இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி 15 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டம்


இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்கு முன்பே மூன்றாவது டி.இ.டி தேர்வை நடத்தி அதன் மூலம் புதியதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்ய டி.ஆர்.பி திட்டமிட்டுள்ளது.

புதிய ஆசிரியர்கள், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கியதும் பணியில் சேர்வதற்கேற்ப தேர்வு அட்டவணையை தயாரித்து முடிக்க வேண்டும் என்று டி.ஆர்.பியிடம் கல்வித்துறை தெரிவித்துள்ளன. என்வே, அடுத்த டி.இ.டி தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். பள்ளி பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்வை நடத்தி மே மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் பணியை எதிர்நோக்கி உள்ளவர்கள் கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். அதாவது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். அதிகப்படியான தகவல்களுக்கு +1, +2 வகுப்பு பாட புத்தகங்களை படித்தால் போதும்.

பொதுவான வினாக்களுக்கு தினமும் செய்தித்தாள்களைப் படித்து குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது முக்கிய செய்தி, கட்டுரைகள், தலையங்கங்கள் போன்றவற்றினை சேகரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாடவாரியான அட்டவணை தயார் செய்தும், பழைய வினாத்தாள்களை பார்த்துக்கொள்ளுதல், தேர்வுக்கு முன் குறைந்த பட்சம் 10 மாதிரி தேர்வுகளையாவது எழுதி பழ வேண்டும்.

ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாமல் பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் நிச்சயம் பலன் உண்டு. பட்டங்களுக்காக எழுதும் தேர்வு இதுவல்ல, பணிக்காக எழுதும் தேர்வு என்பதை நினைவில் நிறுத்தி திரைகடல் ஒடி திரவியம் தேடுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

When hand and mind work hard as one,
Success strokes your palms

உள்ளமும், கையும் உழைக்கத் துணிந்தால்
உள்ளங்கைகளில் வெற்றி குவியும்!

Popular Posts