ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.

2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் இன்று நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

வீட்டு கடன் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வட்டி தள்ளுபடி


ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது.
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல், 1.4.2013 தேதியிலிருந்து 31.3.2014 தேதிவரை வீட்டு கடனுக்காக விண்ணப்பிக்கும் முதல் முறை வீட்டு கடன் பெறும் நபர்களுக்கு, அவர்களது வட்டியில் ஒரு லட்சம் தள்ளுபடி செய்யப்படும் என்றா‌ர்.

இதன்படி வீட்டு கடன் தொகை ரூ.25 லட்சமாக இருக்க வேண்டும். இதன் மூலம் சொந்த வீடு கட்ட கனவுகாணும் குடும்பங்களுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் கட்டுமானப் பணி, ஸ்டீல், சிமென்ட், செங்கல், மரம், கண்ணாடி போன்றவற்றின் விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும் எ‌ன்று‌ம் ‌சித‌ம்ப‌ர‌ம் கூ‌றினா‌ர்.

மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக டாக்டர் வைகைச்செல்வன் அவர்கள் பதவி ஏற்பு.


கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு


கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது.
* கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 17 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு 22 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* கிராமப்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு 46 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

14 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் மே மாதம் இறுதியில் தகுதி தேர்வு


சிறப்பாசிரியர்கள் பணி தொடருமா? குழப்பத்தில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் !


மத்திய பட்ஜெட் 2013- முக்கிய அறிவிப்புகள்

ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு- வரி ஏதும் இல்லை 

ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரை- 10% வரி 

5 லட்சம் முதல் 10 லட்சம் வரை- 20% வரி 

20 லட்சத்துக்கு மேல் ஊதியம் உள்ளவர்களுக்கு -30% 

வருமான வரி 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு- 30 சதவீதம் பிளஸ் 10 சதவீதம் வரிரூ. 5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு ரூ.2000 வரிச் சலுகை

வீட்டுக் கடனுக்கான வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக அதிகரிப்பு வீட்டுக் கடன் வாங்கியோருக்கு வருமான வரி மேலும் குறையும்\


முதல் வீடு வாங்குவோருக்கு, ரூ. 25 லட்சம் வரை வங்கிக் கடன் வாங்குவோருக்கு இந்த வரி விலக்கு


முதல் வீடு வாங்குவோருக்கு, ரூ. 25 லட்சம் வரை வங்கிக் கடன் வாங்குவோருக்கு இந்த வரி விலக்கு

தமிழக அமைச்சரவை மாற்றம் , புதிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.வைகைச்செல்வன்


தமிழக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த திருமதி.கோகுல இந்திரா, பள்ளி கல்வி, இளைஞர் நலன் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்த திரு.என்.ஆர்.சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் திரு.கே.எஸ்.விஜய் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில், திருமதி. டி.பி.பூனாட்சி, டாக்டர் திரு.வைகைச்செல்வன், திரு.கே.சி.வீரமணி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.


புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள டி.பி.பூனாட்சிக்கு கதர் மற்றும் கிராமத் தொழில்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.சி.வீரமணிக்கு சுகாதாரத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைகைச்செல்வன் பள்ளி கல்வித்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.செந்தூர்பாண்டியன் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் கூடுதலாக சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புஇலாகா ஒப்படைக்கப்பட்டுள்ளது

புதிய அமைச்சர்கள் நாளை காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி 15 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டம்


இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி அதன் மூலம் புதியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டமிட்டுள்ளது.

புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும் பணியில் சேர்வதற்கேற்ப தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என்று டி.ஆர்.பியிடம் கல்வித்துறை தெரிவித்துள்ளன. என்வே, அடுத்த டி.இ.டி தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்வை நடத்தி மே மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள் கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். அதாவது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். அதிகப்படியான தகவல்களுக்கு +1, +2 வகுப்பு பாட புத்தகங்களை படித்தால் போதும்.

பொதுவான வினாக்களுக்கு தினமும் செய்தித்தாள்களைப் படித்து குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது முக்கிய செய்தி, கட்டுரைகள், தலையங்கங்கள் போன்றவற்றினை சேகரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாடவாரியான அட்டவணை தயார் செய்தும், பழைய வினாத்தாள்களை பார்த்துக்கொள்ளுதல், தேர்வுக்கு முன் குறைந்த பட்சம் 10 மாதிரி தேர்வுகளையாவது எழுதி பழ வேண்டும்.

ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாமல் பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் நிச்சயம் பலன் உண்டு. பட்டங்களுக்காக எழுதும் தேர்வு இதுவல்ல, பணிக்காக எழுதும் தேர்வு என்பதை நினைவில் நிறுத்தி திரைகடல் ஒடி திரவியம் தேடுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

When hand and mind work hard as one,
Success strokes your palms

உள்ளமும், கையும் உழைக்கத் துணிந்தால்
உள்ளங்கைகளில் வெற்றி குவியும்!

RMSAவின் மூலம் 2009-10, 2010-11, 2011-12 ஆம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு தர ஊதியம் (Grade Pay) ரூபாய்.2400 உயர்த்தி அரசு கடிதம் வெளியீடு

தமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெற்றமை - பணிவரன்முறை சார்ந்த கருத்துருக்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு

ஆறே மாதத்தில் பி.எட்., பட்டம் : பெரியார் பல்கலை பட்டத்தை நிராகரித்தது டி.ஆர்.பி.,- Dinamalar


சேலம் பெரியார் பல்கலையில், ஆறே மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்., பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து, வேலைவாய்ப்பை மறுத்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம் பெரியார் பல்கலையில், 2008ம் ஆண்டுக்கு முன் வரை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. 2008ம் ஆண்டு, கல்வியியல் பல்கலை துவக்கப்பட்டு, அதில் கல்வியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டன. கல்வியியல் பல்கலை அறிவிப்பு வரும் நேரத்தில், 2008 ஜன., மாதத்தில், 10க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகளுக்கு, பெரியார் பல்கலை இணைவு வழங்கியுள்ளது. அக்கல்லூரிகளில், உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், சேர்க்கப்பட்ட மாணவர்களை, அதே ஆண்டு மே மாதத்தில் தேர்வெழுதவும் அனுமதித்துள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆறே மாதத்தில் பட்டச்சான்றிதழையும் வழங்கியது.

அந்த பேட்ஜ் படித்த மாணவர்களில் ஒருவரான பிரபு, டி.ஆர்.பி., நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். இவர் தர்மபுரி கிரிவாசன் கல்வியியல் கல்லூரியில், 2008ம் ஆண்டு, பி.எட்., பட்டம் பெற்றுள்ளார். சான்றிதழ் சரி பார்ப்பில், 2007 நவம்பரில், இளங்கலை பட்டப்படிப்பை முடித்த, இவர் அடுத்த ஆறு மாதங்களுக்குள், 2008 மே மாதம் பி.எட்., பட்டம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, இவரது பி.எட்., பட்டம் செல்லாது என, டி.ஆர்.பி., தெரிவித்து, இவருக்கு வேலை வாய்ப்பை மறுத்துள்ளது. 

இதனால், இதே பேட்ஜில் படித்த மற்ற மாணவ, மாணவியரும் கடும் அதிர்ச்சியடைந்து, நேற்று பல்கலையை முற்றுகையிட்டனர். ஓமலூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் மாணவர்களுடன் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: பெரியார் பல்கலை நடத்திய தேர்வில், வெற்றி பெற்று, பல்கலை வழங்கிய பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்துள்ளது. இதனால், 2008ம் ஆண்டு, பி.எட்., படித்த மாணவர்கள் கலக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். பல்கலை கல்வியியல் கல்லூரிகளுக்கு, ஜனவரி மாதத்தில் தான் அங்கீகாரமே கொடுத்தது. ஆனால், அடுத்த ஆறே மாதத்தில், தேர்வுக்கு மாணவர்களையும் அனுமதித்துள்ளது. 

ஓராண்டு பட்டப்படிப்பான பி.எட்., தேர்வெழுத, குறைந்த பட்சம், 900 மணி நேரம் அல்லது, 150 பணி நாள் பங்கேற்க வேண்டும் என, உள்ள அரசு விதிமுறையை, பயன்படுத்தி ஆறே மாதத்தில் மாணவர்களை தேர்வெழுத அனுமதித்தது மட்டுமல்லாமல், பட்டமும் வழங்கியுள்ளது. ஓராண்டு படிப்புக்கு, ஆறு மாதத்தில் சான்றிதழ் வழங்கினால், அது செல்லுமா என்பது குறித்து பல்கலை நிர்வாகிகளுக்கு தெரியாதா என்பது தான் புரியாத புதிர். 

இவை தெரிந்தும், பணத்துக்காக சான்றிதழ்களை வழங்கி, பல மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி உள்ளனர். தற்போது பல்கலையில் கேட்டால், "தவறாக அட்மிஷன் போட்ட கல்லூரியில் போய் கேளுங்கள்" என, கூறுகின்றனர். கல்லூரி வழங்கிய மாணவர் பட்டியலில், தகுதியில்லாத பட்சத்தில், பல்கலை, எதற்காக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அரசு பல்கலை என்பதாலேயே பல நூறு மாணவர்கள், இதுபோல தேர்வு எழுதியுள்ளனர். 

இவர்களின் வாழ்க்கை தற்போது, கேள்விக் குறியாகியுள்ளது. இதை பற்றி இங்கு யாருக்கும் அக்கறையில்லை. பெரியார் பல்கலையில் முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்கதையாகவே உள்ளன.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது - இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது - தகவல் அறியும் சட்டத்தில் நிதித்துறை பதில்

வரும் பிப்ரவரி 20 மற்றும் 21 அன்று நடைபெறும் தேசிய அளவிலான 48 மணி நேர பொது வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளர் திரு.முருகசெல்வராஜன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பாடத்திட்டம் உருவாக்குதல் - வரைவு பாடத்திட்டம் குறித்த பணிமனை மாவட்டந் தோறும் நடத்தி அறிக்கை ஒப்படைக்க SCERT உத்தரவு

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் சார்பான விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் B.Ed., தகுதியுடன் பணியாற்றிவரும் (01.06.2006 வரை) இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை ஆணை

அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS)- ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை

CPS calculation Excel Sheet

வருமான வரி Income Tax - FY 2012 - 13 & AY 2013-14 பல்வேறு பிடித்தங்கள்/ விலக்குகள்

ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது - வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை


SECTION 10(13A)
House rent allowance
Salary includes dearness pay For the purposes of calculating the house rent allowance that would be exempt under rule 2A, the term ‘salary’ includes ‘dearness pay’ also—Circular : No. 90 [F. No. 275/79/72-ITJ], dated 26-6-1972.
Expenditure must have been actually incurred It is necessary for granting the exemption under section 10(13A) that the employee should have actually incurred the expenditure on rent. For purposes of deduction of tax, therefore, the disbursing officer should ensure that the employee concerned has in fact incurred the expenditure on rent. The payment of rent should be verified through rent receipts in the cases of all employees—Letter : F. No. 12/19/64-IT(A-I), dated 2-1-1967.
click here to download the IT Dept Circular for HRA Receipt exemption for Rs.3000
Living in own house or in any house rent-free House rent allowance paid to a person, who is living in his own house or in a house for which he does not actually pay any rent, is not exempt from tax in any circumstances—Letter : F. No. 12/19/64-IT(A-I), dated 2-1-1967.
Production of rent receipts Only the expenditure actually incurred on payment of rent in respect of residential accommodation occupied by the assessee subject to the limits laid down in rule 2A, qualifies for exemption from income-tax. Thus, house rent allowance granted to an employee who is residing in a house/flat owned by him is not exempt from income-tax. The disbursing authorities should satisfy themselves in this regard by insisting on production of evidence of actual payment of rent before excluding the house rent allowance or any portion thereof from the total income of the employee. Though incurring actual expenditure on payment of rent is a pre-requisite for claiming deduction under section 10(13A), it has been decided as an administrative measure that salaried employees drawing house rent allowance upto Rs. 3,000 per month will be exempted from production of rent receipt. It may, however, be noted that this concession is only for the purpose of tax deduction at source, and, in the regular assessment of the employee, the Assessing Officer will be free to make such enquiry as he deems fit for the purpose of satisfying himself that the employee has incurred actual expenditure on payment of rent -Circular : No. 9/2003, dated 18-11-2003/[Para 5.2-(9)].

DSE Director Proceeding for MPhil Incentive | பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil., படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.



அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள வசதி


தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. 


50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தும், மின்னணு முறையில் மாற்றப்பட்டு வருகிறது. இதனால், அரசின் தகவல் பரிமாற்றங்களைக் கூட, மின்னணு முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழக ஏரியா நெட்வொர்க், தமிழக டேட்டா மையம், மின்னணு மாவட்டத் திட்டம், மாநில சேவைகளை வழங்கும் வழித் தடம் ஆகிய திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களை, மாநில அரசு அலுவலர்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், அலுவலகங்களை இணையதளத்தில் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தின் அன்றாடப் பணிகளை, மின்னணு முறைக்கு மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

பல சேவைகளை, ஆன்-லைனில் செய்ய வேண்டி இருப்பதால், இணையதள இணைப்புகள் அவசியமாகின்றன. எனவே, தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவற்றோடு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இணையதள வசதி ஏற்படுத்தப்படுகிறது. இணையதள வசதியோடு, ஒவ்வொரு துறை அலுவலகங்களும், வங்கிகளைப் போல, கணினி நெட்வொர்க்கில் இணைக்கப்படுகின்றன.

இதற்காக, அரசு மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும், ஒப்பந்தப் புள்ளியை, எல்காட் நிறுவனம் கோரியுள்ளது.ஒவ்வொரு அலுவலகத்துக்கும், தரை வழி தொலைபேசி இணைப்புடன், பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்குதல், தரை வழி தொலைபேசிக்கு, இலவச உள் அழைப்பு வசதி மட்டும் இருக்கும் வகையில், இணைப்புகள் அளிக்கப்படுகின்றன.

இதுகுறித்து, தமிழக அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து அலுவலகங்களும், இணையதள வசதி பெறும் போது, தகவல் பரிமாற்றம் எளிதாவதோடு, அரசின் அனைத்து செயல் மற்றும் தகவல்களை, இணைய தளம் மூலம், உடனுக்குடன் அறிய முடியும். 

நாட்டின் கடை கோடியில் இருக்கும் அலுவலகங்கள் கூட, மக்களுக்கு உடனுக்குடன் சேவையை அளிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு, மூன்று மாதங்களில், அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதி அளிக்கப்படும் என, எல்காட் வட்டாரங்கள் கூறுகின்றன.

2011- 12 - Primary to Upper Primary Urgraded 218 Schools HM post Converted as Primary to Upper Primary GO Issued.

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - அரசாணை வெளியீடு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தகவல


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம் இரத்து செய்யப்படும் என ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர், ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கீழ்வரும் பதிலளித்துள்ளார். 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு


நடுவண் அரசு 01.01.2004ல் நாடு முழுவதும் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து படிப்படியாக பெரும்பாலான மாநில அரசுகளும் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தன. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் செய்தவண்ணம் உள்ளனர்.

இத்திட்டத்தினால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தவர்கள், ஒய்வு பெற்றவர்களுக்கு எவ்வித பணப்பலன் கொடுக்கப்படாமல் அக்குடும்பங்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளன. எனவே இத்திட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி துறையை சார்ந்த 33 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 


இவ்வழக்கானது (வழக்கு எண்.W.P.NO.2470/2013) நீதியரசர்.சந்துரு அவர்கள் முன்னிலையில் 31.01.2013 அன்று விசாரணைக்கு வந்தது. நீண்ட விவாதத்திற்கு பின் இவ்வழக்கை ஏற்றுகொள்வது குறித்த தீர்ப்பு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆசிரியர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.முத்துகுமார் கூறுகையில் இத்திட்டத்தினால் பல்வேறு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். அதேபோல் இத்திட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், இத்திட்டம் நடைமுறைக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித தெளிவான அரசாணைகளும், செலுத்திய சந்தாவை திருப்புவதற்கான வழிக்காட்டுதல்கள் இல்லாதது குறித்தும் நீதியரசர் அவர்களிடம் விளக்கி உள்ளோம் என்று தெரிவித்தார். இதற்கான தீர்ப்பு வரும் வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு தொடக்க பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள்


அரசு தொடக்கப் பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும், பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஆங்கில மோகம் காரணமாக குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே தனியார் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில், பல்வேறு சலுகை வழங்கப்பட்டாலும், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உயர்கிறது. 

அரசு பள்ளிகளில், துவக்க நிலையில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பள்ளி கல்வி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில், மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. பல பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 மாணவர்களுக்குள் மட்டும் படிக்கின்றனர். இதனால், அரசு கொண்டு வரும் திட்டங்களும், முயற்சிகளும் வீணாகி வருகின்றன. 

இதே நிலை நீடித்தால், ஓரிரு ஆண்டுகளில் பல அரசு பள்ளிகள் மூடும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்த்து, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 

முதல்கட்டமாக, தமிழ் வழி, ஆங்கில வழி கல்விக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக, பள்ளி வாரியாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கல்வியாண்டில், பள்ளி திறப்பதற்கு முன் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி, ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி முழுவீச்சில் வழங்கப்படவுள்ளது. இதில், தனியார் பள்ளிகளை போன்று, விளையாட்டு முறையுடனும், எளிமையான முறையிலும் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

இதற்கு தேவைப்படும் பயிற்சிகள், பயிற்சியாளர்கள் விபரம் ஆகியவை தயாரிக்கும் பணி நடக்கிறது. அதுபோல், பள்ளி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்கான, முதல்கட்ட பயிற்சி முகாம் இரு நாட்களுக்கு முன் துவங்கியது. தேர்வு நேரம் நெருங்குவதால், இப்பயிற்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்., மாத இறுதியில் மீண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது.

பள்ளி திறக்கப்படும் போது, மாணவர்களை கொண்டு சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தவும், பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக்குழு உறுப்பினர்களை கொண்டு வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம், வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை கணிசமாக உயரும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் காத்துள்ளனர்.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு


கடந்த இரண்டு ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலக் கெடுவிற்குள் புதுப்பிக்க தவறியவர்கள் வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி, பதிவு புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு போன்ற பணிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இதனால் போக்குவரத்து செலவு, காலவிரயம், அலைச்சல் மற்றும் பிற இன்னல்கள் தவிர்கப்படுகிறது.

ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆகஸ்ட் 2011 முதல் ஜனவரி 2013 முடியவுள்ள புதுப்பித்தல் காலக்கெடுவிற்குள் புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் 28.2.2013க்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம். இந்த புதுப்பித்தலுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவோ அல்லது மனுச் செய்யவோ தேவையில்லை.

வீட்டில் உள்ள இணையதள வசதி உடைய கம்ப்யூட்டரிலோ அல்லது ஏதேனும் இண்டர்நெட் மையங்களிலோ சிறப்பு சலுகை அடிப்படையில் புதுப்பிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஸ்மார்ட் கார்டு' தயாரிப்பில் முரண்பாடு ; சிவகாசி உ.தொ.க.அலுவலரை கண்டித்து இன்று 6.2.13 ஆர்ப்பாட்டம்

சிவகாசி:மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தில்<, விபரங்களை அப்டேட் செய்வதில் ,ஆசிரியர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்க, அரசு உத்தரவிட்டது. இதற்கான விபரங்களை ஆசிரியர்கள் சேகரித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம், கல்வித்துறை வெப்சைட்டில், அப்டேட் செய்ய வேண்டும். இதற்காக தனி "பாஸ்வேர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் வசதியுடைய 5 இன்ஜினியரிங் கல்லூரிகளை தேர்வு செய்து, "அப்டேட்' செய்கின்றனர். மற்ற மாவட்டங்களில் இப் பணி விரைவாக நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மந்தநிலையில் உள்ளது. 15ம் தேதிக்குள் முடிக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், சிவகாசி ஒன்றியத்தில் இப் பணி மேற்கொள்வதில் தலைமை ஆசிரியர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் சிலர் தனியார் கம்ப்யூட்டர் மையம் மூலம், காத்திருந்து பதிவு செய்கின்றனர். ஒரே நேரத்தில் பலரும் வெப்சைட்டில் பதிவு செய்யும் போது, ஆன்லைன் பதிவில் தாமதம் ஆகிறது. இப் பணியால் பள்ளிகளில் கல்வி பாதிக்கப்படுகிறது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களை, இப் பணியை செய்து கொடுக்க, உதவி தொடக்க கல்வி அலுவலர் தாமோதரன் கேட்டுள்ளார். இச் சங்கத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சிலர், "மாணவர் விபரங்களை கொடுப்பதுதான் எங்கள் கடமை, அதனை வெப் சைட்டில் அப்டேட் செய்வது உதவி தொடக்க கல்வி அலுவலரின் பணி. இப்பணியை தலைமை ஆசிரியர்கள் செய்ய மாட்டோம் என, தெரிவித்தனர். இதனால், மாணவர் விபரங்களை பதிவு செய்வதில் காலதாமதமாகிறது. சிவகாசி ஒன்றியத்தில் இதுவரை 15 ஆயிரம் மாணவர் விபரங்கள் ஏற்றப்பட்டுள்ளன. இன்னும் 10 ஆயிரம் மாணவர் விபரங்கள் "அப்டேட்' செய்ய வேண்டியுள்ளது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் வைரமுத்து, ""சிவகாசி உதவி தொடக்க கல்வி அலுவலர் தாமோதரன் மொபைலில் பேசும் போது, மாணவர் விபரங்களை விரைவாக முடித்து கொடுங்கள் என்றார். மாநில சங்க முடிவுபடி நாங்கள் இப் பணியை மேற்கொள்ள மாட்டோம் என்றேன். அதற்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கத்தை பற்றி, "சங்கம் மண்ணாங்கட்டி' என தரக்குறைவாக பேசினார். இவரை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் செய்கிறோம்,'' என்றார். உதவி தொடக்க கல்வி அலுவலர், ""ஆசிரியர் வைரமுத்துவிடம் விரைவாக பணியை முடித்து கொடுங்கள் என கூறினேன். வேறு எதுவும் பேச வில்லை,'' என்றார்.நன்றி ! தினமலர்.

IGNOU BEd தேர்வு முடிவுகள் வெளியீடு

தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடுஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை வெற்றி !

தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தற்போது நடைபெற்று வரும் 10 நாள் வட்டார அளவிலான பயிற்சி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேதகு ஆளுநர் உரை 01.02.2013

ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால் தான் இன்று நீதிபதியாக உள்ளேன்: உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன்


எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால்தான் இன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன் என்றும், ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை எதிர்காலத்தில் கண்டிப்பாக வெற்றியாகத்தான் இருக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர், வள்ளுவர் வித்யாலயாவில் நடைபெற்ற 9-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார். விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நீதிபதி கே.வெங்கட்ராமன் மேலும் பேசுகையில் கூறியதாவது:
மாணவர்களாகிய நீங்கள் நாளை சமுதாயத்தை ஆள வேண்டும். பள்ளியில் மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அதற்கு பின்னராவது மாணவர்கள் திருந்தி, சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகத்தான். இதனைப் பெற்றோர் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எனது ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்தததால்தான் இன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளேன். நான் படிக்கும் காலத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் தவறு செய்யும் போது ஆசிரியர்கள் கண்டித்திருக்கிறார்கள். அடித்திருக்கிறார்கள். ஆனால் அதை அப்போது பெற்றோர் குறை சொல்லவில்லை. நல்லதற்கு என்றுதான் கூறினார்கள். வீட்டில் ஒன்று அல்லது இரு குழந்தைகளை வைத்துள்ளார்கள். சனி, ஞாயிறு விடுமுறை என்றால்  பிள்ளைகளை வைத்து பெற்றோரால் சமாளிக்க முடியுமா? ஏன் பள்ளிக்கு விடுமுறை விடுகிறார்கள் என்கிறார்கள். பல்வேறு சூழ்நிலையில் வளர்க்கப்பட்டுள்ள, வெவ்வேறு குணநலன் கொண்ட பிள்ளைகளை வைத்து ஆசிரியர்கள் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறார்கள்.
அவர்கள் சிறந்த குடிமக்களாக உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள், சில கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்தால்தான் பள்ளி நிர்வாகம் நடைபெற இயலும். பத்திரிக்கைகளில் இதுபோன்ற செய்திகள் வரும்போது அதனை புறக்கணித்துவிடுங்கள்.இளம் கன்று பயம் அறியாது என்பார்கள். மாணவர்களை நல் வழிப்படுத்த கண்டிப்பு அவசியம் தேவை.உங்கள் பிள்ளைகள் எந்த பாடத்தில் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் விருப்பப்படி பொறியியல், மருத்துவம் எடுத்து படிக்க வையுங்கள். உங்கள் எண்ணங்களை, விருப்பங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். பெற்றோர் மாணவர்களை அடுத்த மாணவர்களுடன் ஒப்பிட்டு குறை கூறாமல், ஊக்குவிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கை என்றும் வெற்றிகரமாகத்தான் இருக்கும். கடின உழைப்பு இருந்தால் மாணவர்கள் நாளை சரித்திரம் படைக்கலாம் என்று கூறினார்.

ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதித்தேர்வில் சலுகை கூடாது - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி தேர்வில் எந்த சலுகையையும் காட்டக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் தகுதித் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. 


தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுத்தால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு  அழைக்கப்படுவார்கள்.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த தேர்வில் ஏராளமானோர் தோல்வியடைந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி 2வது முறையாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. 

 இதிலும் ஏராளமானோர் தோல்வியடைந்தனர். இதையடுத்து, சஙாகீதா உள்ளிட்ட 14 பேர் ஒதுக்கீடு அடிப்படையில் தங்களுக்கு தகுதி மதிப்பெண்ணில் சலுகை காட்ட வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 இந்த வழக்கு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந¢தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:தரம்வாய்ந்த தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. 

இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. தரமுள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் எந்த சலுகைகளையும் காட்ட முடியாது என்றும் அரசு முடிவு செய்துள்ளது.சில மாநில அரசுகள் சலுகைகளை வழங்கியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளது தமிழக அரசுக்குப் பொருந்தாது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஆசிரியர் நியமனத் தில் எந்த சலுகையையும் காட்டக் கூடாது என்று மிகத்தெளிவாக உத்தரவிட்டுள்ளன. எனவே, சலுகை தரக்கோரும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய பங்களிப்பு ஓய்வுதியம் திட்டத்தை எதிர்த்து மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்கிறது ?


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு குறித்து அடுத்த மாதம் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. ஜனவரி மாதம் முதல் தேதியை கணக்கிட்டு இந்த 8 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

பிப்ரவரி மாத குறுவள மைய பயிற்சிக்கான மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி வழிக்காட்டுதல் மற்றும் அறிவுரை பகிர்தலும் என்ற தலைப்பில் 05.02.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது - SCERT

அகில இந்திய வேலைநிறுத்தம் பிப்ருவரி -20, 21. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அழைக்கிறது ! ஆசிரியர் பெருமக்களே அணி திரண்டு வாரீர் !

Popular Posts