பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 97.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 86.71 மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்க ரூ.110.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
24.76 லட்சம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.381 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.366.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தக பைகள் வழங்க ரூ.19.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இலவச பேருந்து பயணச்சீட்டுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.322 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.