ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது
உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருமணம் போன்ற விழாக்களுக்கு குழுவாக செல்பவர்களது டிக்கெட்டுகளையும் மாற்றிக் கொள்ள இற்த திட்டம் அனுமதிக்கின்றது. பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்களும் இந்த வசதியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட அரசு ஊழியர் செல்ல முடியாத போது வேறொரு ஊழியரின் பெயரில் அவரது டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம்.
பயணம் செய்ய உள்ள ஊழியரின் உயர் அதிகாரி மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டை அந்த கல்வி நிறுவனத்தின் முதல்வரின் ஒப்புதலோடு வேறொரு மாணவருக்கு மாற்றிக் கொள்ள முடியும். மாணவர்களின் டிக்கெட்டுகளை மாற்ற ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.