சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அதிமுகவும் திமுகவும் பெயரளவிற்கே எதிர்க்கின்றன-ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை அக்.19-

மத்திய அரசு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்த தற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் பெயரளவிற்கே தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முத லீடு, டீசல் விலை உயர்வு, குடும்பத்திற் கான சமையல் எரிவாயு சிலிண்டர் குறைப்பு, பொதுத்துறைப் பங்கு விற்பனை, தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு, டெங்குக் காய்ச்சல் பரவ லைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 16-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக் கம் நடைபெற்று வருகிறது.


இப்பிரச்சார இயக்கம் வெள்ளிக்கிழ மையன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு வந்தது. அங்கு பிரச்சாரக் குழுவிற்கு தலைமையேற்று வந்த ஜி.ராம கிருஷ்ணன் பேசியதாவது:

சுமார் 20 கோடி மக்களின் வாழ்வாதா ரத்தைப் பறிக்கும் வகையில் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீட் டிற்கு அனுமதித்துள்ளது மத்திய அரசு. இதை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த செப்டம்பர் 20 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை நடத்தின. இப்போ ராட்டத்தால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் முற்றிலுமாக இயங்கவில்லை.

இவ்வளவு எதிர்ப்பையும் மீறி தனது நாசகரக் கொள்கைக்கு அனுமதி வழங் கியதோடு, அதை நியாயப்படுத்தியும் பேசி னார் மன்மோகன்சிங். மத்திய அரசில் அங் கம் வகிக்கும் திமுக அமைச்சரவையில் இக்கொள்கைக்கு ஒப்புதல் தந்துவிட்டு, வெளியில் எதிர்ப்பதாக பாசாங்கு செய்தது. தமிழகத்தை ஆளும் அதிமுக அந்நிய முத லீட்டை எதிர்ப்பதாக அறிக்கை மட்டும் தந்துவிட்டு, பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண் டது. பொருளாதாரக் கொள்கையில் திமுக வும், அதிமுகவும் காங்கிரஸ், பிஜேபியின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களை பின்பற்றி வந்ததே கடந்தகால வரலாறு. 

தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டால் சிறு, குறு தொழில் நிறுவ னங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய விசைத் தறி நிறுவனங்கள் அசைவற்றுக் கிடக் கின்றன. திருப்பூர், கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் இயங்காததால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கின்றனர். இப்பொழுதுதான் முதல்வர் குழு அமைத்துள்ளார். எங்களுக்கு குழு முக்கியமில்லை. மின் வெட்டுப் பிரச் சனை தீர உருப்படியான நடவடிக்கை தேவை. இப்படிப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கை களைக் கண்டித்து நாட்டு மக்கள் கிளர்ந் தெழ வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ் ணன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இப்பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.சுகந்தி, ஜி.சுகுமாறன், மாவட்டச் செயலாளர் எம். சின்னத்துரை, முன்னாள் எம்எல்ஏ., எஸ். ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், கரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இலக்குவணன், ஒன்றியச் செயலாளர் எம்.சண்முகம், நகரச் செயலாளர் ஆர்.எம்.ஜெயராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.எம்.சங் கர், ஏ.பழனிச்சாமி, எஸ்.லெட்சுமணன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular Posts