பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிய வேண்டும் அமைச்சர் வைகைச்செல்வன


பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால், சிறந்த மாணவர் களை உரு வாக்க முடியும் என அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார். 


மாநில பள்ளி கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று முதல் முறையாக அமைச் சர் வைகைச்செல்வன் விருதுநகர் மாவட்டம் வந்தார். விருதுநகர் விருந்தினர் மாளிகையில் அவருக்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்பி மகேஸ்வரன், டிஆர்ஓ ராஜூ, ஆர் டிஓ குணசேகரன், திட்ட அலுவலர் பிரபாகரன் மற் றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து விருதுநகர் கேவிஎஸ் மேல் நிலைப்பள்ளியில் கல்வித் துறை உயர் அதிகாரி கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், `விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வுகளில் கடந்த 25 ஆண்டுகளாக முதலிடம் பெற்று, கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. 


ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால் சிறந்த மாணவர் களை உருவாக்க முடியும். கல்வித்துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.


தமிழக முதல்வர் கல்விக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றிட ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண் டும் என்றார். கூட்ட த்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Popular Posts