மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தும் அறிவிப்பு
அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து டெல்லியில் மத்திய
அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலைவாசி உயர்வுக்கேற்ப ஊழியர்களுக்கு
அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, அகவிலைப்படியை 10
முதல் 11% வரை உயர்த்துவது குறித்து ஆரம்ப கட்ட பரிசீலனையில் உள்ளது.
எத்தனை சதவீதம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்திய தொழிற்சாலை பணியாளருக்கான ஜூன் மாதத்துக்கான நுகர்வோர் விலைக்குறியீடு ஆகஸ்ட் 30ம் தேதிதான் வெளியாகும். அதன் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும். கடந்த ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும். இப்போது அகவிலைப்படி 80 சதவீதமாக உள்ளது. 10 சதவீதம் உயர்த்தப்பட்டால் இது 90 சதவீதமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
நன்றி: தினகரன்