3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
பதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2–க்கு சமமாக கருதலாம் ஐகோர்ட்டு உத்தரவு
ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனர்
சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில்
கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.
தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ
(டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.
ரத்து செய்ய வேண்டும்
பணி மூப்பு அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும். ஆனால் பிளஸ்–2
படிக்காதவர்களுக்கு இந்தப் பதவி உயர்வு பெறத் தகுதி இல்லை என்று
கூறப்பட்டது. இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரின் 13.9.2011 தேதியிட்ட
வழிகாட்டி உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய
வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவி உயர்வு உண்டு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு
வருமாறு:– தொடக்கக் கல்வி இயக்குனரின் அந்த உத்தரவை மற்றொரு வழக்கில் கடந்த
2.7.12 அன்று ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில்
மற்றொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வி
டிப்ளமோ கல்வி, பிளஸ்–2 படிப்புக்கு இணையானது என்று கூறப்பட்டுள்ளது.
அந்த உத்தரவு இந்த வழக்குக்கும் பொருந்தும். எனவே மனுதாரருக்கு பதவி
உயர்வு பெறும் உரிமை உள்ளது. அதன்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக
அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அதற்கேற்ற பணப் பலன்களையும் வழங்க
வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளியின் தினசரி வருகை பதிவு "ஆன்லைன்' மூலம் பதிவேற்றம்
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும், தினசரி வருகை பதிவுகளை,
ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாக செயல்பாடு அனைத்தும்,
கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டில், ஒவ்வொரு பள்ளியிலும், படிக்கும் மாணவ,
மாணவியர், அங்குள்ள கட்டிட மற்றும் இட வசதி, உள்கட்டமைப்பு வசதி மற்றும்
ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும்
பணி நடந்தது.
இதன் அடுத்த கட்டமாக, தற்போது பள்ளி துவங்கிய உடன் எடுக்கப்படும் தினசரி
வருகை பதிவுகளையும், அன்று காலை, 10 மணிக்குள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது அனைத்து அரசு மற்றும் உதவி பெறும்
பள்ளிகளும், தங்களது தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவு
செய்கிறது. இதன் மூலம், தமிழகத்தின் எந்த மூளையில் இருந்தும், பள்ளியின்
வருகையை வகுப்பு வாரியாக தெரிந்து கொள்ள முடியும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
வருகை பதிவேடுகளை நோட்டுகளில் மட்டும் பதிவு செய்யும் போது, தலைமை
ஆசிரியர்களுக்கு தகுந்தது போல், பல மாற்றங்களும் இருக்கும். மாணவர்
எண்ணிக்கை அதிகமாக கணக்கு காட்டுபவர்களும் உண்டு. அதே போல், வேண்டப்பட்ட
ஆசிரியர்கள் தாமதமாக வந்தாலோ, வராமல் இருந்தும் அவர்களுக்கு வருகை பதிவு
செய்வதும் நடந்ததுண்டு.
ஆனால், தற்போது, ஆன்லைன் மூலம் காலை, 10.30 மணிக்குள் வருகை பதிவுகளை
பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின் திடீர் ஆய்வுக்கு அதிகாரிகள் வரும்
பட்சத்தில், அதில் மாற்ற முடியாது என்பதால், மாட்டிக்கொள்ள நேரிடும்.
இதனால் முறைகேடு குறையும் . இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி: தினமலர்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில்
சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 புதிய ஆங்கில வார்த்தைகளாவது கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அரசுத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என இந்த ஆண்டு 3,500-க்கும் மேற்பட்ட
பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் 80
ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். அதோடு, ஏற்கெனவே
ஆங்கில வழி வகுப்புகள் உள்ள 320 பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள்
பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுத்தர
பல்வேறு புதிய திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனம் வகுத்துள்ளது.
முதல் கட்டமாக, இந்த மாணவர்களுக்கு ஆங்கில வழி
வகுப்புகளை எடுக்கும் தஒடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் சனிக்கிழமையும்
(ஆக.24) உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 07.09.2013 அன்றும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம்
சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கற்பிக்கும் ஆசிரியர்களிடத்தில் தன்னம்பிக்கை வளர்க்கும் விதத்தில்
பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை
வளர்ப்பதற்கான எளிய முறைகள் இந்தப் பயிற்சியின்போது கற்றுத்தரப்படும் என
அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்கில வழி வகுப்புகளைப் பொருத்தவரை ஆங்கில
எழுத்துகள், வார்த்தைகளோடு வார்த்தை உச்சரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம்
வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெறும் கரும்பலகையின் மூலம் மட்டுமே
ஆங்கிலத்தைக் கற்பிக்காமல், விடியோ, ஆடியோ சி.டி.க்கள் மூலமும் மாணவர்களின்
உச்சரிப்புத் திறன் மேம்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக்கு பெற்றோர்கள் லுங்கி, நைட்டியுடன் செல்ல வருகிறது தடை!
தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து
செல்லும் போது பெற்றோர்கள் லுங்கி, நைட்டி அணிந்து வர தடை விதிப்பது
குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 55,900 பள்ளிகளில் 1 கோடியே 36 லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை சில பெற்றோர்கள் வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். சில பெற்றோர்கள் தாங்களாகவே அழைத்து சென்று விடுகின்றனர். அப்போது சில நேரங்களில் அவசரத்தில் பெற்றோர்கள் லுங்கி, நைட்டிகள் அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒழுக்கத்தை
வளர்க்கும் பள்ளிக் கூடத்தில் பெற்றோர் லுங்கி, அரை டவுசர் ஆகியவை
அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு செல்லக் கூடாது. அவ்வாறு செல்வதாக புகார்கள்
வந்துள்ளது. எனவே, பெற்றோர்கள் மனம் புண்படாத வகையில் மாணவர்களின் தாயாக
இருந்தால் நைட்டி அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லக் கூடாது. தந்தையாக
இருந்தால் லுங்கி அணிந்து செல்லக் கூடாது. இதை தமிழ்நாடு முழுவதும் உள்ள
அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்ப பள்ளிக்
கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது" என்றார்.
நன்றி : விகடன்
வேலையிழந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரிடம் கோரிக்கை!
பணி நீக்கம் செய்யப்பட்ட 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து,
தங்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேறு துறைகளில் வேலை வாய்ப்பு
அளிக்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆயிரத்து 800 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். பி.எட்., படிக்காத இவர்களை பணி நியமனம் செய்யக் கூடாது என்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிறப்பு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யலாம் என்று உத்தரவிட்டது.
ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பு தகுதி தேர்வில் 652 ஆசிரியர்கள் தோல்வி அடைந்தனர். அவார்கள், உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தொடர்ந்து ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் பி.எட். படித்த கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிக்குமார், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சிறப்பு தேர்வில் தோல்வி அடைந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் ஏற்படும் காலிப்பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் பி.எட். படித்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அவசர அவசரமாக டிஸ்மிஸ் செய்தது. மேலும், 652 காலிப்பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், வேலையிழந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, எங்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் வேறு துறைகளில் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நன்றி : விகடன்
சாதரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு PP ரூ.750/- வழங்கியது தவறு மேலும் 31.12.2005க்கு பின்னர் தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு SA ரூ.500 வழங்கியதும் தவறு இவ்விரு பணத்தையும் அரசு கணக்கில் திரும்ப செலுத்த தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல்
சாதாரண இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அதாவது
01.01.2011க்கு முன்னர் தேர்வு/சிறப்பு நிலை முடித்தோர்க்கு PP எனப்படும்
தனி ஊதியம் ரூ.750/- வழங்கியது தவறு என்றும் மேலும் 31.12.2005க்கு பின்னர்
தேர்வு / சிறப்பு நிலை முடித்தவர்களுக்கு SA எனும் சிறப்புப்படி ரூ.500
அதாவது 01.01.2006 முதல் 31.12.2010 வரை தேர்வு / சிறப்பு நிலை
முடித்தவர்களுக்கு வழங்கியதும் தவறு என்றும் இவ்விரு பணத்தையும் அரசு
கணக்கில் திரும்ப செலுத்த தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இது குறித்து நம் இணையதளக்குழு உரிய ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தலைமையாசிரியர்கள் ஓய்வு பெறும் பள்ளிகளில் தணிக்கை செய்வது வாடிக்கை அவ்வாறு தணிக்கை செய்யும் போது இதை தவறு என சுட்டிக்காட்டி, இவ்வாறு பெறப்பட்ட முழு பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டு என உத்தரவிட்டுள்ளனர். இதனை மேல்நிலை அலுவலர்களும் உறுதி செய்துள்ளனர். இதனால் பல ஆசிரியர்கள் பணத்தை திருப்பி செலுத்தி வருகின்றனர். சிலர் தங்கள் மாநில அமைப்பிற்கு இது குறித்து அரசிடம் விளக்கம் பெற தகவல் தந்து அவகாசம் கேட்டுள்ளனர்.
இம்முறை உறுதியானல் இடைநிலை ஆசிரியர் மட்டத்தில் பெரும் குழப்பமும் ஊதிய முரண்பாடும் ஏற்படும் என்பதால், மதிப்புமிகு ஆசிரிய சங்கங்கள் இது குறித்து உரிய விளக்கத்தை அரசிடம் பெற்று இவ்வூதிய முறையால் ஏற்படும் பாதிப்புகளை களைய அனைத்து ஆசிரியர்கள் சார்பாக நம் www.teachertn.com இணையதளம் பணிவோடு வேண்டுகோள் வைக்கிறது.
இது குறித்து நம் இணையதளக்குழு உரிய ஆசிரியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தலைமையாசிரியர்கள் ஓய்வு பெறும் பள்ளிகளில் தணிக்கை செய்வது வாடிக்கை அவ்வாறு தணிக்கை செய்யும் போது இதை தவறு என சுட்டிக்காட்டி, இவ்வாறு பெறப்பட்ட முழு பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டு என உத்தரவிட்டுள்ளனர். இதனை மேல்நிலை அலுவலர்களும் உறுதி செய்துள்ளனர். இதனால் பல ஆசிரியர்கள் பணத்தை திருப்பி செலுத்தி வருகின்றனர். சிலர் தங்கள் மாநில அமைப்பிற்கு இது குறித்து அரசிடம் விளக்கம் பெற தகவல் தந்து அவகாசம் கேட்டுள்ளனர்.
இம்முறை உறுதியானல் இடைநிலை ஆசிரியர் மட்டத்தில் பெரும் குழப்பமும் ஊதிய முரண்பாடும் ஏற்படும் என்பதால், மதிப்புமிகு ஆசிரிய சங்கங்கள் இது குறித்து உரிய விளக்கத்தை அரசிடம் பெற்று இவ்வூதிய முறையால் ஏற்படும் பாதிப்புகளை களைய அனைத்து ஆசிரியர்கள் சார்பாக நம் www.teachertn.com இணையதளம் பணிவோடு வேண்டுகோள் வைக்கிறது.
51 தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு
தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி
வந்த 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
தொடக்கக் கல்வித்துறையில் காலியாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நேற்று சென்னையில் நடந்தது.
இதற்கு பணி மூப்பு அடிப்படையில், 100 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில்
51 பேருக்கு, பதவி உயர்வு உத்தரவுகளை தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன்
வழங்கினார்.
பென்ஷனை நிறுத்தி வைக்க உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
"பென்ஷன் என்பது, ஒருவர், நீண்ட காலம் பணியாற்றியதற்காக
கொடுக்கப்படும் நிதி; அது, அவரின் உரிமை. ஒருவர் மீதான துறை ரீதியான
நடவடிக்கைகள், வழக்குகள் ஆகியவற்றை காரணமாக வைத்து, அவரின் பென்ஷனை
நிறுத்தி வைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட்
மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஜித்தேந்திர குமார்
ஸ்ரீவத்சவா மீது, குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதை காரணமாக வைத்து,
அவருக்கான பென்ஷன் மற்றும் பணிக் கொடையை கொடுக்காமல், அம்மாநில அரசு
நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து, அவர், ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு
செய்தார்.
இதை விசாரித்த ஐகோர்ட், ஜித்தேந்திர குமாருக்கு, பென்ஷன் கொடுக்க
உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஜார்க்கண்ட் மாநில அரசு, சுப்ரீம்
கோர்ட்டில், மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள்,
ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
பென்ஷன், பணிக்கொடை ஆகியவை, ஒரு ஊழியர், நீண்ட காலமாக, நேர்மையுடன்
பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதி. அது, அவரின் சொத்து போன்றது.
பென்ஷன் என்பது, ஊழியரின் உரிமை. அரசியலமைப்பு சட்ட பிரிவு, 31 (ஏ), இதை
உறுதி செய்கிறது. எனவே, சம்பந்தபட்ட ஊழியர் மீதுள்ள வழக்குகள், துறை
ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை காரணமாக வைத்து, அவரின் பென்ஷனை நிறுத்தி
வைக்க முடியாது. இது, அவரின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயல். இவ்வாறு,
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினர் கருணை அடிப்படையில் வேலை கோர முடியாது
அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கருணை
அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம்
கிடையாது.அதேநேரத்தில் பணி நியமனம் கோரும் அந்தக் குடும்பத்தின் நபர்,
அந்தப் பணிக்குரிய கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு மேலும்
கூறியதாவது: பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஊழியரின் குடும்ப சூழ்நிலை
மற்றும் பொருளாதார நிலையை, சம்பந்தப்பட்ட துறையின் தகுதிவாய்ந்த அதிகாரி
ஆராய வேண்டும்.வேலை வழங்கவில்லை எனில், அந்த குடும்பத்தால் நெருக்கடியை
சமாளிக்க முடியாது என்பதை உறுதிசெய்து கொண்ட பின்னால்தான், அந்தக் குடும்ப
உறுப்பினர்களில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால் அந்த வேலைக்கு
நியமிக்கப்படுபவர், அதற்கான கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்
என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராஜஸ்தான் மாநில உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, எம்ஜிபி கிராம வங்கி
தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதுதான் நீதிபதிகள்
மேற்கண்டவாறு தீர்ப்பு அளித்தனர்.
இந்த வங்கியில் மூன்றாம் நிலை ஊழியராக
பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் கடந்த 2006, ஏப்ரல் 19-ஆம் தேதி மரணமடைந்து
விட்டார்.இதையடுத்து அவரது மகன் சக்ரவர்த்தி சிங், தனக்கு கருணை
அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று, அந்த வங்கிக்கு 2006, மே மாதம்
12-ஆம் தேதி விண்ணப்பம் அனுப்பினார். அதை அந்த வங்கி நிராகரித்து
விட்டது.இதையடுத்து, ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
சக்ரவர்த்தி சிங்குக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குமாறு வங்கி
நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வங்கி
நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை
நிராகரித்தது.
கருணை அடிப்படையில் பணி வழங்க, உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும்
டிவிஷன் பெஞ்ச் கூறிய காரணங்கள், சட்டத்தின் பார்வையில் வலுவூட்டுவதாக
இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறி, அந்த தீர்ப்பை நிராகரித்தனர்.
உண்மைகள் - கசக்கும்
நேற்று ஆசிரியர் இயக்க பணிகளில் தீவிரமாக உள்ள மாற்று இயக்க நண்பர்
ஒருவருக்கு சுதந்திர தின வாழ்த்து பரிமாறிக் கொண்டேன். அப்பொழுது நண்பர்
இந்த தலைவர்கள் திருந்த மாட்டார்கள் போலும். மேடையில் ஒன்றும் செயலில்
ஒன்றும் செய்து நம்மை குழப்பி விடுகிறார்கள் என்றார். கூட்டு சங்க
நடவடிக்கை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் சில சங்கங்கள் வாய் மூடி மவுனம்
காப்பது என்பது இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நீர்த்து போகச்செய்யும்
தந்திரம் என்றார். அடுத்து அவர் கூறியது நம்மை மிகவும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை
வென்றெடுத்துக் கொடுத்தால் தற்பொழுது பணியில் சேர்ந்தவர்கள் நம்மை மதிக்க
மாட்டார்கள் எனவும், கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பது போல் கொடுத்து
ஊடகங்களில் செய்தி வெளியிடுவதன் மூலம் இடைநிலை ஆசிரியர்களை நம் பிடியில்
தொடர்ந்து நிலை நிறுத்தவும், தொடர்ந்து தலைமை பதவிகளில் சுகம் காணவும் சில
தலைமைகள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தார். அதனால்தான்
கூட்டு போராட்டத்திற்கு வராமல் கடந்த கூட்டுப்போராட்ட வரலாறுகளை தம்
உறுப்பினர்களிடம் திரித்து கூறி தவறான சிந்தனையை அவர்களின் மனதில் பதிய
வைப்பதாகவும் கூறினார். இந்த விசயங்களை நம்மால் நம்பவும் முடியவில்லை.
நடக்கிற நிகழ்வுகளை பார்த்தால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர் எந்த
இயக்கத்தில் இந்த மாதிரி நிகழ்வுகள் என்பதை கூற மறுத்துவிட்டார். நாம் அதை
நம்ப இயலாத நிலையில்தான் உள்ளோம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் கூட்டு
நடவடிக்கை என்பது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கை வென்றெடுக்க
வேண்டும் என்ற பொதுநல சிந்தனையின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க
வேண்டும் மற்ற காழ்புணர்ச்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறோம். இது மற்ற சங்கங்களை குறை கூற பதிவிடவில்லை. இதை
படிக்கின்ற ஆசிரியர் பெருமக்கள் எந்த இயக்கமாக இருந்தாலும் தாம்
சார்ந்துள்ள இயக்க தலைமைகளை கூட்டு போராட்டத்திற்கு வலியுறுத்துவதன் மூலம்
அரசாங்கம் நமது கோரிக்கையின் மீது கவனம் செலுத்த வழி பிறக்கும். ஆசிரியர்
சங்கங்களுக்கிடையில் நான் பெரியவன், நீ பெரியவன் என சண்டையிட்டு கொள்வதன்
மூலம் கடைசியில் பாதிக்கப்படுவது இடைநிலையாசிரியர்கள்தான். நாமெல்லாம் ஒரே
தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள்தான். ஒன்றுபட்ட இயக்கமாக இருந்து, சில
பல காரணங்களுக்காக நமக்கு விருப்பப்பட்ட இடங்களில் வாழ்கின்றோம். அதற்காக
சகோதர உணர்வு மழுங்கி போய் விடுமா என்ன?. நாம் நம்மை நாமே தூற்றிக்கொண்டு
மாறி மாறி வசை பாடுவதை சில நண்பர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு
தூற்றிக்கொள்வதால் நமது தலைமைகளுக்கு அது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி
விடும். தலைவர்கள் என்ன முடிவெடுத்து கட்டளை இடுகிறார்களோ இதை
சிரமேற்கொண்டு செயலாற்ற தோழனே தயாராக இரு. நிச்சயம் தலைவர்களிடம் இருந்து
நல்ல முடிவை எதிர்பார்க்கும் சக தோழனாக நானும் இருக்கிறேன். என்னதான்
இருந்தாலும் போராட்டங்களில் இடைநிலை ஆசிரியரின் பங்களிப்பு என்பது
சொல்லிக்கிறது மாதிரி இல்லை. எந்த போராட்டத்திற்கும் வராமல் முதல் ஆளாக
ஏ.டி.எம். இயந்திரங்களை நோக்கி ஓடி எவனோ போராடி பெற்ற பணபலன்களை
அனுபவிக்கும் உணர்ச்சியற்ற உயிராய் இருப்பதை மாற்றிக்கொள். ஒரு புழு கூட
கால் பட்டால் தன் தலை தூக்கி தன் எதிர்ப்பை பதிவு பண்ணுகிறது. ஓரறிவு
படைத்த உயிரினத்திற்கே இந்த ரோஷம் என்றால் நமக்கு? சிந்தித்து பார். இயக்க
பொறுப்பாளர்களுக்கும் குடும்பம் உண்டு. இயக்க பொறுப்பேற்றதற்காக தன் சுக
துக்கங்களில் பங்கெடுக்காமல் இந்த ஆசிரியர் சமுதாயத்திற்காக தன் வாழ் நாளை
செலவிடுகின்றான். அறிஞர் அண்ணாவையும் அவரது கொள்கைகளையும் மறந்த திராவிட
கட்சிகளைப்போல சில ஆசிரியர் இயக்கங்கள் மாஸ்டர் இராமுண்ணியின் கொள்கைகள்
மறந்துவிட்டன. எது எப்படி இருந்தாலும் கூட்டுப்போராட்டமே நம் துயர்
துடைக்கும். இந்த பதிவு யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கில்
வெளியிடப்படவில்லை. யாரையும் காயப்படுத்தினால் வருந்துகிறோம். சில உண்மைகள்
கசக்கதான் செய்யும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. ஒன்று படுவோம்!
வென்றெடுப்போம்!!!
இதுவரைநாம்பெற்றவெற்றிகளெல்லாம்
யாருடைய கருணையினாலும்
தயவினாலும் அல்ல.
நம்முடைய ஒற்றுமையால்...
போராட்டங்களால்...
தியாகங்களால்...
தோழமையுடன்.......
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
சிவகங்கை மாவட்டம்.
இதுவரைநாம்பெற்றவெற்றிகளெல்லாம்
யாருடைய கருணையினாலும்
தயவினாலும் அல்ல.
நம்முடைய ஒற்றுமையால்...
போராட்டங்களால்...
தியாகங்களால்...
தோழமையுடன்.......
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
சிவகங்கை மாவட்டம்.
முதல் வெற்றி :டிட்டோ-ஜேக் கூட்டத்தில் பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டன, இரு முக்கிய சங்கங்கள் தவிர மற்ற சங்கங்கள் பங்கேற்பு
இன்று சென்னை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற டிட்டோ-ஜேக் கூட்டத்திற்கு
தொடக்கக்கல்வித்துறையில் உள்ள அனைத்து சங்கங்களையும் அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாநில தலைவர் திரு.கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார்.
மேலும் அச்சங்கம்
சார்பில் சார்பில் பொதுச் செயலாளர் திரு.பாலசந்தர் (பொறுப்பு), மாநில
பொருளாளர் திரு.மோசஸ் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
சார்பில் முன்னாள் மாநில பொருளாளர் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பு
தலைவர் திரு.வையம்ப்பட்டி ராமசாமி, மாநில துணை பொதுச் செயலாளர் திரு.ரக்ஷித்
கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் மன்றம் சார்பில் மாநில தலைவர்
திரு.தியாடர் ராபின்சன், திரு.அம்பை, திரு.அ. கணேசன் ஆகியோரும், தமிழக
ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில துணை தலைவர் திரு.ர.துரை,
திரு.சிங்காரவேலு ஆகியோரும், SSTA சார்பில் பொதுச் செயலாளர் திரு.ராபர்ட்,
மாநில தலைவர் திரு.ரெக்ஸ் அனந்த குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக
ஆசிரியர் கூட்டணி சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள்
தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
1. அனைத்து சங்கங்களையும் சேர்த்து ஒருங்கிணைந்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
2. அடுத்தக்கட்ட கூட்டத்தில் அனைத்து சங்க சார்பில் அதன் பொதுச் செயலாளர்கள் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.
3. அடுத்தக்கட்ட கூட்டத்தில் இன்று
கலந்துகொள்ளாத சங்கங்களுடன் பேசி அவர்களையும் அடுத்த கூட்டத்தில் பங்கு பெற
செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு
பள்ளிக்கல்வித்துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு
அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:– (அதிகாரிகளின் பழைய பதவி அடைப்புக்குறிப்புக்குள் கொடுக்கப்பட்டு உள்ளது)
இடமாற்றம்
2. வி.பாலமுருகன் – இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி, பள்ளிக்கல்வி
இயக்கம் (இணை இயக்குநர் (பாடத்திட்டம்), மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம்)
3. எம்.பழனிச்சாமி – இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி), பள்ளிக்கல்வி இயக்கம் (இணை இயக்குநர்–தொழிற்கல்வி)
4. தர்ம.ராஜேந்திரன் – இணை இயக்குநர்–தொழிற்கல்வி (இணை இயக்குநர்–நிர்வாகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
5. என்.லதா – இணை இயக்குநர்–பணியாளர் தொகுதி, தொடக்கக்கல்வி இயக்ககம் (இணை இயக்குநர்–உதவி பெறும் பள்ளிகள்)
6. சி.செல்வராஜ் – இணை இயக்குநர்–உதவி
பெறும் பள்ளிகள், தொடக்கக்கல்வி இயக்ககம் (இணை இயக்குநர்–பயிற்சிகள், மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்)
7. எஸ்.சேதுராமவர்மா – இணை இயக்குநர்–மெட்ரிக் பள்ளிகள் (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்)
8. வீ.ராஜேஸ்வரி – இணை இயக்குநர்–மேல்நிலைக்கல்வி, அரசு தேர்வுகள் இயக்ககம் (இணை இயக்குநர்–இடைநிலைக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்ககம்)
9. டி.உமா – இணை இயக்குநர், இடைநிலைக்கல்வி, அரசு தேர்வுகள் இயக்ககம் (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்)
10. எஸ்.உமா – இணை இயக்குனர்–பயிற்சிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (இணை இயக்குநர்–மேல்நிலைக்கல்வி)
11. எஸ்.கார்மேகம் – கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் (இணை இயக்குநர்–மெட்ரிக் பள்ளிகள்)
12. பி.ராமராஜ் – கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் (இணை இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்)
பதவி உயர்வு
1. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராகப் (முதன்மை கல்வி அதிகாரி
அந்தஸ்து) பணிபுரியும் ஜா.சுதர்சன் பதவி உயர்வுபெற்று மாநில கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராக (நிர்வாகம்)
நியமிக்கப்படுகிறார்.
2. திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் எஸ்.சுகன்யா பதவி
உயர்வு பெற்று பள்ளி சாராக மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குநராக
பணிஅமர்த்தப்படுகிறார்.
3. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.நாகராஜ முருகன் பதவி
உயர்வு பெற்று அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநராக
நியமிக்கப்படுகிறார்.
4. ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.ஸ்ரீதேவி பதவி உயர்வு பெற்று
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குநராக
(பாடத்திட்டம்) பணிஅமர்த்தப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில்
கூறப்பட்டுள்ளது.
தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாளில் இருந்து பணி வரன்முறை
அரசு பள்ளிகளில் கடந்த 1990,91, 1991,92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில்
இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இடைநிலை
ஆசிரியர்களுக்கு ரூ.800, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,200, முதுகலை
ஆசிரியர்களுக்கு ரூ.1,400 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில்
தொகுப்பூதிய ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் ஆசிரியர்கள் நியமன நாள் முதல்
காலமுறை ஊதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற
உத்தரவு அடிப்படையில் 1990,91, 1991,92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில்
நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமன நாள் முதல்
பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து உரிய தெளிவுரை கேட்டு பள்ளிக் கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக பள்ளி கல்வி செயலர் சபிதாவின் விளக்கக் கடிதம்: ஏற்கனவே 2012 ஜூன்26ம் தேதி அரசு கடிதத்தில் 1990,91, 1991,92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணி விதிகள் ஏதும் தளர்வு செய்ய கூடாது. இந்த நிபந்தனை அடிப்படையில் பணி நியமன நாள் முதல் முன்தேதியிட்டு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கலாம் எனவும், பணிவரன்முறை செய்த நாளில் இருந்து பணிமூப்பு நிர்ணயிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி விதிகளில் பொதுவிதி 35(ஏ) பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யலாம் என்றும், பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு விதி 35(ஏஏ)யை பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 1990,91, 1991,92ல் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சமமாக பொருந்தும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு என தனியாக தெளிவுரை வழங்க அவசியம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உரிய தெளிவுரை கேட்டு பள்ளிக் கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக பள்ளி கல்வி செயலர் சபிதாவின் விளக்கக் கடிதம்: ஏற்கனவே 2012 ஜூன்26ம் தேதி அரசு கடிதத்தில் 1990,91, 1991,92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணி விதிகள் ஏதும் தளர்வு செய்ய கூடாது. இந்த நிபந்தனை அடிப்படையில் பணி நியமன நாள் முதல் முன்தேதியிட்டு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கலாம் எனவும், பணிவரன்முறை செய்த நாளில் இருந்து பணிமூப்பு நிர்ணயிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி விதிகளில் பொதுவிதி 35(ஏ) பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யலாம் என்றும், பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு விதி 35(ஏஏ)யை பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 1990,91, 1991,92ல் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சமமாக பொருந்தும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு என தனியாக தெளிவுரை வழங்க அவசியம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் இடைநிலை ஆசிரியரின் ஒரு மாத இழப்பு
மத்திய அரசு ஊதியம்:
அடிப்படை ஊதியம் : 9300
தர ஊதியம் : 4200
அகவிலைப்படி (80%) : 10800
மொத்தம் : 24300
தமிழ்நாடு ஊதியம்:
அடிப்படை ஊதியம் : 5200
தர ஊதியம் : 2800
தனி ஊதியம் : 750
அகவிலைப்படி (80%) : 7000
மொத்தம் : 15750
தர ஊதியம் : 2800
தனி ஊதியம் : 750
அகவிலைப்படி (80%) : 7000
மொத்தம் : 15750
ஒரு மாத இழப்பு : 8550/-
இது இந்த மாதத்தில் பணியில் சேர்ந்தவருக்கான ஒரு மாதிரி கணக்கீடு தான் .
பணியில் உள்ளோருக்கு இன்னும் இழப்பு அதிகம். ஒன்றுப்பட்டு உணர்வோடு அனைவரும் ஒன்றினைந்து போராடினால் மட்டுமே 9300+4200 தர ஊதியம் என்ற இலக்கை அடைய முடியும்.
மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக அம்மசோதா விவாதிக்கப்படும் நாளில் இரண்டு மணி நேரம் அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்து எதிர்ப்பை காட்ட ஊழியர்களுக்கு அழைப்பு | WITHDRAW CONTRIBUTORY PENSION SCHEME
மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில்
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் / PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை
மற்றும் மேம்பாட்டு ஆணையம்) மசோதாவை தாக்கல் செய்து நடைமுறைபடுத்த
திட்டமிட்டுள்ளது.
அதற்காக நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடரின் நிகழ்ச்சி
நிரலில்(பட்டியல்) இந்த மசோதாவை சேர்த்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர்
பட்டியலில் உள்ளதால், மத்திய அரசு இந்த மசோதா குறித்து எந்த நாளிலும் விவாதம் நடத்தும் என்று தெரிய வருகிறது.
இதையடுத்து மத்திய அரசின் அரசு ஊழியர்கள் /
ஆசிரியர்கள் விரோதப் போக்கை மத்திய அரசு பணியாளர்கள்
மகாசம்மேளனம் கண்டிக்கிறது என்றும், ஆரம்பத்திலிருந்தே இந்த மசோதாவிற்கு
எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும், இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள்
மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு
தெரிவித்துள்ளது.
அதேபோல் இடதுசாரி கட்சிகளும் தங்களின் பலத்த எதிர்ப்பை
தெரிவித்துள்ளது. ஆயினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின்
எதிர்ப்பினால் இந்த மசோதாவை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை. எனவே
PFRDA மசோதாவை விவாதத்திற்கு எடுத்து கொள்ளும் நாளன்றோ அல்லது மறுநாளோ
(தகவல் காலதாமதமாக கிடைக்கும் பட்சத்தில்) மத்திய அரசின் போக்கை எதிர்த்து
நாட்டிலுள்ள அனைத்து மத்திய அரசு அலுவகங்களின் முன் இரண்டு மணி நேரம்
வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய அரசு பணியாளர்களின் மகாசம்மேளனம் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களில் புதிய நியமனதாரர்களுக்கு ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை விளக்கும் கட்டுரை.
ஆறாவது
ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக
நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய
இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம்
மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.
தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான D.A. அறிவித்த பின்னர் முந்தைய
ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி அரசாணை
வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A அரசாணை வெளியிடப்பட்ட
பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக
நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக
வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட,
முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே
ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.
முந்தைய ஊதிய விகிதமே இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:
BASIC PAY = 4500
DEARNESS PAY (D.P) = 2250
D.A. 166% = 11205
___________
TOTAL 17955
____________
(D.A. நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இன் படி)
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.
BASIC = 5200
GRADE PAY = 2800
P.P. = 750
D.A. 80% = 7000
_________
TOTAL 15750
__________
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தால் புதிய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு
17955 - 15750 = 2205
எளிதில் புரிவதற்காக 1.1.2013 D.A. அரசாணையை வைத்து விளக்கியுள்ளேன். இதே
போன்று 2009 முதல் 2012 வரை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அரசாணைகளை வைத்து
கணக்கிட்டு பாருங்கள். புதிய ஊதிய விகிததினருக்கு D.A.அரசானை
அறிவிக்கப்பட்டு சில வாரங்களில் முந்தைய ஊதிய விகித்தினருக்கும் D.A.
அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை அகவிலைப்படி எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது?...
ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு
அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை
நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6
மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர்.
கடந்த 12 மாதத்தில், தேசிய அளவிலான நுகர்வோர்
விலைப்புள்ளியின் சராசரியை கணக்கிட்டு, அதில் 115.76 என்ற நிர்ணயிக்கப்பட்ட
ஒரு எண்ணை கழிக்கின்றனர். அதில் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்குவர்.
அத்தொகையை மீண்டும் 115.76ஆல் வகுப்பர். இதையே, அகவிலை படியாக கணக்கிடுகின்றனர். உதாரணமாக கடந்த 12 மாதங்களின் சராசரி வருமாறு: நுகர்வோர் விலைப்புள்ளி 2012, ஜூலையில்-212, ஆக.,214, செப்., 215, அக்.,217, நவ., 218, டிச.,219, பின் 2013 ஜன., 221, பிப்., 223, மார்ச் 224, ஏப்., 226, மே 228, ஜூன் 231. இவற்றின் கூட்டுத்தொகை 2648. இதன் 12 மாத சராசரி 220.75. இதில் இருந்து 115.76ஐ கழித்தால், கிடைப்பது 104.99. இதை 100ல் பெருக்க கிடைப்பது 10,0499. இத்தொகையை மீண்டும் 115.76ஆல் கழித்தால் கிடைப்பது 90.69.
இந்நிலையில் ஏற்கனவே 80 சதவீத அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்கி, மேற்கண்ட 90 சதவீதத்தை எட்டும்படி செய்வர். இதுவே அகவிலைப்படி கணக்கிடும் முறை.
அத்தொகையை மீண்டும் 115.76ஆல் வகுப்பர். இதையே, அகவிலை படியாக கணக்கிடுகின்றனர். உதாரணமாக கடந்த 12 மாதங்களின் சராசரி வருமாறு: நுகர்வோர் விலைப்புள்ளி 2012, ஜூலையில்-212, ஆக.,214, செப்., 215, அக்.,217, நவ., 218, டிச.,219, பின் 2013 ஜன., 221, பிப்., 223, மார்ச் 224, ஏப்., 226, மே 228, ஜூன் 231. இவற்றின் கூட்டுத்தொகை 2648. இதன் 12 மாத சராசரி 220.75. இதில் இருந்து 115.76ஐ கழித்தால், கிடைப்பது 104.99. இதை 100ல் பெருக்க கிடைப்பது 10,0499. இத்தொகையை மீண்டும் 115.76ஆல் கழித்தால் கிடைப்பது 90.69.
இந்நிலையில் ஏற்கனவே 80 சதவீத அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்கி, மேற்கண்ட 90 சதவீதத்தை எட்டும்படி செய்வர். இதுவே அகவிலைப்படி கணக்கிடும் முறை.
1. அனைத்து அரசு பள்ளிகளில் 7 முதல் 17 வயது வரை உள்ள மாணவ / மாணவிகளுக்கு, சதுரங்க பலகைகள் மாவட்ட கொள்முதல் குழு மூலமாக கொள்முதல் செய்வது அதனை ஒதுக்கீடு செய்து மீதமுள்ள சதுரங்க பலகைகள் தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவு
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களின் கூட்டம் 08.08.2013 அன்று சென்னை தொடக்க கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது
அடுத்த மாதம் அறிவிப்பு மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தும் அறிவிப்பு
அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து டெல்லியில் மத்திய
அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலைவாசி உயர்வுக்கேற்ப ஊழியர்களுக்கு
அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, அகவிலைப்படியை 10
முதல் 11% வரை உயர்த்துவது குறித்து ஆரம்ப கட்ட பரிசீலனையில் உள்ளது.
எத்தனை சதவீதம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்திய தொழிற்சாலை பணியாளருக்கான ஜூன் மாதத்துக்கான நுகர்வோர் விலைக்குறியீடு ஆகஸ்ட் 30ம் தேதிதான் வெளியாகும். அதன் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும். கடந்த ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும். இப்போது அகவிலைப்படி 80 சதவீதமாக உள்ளது. 10 சதவீதம் உயர்த்தப்பட்டால் இது 90 சதவீதமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
நன்றி: தினகரன்
இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் குழுவில் நிகழ்த்தப்பட்ட அவமானம்
ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதில் இருந்தே இடைநிலை ஆசிரியர்களுக்கு
ஊதியப் பிரச்சினை தொடங்கி அது ஒரு நபர் குழுவில் தீர்க்கப்படும் என
எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மத்திய அரசு வழங்கும் ஊதியமான
9300-34800 + 4200 என்ற ஊதியத்தை வழங்க இயலாமைக்குப் பல்வேறு நொண்டிச்
சாக்குகளைக் கூறிய கடந்த கால அரசு, அதற்குப் பதிலாக ரூ 750 ஐ தனி ஊதியமாக
01.01.2011 முதல் வழங்கியது.
இதனால், 01.01.2006 முதல் 31.12.2010 வரை இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து
பட்டதாரியாசிரியர் பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்
ரூ 750 தனி ஊதியத்தை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குப் பின்னால் அதாவது
01.01.2011க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைக் காட்டிலும்
குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு ஆளாயினர். பல்வேறு சங்கவாதிகள்
இப்பிரச்சினை சார்ந்த விரிவான கருத்துருக்களை மூன்று நபர் குழுவுக்கு
வழங்கப்பட்டு தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவாவது
வழங்கப்பட்டால்தான் ஊதிய முரண்பாடுகள் தீரும் எனத் தெள்ளத் தெளிவாக
எடுத்துரைக்கப்பட்டது.
நீண்ட காலமாக மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட
வேண்டும் என்ற தொடக்கப் பள்ளி முதல் முதுகலை ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த
பல்வேறு சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டும், போராட்டங்கள்
நிகழ்த்தப்பட்டும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் மூன்று நபர்
குழுவின் அறிக்கையில் இப்பிரச்சினை சார்ந்த ஒரு அம்சம் கூட இல்லாதது
மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அதே சமயம் ஆசிரியர் அல்லாத பிற துறைகளுக்கு ஏராளமான திருத்தங்களை வாரி
வழங்கியிருக்கிறது. இவ்வாறிருக்கையில், ரூ 750 தனி ஊதியத்தை 01.01.2011
முதல் வழங்கியதை எவ்வித மாற்றமும் செய்யாத மூவர் குழு, தற்போது
உதவியாளர்களுக்கு மட்டும் தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவும்
01.04.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் வழங்கியிருக்கிறதே! இது
மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு
நியாயமா? ஒரு கண்ணுக்கு வெண்ணையயும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஏன்
வைக்க வேண்டும்? 01.01.2006 முதல் கருத்தியலக்கத்தானே வழங்கக் கோருகிறோம்?
அது அரசுக்கென்ன பெரும் நிதிச்சுமையையா ஏற்படுத்தப்; போகிறது? மாற்றாக
பல்வேறு ஊதிய முரண்பாட்டைத்தானே களையப்போகிறது! ஆகவே மூன்று நபர் குழுவின்
செயல்பாடுகள் ஆசிரியர்களை குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களை
அவமானப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.ஆசிரியர்களே,
சிந்திப்பீர்!
"OPTION" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் "RE-OPTION" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று நபர் குழுவின் பரிந்துரையின்
அடிப்படையில் அரசாணை எண்.240 நாள்.22.07.2013ன் படி "RE-OPTION" வாய்ப்பு
அளிக்கப்படுகிறது. அதாவது 1.1.2006 முதல் 31.5.2009குள் இடைப்பட்ட
காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய
நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட
பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே
வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.
click here to download the GO 240 - re-option for 6 six months
click here to download the GO 240 - re-option for 6 six months
உதாரணமாக பழைய ஊதிய விகிதத்தில் 1.7.2008 இல்
ஒருவர் தேர்வு நிலை பெற்றிருந்தால், அவர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய
நிர்ணயம் செய்யும்போது, 1.1.2006 லேயே புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம்
நிர்ணயம் செய்துகொள்ளாமல், 1.7.2008 வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து
விட்டு தேர்வு நிலை பெற்ற பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம்
செய்து கொள்ள OPTION கொடுக்க முன்னரே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அதாவது தேர்வுநிலை பெற்ற பின்னர் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்வதால் 9300
இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்டு தர ஊதியம் 4300 பெறலாம்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு
தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஒரு வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஊதிய விருப்பம் தெரிவித்து நிர்ணயம்
செய்த ஊதியத்தை விட குறைவான ஊதியத்தில் மறு ஊதியம் நிர்ணயம் செய்ய
"Re-Option" வழங்கமுடியாது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றக்கோரியும் பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்யக்கோரியும் TNPTF 30.08.2013 அன்று மாவட்ட அளவில் மறியல் போராட்டம் அறிவிப்பு
இன்று (03.08.2013) புதுவையில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளியின்
மாநில செயற்குழு கூட்டத்தில் கடந்த வாரம் தமிழக அரசால் வெளியிட்ட மூன்று
நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியான அரசாணையில் இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய விகிதம்
மாற்றம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாததை அடுத்து,
இடைநிலை
ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றக்கோரியும், பங்களிப்பு ஓய்வூதியத்தை
இரத்து செய்யக்கோரியும் 30.08.2013 அன்று மாவட்ட அளவில் மாவட்ட
தலைநகர்களில் மறியல் போராட்டம் செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது
அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்குண்டான ஆயத்தப்படுத்துதல் பணிகளும்
தொடங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யக் கோரி வழக்கு
தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்
கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஆர்.கோம்பை
அரசு நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பிரடெரிக் எங்கல்ஸ் தாக்கல் செய்த
மனு விவரம்: தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் எனது
ஊதியத்தில் 10-சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. 1.4.2006-ல் எனது பணி
வரன்முறைப்படுத்தப்பட்டது. இதுவரையில் ரூ.46,830 பிடித்தம் செய்துள்ளனர்.
அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தில் விவரம் பெற்றேன்.
அதில் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது
ஓய்வூதியத் திட்டமே இல்லை என்பது தெரியவந்தது. ஏனெனில், ஏற்கெனவே இருந்த
ஓய்வூதியத் திட்ட பலன்கள் எதுவும் இதில் கிடைக்காது.
1978-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த அரசுப்
பணி விதிகள் (ஓய்வூதியம்) சட்டத்தின் விதி 2 மற்றும் தமிழ்நாடு பொது
வருங்கால வைப்பு நிதி விதி 4 ன் 3 -வது துணை விதி ஆகியவை திருத்தப்பட்டு,
இந்தப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 2003 ஆகஸ்ட் 6-ல் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஊழியரின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கு ஈடான தொகை அரசின் பங்களிப்பாகச் செலுத்தப்படும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் 31.3.2003-க்கு
முன்னதாகப் பணிபுரிந்த ஊழியர்களுக்குக் கிடக்கும் ஓய்வூதியப் பலன்கள்
அனைத்தும் அதற்கு மறுநாள் முதல் பணியில் சேர்ந்த அனைவருக்கும்
மறுக்கப்பட்டுள்ளது.
இது ஊழியர்களைப் பாகுபாடு செய்வதாகும். மேலும், ஊழியர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
ஒய்வூதியப் பலன் என்பதில் ஓய்வூதியம், குடும்ப
ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி ஆகிய முக்கிய பணப்பலன்கள்
அடங்கியதாகும். இது ஊழியரின் சேவைக்கு ஈடாக வழங்கப்படுவதாகும்.
ஓய்வுக்குப் பிறகு ஊழியர் மட்டுமல்லாமல்,
அவரது குடும்பத்தினரும் அவதிப்படக் கூடாது என்பதற்காக சமூகப் பாதுகாப்பு
கருதி உருவாக்கப்பட்ட திட்டமாகும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தில்
இந்தப் பலன்களை அடியோடு மறுப்பதை ஏற்க முடியாது.
புதிய திட்டத்தில் பணம் திரும்பக்
கிடைப்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மேலும், இந்த திட்டத்தை
நடைமுறைப்படுத்த சட்டப்பூர்வ அமைப்பு உருவாக்கப்படவில்லை.
எனவே, புதிய ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு
பிறப்பித்த அரசாணை எண் 259-ஐ செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி
என்.பால்வசந்தகுமார், மனுவுக்குப் பதிலளிக்குமாறு தமிழக அரசின் நிதித் துறை
(ஓய்வூதியத் துறை) செயலர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், திண்டுக்கல்
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
பி.எட். கல்லூரிகளின் வேலை நாள்கள்180 லிருந்து 200 வேலை நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது,மேலும் பி.எட். படிப்பில் புதிய பாடங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) மாணவர்கள்
எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பி.எட். படிப்பில் புதிய பாடங்களை தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்விக்
குழு கூட்டத்தில் இந்த புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்விக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து
பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் "தினமணிக்கு' அளித்த பேட்டி:
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காக ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் மூலம் நடத்தப்படும் டிஇடி தகுதித் தேர்வில், மிகக் குறைவான
சதவீதத்தினரே தகுதிப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையை மாற்றும் வகையில், பி.எட்.
படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு டிஇடி தேர்வை எளிதாக
எதிர்கொள்ளும் வகையில், இந்த படிப்பில் புதிய பாடப் பிரிவு அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. அதோடு, "கல்வியில் புதுமை மற்றும் பாடத்திட்ட மேம்பாடு'
என்ற பாடத் திட்டமும் வரும் கல்வியாண்டுமுதல் புதிதாக அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில்,
செய்முறைத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறையிலும் மாற்றம்
கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 150, 105 மற்றும் 100 மதிப்பெண்கள் என மூன்று
பகுதிகளாக இருந்த செய்முறைத் தேர்வு இப்போது 200, 200 மதிப்பெண்கள் என
இரண்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
கல்லூரி வேலை நாள்கள் அதிகரிப்பு: மேலும்
பி.எட். கல்லூரிகளின் வேலை நாள்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேசிய ஆசிரியர்
கல்வி கவுன்சில் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, இதுவரை 180 வேலை நாள்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, இனி 200
வேலை நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்
1 முதல் 4ஆம் வகுப்பில் 100க்கு மேல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் SABL அட்டைகள் வழங்க விவரம் கோரப்பட்டுள்ளது.
அரசு / அரசு நிதியதவி பெறும் தொடக்க /
நடுநிலைப் பள்ளிகளில், பல பள்ளிகள் 1 முதல் 4 வகுப்புகளில் 100க்கு மேல்
மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதெனவும், அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 1Set
கற்றல் அட்டைகள் கொண்டு கற்றல் நிகழ்வுகள் நேர்த்தியாக நடைபெற இயலவில்லை
என்றும்,
எனவே அவ்வாறு கூடுதல் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் அட்டைகள் வழங்க விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்கள மாவட்ட வாரியாக 05.08.2013க்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே அவ்வாறு கூடுதல் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் அட்டைகள் வழங்க விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்கள மாவட்ட வாரியாக 05.08.2013க்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய உத்தரவின் படி:
புதிய உத்தரவின் படி:
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் - திரு. இராமேஸ்வர முருகன்,
அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் - திரு. தேவராஜன்,
தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் - திரு.இளங்கோவன்
RMSA இயக்குனர் - திரு.சங்கர்
TRB இயக்குனர் - திருமதி. வசுந்திரதேவி
DTERT இயக்குனர் - திரு.கண்ணப்பன்
மெட்ரிக் பள்ளி இயக்குனர் திரு. பிச்சை
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here