முதல் வெற்றி :டிட்டோ-ஜேக் கூட்டத்தில் பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டன, இரு முக்கிய சங்கங்கள் தவிர மற்ற சங்கங்கள் பங்கேற்பு

இன்று சென்னை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற டிட்டோ-ஜேக் கூட்டத்திற்கு தொடக்கக்கல்வித்துறையில்  உள்ள அனைத்து சங்கங்களையும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு.கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார். 
 
மேலும் அச்சங்கம் சார்பில் சார்பில் பொதுச் செயலாளர் திரு.பாலசந்தர் (பொறுப்பு), மாநில பொருளாளர் திரு.மோசஸ் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முன்னாள் மாநில பொருளாளர் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பு  தலைவர் திரு.வையம்ப்பட்டி ராமசாமி, மாநில துணை பொதுச் செயலாளர் திரு.ரக்ஷித் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் மன்றம் சார்பில் மாநில தலைவர் திரு.தியாடர் ராபின்சன், திரு.அம்பை, திரு.அ. கணேசன் ஆகியோரும், தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில துணை தலைவர் திரு.ர.துரை, திரு.சிங்காரவேலு ஆகியோரும், SSTA சார்பில் பொதுச் செயலாளர் திரு.ராபர்ட், மாநில தலைவர் திரு.ரெக்ஸ் அனந்த குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
1. அனைத்து சங்கங்களையும் சேர்த்து ஒருங்கிணைந்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
2. அடுத்தக்கட்ட கூட்டத்தில் அனைத்து சங்க சார்பில் அதன் பொதுச் செயலாளர்கள் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.
3. அடுத்தக்கட்ட கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளாத சங்கங்களுடன் பேசி அவர்களையும் அடுத்த கூட்டத்தில் பங்கு பெற செய்ய முடிவு எடுக்கப்பட்டது. 

Popular Posts