3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
தமிழ் வழியில் முதுகலை படித்திருந்தாலும் ஆசிரியர் பணி ஐகோர்ட் உத்தரவு
முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில்
முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி
அளிக்கும்பட்சத்தில், ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., பரிசீலிக்க, மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கமுதி நீராவியை சேர்ந்த மாரியம்மாள் தாக்கல்
செய்த மனு: தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, எம்.காம்.,-பி.எட்.,
தேர்ச்சியடைந்தேன்.
ஆங்கில வழியில் பி.காம்.,தேர்ச்சியடைந்தேன். முதுகலை
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக, 2012-13 ல் ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,) நடத்திய தேர்வில் பங்கேற்றேன். "கட்-ஆப்' மதிப்பெண் 92.
எனக்கு 102 மதிப்பெண் கிடைத்தது. டி.ஆர்.பி., தரப்பில்,"நீங்கள் முதுகலை
(எம்.காம்.,) தமிழ் வழியிலும், இளங்கலை (பி.காம்.,)ஆங்கில வழியிலும்
படித்துள்ளதால், பணி நியமனம் வழங்க முடியாது,' என நிராகரித்தனர். தமிழ்
வழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என
அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு
குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜரானார். நீதிபதி: தமிழ் வழியில்
படித்தவர்களுக்கான சிறப்புச் சலுகையை, மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
முதுகலை பட்டம் தமிழ் வழியிலும், இளங்கலை படிப்பை ஆங்கில வழியில்
முடித்திருந்தாலும், மனுதாரரின் பிற தகுதிகள் திருப்தி
அளிக்கும்பட்சத்தில், அவரது பெயரை ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., பரிசீலிக்க
வேண்டும் என்றார்.
லேபிள்கள்:
Court
பிளஸ் 2 விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்
"பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று
முதல் 30ம் தேதி வரை இணையதளத்தில் இருந்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்" என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இயக்குனர், தேவராஜன் அறிவிப்பு:
செப்டம்பர், அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வுகள் நடந்தன. தேர்வு
முடிவிற்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு, மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அவர்கள், www.examsonline.co.in
என்ற இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதி மற்றும் தனி தேர்வு மதிப்பெண்
சான்றிதழில் உள்ள குறியீட்டு எண்ணை பதிவு செய்து, விடைத்தாளை, பதிவிறக்கம்
செய்யலாம்.
மறுகூட்டல் முடிவுகள், விரைவில் வெளியிடப்படும். விடைத்தாள்களை
பதிவிறக்கம் செய்யும் தேர்வர்கள், மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் செய்ய
விரும்பினால், www.tndge.in என்ற
இணையதளத்தில், இன்று முதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், உரிய கட்டணத்தையும் சேர்த்து,
சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், டிச., 2, 3 தேதிகளில்,
நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணத்தை, ரொக்கமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
லேபிள்கள்:
News
பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல்
பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண்
காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க,
கடும் போட்டியை சந்திக்க உள்ளனர்.
கடும் போட்டி உறுதி : டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி தேர்வானது, பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களும், கணக்கில் கொள்ளப்பட்டு, அதில் பெற்ற மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படும்.
டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண், 60க்கு கணக்கிடப்பட்டு, மொத்தத்தில், 100க்கு, தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.
இடைநிலை ஆசிரியரை பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15 மதிப்பெண், ஆசிரியர் பட்டய தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு மட்டுமே, 15 மதிப்பெண் முழுமையாக கிடைக்கும். அதேபோல், ஆசிரியர் பட்டய தேர்வில், 70 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருந்தால் தான், 25 மதிப்பெண், முழுமையாக கிடைக்கும். இல்லையெனில், இந்த மதிப்பெண் குறையும்.
கடும் போட்டி : அதேபோல், பட்டதாரி ஆசிரியரை பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 10 மதிப்பெண், பட்ட படிப்பிற்கு, 15 மதிப்பெண் மற்றும் பி.எட்., படிப்பிற்கு, 15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த, 40 மதிப்பெண்களையும், முழுமையாக பெற வேண்டும் எனில், முறையே, 90 சதவீதம், 70 சதவீதம் (பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்துடன், டி.இ.டி., தேர்வில், 90 சதவீத மதிப்பெண் (150க்கு, 135 மதிப்பெண்) பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே, வேலை உறுதி. மற்றவர்கள், கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.
கடந்த
தேர்வுகளில், காலி பணியிடங்களை விட, தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை குறைவாக
இருந்ததால், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடாமல், தேர்ச்சி பெற்ற
அனைவருக்கும் வேலை கிடைத்தது. ஆனால், தற்போது, காலியிடங்கள் எண்ணிக்கை
குறைவாகவும், தேர்ச்சி பெற்றிருப்பவர் எண்ணிக்கை, அதிகமாகவும் இருப்பதால்,
இந்த போட்டி ஏற்பட்டுள்ளது.
லேபிள்கள்:
TET
இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆதிதிராவிடர் கிருத்துவ
பெற்றோர்களுக்கு மகனாக/மகளாக பிறந்த, அதாவது பிறப்பால்
கிறுத்துவராக இருப்பினும் பின்னாளில் இந்து/சீக்கியம்/புத்த மதங்களுக்கு மாறும்
நிலையிலும் மற்றும் பிறப்பால்
CLICK HERE the GO- இந்து/சீக்கிய/புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்பின் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம்
லேபிள்கள்:
G.O
பி.ஏ.,ஆங்கில தொடர்பியலும், பி.ஏ., ஆங்கிலமும் ஒன்றா : ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் விசாரணை
பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானதா? என முடிவு
செய்ய, மதுரை ஐகோர்ட் கிளையில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணையை
துவக்கியது.
கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் நாடார் தங்க சுபா லட்சுமண் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில், பி.ஏ., (ஆங்கில தொடர்பியல்) 2011 ல் தேர்ச்சி பெற்றேன். இது பி.ஏ., ஆங்கிலத்திற்கு இணையானது என பல்கலை தரப்பில் உறுதியளிக்கப் பட்டது. பி.எட்.,தேர்ச்சியடைந்தேன். 2012 அக்.,14 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தேன்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைத்தனர். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், "பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ., ஆங்கில பாடத்திற்கு இணையானது அல்ல,' என நிராகரித்தார். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து உத்தரவு:
கீதா என்பவர் எம்.எஸ்.சி.,(கணித பொருளாதாரம்) படித்திருந்தார். அதை எம்.ஏ.,(பொருளாதாரம்) பட்டத்திற்கு இணையாக கருதி, ஆசிரியர் பணி (2011-12) வழங்க உத்தரவிட வேண்டும் என, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அரசுத்தரப்பில்,"எம்.எஸ்.சி.,(கணித பொருளாதாரம்) எம்.ஏ., (பொருளாதாரம்) பட்டத்திற்கு இணையானது அல்ல என 1974 ல் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆய்வு செய்த வல்லுநர் குழு," "எம்.எஸ்.சி., (கணித பொருளாதாரம்) எம்.ஏ.,(பொருளாதாரம்) பட்டத்திற்கு இணையானது' என 2013 ஏப்.,30 ல் தெரிவித்தது.
பெஞ்ச்,"மனுதாரர் 2011-12க்கு ஆசிரியர் பணி கோர முடியாது. எதிர்காலத்தில் பணி வாய்ப்பு கோரலாம்,' என உத்தரவிட்டது. இரு பட்டங்களும் இணையானது எனில், பட்டம் வாங்கிய தேதியிலிருந்து, அவை செல்லுபடியாகும். எனவே, பெஞ்ச் உத்தரவிலிருந்து மாறுபடுகிறேன்.
பி.ஏ.,ஆங்கில தொடர்பியல், பி.ஏ.,ஆங்கில பாடத்திற்கு இணையானதா? என ஆய்வு செய்ய, தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குழு அமைக்க வேண்டும். அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை கூடுதல் நீதிபதிகள் விசாரிக்க, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன் என்றார்.
இம்மனு மற்றும் வேறு சில பாடப்பிரிவுகள் தொடர்பான மனுக்கள்நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எம்.வேணுகோபால், டி.ராஜா கொண்ட பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்களின் வக்கீல்கள் சண்முகராஜாசேதுபதி, கார்த்திகேய வெங்கடாஜலபதி, எஸ்.மனோகர் ஆஜராகினர். விசாரணையை நீதிபதிகள், இன்று (நவ.,27) ஒத்திவைத்தனர்.
லேபிள்கள்:
Court
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு
வழங்கும் அரசாணையின் பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுப்
பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக அரசாணை எண் 181-ஐ 2011-இல் மாநில அரசு பிறப்பித்தது. அந்த அரசாணையில், தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர்.
எனினும், உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள், தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆகியவை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, ஆசிரியர் தேர்வு வாரியம்தான் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதிச் சான்றிதழை வழங்குகிறது. பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்க முடியாது என்பதால், ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி மதிப்பெண்ணை தளர்த்தியிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த தேர்வில் மதிப்பெண்ணை தளர்த்தவில்லை. இதன் காரணமாக, தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆசிரியர் பணியிடங்களில் 47 சதவீதம் பின்னடைவுப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. ஓராண்டுக்கும் மேலாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.
அரசாணையில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் தளர்வுக்கான வாய்ப்பு குறித்த சரியான புரிதல் இல்லாததாலேயே இந்த காலியிடங்கள் உருவாகியுள்ளன.
சி.பி.எஸ்.இ. அமைப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி மதிப்பெண் சான்றிதழை வழங்குகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலய பள்ளிகள், தில்லி அரசு பள்ளிகள் ஆகியவை இந்த் தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்துகின்றன.
தகுதி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஐந்து சதவீத மதிப்பெண்ணை இந்த அமைப்புகள் தளர்த்தியுள்ளன. இதையடுத்து, 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண் பெற்ற தேர்வர்களுக்கும் தகுதிச் சான்றிதழை சி.பி.எஸ்.இ. வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி நிர்வாகங்களுக்குப் பதிலாக ஆசிரியர் தேர்வு வாரியமும் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்துதான் ஆசிரியர் தேர்வு மற்றும் பணி நியமனத்தைச் செய்கின்றன. ஆனால், தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்குவது குறித்து இவை பரிசீலிக்கவில்லை.
இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிலாவது மதிப்பெண் தளர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

புள்ளிவிவரங்களிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை கற்பித்தல் பணியில் பாதிப்பு
பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும் பல்வேறு புள்ளிவிவரங் களை
தருவதிலேயே கவனம் செலுத்த வேண் டிய நிலை உள்ளதால் கற்பித்தல் பணியில்
பாதிப்பு ஏற்படுகிறது.
புதிய திட்டம்
பள்ளிக்கல்வித்துறை ஒவ் வொரு பள்ளியிலும் படிக்கும் மாணவர்கள் மற்றும்
அவர் களைப் பற்றிய விவரங்களை தொகுத்து வழங்க அனைத்துப் பள்ளிகளுக்கும்
உத்தரவிட்டு உள்ளது. இந்த புள்ளி விவரங் களை தொகுத்து பட்டியல் தயாரிப்பதன்
மூலம் எந்தெந்த பள்ளியில் மாணவர்களின் நிலை எவ்வாறு உள்ளது?
அந்தப்பள்ளிக்குத் தேவை யான அடிப்படை வசதிகள், கல்வி உதவிப்பணம், இதர நிதி
உதவிகள் ஆகியவற்றைக் கண் டறிந்து தேவையான நடவடிக் கையினை எடுக்க உதவுகிறது.
இந்த புதிய திட்டத்தை பள் ளிக்கல்வித்துறை அறிமுகப் படுத்தியதன் நோக்கம்
பள்ளிக ளில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி
கல்வித்தரத்தையும் உயர்த்த வேண்டும் என்பது தான்.
இதற்காக அனைத்துப்பள் ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவிகளைப் பற்றி பல்
வேறு புள்ளி விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டு உள்ளது. மாணவ, மாணவிக
ளின் புகைப்படம், அவர்களது ரத்தப் பிரிவு, ஆதார் அடை யாள அட்டை எண்
உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்கள் கொடுக்க வேண்டியுள்ளது. மாணவ, மாணவிகளின்
புகைப்படங்களை எடுப்ப தற்கோ அல்லது ஆன்-லைன் மூலம் புள்ளி விவரங்களை
அனுப்பி வைப்பதற்கோ எந்த வித நிதி ஒதுக்கீடும் இல்லை. பல பள்ளிகளில்
மாணவர்களி டமிருந்தே இதற்காக கட்ட ணம் வசூலிக்கப்படும் நிலை உள்ளது. வேறு
சில பள்ளிகளில் ஆசிரியர்களே இச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமும்
உள்ளது. பள்ளிக் கல்வித்துறை இந்தப்பணியை முடிப்பதற்கு குறிப்பிட்ட
காலக்கெடு விதித்திருந்தாலும் பணி முழுமையாக முடிவடையாததால் கால அவகாசம்
தொடர்ந்து நீட்டித்து தரப்படுகிறது.
பாதிப்பு
பள்ளிக் கல்வித்துறை இவ்வாறான பல்வேறு புள்ளி விவரங்களை அவ்வப்போது
கேட்டு வருவதால் பள்ளித் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும்
பள்ளிக்கல்வித் துறை கேட்கும் புள்ளிவிவரங்களை தருவதிலேயே அதிக கவனம்
செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அவர்களுக்கு பெரும் சிரமம்
ஏற்படுவதுடன், கற்பித்தல் பணியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. அரசு அதிகாரிகளோ
ஆசிரியர்களிடம் இந்தப்பணியினை செய்ய முடியவில்லை என்றால் எழுதிக்கொடுத்து
விட வேண்டியதுதானே என்று கேட்ட போதிலும், அரசுப்பள்ளிகளில் உள்ள
ஆசிரியர்கள் அவ்வாறு எழுதிக் கொடுக்க முடியாமல் தவிப்புடன் இருந்து
வருகின்றனர்.
கோரிக்கை
எனவே பள்ளிக்கல்வித்துறை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும்
பள்ளியை பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து அனுப்புவதற்கு என தனியே
பணியாளர்களை நிய மிக்க வேண்டியது அவசியமா கும். இந்த புள்ளி விவரங்கள்
மூலம் பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் கல்வித்தரத் தினை மேம்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படும் போது
மாணவர்களின் தேர்ச்சி சதவீ தமும் குறையும் நிலை ஏற்படும். எனவே
இந்தப்பணிகளை
செய்வதற்கு என தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு
முடியாத பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையிலாவது இந்தப்பணிகளை மேற் கொள்ள
வேண்டியது அவசிய மாகும்.
நன்றி : தினத்தந்தி
லேபிள்கள்:
News
வரும் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம்
2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி
வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும்
மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தலைமையில் விருதுநகர் மாவட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் அனைவரும் தொடக்க நிலை வகுப்புகளிலே தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதத்திறன்களை முழுமையாக பெற்று உயர் தொடக்க வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும்.
அதற்கான முயற்சிகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான கற்றல் அடைவுத்திறன் தேர்வுகளை மாதம் ஒரு முறை நடத்தி, பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக தனிக்கவனம் செலுத்த வேண்டும். தானே கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் அடிப்படை கணிதத்திறன்களை வளர்க்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும். அதற்கான வளப்படுத்துதல் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆதார அறை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவரவர் தாய்மொழியிலேயே பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன என்றார் அவர்.
இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட கூடுதல் முதன்மைகல்வி அலுவலர் சுவாமிநாதன், உதவித்திட்ட அலுவலர் மாடசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலமுருகன் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராமலட்சுமி, மாவட்ட புள்ளியியல் அலுவலர், கணக்காளர் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SSA
அரசு பள்ளிகளில் 6,545 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நலன்
கருதி 6 ஆயிரத்து 545 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்துக் கொள்ள
கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார். தமிழக பள்ளிகளில்
சுமார் 16 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள
நிலையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பாட வாரிய நியமிக்க இன்னும் சில
மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு
இறுதி தேர்வுக்கும் இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்நிலையில், பல பள்ளிகளில்
10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர் பற்றாக்குறையாக
உள்ளதால், இருக்கிற ஆசிரியர்களை வைத்து சமாளித்து வருகின்றனர். இதனால்
மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறைக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்,
சிறுபான்மை மொழி, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், இந்திய பண்பாடு
மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகிய பாடங்கள் தவிர இதர பாடங்களில்
காலியாக உள்ள 2 ஆயிரத்து 645 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்களுக்கு
மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை
நியமித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ் மற்றும் சமூக அறிவியல் தவிர இதர பாடங்களில் உள்ள 3 ஆயிரத்து
900 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம்
தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம்
மூலம் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்படும் வரையோ அல்லது அதிகபட்சமாக 7 மாதங்கள் வரையோ இவர்கள்
தற்காலிகமாக பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்க
ஏதுவாக ரூ.20.18 கோடி ஒதுக்கீடு செய்தும் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்
சபீதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்ட வாரியாக தற்காலிக ஆசிரியர்களை
நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முதன்மை கல்வி அலுவலர்களால்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லேபிள்கள்:
School Education
பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி
பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில்
விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10
விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841

,
TET
ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்
இனிமேல் ஆரம்ப பள்ளிகளில், ஒரே ஆசிரியரே, பல பாடங்களை எடுக்க வேண்டிய
தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி ஆசிரியரை நியமிக்கும்
திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில்தான் இந்த
புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்த திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போதைய நிலையில், மாநிலத்தில் 25%
பள்ளிகளில், ஒவ்வொரு பாடத்திற்கும் தனி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் பிற
பள்ளிகளில், ஒரே ஆசிரியர் பல பாடங்களை நடத்தும் நிலைமைதான் உள்ளது.
ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம், மாநில வாரியத்தில் சேராத
அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. ஒரு ஆசிரியர் ஒரே பாடத்தில்
கவனம் செலுத்தி அதை நடத்துவதன் மூலம், அவருக்கு பணிச்சுமை குறைவதோடு,
பாடத்தையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று தொடர்புடைய வட்டாரங்கள்
தெரிவித்தன.
லேபிள்கள்:
News
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை நீக்க தடை ஐகோர்ட் கிளை உத்தரவு
ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை,
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம்
செய்ய, ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தகுதி தேர்வில்
வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2012 ஆகஸ்ட்
முதல் 3 முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தேர்வு எழுதினாலும்,
சில ஆயிரம் பேர் தான் வெற்றி பெற்றுள்ளனர். பணி நியமனம் செய்யப்பட்ட
நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற
நிபந்தனையின்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள்
நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத
ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் கடந்த 7ம் தேதி
உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, ஆசிரியர்களும், பள்ளி
நிர்வாகம் சார்பிலும் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, பள்ளி கல்வி
இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.தஞ்சாவூர் கல்யாணசுந்தரம்
மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகம் உள்பட 10 ஆசிரியர்கள், ஐகோர்ட்
கிளையில் மனு தாக்கல் செய்தனர். ஆறுமுகம் தனது மனுவில், நான் பணி நியமனம்
செய்யும் போது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறவில்லை. என்னால் தகுதி தேர்வு
எழுத முடியவில்லை. என் பணி நியமனத்தை அங்கீகரித்த மாவட்ட கல்வி அதிகாரி, 5
ஆண்டில் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நிபந்தனை விதித்தார். அந்த
கெடு முடியவில்லை. அதை கருத்தில் கொள்ளாமலும் என்னை விசாரிக்காமலும்,
முன்கூட்டி நோட்டீஸ் அளிக்காமலும் என் பணி நியமனத்தை ரத்து செய்து மாவட்ட
கல்வி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்ய
வேண்டும். தடை விதிக்க வேண்டும்Õ என கூறியிருந்தார்.
மனுக்களை விசாரித்த நீதிபதி டி.ராஜா, பள்ளி
கல்வி இயக்குனரின் உத்தரவுக்கும், அந்த உத்தரவை தொடர்ந்து மனுதாரர்களுக்கு
மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து
உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க பள்ளி கல்வி செயலாளர், இயக்குனர்,
தஞ்சாவூர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி
உத்தரவிட்டார்.
வயது வரம்பை நீக்குவது சட்டக் கல்வியை சீரழிக்கும் இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
சென்னை, நவ.20-
சட்டக்கல்வி பயில்வதற்கான வயது வரம்பை நீக்கி அகில
இந்திய பார் கவுன்சில் நிறைவேற்றி வெளி யிட்டிருக்கும் தீர்மானத்திற்கு இந்
திய மாணவர் சங்கம் கடும் எதிர் ப்பினை தெரிவித்துள்ளது.
சட்டக்கல்வி மாணவர் சேர்க் கைக்கு ஐந்தாண்டு
படிப்பிற்கு 20 வயது, இட ஒதுக்கீட்டு சேர்க்கை க்கு 22, மூன்றாண்டு
படிப்பிற்கு 30, இட ஒதுக்கீட்டு சேர்க்கைக்கு 35 என வயது வரம்பு ஏற்கனவே
தீர் மானிக்கப்பட்டு அதனை சென் னை உயர் நீதி மன்றமும், உச்ச நீதி மன்றமும்
உறுதிசெய்துள்ள நிலை யில் இந்த வயது வரம்பினை நீக்கி அகில இந்திய பார்
கவுன்சில் தீர் மானம் நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வரம்
பற்ற மாணவர் சேர்க்கை சட்டக் கல்வியின் ஆரோக்கியமான கல்விச் சூழலை மேலும்
சீரழிக்கும் என் பதை இந்திய மாணவர் சங்கம் சுட் டிக்காட்ட விரும்புகிறது.
பாடம் நடத்தப் போதுமான ஆசிரியர்கள், கணினி ஆய்வகம்,
மாதிரி நீதி மன்றம், தேவையான சட் டப் புத்தகங்களை கொண்ட நூல கம், தமிழில்
பாடப்புத்தகம் என சட்டக்கல்வியை திறம்பட பயிற்று வித்திட, முழுமையான சட்ட
அறி வோடு மாணவர்களை வளர்த் தெடுத்திட, போதுமான கட்டமை ப்பு வசதிகள்
இல்லாமல் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே சட்டக்கல்லூரிகளில்
பாடம் நடக்கிறது. ஆரோக்கிய மான கல்வி வளாகச் சூழல் இல் லாமல்
சட்டக்கல்லூரிகள் திணறிக் கொண்டிருக்கின்றன.
இந்த மோ சமான கல்விச்சூழலால் தான் சாதிச் சண்டைகளும்
வன்முறைச் சம்ப வங்களும் தொடரும் அவலங் களாக நீடிக்கின்றன.வரம்பு இல்லா
மல் யார் வேண்டுமானாலும் சட் டக்கல்லூரிகளில் சேரலாம் எனும் நிலை இருந்தால்
அது தற்போதைய மோசமான நிலையை மேலும் சீரழிக்கும். வயது வரம்புக்குட்பட்டு
மாணவர் சேர்க்கை நடைபெற்றால் தான் மாணவர்களுக்கான கல்வி நிலையமாக
சட்டக்கல்லூரிகள் இருக்கமுடியும்.
சட்டக்கல்லூரி களில் மேற்கொள்ளப்படவேண் டிய
ஆரோக்கியமான மாற்றங்கள் ஏராளம் இருந்தும் அதனைப் புறக் கணித்துவிட்டு பார்
கவுன்சில் தேர்வு எழுத வேண்டும், வயது வரம்பு நீக்கம் என தேவையில்லாத
முடிவுகளை எடுத்து மாணவர் களை குழப்பும் நடவடிக்கையை அகில இந்திய பார்
கவுன்சில் தொடர்ந்து மேற்கொண்டுவருகி றது.
இது போன்ற நடவடிக்கையை தொடர்ந்தால் மாணவர் சமூகம்
அதனை வேடிக்கை பார்க்காது என் பதை இந்திய மாணவர் சங்கம்
தெரிவித்துக்கொள்கிறது. சட்டக்கல்வி மேம்படுத்தப்பட வேண்டும்
சட்டக்கல்லூரிகளில் ஆரோக்கியமான கல்விச்சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்ப
தை கருத்தில் கொண்டு இந்த தீர் மானத்தை அகில இந்திய பார் கவுன்சில்
உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய மா ணவர் சங்கத்தின் தமிழ்நாடு
மாநி லக்குழு வலியுறுத்துகிறது.
மேலும் சட்டமாணவர் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக
அரசு உடனடி யாக தலையிட வேண்டும் என சங் கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சி
மாகாளி மாநிலச் செயலாளர் ஜோ. ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள் ளனர்.
லேபிள்கள்:
News
டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம்
கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23
முதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில்,
2012 ல், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட
சி.இ.ஓ.,அலுவலங்களில் நவ., 23 முதல் டிச.,15 வரை தேர்ச்சி சான்றிதழ்
வழங்கப் படுகிறது.அந்தந்த மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதி, வெற்றி
பெற்றவர்கள், ஏற்கனவே, பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, கல்வித்துறை அனுப்பிய அழைப்பு கடிதத்துடன் நேரில் வர வேண்டும்.
தேர்வர்கள் தவிர, பிறரிடம் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்றும், தபாலிலோ, கொரியர் மூலமோ சான்றுகளை அனுப்பஇயலாது எனவும்,சி.இ.ஓ.,க்கள் தெரிவித்தனர்.
லேபிள்கள்:
TET
பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆன அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு
முன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கான எழுத்து
தேர்வு வரும் டிச. 1ல் நடைபெற உள்ளது.
இதில் கூடுதல்,
குறைவான வயது, அரசு பணியாளர்களாக 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட
காரணங்களை சுட்டிக்காட்டி மொத்தம் 1,0 55 விண்ணப்பங்கள் தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளன. இதனால் இவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பணியில் சேர்ந்த தும் பிறதுறை மற்றும் உயர் பதவிகளுக்காக தொடர்ந்து
தேர்வு எழுதும் நிலை தற்போது வழக்கத்தில் உள்ளது. இதனால் வேலை
கிடைக்காதவர்களின் வாய்ப்பையும் இவர்கள் தட்டிப் பறிக்கும் நிலை இருந்து
வந்தது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விதிமுறை
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியில் சேர்ந்தாலும் 5
ஆண்டுகளுக்குள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதிக்கொள்ளும் நிலைக்கு இவர்கள்
தள்ளப்பட்டுள்ளனர்.
லேபிள்கள்:
TNPSC
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்ற அரசின்
உத்தரவுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு
அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று
இருக்க வேண்டும் என்ற விதியை அரசு கொண்டு வந்துள்ளது. அதே வேளையில் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகத்தால் பணி அமர்த்தப்படும்
ஆசிரியர்கள் 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும் என்ற மாவட்ட கல்வி அதிகாரிகளின் நிபந்தனை
அடிப்படையில் பணியில் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, ஆசிரியர் தகுதி
தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்கள் 15.11.2011-ம் ஆண்டுக்கு பின்னர்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரத்து செய்ய வேண்டும்
அதுபோன்று நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது
என்றும், அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்கக்கூடாது என்றும்
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் 7.11.2013 அன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த உத்தரவுக்கு தடை
விதிக்க வேண்டும் என்றும் தேனியை சேர்ந்த சுப்பிரமணியசிவா மற்றும் சிவகங்கை
இளையான்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஹமீதியா பள்ளி தாளாளர்
ஹமீதுதாவூத் உள்பட பலர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஐசக்மோகன்லால், லஜபதிராய், சேவியர்ரஜினி,
திருமுருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது
இதே போன்று மதுரையை சேர்ந்த புவனேசுவரி, உமா, ராம்சங்கர், பிரேமலதா,
நாகராஜன், முருகன், சதீஷ்குமார், தஞ்சாவூர் ரவிச்சந்திரன் ஆகியோரும் மனு
தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராகவாச்சாரி,
வக்கீல் என்.சதீஷ்பாபு ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு மீது
எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். பின்னர்,
வழக்கின் விசாரணையை 22-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம்
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
லேபிள்கள்:
Court
தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டம்
தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ''இந்த
விவகாரம் குறித்து, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்,'' என, பள்ளி
கல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.
தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அடுத்தபடியாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், அதிகளவில் இயங்கி வருகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன் வரை, 250 பள்ளிகள் வரை தான் இருந்தன. தற்போது, 300ஐ தாண்டி விட்டன. இரு ஆண்டுகளில், 100 பள்ளிகளுக்கு, தடையில்லா சான்றிதழ்களை, பள்ளி கல்வித் துறை வழங்கி உள்ளது.
தமிழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் தான், சி.பி.எஸ்.இ.,
பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், தமிழக அரசின் எந்த விதிமுறைகளுக்கும்
கட்டுப்படாமல், தனி ராஜ்ஜியமாக, இந்த பள்ளிகள் இயங்கி வருகின்றன.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை, கட்டண நிர்ணய குழு
நிர்ணயிக்கிறது. எனினும், அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், இந்த
வரம்பிற்குள் வருவதில்லை.
மாணவர் சேர்க்கையிலும், எவ்வித வரன்முறையும்
இல்லாமல், தாங்கள் நினைத்தபடி, எவ்வளவு மாணவர்களை வேண்டுமானாலும்
சேர்க்கின்றனர். சமீபத்தில், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில
அரசுகளிடம், தடையில்லா சான்றிதழ் வாங்கத் தேவையில்லை' என, சி.பி.எஸ்.இ.,
போர்டு அறிவித்தது, சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துவோரிடையே, மேலும், குஷியை
ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுக்குள் கொண்டுவர, கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா கூறியதாவது:'மாநில அரசின் விதிமுறைகள், சட்ட திட்டங்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்' என, சி.பி.எஸ்.இ., சட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்களில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, ஒழுங்குபடுத்தும் வகையில், தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க, திட்டமிட்டுள்ளது.இந்த கருத்தை, முதல்வரின் கவனத்திற்கு, கொண்டு செல்ல உள்ளோம். அப்போது, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்.இவ்வாறு, சபிதா தெரிவித்தார்.
அரசின் முடிவு குறித்து, செயின்ட் ஜான்ஸ் குழும பள்ளிகளின், முதுநிலை முதல்வர், கிஷோர்குமார் கூறுகையில், ''தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதைத்தான், தமிழக அரசும் கூறுகிறது. எனவே, தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதில், எங்களுக்கு, எந்த பிரச்னையும் இருக்கப் போவதில்லை,'' என, தெரிவித்தார்.
கல்வியாளர், ராஜகோபாலன் கூறியதாவது: கர்நாடகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளும், மாநில அரசின் கட்டுப்பாட்டில், பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. பேராசிரியர் யஷ்பால் குழு, 'சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பாட திட்டங்களை மட்டும், சி.பி.எஸ்.இ., போர்டு வழங்கினால் போதும்; இதரபணிகளை, அந்தந்த மாநில அரசுகளே கவனிக்கலாம்' என, தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நியமிக்கப்பட்ட மத்திய குழுவும், 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படலாம்' என, தெரிவித்துள்ளது. எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வருவதில், தவறு ஒன்றும் இல்லை.இவ்வாறு, ராஜகோபாலன் தெரிவித்தார்.
நடப்பு கல்வி ஆண்டு இறுதிக்குள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்றும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Labels:
news
டிட்டோஜாக்–ன் 7 அம்சக் கோரிக்கைகள்:
1. ஆறாவது ஊதிய குழுவில் நடுவனரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள
ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் தமிழக
அரசும் வழங்கிட வேண்டும்.
2. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை முற்றிலும் இரத்து செய்திட வேண்டும்.
3. ஆறாவது ஊதியக் குழுவில் தேர்வுநிலை,சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும், தர ஊதியமும்,நிர்ணயம் செய்திட வேண்டும்.
4. (அ) FR 22 ன்படி பதவி உயர்வுக்கு 6% வழங்கிட வேண்டும (ஆ) FR 4(3) விதியை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
5. ஆசிரியர் தகுதித்தேர்வை (TET) உடனடியாக இரத்து செய்து வேலைவாய்ப்ப முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை அமல்படுத்திட வேண்டும்.
6. இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தொடக்க கல்வியில் தமிழ்வழி கல்வி முறை தொடர்ந்திட வேண்டும்.
7 .அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பதவி உயர்வின் மூலம் நிரப்பிட வேண்டும்.

டிட்டோஜேக் - ஏழு சங்கங்களுக்கும் மாவட்டங்கள் ஒதுக்கீடு
டிட்டோஜேக் கூட்ட முடிவின் படி போராட்ட ஆயத்த
கூட்டங்கள் நடத்தவும்,தொடர்பணிக்காகவும் டிட்டோஜாக் மாவட்டதொடர்பாளர்
நியமிக்கவும் ஏதுவாக சமபங்கீடாக 7 சங்கங்களும் இணைந்து தங்களுக்குண்டான
மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து செயலாற்றுவதென
முடிவாற்றப்பட்டது. ஒதுக்கீடு பெற்ற மாவட்டத்தின் சங்கத்தை
சார்ந்த மாவட்டசெயலாளர் அந்தந்த மாவட்ட டிட்டோஜாக் தொடர்பாளராக(
CO-ORDINATOR) செயல் படுவார்கள்.
மாவட்டப்பங்கீடு விவரம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தேனி,காஞ்சிபுரம்,விருதுநகர்,தூத்துகுடி, கன்யாகுமரி ஆகிய 5 மாவட்டங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சிவகங்கை,தர்மபுரி, இராமநாதபுரம்,பெரம்பலூர்,திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்கள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாகை,திருவாரூர்,கிருஷ்ணகிரி,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள்
தமிழக ஆசிரியர் கூட்டணி
அரியலூர்,திண்டுக்கல்,சேலம்,நீலகிரி,கோவை ஆகிய 5 மாவட்டங்கள்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தஞ்சாவூர்,திருச்சி,புதுக்கோட்டை,கரூர் ஆகிய 4 மாவட்டங்கள்
தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்
திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்
'குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ்
வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான
முன்னுரிமை அடிப்படையில், உரிமை கோரலாம்,'' என, பள்ளி கல்வித் துறை செயலர்,
சபிதா தெரிவித்தார்.
முன்னுரிமை அளிக்க: முந்தைய
தி.மு.க., ஆட்சியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலை
வாய்ப்புகளில், 20 சதவீதம் ஒதுக்கீடு செய்து, உத்தரவிடப்பட்டது. எனினும்,
பெரும்பாலான அரசு பணிகளுக்கான கல்வி தகுதியை, தமிழ் வழியில், படிக்க
முடியாத நிலைமை தான் உள்ளது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பணிக்கு விண்ணப்பிப்பவர்களில், பலர், தாங்கள் தமிழ் வழியில் படித்ததாக
கூறி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என,
வலியுறுத்துகின்றனர். மேலும், தமிழ் வழி கல்வித்தகுதி குறித்து, பெரும்
குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக, விண்ணப்பத்தாரர்கள் பலர், ஆசிரியர்
தேர்வு வாரியத்திடம் (டி.ஆர்.பி.,) வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
தமிழ் வழியிலான கல்வித்தகுதி எனில், '10ம் வகுப்பில் துவங்கி, பணிக்கு உரிய
கல்வித்தகுதி வரை, அனைத்திலும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்' என,
முதலில், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், 'குறிப்பிட்ட
பணிக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால்
போதும்' என, பின்னர் தெரிவித்தனர். எனினும், இந்த விவகாரத்தில், தற்போது
வரை, குழப்பம் நிலவி வருகிறது.
தேவையில்லாத குழப்பம்:
இது
குறித்து, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா கூறியதாவது: தமிழ் வழியில்
படித்தவர்கள், 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு வேலை பெறுவதற்கான வழி
முறைகளில், தமிழக அரசு, தெளிவான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனாலும்,
தேவையில்லாமல், இதில், பலரும் குழம்பி வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணி
எனில், இளங்கலை பட்டப் படிப்பையும், பி.எட்., படிப்பையும், தமிழ் வழியில்
படித்திருந்தால் போதும். 10ம் வகுப்பையும், பிளஸ் 2 படிப்பையும், ஆங்கில
வழியில் படித்திருந்தாலும், கவலையில்லை. அதேபோல், முதுகலை ஆசிரியர் பணி
எனில், குறிப்பிட்ட பாடத்தில், முதுகலை பட்டப் படிப்பையும், பி.எட்.,
படிப்பையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்; அவ்வளவு தான்.
மீடியம் தான் கணக்கு:
பிளஸ்
2 கல்வித்தகுதி உடைய அரசு பணி எனில், பிளஸ் 2 படிப்பை, தமிழ் வழியில்
படித்திருந்தாலே போதும். கல்லூரிகளில், ஆங்கில வழியில் சேர்ந்து படிக்கும்
மாணவர், தேர்வை, தமிழ் வழியில் எழுதுகின்றனர். இதை வைத்து, 'தமிழ் வழியில்
படித்திருக்கிறேன்' என, கூறுகின்றனர். எந்த, 'மீடியத்தில்'
சேர்ந்திருக்கின்றனரோ, அது தான், கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு, அவர்
தெரிவித்தார்.
சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் ஆசிரியர்
பணியினை அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும், பணியிட மாற்றத்துக்கு ஒற்றைச் சாளர முறையைப் பின்பற்றும்போது
மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு
உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையாளர் வி.கே.ஜெயக்கொடி பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:
தமிழகத்தில் உள்ள 34-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுகளில் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளி ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஊழியர்களுக்கு முடிந்தவரை அவர்களது சொந்த ஊர்களிலேயே பணியிடம் வழங்க வேண்டும் என பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசுப் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று மாற்றுத் திறனாளிகளுக்குப் பொது பணியிட மாறுதல் வழங்கும் போதும், பதவி உயர்வு அளிக்கும் போதும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏனைய மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமையில், சொந்த மாவட்டங்களில் பணியிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒற்றைச் சாளர முறை கடைபிடிக்கும் போதும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென அரசுத் துறைகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் வி.கே.ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த உத்தரவால் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலைக்காக தங்களது உடல் அசெளüகரியங்களை சிரமத்துடன் பொறுத்துக் கொண்டு பணியாற்றவேண்டிய அவலநிலையை அரசின் இந்தச் சலுகையால் போக்கமுடியும் என நிம்மதியுடன் அவர்கள் தெரிவித்தனர்.

EMIS New Offline Software with Printing Tool & Tutorial
ஸ்மார்ட் கார்ட் திட்டத்துக்காக பள்ளி மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் EMIS Offline Software New Version எளிதாக பிரிண்ட் எடுக்கும் வசதியுடன் தரப்பட்டு உள்ளது. மேலும் எவ்வாறு பிரிண்ட் எடுப்பது என விளக்கமும் தரப்பட்டு உள்ளது.

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 16,600 பேருக்கு விரைவில் பணி நியமனம்
தமிழகத்தில், இதுவரை நடத்தப்பட்ட 3 ஆசிரியர் தகுதி தேர்விலும் குறைந்த
அளவிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம்
3ம் முறையாக நடத்தப்பட்ட தகுதி தேர்வில் முதல் தாளில் 12 ஆயிரத்து 596
பேரும், 2ம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், 11 ஆயிரத்து 922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2 ஆயிரத்து 881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஆயிரத்து 821 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது. மொத்தம் 16 ஆயிரத்து 624 ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கல்விச் சான்று மற்றும் பிற தகுதிகள் உள்ளிட்டவைகளை சரிபார்த்து தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் பணி வழங்கப்படும் என தெரிகிறது.
நவம்பர் 19ஆம் தேதி தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைபிடிக்க உத்தரவு
தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி:
நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்கவும் வலுப்படுத்தவும் என்னை
அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று
நான் ஒருபோதும் வன்முறையில்
ஈடுபடமாட்டேன் என்றும், மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது
பொருளாதார பேதங்களுக்கு அமைதியான முறையிலும் அரசியல் சட்டத்திற்குட்பட்டும் தீர்வு
காணத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன்.
லேபிள்கள்:
Announcement
,
News
ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சரியான விடை கொண்டு
திருத்தவில்லை அதனால் பலர் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் சரியான விடைகள்
கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து
தேர்வர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில்
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை 2
லட்சத்து 67 ஆயிரம் 950 பேர் 677 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 17
ஆயிரத்து 974 பேர் மாற்றுத்திறனாளிகள். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4
லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் 1060 மையங்களில் எழுதினார்கள்.
தேர்வு எழுதியபோது வீடியோ எடுக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு கடந்த 5–ந்தேதி வெளியிடப்பட்டது. ஆனால்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வினா–விடைக்கும் தேர்வு எழுதியவர்கள் கருதும்
விடைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
இதனால் தேர்வர்களுக்கு 10 மதிப்பெண் கிடைக்கவில்லை. 3 மதிப்பெண்
கிடைக்கவில்லை. 5 மதிப்பெண் கிடைக்கவில்லை என்று பல்வேறு தேர்வர்கள்
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தினமும் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
தினமும் போராட்டம்
தினமும் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு
முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாள் வருபவர்களும் வேறு
வேறு ஆகும். அதுபோல நேற்றும் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்
செய்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் மதுரையைச்சேர்ந்த ஒருவர் கூறியதாவது:–
ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்விற்கு உரிய விடைகளை
இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் பல கேள்விகளுக்கு அரசு பாடப்புத்தகத்தில்
உள்ள விடைகள்படி தான் எழுதி உள்ளோம். ஆனால் அந்த விடைகள் சரி இல்லை என்று
ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. அரசு பாடப்புத்தகத்தில் உள்ள விடைகளை
ஆசிரியர் தேர்வுவாரியம் ஏற்காதது மர்மமாக உள்ளது.
எங்கள் கோரிக்கைகளை யாரும் கேட்பாறில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு
சென்று மனு கொடுத்தால் அங்கு உள்ள அலுவலக உதவியாளர் தான் வாங்குகிறார்கள்.
அதிகாரிகள் யாரும் எங்களை பார்த்து பேசவும் இல்லை. ஆசிரியர் தேர்வு வாரிய
தலைவரையோ அல்லது உறுப்பினரையோ பார்க்கமுடிவதில்லை. அதுவும் அலுவலக
உதவியாளர்கள் இங்கு ஏன் வருகிறீர்கள் என்று கேட்டு வேண்டா வெறுப்பாக
நாங்கள் கொடுக்கும் மனுக்களை வாங்குகிறார்கள். எனவே இனிமேல் நீதிமன்றத்தை
அணுகுவதை தவிர வேறு வழி இல்லை.
முதல்–அமைச்சர் தீர்வு காணவேண்டும்
இந்த பிரச்சினையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சில தேர்வர்கள் ‘ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான விடையை கொண்டு
மதிப்பீடு செய்திருந்தால் நான் தேர்ச்சி பெற்றிருப்பேன்’ என்று அழுதுகொண்டே
தெரிவித்தனர்.
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான
ஊதியம் வழங்க கோரி அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்
இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.
எஸ்.அருளப்பன் உள்பட 129 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நாங்கள் பணிபுரிகிறோம். உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10 முதல் 20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர்களுக்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடிய ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயம் கடந்த 1988-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி உறுதி செய்தது. இதன்படி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமும், அனைத்து பலன்களையும் எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணை நடந்தது. அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி இடைநிலை ஆசிரியர்கள் கோரும் ஊதியம் வழங்க முடியாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் அனைவரும் பள்ளி கல்வி இயக்ககத்தின் உயர்கல்வி விதிகளின் கீழ் வருகின்றனர். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் வருகின்றனர்.
மனுதாரர்களை தொடக்கக் கல்வி இயக்ககத்தின் விதிகளுடன் ஒப்பிட முடியாது. உயர்நீதிமன்ற அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவுகள் வேறுபட்டவை. அவை மனுதாரர்களுக்குப் பொருந்தாது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் வழக்குகள் அதிகரிப்பு: கலக்கத்தில் அலுவலர்கள்
பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக, தினமும் வழக்குகள் நீதிமன்றத்தில்
அதிகரித்து வருகின்றன. மாநிலம் முழுவதும் 6,500 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. போதிய வழிகாட்டுதல், நிதியின்மையால் கல்வி அலுவலர்கள்,
சிக்கலில் தவிக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறைக்கு எதிராக,
துறை சார்ந்தவர்கள், துறை சாராதவர்கள் மற்றும் பொதுநல என்ற பிரிவுகளின்
வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், இடமாறுதல், ஊதிய
முரண்பாடு, ஓய்வூதியம், பணிநியமன முறைகேடு, முறையற்ற அரசாணை போன்ற
காரணங்களுக்காக பலர், நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
மாநிலம் முழுவதும்,
6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளை
கையாள்வதற்கு, போதிய நிதியின்மையால் பள்ளிகள் வளர்ச்சி, பராமரிப்பு,
விளையாட்டு போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை பயன்படுத்தும் அவலநிலை, பல
மாவட்டங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக
அலுவலர்கள் சங்க மாநில தலைவர் பால்ராஜ்
கூறுகையில்,""பள்ளிக்கல்வித்துறையில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால்,
நாளுக்குநாள் நீதிமன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நீதிமன்ற
செலவுக்காக, பள்ளிக்கல்வித்துறை எவ்வித நிதியும் ஒதுக்குவது கிடையாது.
நீதிமன்றங்கள் சார்ந்த போதிய அடிப்படை தெரியாத நிர்வாக ஊழியர்கள் பெரும்
அலைக்கழிப்பு, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒழுங்கான வழிகாட்டுதல் இன்றி
திணறிவருகின்றோம்,'' என்றார். கல்வித்துறை தலைமை அதிகாரி ஒருவர்
கூறுகையில்,"பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியில், நீதிமன்ற வழக்குகள்
என்பது பெரும் தலைவலியாக உள்ளது. நீதிமன்ற வழக்குகளை, கல்வித்துறை
அலுவலர்களை கொண்டு கையாள்கின்றோம். ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அளவில்,
வழக்குகளை எதிர்கொள்ள அலுவலர்களை நியமிக்கவேண்டும். போதிய தெளிவில்லாத
அரசாணைகளால் தான் வழக்குகள் அதிகரிக்கிறது' என்றார்.
லேபிள்கள்:
News
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு
நவ. 16-அரசு உதவி பெறும் பள்ளிகளில்
நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப் பெண் பெற
வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க
பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் கிளை உத்தர விட்டுள்ளது.
நெல்லை பாளையங் கோட்டை மிலிட்டரி லைன்
சி.எம்.எஸ்.மான் கோமரி தொடக்கப் பள்ளி தாளாளர் கிப்சன் உயர்நீதிமன்ற
கிளையில் தாக்கல் செய்த மனு:
சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளி நெல்லை சிஎஸ்அஸ். டயோசி சன் கீழ் இயங்கி வருகிறது.
கடந்த தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்
வெளியிட்ட அறிவிக்கை அடிப் படையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர்
தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்ய
வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுத்து விட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து தரப்பினரும் 60 சதவீத மதிப் பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
தகுதித் தேர்வு தொடர்பாக தேசிய ஆசிரியர்
கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் அரசு உதவி பெறும் தனியார்
பள்ளிகளில், சிறுபான்மை பள்ளிகள், தங்களது பள்ளிகளில் ஆசிரியர் பணியி
டங்கள் காலியாகும் போது, அந்த பணியிடத்திற்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள்
குறைந்தபட்சம் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை அந்தந்த
பள்ளி நிர்வாகிகளே முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகள்,
சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில்
கண்டிப்பாக 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அரசு நிர்பந்தம்
செய்யக் கூடாது. தகுதித் தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக மதிப் பெண்
பெற்றவர்களை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், சிறு பான்மை பள்ளிகளில்
ஆசிரியராக நியமிக்க உரிய அனுமதி வழங்க பள்ளி கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர், பள்ளி கல்வித்துறை முதன்மை
செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க தாக்கீது அனுப்ப
நீதிபதி உத்தரவிட்டார்.
தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி
தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி
பயிற்சி ஆரம்பமாகிறது. இதுகுறித்து அரசு உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து பணியிடை
பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில்
டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல்
என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநில மற்றும் மாவட்ட
அளவிலான கருத்தாளர் பயிற்சி சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிணறது. இதில்
ஒரு மாவட்டத்திற்கு 2 ஆசிரிய பயிற்றுனர்களும், 2 மாவட்ட ஆசிரியர் பயிற்சி
நிறுவன 2 விரிவுரையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
லேபிள்கள்:
Training
விடுமுறை உத்தரவை மதிங்க! பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
"இயற்கை இடர்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விடும் உள்ளூர் விடுமுறையில்,
பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என கல்வித்துறை எச்சரித்து
உள்ளது.
வடகிழக்கு பருவமழை அதிகமாக
பெய்யும் நாட்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளித்து,
கலெக்டர் உத்தரவிடும் போது, கல்வி நிறுவனங்கள், கண்டிப்பாக, அவற்றை
பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கல்வித் துறையின் உத்தரவில், "மழைக்காலங்களில் பள்ளி கட்டடங்களின் உறுதி
தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால், முதன்மைக் கல்வி
அலுவலருக்கு தகவல் தர வேண்டும். இயற்கை இடர்பாடுகளுக்காக, மாவட்ட நிர்வாகம்
அறிவிக்கும், உள்ளூர் விடுமுறை தினத்தில், பள்ளிகளை திறக்கக் கூடாது.
மழைக்காலங்களில், மாணவர்கள், பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்வதை உறுதி
செய்யவேண்டும்" என கூறப்பட்டு உள்ளது.
லேபிள்கள்:
News
ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதி தேர்வில்
60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய
மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டுள்ளது.
தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுத்துவிட்டது.ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து தரப்பினரும் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி பெற முடியும் என்ற நிலை உள்ளது.தகுதி தேர்வு தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், சிறுபான்மை பள்ளிகள், தங்களது பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் போது, அந்த பணியிடத்திற்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகிகளே முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,
தகுதி தேர்வில் கண்டிப்பாக 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அரசு நிர்பந்தம் செய்யக்கூடாது. தகுதி தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க உரிய அனுமதி வழங்க பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, :தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலா ளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு
தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட
ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டு கால அவகாசம்
அளிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நாடு முழுவதும் கடந்த
23.8.2010 முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அரசு பள்ளியிலோ, அரசு
உதவி பெறும் பள்ளியிலோ, தனியார் சுயநிதி பள்ளியிலோ ஒன்றாம் வகுப்புமுதல்
8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில்
சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட தேர்வு அமைப்புகளிடம் வழங்கப்பட் டுள்ளன.
மத்திய பள்ளிகளுக்கான தகுதித் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது.
தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்
திடம் (டி.ஆர்.பி.) ஒப்படைக்கப்பட் டுள்ளது. இதுவரை 3 தகுதித் தேர்வுகள்
நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடந்துமுடிந்த 3-வது தகுதித்தேர்வில்
27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றார்கள்.
உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் அரசுப் பள்ளிகளிலும் சரி, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சரி.. ஏற்கனவே பணி
நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்துமா, பொருந்தாதா என்ற
குழப்பம் இன்றுவரை தொடர்கிறது.
இதற்கிடையே, தகுதித்தேர்வு அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்பு
நியமிக்கப்பட்ட ஆசிரியர் களும், பணி நியமனத்துக்கான பணிகள் (அறிவிப்பு
வெளியிடுதல், சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை) தொடங்கப்பட்டிருந்தாலும்
அத்தகைய ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று
அறிவிக்கப்பட்டது.
டிஸ்மிஸ்
தகுதித்தேர்வு விதிமுறை அமலுக்கு வந்த போதிலும் தமிழகம் முழுவதும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லா மலேயே இடைநிலை
ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் நிய மிக்கப்பட்டு வந்தனர்.
அவர்களின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அரசு சம்பளமும்
வழங்கியது.
யார் யாருக்கு தகுதித்தேர்வு உண்டு, யார் யாருக்கு விதி விலக்கு என்பது
சரிவர முடிவுசெய் யப்படாததால் அவ்வப்போது பல மாவட்டங்களில் இந்த ஆசிரியர்
களுக்கு சம்பளம் வழங்குவது நிறுத்தப்படுவதும், பின்னர் மீண்டும்
வழங்கப்படுவதும் என்ற நிலை தொடர்ந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 499 ஆசிரியர் களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக்
கல்வித்துறை உத்தரவு பிறப்பித் துள்ளது. இவர்கள் அனைவரும் உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி களில் இடைநிலை ஆசிரியராக, பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி
வருபவர்கள்.
5 ஆண்டு கால அவகாசம்
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அதிகாரிகளுக் கும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள
உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி களில்,
கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல்
நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உட னடியாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இருப்பினும், 23.8.2010 முதல் 14.11.2011 வரையிலான காலத்தில் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரி யர்கள் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில் 15.11.2011-க்குப் பிறகு தகுதித்தேர்வு தேர்ச்சி
இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். உயர்
நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக்
கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
தொடக்கக் கல்வி இயக்ககம்
பள்ளிக் கல்வித் துறையைப் போல, தொடக்கக்கல்வி இயக்க கத்தின் கீழ் இயங்கும்
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் (ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள்)
மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்டிருக்கலாம்.
அவர்கள் மீதும் தொடக்கக்கல்வி இயக்ககம் தனியே நடவடிக்கை மேற்கொள்ளும் என
கூறப்படுகிறது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 சதவீத மாணவர்களுக்கு வாசிப்பு திறன் இல்லை: "ஆல்-பாஸ்' திட்டத்தால் அவதி
மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் "ஆல்-பாஸ்' திட்டத்தால், 40 சதவீத
மாணவர்கள் அடிப்படை வாசிப்பு திறன் கூட இன்றி, வகுப்புகளுக்கு வருவதாக
உயர்நிலை ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
"அனைவருக்கும்
கல்வி இயக்கம்' திட்டத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள்
அனைவருக்கும், இடைநிற்றல் தடுப்பதற்காக, கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு
வருகிறது. இதனால், மாணவர்களின் அடிப்படை கல்வித்திறன் முற்றிலும்
பாதிக்கப்படுவதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாநில
கல்வித்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு அதிக
முக்கியத்துவம் தரப்படுகிறது. மதிப்பெண், தேர்வு என்ற நோக்கத்தில் கற்றல்,
கற்பித்தல் செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், எவ்வித பயமும்
இன்றி, ஒன்று முதல் ஒன்பது வகுப்புகளை மிக எளிதாக கடந்து வரும் மாணவர்கள்,
10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மிகுந்த சிரமம் கொள்கின்றனர்.
பொதுத்தேர்வுக்கு தயாராகும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வெறும் ஆறு
மாதங்களே கற்பித்தல் பணி நடக்கிறது. மீதம் உள்ள நாட்களில் மாதிரி
தேர்வுகள், சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு, மாணவர்களை தேர்வுக்கு தயார்
படுத்துகின்றனர். ஒன்பதாம் வகுப்பு முடித்து, எவ்வித அடிப்படை
கல்வித்திறனும் இன்றி 10ம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு இணைப்பு
பயிற்சி என்ற பெயரில் எழுதுவது, வாசிப்பது எப்படி என்று உயர்நிலை
ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கவேண்டிய அவலநிலை உள்ளது.
கோவை கல்வி
மாவட்டத்தில், கடந்த மாதம் தொடக்கக் கல்வியில் 40 ஆயிரத்தும் மேற்பட்ட
மாணவர்களுக்கு வாசிப்பு திறன் சார்ந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில்,
சராசரி மாணவர்கள், பின்தங்கியுள்ள மாணவர்களை கண்டறிந்து, "புத்தக
பூங்கொத்து' என்ற திட்டத்தில் நாளிதழ் வாசிப்பு, புத்தகங்கள் வாசிப்பு
போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் கூறுகையில்,""அனைவருக்கும் கட்டாய
தேர்ச்சி என்பதால், மாணவர்கள் மத்தியில் அலட்சிய போக்கு ஏற்படுகிறது.
""தொடக்க வகுப்புகளில் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். ஒன்பது
ஆண்டுகள் எளிதாக தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களின், 40 சதவீதத்தினர்
அடிப்படை வாசிப்புத் திறன் கூட இல்லாமல், உயர்நிலை வகுப்புகளுக்கு
வருகின்றனர். ""அனைத்து பாடங்களிலும் அடிப்படை அறிவு இல்லாமல், மிகவும்
பின்தங்கியுள்ளனர்.
அரசு பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தெளிவான கொள்கை
முடிவுகளை மேற்கொள்வது அவசியம்,'' என்றார். அரசு பள்ளி ஆசிரியர் பகத்சிங்
கூறுகையில்,""அனைவருக்கும் கல்வி என்பது சரியானது. ஆனால், அனைவருக்கும்
தேர்ச்சி என்பது கல்வியின் தரத்தை பின்னுக்கு தள்ளிவிடும். இதுகுறித்து
அரசு ஆக்கப்பூர்வாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்,'' என்றார்.
லேபிள்கள்:
News
ஓய்வுக்குப் பின் "சி.இ.ஓ.," பதவி: 400 தலைமையாசிரியர்கள் தவிப்பு
30 ஆண்டு கால போராட்டத்தால் ஓய்வுபெற்ற பின் கிடைத்த முதன்மைக் கல்வி
அதிகாரி (சி.இ.ஓ.,) பதவிக்கு உரிய பணபலன்களை பெற முடியாமல், 75 வயதுக்கு
மேல் ஆன் 400 "தலைமையாசிரியர்கள்" தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 1960 வரை கல்வி, சுகாதாரம், கால்நடை துறைகளை அந்தந்த மாவட்ட
நிர்வாகமே (ஜில்லா போர்டு) கவனித்து வந்தது. 1960ல் அவை அந்தந்த
துறைகளுடன் இணைக்கப்பட்டன. ஆனால் தொடக்கல்வி, பஞ்சாயத்து யூனியன்களின்
நிர்வாகத்தின் கீழும், இடைநிலைக்கல்வி மாவட்ட கலெக்டர்களின்
கட்டுப்பாட்டிலும் இயங்கின.
அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உயர்நிலைப்பள்ளிகள், பயிற்சிப் பள்ளிகள்
செயல்பட்டன. இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் "ஏ" பிரிவினர்
என்றழைக்கப்பட்டனர். கலெக்டர் கட்டுப்பாட்டில் இயங்கிய பள்ளிகளில்
பணியாற்றிய ஆசிரியர்கள் "பி" பிரிவினர் எனப்பட்டனர். கடந்த 1.4.70ல்
ஜில்லாபோர்டில் பணியாற்றிய ஆசிரியர்களும் அரசு ஊழியர்களாக ஏற்கப்பட்டனர்.
"ஏ" மற்றும் "பி" பிரிவு பணியாளர்களை ஒருங்கிணைத்து 2.11.1978 ல் அரசாணை
வெளியிடப்பட்டது. இதில் எந்த தேதியை ஒருங்கிணைப்பு நாளாக முடிவு செய்வது
என 1979 ல் பிரச்னை எழுந்தது. அப்போது இரு தரப்பினரும் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தனர். 1.4.70 தான் சரியான ஒருங்கிணைப்பு நாள் என 1979, 1988, 1998ல்
சுப்ரீம்கோர்ட் 3 முறை உறுதி செய்தது.
இதன் பின் 2004ல் ஒருங்கிணைந்த ஆசிரியர்கள் சீனியாரிட்டி லிஸ்டை
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. ஆனால், 1979 முதல் 2004 வரை "ஏ" பிரிவு
ஜூனியர்கள் டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு பெற்று ஓய்வும் பெற்றனர்.
ஆனால் கலெக்டர் கட்டுப்பாட்டில் இருந்த, "பி" பிரிவு சீனியர்கள்
தலைமையாசிரியர்களாக ஓய்வு பெற்றனர்.
திருத்தப்பட்ட சீனியாரிட்டி படி பதவி உயர்வுகளை அளிக்க வேண்டும் என "பி"
பிரிவு ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2004ல் வெளியிட்ட
சீனியாரிட்டிப்படி பதவி உயர்வுகளை திருத்தியமைத்து பயன்களை வழங்க ஐகோர்ட்
உத்தரவிட்டது.
இதன்படி பள்ளிக்கல்வித்துறை, திருத்திய டி.இ.ஓ.,க்கள் பட்டியலை 2006,
2010 லும், சி.இ.ஓ.,க்கள் பட்டியலை 2012 லும் வெளியிட்டது. இதன்படி 489
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் பயன்பெற வேண்டும். இவர்களுக்கு தற்போது 75
வயதுக்கு மேல் ஆகி விட்டது. இதில் 45 பேருக்கு மட்டுமே பதவி உயர்வுக்கான
சம்பளத்தை மறுநிர்ணயம் செய்து, அதற்கேற்ப பென்ஷன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசியல் செல்வாக்கு, பணபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே பலன்
கிடைத்துள்ளது. மீதியுள்ளோர் தள்ளாத இந்த வயதிலும் சென்னை
பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர். ஓய்வுக்கு பின்
முதன்மை கல்வி அதிகாரி (சி.இ.ஓ.,) பதவி பெற்ற இந்த மூத்த குடிமக்கள்
விரைவில் தங்களுக்கு உரிய பலன்களை பெற பள்ளிக்கல்வித்துறை மனது வைக்க
வேண்டும்.
லேபிள்கள்:
News
1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - அடுத்த ஆண்டு வழங்கப்படும்
16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட
தகவல்களுடன் கூடிய அதிநவீன ஸ்மார்ட் கார்டு 1.34 கோடி பள்ளி மாணவர்களுக்கு
அடுத்த ஆண்டு வழங்கப்படுகிறது. வங்கி ஏ.டி.எம். அட்டையைப் போன்று இருக்கும்
இந்த கார்டில் தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
ஸ்மார்ட் கார்டு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்
சுயநிதி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஸ்மார்ட்
கார்டு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த அட்டையைப்
பயன்படுத்தி மாணவ-மாணவிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள
முடியும்.
மாணவரின் பெயர், வண்ணப் புகைப்படம், தந்தை பெயர், வீட்டு முகவரி, படிக்கும்
வகுப்பு, ரத்தப் பிரிவு, 16 இலக்க அடையாள எண், சமூகநிலை, தலைமை ஆசிரியரின்
கையெழுத்து, எல்லாவற்றுக்கும் மேலாக ரகசிய குறியீடு (பார்கோடு) போன்றவை
இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும்.
பெரும் வரப்பிரசாதம்
அதில் உள்ள ரகசிய குறியீட்டின் மூலம் சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது
மாணவியின் முழு விவரங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள்
ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் வேறு
பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு இந்த ஸ்மார்ட் கார்டு
மூலம் இனிமேல் தவிர்க்கப்படும்.
தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின்
குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும்.
இதில் உள்ள தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொண்டே வரலாம் என்பது
குறிப்பிடத்தக்கது.
1.34 கோடி மாணவர்களுக்கு பயன்
கல்வி மேலாண்மை தகவல் திட்டத்தின் (ஈ.எம்.ஐ.எஸ்.) கீழ் தமிழகம் முழுவதும்
ஒரு கோடியே 34 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு ஸ்மார்ட் கார்டு
வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுசெய்துள்ளது. இதற்காக மாணவ-மாணவிகளைப்
பற்றிய தகவல்கள் சேர்ப்பு, புகைப்படம் எடுத்தல் சம்பந்தப்பட்ட பணிகள்
கிட்டதட்ட 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன.
மாணவர்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பாத பள்ளிகளுக்கு இந்த
மாதம் 30-ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் பெற்று அனுப்புமாறு
உத்தரவிடப் பட்டுள்ளது.
லேபிள்கள்:
Announcement
,
Education
,
News
அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: டி.சபிதா
அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில்
இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்
டி.சபிதா கூறினார்.
சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் அவர் பேசியது:
தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது. மேலும் 1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவரும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ரூ. 1.40 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் 4,500 மாணவர்கள் பயனடைவர்.
குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் இப்போது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த 100 பள்ளிகளுக்காக 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 தலைமையாசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் சபிதா. கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கான விருதுகள், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, அதிக உறுப்பினர்களைச் சேர்ந்த நூலகங்களுக்கான விருதுகள் உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
அதிக உறுப்பினர்களைச் சேர்த்ததற்காக திருப்பூர் மாவட்ட மைய நூலகத்துக்கும், அதிக புரவலர்களை சேர்த்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்துக்கும் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

TRB
ஆசிரியர்- மாணவர் உறவில் கவனம் எச்சரிக்கிறார் கல்வித்துறை செயலர்
"ஆசிரியர்,
மாணவர் உறவில் பாதிப்பு ஏற்படாத வகையில் கல்வித்துறை அதிகாரிகள் செயல்பாடு
அமைய வேண்டும்,'' என, பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா அறிவுறுத்தினார்.
மதுரையில், கலெக்டர் சுப்ரமணியன், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, கள்ளர் சீரமைப்புத் துறை இணை இயக்குனர் செல்லம் ஆகியோருடன் அவர் ஆலோசித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:கல்வித்துறை செயல்பாடு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர முடியாத அளவில் அதிகாரிகளின் செயல்பாடு அமைய வேண்டும்.
கடந்தாண்டை விட, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில், மாவட்ட தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் உறவு சமூகமாக இருக்கும் வகையில்
அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விவரங்களை கண்காணிக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை குறையும்பட்சத்தில், அப்பள்ளியை மூடிவிட்டு, அதன் அருகே செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கலாம். அனைத்து பள்ளி களிலும், தலைமையாசிரியர்கள் திறமையாக செயல்படும் வகையில் கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், என்றார்.
லேபிள்கள்:
Education
இன்று (13.11.2013) விண் டி.வி தொலைக்காட்சியில் இரவு 08.00 மணிக்கு “உரிமைக்குரல்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட்ணியின் மாநிலத்தலைவர் திரு.கண்ணன் அவர்கள் “ தனியார் பங்களிப்போடு கூடிய பள்ளிகளை திறக்கும் மத்திய அரசின் திட்டம்” குறித்து பேசுகிறார்.
இன்று (13.11.2013) விண் டி.வி தொலைக்காட்சியில் இரவு 08.00 மணிக்கு
“உரிமைக்குரல்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்ட்ணியின் மாநிலத்தலைவர் திரு.கண்ணன் அவர்கள் “ தனியார் பங்களிப்போடு
கூடிய பள்ளிகளை திறக்கும் மத்திய அரசின் திட்டம்” குறித்து பேசுகிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here