சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு மகாத்மா காந்தியின் போதனைகள் பாடமாக பயிற்றுவிக்கபடுகிறது.
இந்தியாவின் முன்னாள் அரசியல் நிபுணர் பி.ஏ.நஸ்ரத் (Pascal Alan Nasereth) 'காந்தியடிகளின் தன்னிகரில்லா தலைமைப் பண்புகள்' என்ற புத்தகத்தை சீனா மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய சீனாவின் தெற்கு சிங் நார்மல் பல்கலைகழக பேராசிரியர் குவான்யூ சாங் "முன்பெல்லாம் சீன கல்வியாளர்கள் மட்டுமே காந்தியைப் பற்றி அறிந்து வைத்திருந்தினர். ஆனால் தற்போது ஏராளமான சீன மக்கள் இந்திய சுதந்திர போராட்டம், காந்தியின் சத்தியாகிரக போராட்டம், அவரது போதனைகள் ஆகியவற்றை தெரிந்து வைத்துள்ளனர்' என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "சீனாவில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலைகளிலும் காந்தியின் போதனைகள் பயிற்றுவிக்கப்படுகிறது" என்றார்.