M.Phil/ M.Ed/ P.Hd Incentive | பட்டதாரி ஆசிரியர்களுக்கான M.Phil/ M.Ed/ P.Hd கல்வித்தகுதிக்கான ஊக்க ஊதியம் எந்த தேதியில் இருந்து அமுலுக்கு வரும் ?


பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் பெற தகுதியாக உயர்கல்வி M.Ed உடன் M.Phil மற்றும் P.hd போன்ற பட்டங்களை சேர்த்து அரசாணை 18 , 18.01.2012 அன்று வெளியடப்பட்டது. ஆனால் இந்த அரசாணை எந்த தேதியில் இருந்து அமுலுக்கு வரும் என்பது சார்ந்து குழப்பம் இருக்கிறது . இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர்  கூறுகையில் ,
இது 1993ஆம் வெளியிடப்பட்ட அரசாணைக்கு மாற்றாக வெளியிடப்பட்ட புதிய அரசாணை ஆகும். பழைய அரசாணை  1024, தேதி 09.12.1993 வெளியிடப்பட்ட அரசாணையில் எம்.எட் என்று மட்டுமே உள்ளது ஆனால் புதிய அரசாணையில் எம்.எட் என்பதற்கு பதிலாக M.Ed அல்லது M.Phil அல்லது P.Hd என்று மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 இந்த புதிய அரசாணையில் உரிய தேதி குறிக்கப்பட்டோ அல்லது அரசாணை தேதியோ அமுலுக்கான தேதியாக குறிக்கப்படவில்லை. எனவே இந்த அரசாணை 09.12.1993 முதல் அமலுக்கு வரும் அல்லது M.Ed உயர்கல்வித்தகுதி எந்த வருடம்  முதல் தொலைநிலைக்கல்வி மூலம் நிறுத்தப்பட்டதோ அவ்வருடம் முதல் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.


அதனால் இக்கல்வித்தகுதிகளை ஏற்கனவே முடித்து உள்ள பலருக்கு ஊக்க ஊதியம்  நிலுவைத்தொகையுடன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

ஆயினும் இந்த அரசாணைக்கு உரிய அரசு விளக்கக்கடிதம்  அல்லது இவ்வரசாணையை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயல்முறை உத்தரவுகளை  வெளியிடும் என்றும் ஆசிரியர்கள் எதிர்பார்பதோடு அதைத்தொடர்ந்தே மேற்கூறிய விளக்கத்தை உறுதியாக அறியமுடியும் எனவும் கூறுகின்றனர்.

Popular Posts