முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை.

முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 30, 31.12.13 நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 5 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. 
 
மொத்தம் 2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.இதில் தமிழ் பாட தேர்வு முடிவு நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 
 
தேர்ச்சி பெற்றவர்களில் வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில்1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள்அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய (694 தேர்வர்கள் ) விவரம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் °இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.இத் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Posts