பள்ளிகளில் உள்ள சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மையங்களுக்கு, 99 ஆயிரம் மிக்சிகள் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக அரசின் செய்திக்குறிப்பு: பள்ளிகளில் உள்ள சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மையங்களில், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்கப்படுகிறது.
இந்த மையங்களில், போதிய உபகரணங்கள் இல்லாததால், அரவை நிலையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மையங்களுக்கு, பிற உபகரணங்களுடன், மிக்சி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
முதல் கட்டமாக, 52 ஆயிரத்து 881 சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மையங்களுக்கும், இரண்டாம் கட்டமாக, 46 ஆயிரத்து 448 குழந்தை நல மையங்களுக்கும், தலா ஒரு மிக்சி வீதம், 99 ஆயிரத்து 329 மிக்சிகள், 12.37 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.