51 தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு

தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறையில் காலியாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நேற்று சென்னையில் நடந்தது.
இதற்கு பணி மூப்பு அடிப்படையில், 100 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 51 பேருக்கு, பதவி உயர்வு உத்தரவுகளை தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் வழங்கினார்.

Popular Posts