ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழக அரசின் புதிய சலுகையால் பாதிப்பு இல்லாதவர்களுக்கு (கட்-ஆப் 77க்கு மேல்) உடனடியாக பணி நியமனம் வழங்கப்படுமா?

2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் தமிழகமுதல்வர் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து அரசு வேலை கிடைக்கும் என எண்ணி இருந்த ஆசிரியர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர்.


ஆனால் CUT-OFF 77மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் எந்த பாதிப்பும் இல்லை எனபது தான் உண்மை, அவர்கள் கலக்கமடைய தேவையில்லை. ஏனெனில் புதிய அறிவிப்பின்படி ஆசிரியர்த் தகுதித் தேர்விற்கு 36 (82 முதல் 89வரை) மதிப்பெண்ணும், மற்ற 10 அல்லது 12வகுப்பு மதிப்பெண் மற்றும் D.T.Ed / DEGREE / B.Ed ஆகியதகுதிகளுக்கு அதிகபட்சமாக 40 மதிப்பெண்ணும் வழங்கப்படும் ஆக மொத்தம் 76மதிப்பெண் மட்டுமே அதிகபட்சமாக பெற முடியும் என்பதால் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் CUT-OFF 77 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்தலுக்கு முன்பாக பணி நியமனம் வழங்குவதில் அரசுக்கு எந்த சுமையும் இல்லை.

இதனால் தமிழக அரசு, புதிய நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் குடும்பத்திற்கு புரிந்த பேருதவியாக இருக்கும். 

இடஒதுக்கீடு அடிப்படையில் (CUT-OFF-77 முதல் 100மதிப்பெண்களில் இல்லையெனில்) மொத்த பணியிடங்கள் நிரப்ப முடியாமல் போனால் CUT-OFF 77க்கு கீழ் உள்ளவர்களுக்கு (அரசு அறிவித்த சலுகையால் பயனடைந்தவர்களுக்கு) பணி வழங்குவதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை அரசு கவனிக்குமா எனபது தேர்வர்களின் கோரிக்கை....

(இந்த கருத்தில் மாற்றம் வேண்டிருப்பின் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்)

Popular Posts