ஆசிரிய அன்பர்களே!


இப்படத்தில் வரும் கருத்துக்கள் அனைத்தும் சரியென்றோ தவறென்றோ, அனைத்தும் உண்மையென்றோ உண்மைக்கு முரணானது என்றோ குறிப்பிட வரவில்லை.  நம் மாணவ ஆசிரிய பருவத்தில் இதைவிட மேம்பட்ட கருத்து செறிவுள்ள, பள்ளி மற்றும் மாணவர்கள் முன்னேற்றத்தின் மீது அளப்பெரிய ஆர்வமும் ஆக்கறையும் கொண்டு செயல்படுகின்ற எத்தனையோ ஆசிரிய பெருமக்களை நாம் பார்க்கிறோம் ,
அவர்கள் வெறும் சுயவிளம்பரத்திற்கோ பெருமைக்கோ செய்யாமல் தம் வாழ்வியல் இயல்பாக இன்ப கடமையாக வாழ்நாள் முழுதும் தம் சில சௌகரியங்களை துறந்து, தொடர்ந்து இப்பெரும் செயலை செய்து வருகின்றனர். இத்தகைய கல்வி சார்ந்த படங்களை நாம் ஊக்குவிப்பதோடு சரியான விமர்சனங்களை வைப்பதன் மூலம் இன்னும் யதார்த்தமும் கருத்தும் நிறைந்த மேலும் பல கல்வி சார்ந்த சிறந்த 

திரைப்படங்கள் வெளிவர வாய்ப்பாக அமையும். இதன்மூலம்  ஆசிரியர்களின் சிக்கல்கள் பிரச்சனைகள் போராட்டங்கள் மக்களுக்கு தெரிவதோடு, கடைக்கோடி இந்தியனும் , முதல் தலைமுறையாக கல்வி கற்க பள்ளிக்கு வரும் ஏழை குழந்தைக்கும் முழுமையான தரமான கல்வியை அளித்திட போராடும் அரசின் அற்புத நோக்கமும் அரசு பள்ளிகளின்  நோக்கமும் நிறைவேறிட இது சிறு உந்துதளாக அமையும் என்ற நம்பிக்கையோடு www.tnptfvirudhunagar.blogspot.com

Popular Posts