'நாடு முழுவதும், ஆறு லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்" என மத்திய
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த
நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய அமைச்சர், பல்லம் ராஜு கூறியதாவது: நாடு
முழுவதும், ஆறு லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆசிரியர்கள்
பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, புதிய ஆசிரியர்களை தேர்வு செய்யும்
பணி நடக்கிறது. தரமான கல்வியை அளிக்க, அரசு, பல்வேறு முயற்சிகளை
மேற்கொண்டுள்ளது.
கல்வி உரிமை சட்டம் அமல்படுத்திய பின், மாணவர்களின் அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்வதில், அரசு முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வாறு பல்லம் ராஜு
கூறினார்.