scale


7th CPC News : 7th Pay Commission Projected Pay Scale


SIXTH CPC PAY STRUCTURE
PROJECTED PAY STRUCTURE FOR NEXT (VII) PAY COMMISSION
Name of Pay Band/ ScaleCorresponding Pay BandsCorresponding Grade PayEntry Grade +band pay
Projected entry level pay using uniform multiplying factor` 3’
Band PayGrade PayEntry Pay
PB-15200-202001800700015600-60600540021000
PB-15200-202001900773015600-60600570023190
PB-15200-202002000846015600-60600600025380
PB-15200-202002400991015600-60600720029730
PB-15200-2020028001136015600-60600840034080
PB-29300-3480042001350029900-1044001260040500
PB-29300-3480046001714029900-1044001380051420
PB-29300-3480048001815029900-1044001440054450
PB-315600-3910054002100029900-1044001620063000
PB-315600-3910066002553046800-1173001980076590
PB-315600-3910076002950046800-1173002280088500
PB-437400-67000870046100112200-2010026100138300
PB-437400-67000890049100112200-2010026700147300
PB-437400-670001000053000112200-2010030000159000
HAG67000- (ann increment @ 3%) -79000Nil


201000
HAG+ Scale75500- (ann increment @ 3%) -80000Nil


226500
Apex Scale80000 (Fixed)Nil


240000
Cab. Sec.90000 (Fixed)Nil


270000

'Merger of 50% DA and DR with basic pay' - Central Finance Ministry


'Merger of 50% of DA and DR with basic pay' - Finance Ministry explained as a reply to a unstarred question in the Parliament on 14th December, 2012.

The below explanation was presented by the Minister of States for Finance Shri.Namo Narain Meena to the questions regarding merger of DA / DR with basic pay of Central Government employees and Pensioners in the Parliament on 14.12.2013...

Whether various Associations/ Organisations of Central Government employees demanded merger of 50 per cent Dearness Allowance into the basic pay of Central Government employees and pensioners and the recommendation of the Sixth Central Pay Commission in this regard and action taken by the Government thereto?

Yes, A number of representations have been received from Associations/Organizations of Central Government Employees/Pensioners and individuals demanding merger of 50% of Dearness AHowance/ Dearness Relief with basic pay/pension respectively. The demand has been considered by the Government and not agreed to since the 6th Central Pay Commission has not recommended as such. 

The 6th Central Pay Commission did not recommend merger of dearness allowance with Basic Pay at any stage. Government accepted this recommendation vide Government of India Resolution dated 29.08.2008. 

(Note : Merger 50% of Dearness Allowance with basic pay to the employees of Central Public Sector Enterprises (CPSEs) following 1997 Industrial Dearness Allowance (IDA) pattern of scales of pay with effect from 1.1.2007.)

2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் -அரசு முதன்மை செயலாளர் சபிதா


அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். இவற்றை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கிற முதல் நாளே வழங்க வேண்டும்.

                  சம்பந்தப்பட்ட துறைகளின் இயக்குனர்கள் இது தொடர்பாக திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். டிஎன்பிஎல் நோட்டு புத்தகங்களை வரும் 10ம் தேதி முதல் சப்ளை செய்ய வேண்டும். மே மாதம் 20ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும். தமிழ்நாடு பாடநூல் கழகம் பாட புத்தகங்களை ஏப்ரல் 8ம் தேதி முதல் வினியோகம் செய்து மே 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 
 
அத்துடன் ஒரு செட் சீருடை மே 15ம் தேதியில் இருந்து மே 28ம் தேதிக்குள் வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவற்றை பள்ளிகள் திறக்கும் வேளையில் வினியோகம் செய்ய, மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சபிதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பொதுப் பணி - 15.03.2013 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுபவர் களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் சார்பு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது என பரபரப்பு தீர்ப்பு



CPS தொடர்பாக "CITU" தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அவ்வுத்தரவில் இறந்தவருக்கு எந்த மாதிரியான செட்டில்மென்ட் என்பதை இரண்டு வாரத்திக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும், அதுவரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர் கட்டிய சந்தாவை பங்கு சந்தையில் மூதலீடு செய்ய கூடாது எனவும், இறந்தவரின் பங்களிப்பு தொகையினை வட்டி தரக்கூடிய வைப்பு நிதியாக வைக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Popular Posts