மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் கோரி வழக்கு தொடுத்தவர்கள் சார்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் மேற்காண் வகையில் நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுதல் பெற இயலாத நிலை உள்ளது. எனவே இது குறித்து பணிவுடன்,
மாண்புமிகு தமிழகமுதல்வர்அம்மா அவர்களிடமும், மதிப்புமிகு. பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களிடமும் கோரிக்கை மனுக்கள் அனுப்ப தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இங்கே வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவினை பதிவிறக்கம் செய்து உங்கள் முகவரி மற்றும் உங்களைப் பற்றிய விவரங்களை காலி இடத்தில் நிரப்பி கையொப்பமிட்டு பதிவு தபாலில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.