தொடக்க கல்வித்துறை, அரசாணை 140ஐ, இதுவரை
நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால், தொடக்க பள்ளி ஆசிரியர்கள், பாஸ்போர்ட்
பெறுவதற்கான தடையின்மை சான்று வாங்க அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது.
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில், 2013
நவ., 21ல் வெளியிட்ட அரசாணை எண்:140ன் படி, 'தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாடு
செல்வதற்கு, பாஸ்போர்ட் பெற துறையின் தடையில்லா சான்று துறைத்தலைவரால்
மட்டுமே பெறப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.
இனி, 'பி, 'சி மற்றும் 'டி'
ஊழியர்கள் தடையில்லா சான்றிதழை, அவர்கள் துறை சார்ந்த நியமன அலுவலர்களே
வழங்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. ''தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்,
பாஸ்போர்ட் பெறுவதற்கு அலைக்கழிக்கப்படுகின்றனர்.
பாஸ்போர்ட்
வாங்கினாலும், ஒவ்வொரு முறை வெளிநாடு செல்வதற்கும் துறை தலைவரிடம்
தடையின்மை சான்று வாங்கவேண்டும். இதற்கு, மாற்றாக அரசு வெளியிட்ட அரசாணையை
தொடக்க கல்வித்துறை இதுவரை நடைமுறைபடுத்தவில்லை. மாவட்ட தொடக்க கல்வி
அலுவலர்களே தடையின்மை சான்று வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்,''
என்றார். ஆனால், தொடக்க கல்வி துறையில் இதுவரை இந்த அரசாணை குறித்து
எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க
விரும்பும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள், இயக்குனர் அலுவலகத்துக்கு அலைய
வேண்டிய சூழல் ஏற்பட்டது.