"ஆசிரியர்,
மாணவர் உறவில் பாதிப்பு ஏற்படாத வகையில் கல்வித்துறை அதிகாரிகள் செயல்பாடு
அமைய வேண்டும்,'' என, பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா அறிவுறுத்தினார்.
மதுரையில், கலெக்டர் சுப்ரமணியன், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் செல்லம் ஆகியோருடன் அவர் ஆலோசித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:கல்வித்துறை செயல்பாடு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர முடியாத அளவில் அதிகாரிகளின் செயல்பாடு அமைய வேண்டும்.
கடந்தாண்டை விட, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில், மாவட்ட தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் உறவு சமூகமாக இருக்கும் வகையில்
அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விவரங்களை கண்காணிக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை குறையும்பட்சத்தில், அப்பள்ளியை மூடிவிட்டு, அதன் அருகே செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கலாம். அனைத்து பள்ளி களிலும், தலைமையாசிரியர்கள் திறமையாக செயல்படும் வகையில் கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், என்றார்.