ஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஆசிரியர்களின் புகார்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில், பள்ளி அளவிலான குறைபாடுகளைக் களைய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள் தங்களது குறைகளை இந்தக் குழுக்களில் தெரிவிக்க வேண்டும். வட்டார, மாவட்ட, மாநில அளவிலான குறைதீர் குழுக்களையும் மாநில அரசு அமைக்க வேண்டும் என விதிகளில் பொதுவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது ஒவ்வொரு குழுக்களும் எத்தனை நாள்களில் புகார்களுக்கு தீர்வு காண வேண்டும், இந்தக் குழுக்களில் யார் இடம்பெற வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசு இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
அதேநேரத்தில், பணி தொடர்பான விவகாரங்கள், கல்வித் துறையால் தாற்காலிகப் பணியிடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான விவகாரங்களை இந்தக் குழுக்கள் விசாரிக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையின் விவரம்:
பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பள்ளிகள் அளவிலான முதல் குறைதீர் அமைப்பாக செயல்படும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது புகார்களை இந்தக் குழுவின் அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலரிடம் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக புகார் பெறப்பட்ட 15 நாள்களுக்குள் அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தப் புகார் மீது நடவடிக்கை இல்லையென்றாலோ அல்லது அதற்கான பதில் திருப்தியளிக்கவில்லை என்றாலோ வட்டார அளவிலான குறைதீர் குழுவிடம் ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கலாம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான வட்டார குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும். வட்டார கல்வி அதிகாரி இந்தக் குழுவின் அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலராகச் செயல்படுவார்.புகார் பெற்ற 30 நாள்களுக்குள் இந்தக் குழு அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தக் குழு தேவையின் அடிப்படையில் கூட வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும்.
மாவட்ட அளவிலான குழு: மாவட்ட அளவிலான குறைதீர் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கல்வி அதிகாரி அமைப்பாளராகவும், உறுப்பினர் செயலராகவும் இருப்பார். நகராட்சிகளின் மூத்த உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். இந்தக் குழு 3 மாதங்களுக்குள் அந்தப் புகாருக்கு தீர்வு காண வேண்டும்.மாநில அளவிலான குழு: மாவட்ட அளவிலான குழுவில் திருப்தியில்லை என்றால் ஆசிரியர்கள் மாநில அளவிலான குறைதீர் குழுவிடம் முறையிடலாம். இந்தக் குழுவுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் தலைவராகவும், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பரிந்துரை செய்யும் 2 பேர் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்தக் குழு 90 நாள்களுக்குள் புகார்களுக்குத் தீர்வு காண வேண்டும். குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை - பள்ளிகளில் இறை வழிப்பாட்டு கூட்டத்தில் மாணவ / மாணவியர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க உத்தரவு



நிதித்துறை - தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பணிநிலை, மொத்த / நிரப்பப்பட்ட பணியிடங்கள் (பதவிகள் வாரியாக), பணியின் கடமைகள், பொறுப்புகள், பணியின் ஊட்டு பதவி / பதவி உயர்வு, திருத்திய ஊதியத்திற்கு முந்தைய ஊதியம் / திருத்திய ஊதியம் பற்றிய சிறப்பு விதிகள் ஆகியவை தொகுத்து நிதித்துறைக்கு அனுப்புமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு நிதித்துறை சார்பாக கடிதம்

வேலைநிறுத்தப் போராட்டம் - பணியாளர் சங்கம் - 02.09.2015 அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது - போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்களின் அன்றைய தினம் ஊதிய வழங்க ஆட்சியர் உத்தரவு


மனுக்கள் - அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்க கோரி வரும் மனுக்களை கையாள்வதில் அரசு அலுவலகங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பணியாளர் நிருவாகச் சீர்த்திருத்தத்துறை உத்தரவு



புதிய ஓய்வூதியம் திட்டம் எப்போது கைவிடப்படும்; சட்ட பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு.கே.பாலகிருஷ்ணன் கேள்வி


தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ்டிக்கைக் குழு சார்பில் கோரப்பட்ட கோரிக்கைகள் அரசின் கொள்கைக்குட்பட்டது என கோரிக்கை நிராகரித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்


டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தொடக்கக்கல்வித்துறை உத்தரவு





Pay Authoriation Order for 1610 SGT


புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசுப்பங்களிப்பு ரூ.6000 கோடி இது வரை வழங்கவில்லை: அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு


அரசு ஊழியர்களின் கேள்விகளுக்கு அரசு துறைகள் மவுனம்: பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே?

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி விவரம், நிதித்துறை மற்றும் தகவல் தொகுப்பு மையத்தில் இல்லாததால், இந்த திட்டத்தின் நிலை குறித்து, அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் எங்கே என்பது தான், இப்போதைய கேள்வி.
தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகமானது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.

இத்திட்டத்தில், அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில், மாதம், 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காக செலுத்தும். 
40 சதவீத முதலீடுபின், ஊழியர் ஓய்வுபெறும் போது, மொத்தத் தொகையில், 60 சதவீதம் வழங்கப்படும். மீதமுள்ள, 40 சதவீதம், பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கடந்த, 12 ஆண்டுகளில் ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்; சிலர் மரணமடைந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு, பிடிக்கப்பட்ட நிதி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும், ஆசிரியருமான பிரெட்ரிக் ஏங்கல்ஸ், தமிழக நிதித்துறை, தகவல் தொகுப்பு மையம் மற்றும் கணக்கு மற்றும் கருவூலத் துறைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்டுள்ளார்.
இதில், 'தங்களிடம் எந்த விவரமும் இல்லை' என, நிதித்துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தகவல் தொகுப்பு மையம் தெரிவித்துள்ளது. 
அதேநேரம், ஓய்வு பெற்றவர், இறந்தவர் போன்ற விவரங்களோ, அவர்களுக்கான நிதி விவரமோ, தங்களுக்கு தெரியாது என, நிதித்துறை, தகவல் தொகுப்பு மையம், கணக்கு மற்றும் கருவூலத்துறை ஆகியவை தெரிவித்துள்ளன.தெளிவான முடிவு இல்லை.இதற்கிடையில், 'தமிழக அரசின் நிதி, மத்திய அரசின் திட்டத்திலும் இந்த பணம் முதலீடு செய்யப்படவில்லை' என, மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் குழப்பத்தில் உள்ளனர். 
இதுகுறித்து, பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து, அரசு இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை. அதனால், அந்த நிதியை வெளியில் முதலீடு செய்யவில்லை. இதுகுறித்து அரசு உரிய முடிவு எடுக்காததால், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிநீட்டிப்பு மற்றும் பதவி உயர்வு முறையாக வழங்க இயக்குனர் உத்தரவு

Popular Posts