வன்முறையை தூண்டும் பேச்சு - ஆசிரியர் சங்க நிர்வாகி மீது நடவடிக்கை : மாவட்ட நிர்வாகம் உத்தரவு

சிவகங்கையில், வன்முறையை தூண்டும் அளவிற்கு பேசியதாக, ஆசிரியர் சங்க நிர்வாகி மீது, நடவடிக்கை எடுக்க, கல்வித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2 மாதத்திற்கு முன்பு, திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவரால், அதே பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து, ஆசிரியர் சங்கத்தினர் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

அப்போது, பேசிய, ஆசிரியர் சங்க நிர்வாகி சேவியர், "மாணவர்கள் கத்தி எடுத்தால், ஆசிரியர்களும் ஆயுதங்கள் தூக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என, வன்முறையை தூண்டும் அளவிற்கு பேசியுள்ளார். அவர் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி, தவறு இருக்கும் பட்சத்தில், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதன்மை கல்வித்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "மாவட்ட
நிர்வாகத்திடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Popular Posts