"பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று
முதல் 30ம் தேதி வரை இணையதளத்தில் இருந்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்" என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இயக்குனர், தேவராஜன் அறிவிப்பு:
செப்டம்பர், அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வுகள் நடந்தன. தேர்வு
முடிவிற்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு, மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அவர்கள், www.examsonline.co.in
என்ற இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதி மற்றும் தனி தேர்வு மதிப்பெண்
சான்றிதழில் உள்ள குறியீட்டு எண்ணை பதிவு செய்து, விடைத்தாளை, பதிவிறக்கம்
செய்யலாம்.
மறுகூட்டல் முடிவுகள், விரைவில் வெளியிடப்படும். விடைத்தாள்களை
பதிவிறக்கம் செய்யும் தேர்வர்கள், மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் செய்ய
விரும்பினால், www.tndge.in என்ற
இணையதளத்தில், இன்று முதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், உரிய கட்டணத்தையும் சேர்த்து,
சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், டிச., 2, 3 தேதிகளில்,
நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணத்தை, ரொக்கமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.