பள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளாதாக அறியப்படுகிறது.
மாணவர்களுக்கு பாதுகாப்பு தேவை
ஒரு சில பள்ளிகளில் பொருட்கள் காணாமல் போவதாகவும், பள்ளிக்கூட வளாகத்திற்குள் வெளியாட்கள் சம்பந்தம் இல்லாமல் நடமாட்டம் இருப்பதாகவும், பள்ளிகளுக்குள் அத்துமீறி செல்வதாகவும், அவர்களால் பள்ளிக்கூட பொருட்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் என்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே இத்தகைய நடவடிக்கையை தலைமை ஆசிரியர்கள் விழிப்புடன் இருந்து தவிர்க்கவேண்டும். இது தலைமை ஆசிரியர்களின் கடமை.
பள்ளிக்கூட மாணவர்–மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு தேவை. மாணவர்கள் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். மாணவர்களின் கல்வி மற்றும் தேர்வு பாதிக்காத வகையிலும், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிக்கு இடையூறு ஏதும் நேரிடாத வகையிலும் பாதுகாப்புஅளிக்கப்படவேண்டும்.
பொருட்களுக்கு பாதுகாப்பு
அதுமட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பள்ளிக்கூட வளாகத்தினுள் பள்ளியைச்சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலை கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும். பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பள்ளிக்கூட பொருட்களுக்கு பாதுகாப்பு குறைவு எந்தக்காரணம்கொண்டும் வரக்கூடாது. இந்த அறிவுரைகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டு அதன்படி நடக்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.

Popular Posts