அரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்

அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின், திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, 2011ல் அரசாணை வெளியிடப்பட்டது. 
அதில், யார் யார் தகுதியுடையவர் என்பதை தெளிவுபடுத்தும்படி, தமிழக அரசிற்கு, சென்னை மாநகராட்சி கமிஷனர் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள், அரசாணை வெளியிடப்பட்ட நாளிற்கு முன், 25 வயது முடிவடைந்து, குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் வழங்கலாம் என, கூறப்பட்டுள்ளது. மேலும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு, நிபந்தனைக்கு உட்பட்டு, வழங்க வேண்டும் என்பது உட்பட, ஏழு இனங்களுக்கு அரசு விளக்கம் அளித்து, அதற்கான அரசாணை நேற்று, நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

Popular Posts