கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிப்பு


கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆணையாளராக ஓய்வு ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.


 இவரது அறிவுரைபடி, விருதுநகர் மாவட்டத்தில், பதிவாளர் மற்றும் செயற் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 713 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு, முதல் நிலையில் நான்கு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியல் வெளியிட்டு,அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி ராஜபாளையம், விருதுநகரில் நடக்க உள்ளது. தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட்டு வருகிறது. மாநில அளவிலான சந்தேகங்களை 044 2435 1403, விருதுநகர் மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்கள் தொடர்புடைய தேர்தல் சந்தேகங்களுக்கு 04562 252 680, ஸ்ரீ வில்லிபுத்தூர் துணை பதிவாளர் அலுவலகம் 04563 260 312, அருப்புக்கோட்டை துணை பதிவாளர் 04566 228 220 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Popular Posts