2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் தொராய (தற்காலிக) பயிற்சி நாட்கள் விபரம்


இந்த வருடம் ஆசிரியர்களுக்கு மொத்தம் 7 நாட்கள் மட்டுமே பயிற்சி நாட்கள்.
CRC DATES 
குறுவள மையம் 3 நாட்கள் 
(இடைநிலை மற்றும் பட்டதாரிகள்)
1. 06.07.2013
2. 26.10.2013 
3. 04.01.2014
பணியிடைப் பயிற்சி 4 நாட்கள்  
1. 20.08.2013
2. 04.09.2013
3. 20.11.2013 
4. 04.12.2013

SABL முறையில் 1 முதல் 4 வகுப்புகளுக்கான கற்றல் அட்டைகள் திருத்தம் செய்தவைகளை வகுப்பறையில் நடைமுறைப்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு

2010 ஆகஸ்ட் 23 தேதிக்கு முன்பு சான்றிதழ் சரிப்பார்த்து தாமதமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை


மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் 20.06.2013 அன்று கோரிக்கைகள் குறித்து கூட்டம் நடத்துதல் சார்பு


15,000 பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்

தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது. ஆகஸ்டு 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என கடந்த 22ம் தேதி டிஆர்பி அறிவித்தது. இதன் மூலம் சுமார் 15,000 காலி பணி இடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று (17ம் தேதி) தொடங்குகிறது. இந்த ஆண்டு 7 லட்சம் பேர் தகுதி தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கனவே அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன.

ஜூலை 1ம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.500 ஆகும். ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்ப கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதும்.

பணி நியமனத்துக்கு இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. முதலில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை தகுதி தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2, டிகிரி, பிஎட்., மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார். இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு

தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/ GE(2) / 2013-1, நாள்.12.06.2013ல் உத்தரவிடப்பட்டது.
 
அந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2 மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்து விவாதிக்கும் வகையில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள் கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு யாரெல்லாம் எழுதலாம்? கடைசி ஆண்டு பயில்வோர் எழுதியோர் எழுதலாமா?

தாள் 1 எழுத தகுதியானோர்:
1. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு  (10+2) என்ற முறையில் பயின்று D.T.Ed / D.El.Ed ஆகிய கல்விதகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயின்றோர்.
தாள் 2 எழுத தகுதியானோர்:
 1. பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்டம் (10+2+3) என்ற முறையில் பயின்று இளங்கலை கல்வியியல் கல்வி (B.Ed) தகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும்.
 2.இளங்கலை பட்டம் (B.A. /B.Sc. /B.Litt.)  தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய இளங்கலை பட்டமோ அல்லது அதற்கு இணையான பட்டமாக இந்த TNTET 2013 அறிவிப்பு நாளுக்கு முன் இணை பட்டமாக அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இணை பட்டத்தினை (Equal Degree) பெற்றுள்ளோர்.
கடைசி ஆண்டு தேர்வு எழுதியுள்ளோர்:
2012-13 ஆம் கல்வியாண்டு D.E.Ed/ B.Ed ஆகிய படிப்புகளை இறுதியாண்டு பயில்வோரும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதலாம். ஆனால், அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது, மேற்காணும் D.E.Ed/ B.Ed ஆகிய படிப்புகளை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும். இல்லையேல். அவர்கள் இவ்வாண்டு பணி நியமன வாய்ப்புகளை பெற முடியாது. ஆயினும் பிறகு அவர்கள் இக்கல்வித்தகுதிகளை பெற்றால் 7 வருட மதிப்புள்ள TET சான்றிதழ் வழங்கப்படும்.

வணிகவியல், பொருளியல் பட்டதாரிகள் டி.இ.டி., தேர்வை எழுத முடியாது

வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, அதன்பின், பி.எட்., முடித்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது. 
 
பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல், அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்கள், நியமனம் செய்யப்படுகின்றனர். 
வணிகவியல், பொருளியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள், 10ம் வகுப்பு வரை கிடையாது. எனவே, இந்த பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பும் அதன்பின், பி.எட்., பட்டமும் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது. 
வரும், 17ம் தேதி முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை துவங்க உள்ள நிலையில், யார், யார் விண்ணப்பிக்கலாம் என்பதை, டி.ஆர்.பி., தெளிவுபடுத்தியுள்ளது. எம்.காம்., - பி.எட்., படித்தவர்கள், நேரடியாக, முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், பொருளியல் பாடத்தினரும் விண்ணப்பிக்கலாம். 
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமும், துவக்கத்தில் இருந்து அல்லாமல், மேல்நிலைப்பள்ளியில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. எனவே, இந்த பாடத்தில் பட்டம் பெற்றவர்களும், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு கட்டாயம்

அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2011,12, 2012,13ம் கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென செயலர்கள், தாளாளர்கள் சார்பில் பள்ளி கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
 
இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவு: கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி ஆசிரியர்களின் நியமனத்திற்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளில் 2010 ஆக.23க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பிற நிபந்தனைகளோடு தகுதித் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பள்ளிகளில் அரசியல் தலையீடு: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு - தினமலர்

அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், அரசியல் தலையீடு அதிகரித்து உள்ளதால், மாணவர் சேர்க்கையை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் நடத்தப்படும் விளையாட்டு விழா, கலை நிகழ்ச்சி, கட்டடம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும், மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் பொதுமக்களின் நன்கொடை ஆகியவற்றின் மூலம், நிர்வாகம் செய்ய பெற்றோர் ஆசிரியர் கழகம் உருவாக்கப்பட்டது. 
ஆனால், தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்ககம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின், பள்ளிகளுக்கான பராமரிப்பு நிதி, அதிக அளவு ஒதுக்கப்படுகிறது. இதனால் மாணவர்களிடம், நன்கொடை, கல்விக்கட்டணம் உள்ளிட்டவை வசூல் செய்ய தடை விதிக்கப்பட்டது. 
ஆனாலும், கட்சி பிரமுகர்கள் ஆதிக்கம் வகிக்கும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை எதிர்த்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், குரல் கொடுக்க முடிவதில்லை. இதனால், மாணவர்களை பள்ளியில் சேர்க்க வரும் பெற்றோரிடம், கல்விக்கட்டணம், நன்கொடை என, கட்டாய வசூல் நடத்தப்படுகிறது. 
குறிப்பாக, ஆங்கில வழிக்கல்வி உள்ள பள்ளிகளில், இந்த வசூல் வேட்டை அதிகரித்துள்ளது. இதை, தலைமை ஆசிரியர்களால் தடுக்க முடியவில்லை. இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, நன்கொடை மற்றும் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உள்ளவர்களில், பெரும்பாலானோர் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள். 
மாணவர் சேர்க்கையை நாங்கள் தான் நடத்துவோம் என, கூறும் போது, அவர்களைத் தடுக்க முடியவில்லை. தடுத்தாலும், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடமிருந்து போன் வருகிறது. ஆங்கிலவழிக்கல்வி மற்றும் பிளஸ் 1 பாடத்தில், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு, பல ஆயிரம் ரூபாய் நன்கொடையாக, வசூலிக்கின்றனர். இதனால், விரும்பிய பிரிவில் சேர்க்க, பெற்றோர் கடும் அவதிப்படுகின்றனர். 
எம்.எல்.ஏ., தலையீடு என, அதிகாரிகளுக்கு தெரிவித்தால், அவர்களும் ஒதுங்கி விடுகின்றனர். ஆனால், பிரச்சனை என, வரும்போது, அவர்களும், தலைமை ஆசிரியர்களையே பலிகடா ஆக்குகின்றனர். இதனால், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர். 
பெற்றோர் ஆசிரியர் கழகத்தில், ஒன்றிரண்டு பெற்றோர் கூட இருப்பதில்லை. முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பதவியாக மாறிவிட்டது. அரசு பள்ளிகளில், பராமரிப்பு செலவுகளுக்கு, திட்ட நிதி மற்றும் அரசு வழங்கும் நிதியே, போதுமானதாக இருப்பதால், பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கலைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

நலத்துறை பள்ளிகளில் தேர்ச்சி குறைவு: தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையும் பட்சத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அரசுச் செயலர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன் கடலூரில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்டத்தில் அனைத்துத் துறைகளில் ஆதிதிராவிடர்களுக்கான திட்ட செயல்பாடு, பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு செய்தார்.

 அப்போது மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 45 சதவீதம் குறைவான தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது குறித்து கவலை தெரிவித்தார்.

பின்னர் நடந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அவர் பேசியது, "மாவட்டத்தில் இதுபோன்று கல்வி தரத்தில் பின்தங்கிய நிலை கவலை அளிக்கிறது.  தேர்ச்சி சதவீதம் குறையும் நிலையில் இனி 50 வயது கடந்த தலைமை ஆசிரியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது நிறுத்தப்படும். தோல்வியுற்ற மாணவர்களுக்கு நடத்தப்படும் உடனடி தேர்வில் அனைவரும் தேர்ச்சிப் பெற கல்வித் துறையினர் முழு கவனத்துடன் பணியாற்ற வேண்டும்' என்றார்.
சார் ஆட்சியர் ரா.லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"ஓய்வூதிய தனியார்மயம் கூடாது ஆக.6 கோட்டை நோக்கிப் பேரணி"

ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் 3 வது மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.

 
              இம்மாநாட்டின் முதல் நாள், பொதுமாநாடு மதுரை கே.கே.நகர் வி.ஆர்.கிருஷ்ணய் யர் சமுதாயக்கூடத்தில் வெள்ளி யன்று மாலை நடைபெற்றது. ஸ்தபாக தலைவர் எஸ்.ஆடிய ராஜன் கொடியேற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் என். ஜெயச்சந்திரன் வரவேற்புரை யாற்றினார். சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் பா.விக்ரமன் துவக்கவுரையாற்றினார். தமிழ் நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறு முகநயினார், போக்குவரத்து ஓய்வூதியத்துறை முன்னாள் இயக்குநர் வீ.பிச்சை ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து பிரதி நிதிகள் மாநாடு நடைபெற்றது. அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நலஅமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் வேலை, ஸ்தாபன அறிக்கையையும், பொருளாளர் ஏ.வரத ராஜன் வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர்.

                  மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறுபோக்குவரத்துக் கழகங் களில் பணியாற்றி பணி மூப்பின் காரணமாக ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு அன்றே வழங்க வேண் டிய பணிக்கொடையினை ஓய்வுபெறும் அன்றே வழங்க வேண்டும். விடுப்புச்சம்பளம், சமூகப்பாதுகாப்பு நிதி, ஓய்வு கால சேமநலநிதி மற்றும் ஐஆர்டி, பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும். பென்சனை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். புறநகர் பேருந்து களில் பயணம் செய்ய ஓய்வு பெற்றோர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6.8.2013 அன்று சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்துவது மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.மாநாட்டின் இரண்டாவது நாளாக ஜூன் 1ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறும் மாநாட்டில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.ஜெக தீசன், ஓய்வுபெற்ற பள்ளி கல் லூரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் என்.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் கே.ஆர்.சங் கரன், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். சங்கத்தின் துணைத்தலைவர் எம்.சந்திரன் நிறைவுரை யாற்று கிறார்.மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.தேவராஜ் நன்றி கூறுகிறார்.

2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 02898 / டி1 / 2013, நாள்.31.05.2013ன் படி 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல், 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை 31.05.2013 மாலைக்குள் இமெயில் மூலம் அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Popular Posts