மேற்பார்வையாளரின் ஆசிரியர் விரோதப் போக்கைக் கண்டித்து TNPTF உண்ணாவிரதம்

தொடர்ந்து ஆசிரியர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பொன்னமராவதி வட்டார வள மைய மேற்பாhவையாளரைக் கண்டித்து பொன்னமராவதியில் சனிக்கிழமையன்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் குறுவள மையக் கூட்டங்களில் பெண் ஆசிரியர்க ளை நிற்கவைத்தும்,  பெண்மையைக் கொச்சைப்படுத்தியும், ஒருமையிலும் பேசி அவமானப் படுத்துவது, தலைமை ஆசிரியர்கள் மீது வேண்டுமென்றே கையாடல் வழக்குப் போடுவேன் என மிரட்டுவது, பள்ளிப் பார்வைக் குறிப்புகளில் தனக்குப் பிடிக்காத ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் குறிப்பு எழுதுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இத்தகைய ஆசிரியர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் எஸ்.மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் ச.அலெக்சாண்டர் துவக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி வட்டாரச் செயலாளர் பழ.தேவேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பேசினர்.
போராட்டத்தை ஆதரித்து அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன் பேசினார். உண்ணா விரத்தை முடித்து வைத்து சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கோ.திருப்பதி சிறப்புரை யாற்றினார். முடிவில் வட்டாரப் பொருளாளர் க.புவனேஸ்வரன் நன்றி கூறினார். உண்ணாவிரத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டார்.

Popular Posts