சதவிகித்திலிருந்து தகுதி குறியீட்டை உருவாக்குதல் (letter Grade)
தற்பொழுது ஆசிரியர்கள் மதிப்பீட்டு முறையில் CCE EVALUATION Continuous and Comprehensive Evaluation முறையைபின்பற்றி வருகிறார்கள் அதில் மார்க்கை கிரேடாக மாற்றMicrosoft Excel -லை எவ்வாறு பயன் படுத்துவது என்று பார்ப்போம்
முதலில் நான்கு வளரறி மதிப்பெண்களில் அதிக இரண்டுமதிப்பெண்களின் கூடுதலை காண கீழ்கண்ட Formula வை பயன்படுத்தலாம்.
=SUM(LARGE(C13:F13,{1,2}))
அடுத்து மதிப்பெண்ணை Grade ஆக மாற்ற Microsoft Excel-ஐகீழ்கண்ட முறைகளை பின்பற்றி பயன்படுத்தலாம்.
சதவிகித்திலிருந்து தகுதி குறியீடாக மாற்ற விதிமுறைகளைச்( Formula)சேர்க்கலாம்.
முதலில் Worksheetல் ஒரு பகுதியில்கீழ்கண்டவகையில் Lookup Table-ஐ உருவாக்க வேண்டும்.
Lookup table இரண்டு Columns –ஐக் கொண்டது முதல்Columnமதிப்பெண்ணைக் குறிக்கும். இரண்டாவது Columnஅதனுடைய தொடர்புடையGrade -ஐ குறிக்கும். இந்த rangeல்மிகவும் குறைந்த மதிப்பெண்ணில் தொடங்கி உச்ச மதிப்பெண்வரையில் முடியும்.
எந்த cell ல் கிரேட் வரவேண்டுமோ அந்த cell-ஐ கிளிக் செய்யவும்.
Edit formula –வை click செய்யவும்.
Name box Drop down list – இல் click செய்யவும். பிறகு Lookup ஐதேர்ந்தெடுக்கவும்.
Lookup_value ல் கர்சரை வைத்து பிறகு கிரேடாக மாற்றவேண்டியசெல்லுக்கு சென்று click செய்யவும். இப்பொழுது அந்தசெல்Lookup_value ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
Lookup-vector-ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கிவைத்திருந்த lookup table –க்கு சென்று மார்க் இருக்கும் COLUMNமுழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
Result_vector –ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கிவைத்திருந்தlookup table –க்கு சென்று கிரேட் இருக்கும் COLUMNமுழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
இப்பொழுது Formula bar –ஐ click செய்யவும் அதில்=LOOKUP(M13,T:T,U:U) என்றுFormula தோன்றும். இந்த வரிசையில்Formula-ஐ இழுக்கவும். Column –இன் கடைசிவரை இழுத்தால்கொடுக்கப்பட்டுள்ள தகுதி குறியீடுகள் எல்லா cell-களிலும்தோன்றும்.
File Menu-வில் Save –ஐ Click செய்யவும்.
அன்பார்ந்த ஆசிரியர்களே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளும்வகையில் 50 மாணவர்களுக்கான மதிப்பீட்டு படிவத்தைதயாரித்து கீழ் கண்ட இணைப்பில் CCE_GRADE.rar என்றகோப்பை இணைத்துள்ளேன் அதை Download செய்து Extractசெய்து பயன்படுத்தி பாருங்கள்.
DOWNLOAD செய்ய CCE_GRADE ஐ CLICK செய்யவும்.