டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம்

கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது.
அக்., 2012 ஜூலையில், டி.ஆர்.பி.,சார்பில், டி.இ.டி.,(ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள் 1, 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது. தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்க உத்தரவிடவேண்டும் என, சிலர் கோர்ட்டை அணுகினர். இதையடுத்து, டி.இ.டி., தேர்ச்சிக்கான முடிவு, மதிப்பெண்களை இணையதளத்தில் வெளியிடப்பட்டாலும்,தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என, கல்வித்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், 2012 ல், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட சி.இ.ஓ.,அலுவலங்களில் நவ., 23 முதல் டிச.,15 வரை தேர்ச்சி சான்றிதழ் வழங்கப் படுகிறது.அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதி, வெற்றி பெற்றவர்கள், ஏற்கனவே, பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, கல்வித்துறை அனுப்பிய அழைப்பு கடிதத்துடன் நேரில் வர வேண்டும்.

தேர்வர்கள் தவிர, பிறரிடம் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்றும், தபாலிலோ, கொரியர் மூலமோ சான்றுகளை அனுப்பஇயலாது எனவும்,சி.இ.ஓ.,க்கள் தெரிவித்தனர்.

Popular Posts