3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
Special Recruitment of Computer Instructor 2006 - 07 - Re-examination Individual Query
Click Here
PECIAL TEST TO THE TEMPORARY COMPUTER INSTRUCTORS WORKING IN GOVERNMENT HIGHER SECONDARY SCHOOLS.
PROVISIONALLY SELECTED CANDIDATES 50% AND ABOVE IN THE SPECIAL RE-EXAMINATION HELD ON 24.01.2010
In pursuant to the orders of the Hon’ble High Court, Madras in W.A.No.837 of 2010 in W.P.No.17822 of 2010 dated 20.12.2012, the list of 120 candidates who have secured 65 marks and above (50% and above) to the post of Computer Instructors is released.
Further communication regarding posting and placement will be issued by the Director of School Education, Chennai.6
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. In correct list will not confer any right of enforcement.
CCE - மார்க்கை கிரேடாக EXCEL SHEET ல் மாற்ற சில வழிமுறைகள்
சதவிகித்திலிருந்து தகுதி குறியீட்டை உருவாக்குதல் (letter Grade)
தற்பொழுது ஆசிரியர்கள் மதிப்பீட்டு முறையில் CCE EVALUATION Continuous and Comprehensive Evaluation முறையைபின்பற்றி வருகிறார்கள் அதில் மார்க்கை கிரேடாக மாற்றMicrosoft Excel -லை எவ்வாறு பயன் படுத்துவது என்று பார்ப்போம்
முதலில் நான்கு வளரறி மதிப்பெண்களில் அதிக இரண்டுமதிப்பெண்களின் கூடுதலை காண கீழ்கண்ட Formula வை பயன்படுத்தலாம்.
=SUM(LARGE(C13:F13,{1,2}))
அடுத்து மதிப்பெண்ணை Grade ஆக மாற்ற Microsoft Excel-ஐகீழ்கண்ட முறைகளை பின்பற்றி பயன்படுத்தலாம்.
சதவிகித்திலிருந்து தகுதி குறியீடாக மாற்ற விதிமுறைகளைச்( Formula)சேர்க்கலாம்.
முதலில் Worksheetல் ஒரு பகுதியில்கீழ்கண்டவகையில் Lookup Table-ஐ உருவாக்க வேண்டும்.
Lookup table இரண்டு Columns –ஐக் கொண்டது முதல்Columnமதிப்பெண்ணைக் குறிக்கும். இரண்டாவது Columnஅதனுடைய தொடர்புடையGrade -ஐ குறிக்கும். இந்த rangeல்மிகவும் குறைந்த மதிப்பெண்ணில் தொடங்கி உச்ச மதிப்பெண்வரையில் முடியும்.
எந்த cell ல் கிரேட் வரவேண்டுமோ அந்த cell-ஐ கிளிக் செய்யவும்.
Edit formula –வை click செய்யவும்.
Name box Drop down list – இல் click செய்யவும். பிறகு Lookup ஐதேர்ந்தெடுக்கவும்.
Lookup_value ல் கர்சரை வைத்து பிறகு கிரேடாக மாற்றவேண்டியசெல்லுக்கு சென்று click செய்யவும். இப்பொழுது அந்தசெல்Lookup_value ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
Lookup-vector-ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கிவைத்திருந்த lookup table –க்கு சென்று மார்க் இருக்கும் COLUMNமுழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
Result_vector –ல் கர்சரை வைத்து பிறகு ஏற்கனவே உருவாக்கிவைத்திருந்தlookup table –க்கு சென்று கிரேட் இருக்கும் COLUMNமுழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
இப்பொழுது Formula bar –ஐ click செய்யவும் அதில்=LOOKUP(M13,T:T,U:U) என்றுFormula தோன்றும். இந்த வரிசையில்Formula-ஐ இழுக்கவும். Column –இன் கடைசிவரை இழுத்தால்கொடுக்கப்பட்டுள்ள தகுதி குறியீடுகள் எல்லா cell-களிலும்தோன்றும்.
File Menu-வில் Save –ஐ Click செய்யவும்.
அன்பார்ந்த ஆசிரியர்களே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளும்வகையில் 50 மாணவர்களுக்கான மதிப்பீட்டு படிவத்தைதயாரித்து கீழ் கண்ட இணைப்பில் CCE_GRADE.rar என்றகோப்பை இணைத்துள்ளேன் அதை Download செய்து Extractசெய்து பயன்படுத்தி பாருங்கள்.
DOWNLOAD செய்ய CCE_GRADE ஐ CLICK செய்யவும்.
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்
பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்கு காண்போம்.
நமது வலைத்தளத்தில் இடது புறம் உள்ள இணைய தளத்தில் பதிவு (Online Entry) என்ற இடத்தில உள்ள TNDSEன் மீது Click (அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது) செய்யவும்.
அரசு பள்ளி கல்வி துறை வலைதளத்திற்கு தாங்கள் செல்லுவீர்கள். அங்கு உள்ள login ஐ click செய்யவும்.
தங்கள் பள்ளியின் Username மற்றும் Password Enter செய்யவும்.
கேட்கப்பட்டு உள்ள தங்கள் பள்ளியின் விவரங்களை type செய்துவிட்டு Save செய்யவும்.
அடுத்ததாக Add Post Details என்பதை Click செய்யவும்.
தங்கள் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் பதவியை கிளிக் செய்யவும். பிறகு Conform கொடுக்கவும்.
தலைமை ஆசிரியர் பணியிடம் vacant ஆக இருப்பின் Add Vacancy ஐ கிளிக் செய்யவும். தலைமை ஆசிரியர் பதவி நிரப்ப பட்டு இருந்தால் Add in Position என்பதை கிளிக் செய்யவும்.
தலைமை ஆசிரியர் பற்றிய தேவையான விவரங்களை நிரப்பிய பிறகு save செய்யவும். பிறகு தலைமை ஆசிரியர் பதவியை Reset செய்து மீதம் உள்ள பணியிடங்களில் இதே போன்று தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும். தகவல்கள் நிரப்பியவுடன் Save செய்ய மறக்க வேண்டாம்.
ஒருமுறை செய்த தகவல்களில் தேவையான மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் Edit ஐ கிளிக் செய்து மாற்றங்களை பதிவு செய்யலாம். மீண்டும் Save செய்ய மறக்க வேண்டாம்
தகவல்கள் அனைத்தும் பதிவு செய்த பிறகு Add Post Summary கிளிக் செய்து தேவையான மாற்றங்கள் செய்து save செய்ய வேண்டும்.
Post Summary இல் நாம் பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் சரிபார்த்தபின் தகவல்களை Select செய்து Ctrl + C மூலம் Copy seidhu Microsoft Word இல் Paste செய்து Print எடுக்கவும்.
இறுதியாக Log Out செய்ய வேண்டும்.
நன்றி!
M.Phil/ M.Ed/ P.Hd Incentive | பட்டதாரி ஆசிரியர்களுக்கான M.Phil/ M.Ed/ P.Hd கல்வித்தகுதிக்கான ஊக்க ஊதியம் எந்த தேதியில் இருந்து அமுலுக்கு வரும் ?
பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் பெற தகுதியாக உயர்கல்வி M.Ed உடன் M.Phil மற்றும் P.hd போன்ற பட்டங்களை சேர்த்து அரசாணை 18 , 18.01.2012 அன்று வெளியடப்பட்டது. ஆனால் இந்த அரசாணை எந்த தேதியில் இருந்து அமுலுக்கு வரும் என்பது சார்ந்து குழப்பம் இருக்கிறது . இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில் ,
இது 1993ஆம் வெளியிடப்பட்ட அரசாணைக்கு மாற்றாக வெளியிடப்பட்ட புதிய அரசாணை ஆகும். பழைய அரசாணை 1024, தேதி 09.12.1993 வெளியிடப்பட்ட அரசாணையில் எம்.எட் என்று மட்டுமே உள்ளது ஆனால் புதிய அரசாணையில் எம்.எட் என்பதற்கு பதிலாக M.Ed அல்லது M.Phil அல்லது P.Hd என்று மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய அரசாணையில் உரிய தேதி குறிக்கப்பட்டோ அல்லது அரசாணை தேதியோ அமுலுக்கான தேதியாக குறிக்கப்படவில்லை. எனவே இந்த அரசாணை 09.12.1993 முதல் அமலுக்கு வரும் அல்லது M.Ed உயர்கல்வித்தகுதி எந்த வருடம் முதல் தொலைநிலைக்கல்வி மூலம் நிறுத்தப்பட்டதோ அவ்வருடம் முதல் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதனால் இக்கல்வித்தகுதிகளை ஏற்கனவே முடித்து உள்ள பலருக்கு ஊக்க ஊதியம் நிலுவைத்தொகையுடன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
ஆயினும் இந்த அரசாணைக்கு உரிய அரசு விளக்கக்கடிதம் அல்லது இவ்வரசாணையை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயல்முறை உத்தரவுகளை வெளியிடும் என்றும் ஆசிரியர்கள் எதிர்பார்பதோடு அதைத்தொடர்ந்தே மேற்கூறிய விளக்கத்தை உறுதியாக அறியமுடியும் எனவும் கூறுகின்றனர்.
இந்த புதிய அரசாணையில் உரிய தேதி குறிக்கப்பட்டோ அல்லது அரசாணை தேதியோ அமுலுக்கான தேதியாக குறிக்கப்படவில்லை. எனவே இந்த அரசாணை 09.12.1993 முதல் அமலுக்கு வரும் அல்லது M.Ed உயர்கல்வித்தகுதி எந்த வருடம் முதல் தொலைநிலைக்கல்வி மூலம் நிறுத்தப்பட்டதோ அவ்வருடம் முதல் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதனால் இக்கல்வித்தகுதிகளை ஏற்கனவே முடித்து உள்ள பலருக்கு ஊக்க ஊதியம் நிலுவைத்தொகையுடன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
ஆயினும் இந்த அரசாணைக்கு உரிய அரசு விளக்கக்கடிதம் அல்லது இவ்வரசாணையை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயல்முறை உத்தரவுகளை வெளியிடும் என்றும் ஆசிரியர்கள் எதிர்பார்பதோடு அதைத்தொடர்ந்தே மேற்கூறிய விளக்கத்தை உறுதியாக அறியமுடியும் எனவும் கூறுகின்றனர்.
மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் பெற்று இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்கள் பிற மாவட்டங்களுக்கு மாறுதல் தற்சமயம் கோர இயலாது- என்ன செய்யலாம்?
மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் கோரி வழக்கு தொடுத்தவர்கள் சார்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் மேற்காண் வகையில் நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுதல் பெற இயலாத நிலை உள்ளது. எனவே இது குறித்து பணிவுடன்,
மாண்புமிகு தமிழகமுதல்வர்அம்மா அவர்களிடமும், மதிப்புமிகு. பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களிடமும் கோரிக்கை மனுக்கள் அனுப்ப தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இங்கே வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவினை பதிவிறக்கம் செய்து உங்கள் முகவரி மற்றும் உங்களைப் பற்றிய விவரங்களை காலி இடத்தில் நிரப்பி கையொப்பமிட்டு பதிவு தபாலில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை!
"சாட்டை' படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித "கிலி'யை ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு. இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 7:45 முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து இவர் கூறியதாவது:நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே விடுப்பு எடுப்பது என்பது அரிதுதான். இதை ஒரு சாதனையாக நான் எப்போதும் கருதியது கிடையாது. கடமையாகவே நினைக்கிறேன். அதிலும், அரசு பள்ளி ஆசிரியை என்பதால் கூடுதல் பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன். தினமும் அதிகாலை 5:00 மணிக்கே எனக்கு நாள் பணி துவங்கிவிடும்.காய்ச்சல் வந்தபோது, விபத்து நேரிட்ட போது கூட பள்ளிக்கு வந்து விட்டேன். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகள் விடுமுறை நாட்களில் வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன்.
மற்ற நாட்களில் எனக்கு பதில் கணவர் செல்வார். என் பணிக் காலத்தில் இதுவரை 20 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளேன். நான் மட்டும் இல்லை. என் மகன் அரவிந்தன், மகள் அபர்ணா ஆகியோரும் பெரும்பாலும் விடுப்பு எடுப்பதுஇல்லை. நான் எடுக்கும் பாடப்பிரிவில் அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். பெரும்பாலான ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்துள்ளேன். மீதமுள்ள ஒன்பது ஆண்டுகள் விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்று மாணவ, மாணவியர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பது தான் என் லட்சியம்.இவ்வாறு ஆசிரியை சசிகலாதேவி உற்சாகத்துடன் கூறினார்.
பள்ளி மாணவ, மாணவிகள் விவரம் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய கூடாது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை தலைமை ஆசிரியர்களை கொண்டு பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் முருக. செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரத்தை பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு பதிவேற்றம் செய்வதை கைவிட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர், இரவு நேரக்காவலர், அலுவலக உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். தொடக்க கல்வித் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒன்றிய, உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலக காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வேலை நிறுத்த உரிமை, தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும். வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வரும் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் 48 மணி நேர பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளது. இதில் தேசபக்த உணர்வோடு ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்
கட்டாயக்கல்வி சட்டத்திற்கு எதிராக (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்யும் முடிவை, கல்வித்துறை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஒரே நேரத்தில், 2,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால், ஒட்டு மொத்த ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால், இம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, எந்த வகை பள்ளிகளாக இருந்தாலும், 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின் அறிவிப்பு வெளியாகி, அதன் அடிப்படையில் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், 2,000 பேர் வரை சேர்ந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. இந்த பணி நியமனம், ஆர்.டி.இ., சட்டத்திற்கு எதிரானது என்பதால், இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய, கல்வித்துறைக்கு, அரசு உத்தரவிட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில், முதல்கட்டமாக, தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்ய, துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. இந்த தகவல் தெரிந்ததும், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மத்தியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
பணி நீக்க உத்தரவு கடிதங்கள், நேற்று வழங்க இருந்த நிலையில், பிரச்னை குறித்த முழு விவரங்களையும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, பணி நீக்க உத்தரவு வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகி தெரிவித்தார். இந்த பிரச்னை குறித்து, முழுமையாக ஆய்வு செய்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது
: முதலில் மேற்கண்ட தேதிக்குப் பின், ஆசிரியர் பணி நியமனம் செய்யக் கூடாது என, சம்பந்தபட்ட துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். இதை, அதிகாரிகள் செய்யவில்லை. மேலும், ஆசிரியர் நியமனங்களுக்கு, அதிகாரிகள் அனுமதியும் வழங்கி உள்ளனர். இப்படி, ஆரம்பத்தில் நடந்த தவறுகளுக்கு, அதிகாரிகளும் ஒரு காரணமாக உள்ள நிலையில், திடீரென ஆசிரியர்களை மட்டும் பழிவாங்குவது நியாயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எம்.பில்., பி.எச்டி., பட்டங்களை பெற்றிருந்தாலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு
பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட். படிப்பிற்குப் பதிலாக எம்.பில்., பி.எச்டி. பட்டங்களைப் பெற்றிருந்தாலும் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வைப் பெறலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி., தேர்வு பெற்ற பிறகு முதல் ஊதிய உயர்வைப் பெறுகின்றனர். அவர்கள் ஆசிரியர்களாகவோ, தலைமையாசிரியர்களாகவோ பணிபுரியும்போது எம்.எட் பட்டம் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பல்கலைக்கழகங்களில் தொலைநிலைப் பாடப்பகுதிகளில் எம்.எட். பட்டம் நீக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, அவர்கள எம்.எட். கல்வித் தகுதியை பெற முடியாத சூழல் உள்ளது. எனவே, இப்போது எம்.பில். அல்லது பி.எச்டி. பட்டம் மட்டுமே தொலைநிலைக் கல்வி நிறுவனங்களில் பெறும் சூழல் நிலவுகிறது. பட்டதாரி ஆசிரியர் மொத்த பணிக் காலத்தில் 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில், இரண்டாவது ஊக்கத் தொகை பெற தகுதியான உயர் கல்வி எம்.எட். மட்டுமே என்பதை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த தமிழக அரசு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற உயர் கல்வி தகுதியாக எம்.எட் மட்டுமே என்பதற்குப் பதிலாக, எம்.எட். அல்லது எம்.பில் அல்லது பி.எச்டி. பெற்றிருந்தாலும் அதை உயர் கல்வியாகக் கருதி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனினும், ஒரு ஆசிரியரின் பணிக்காலத்தில் அதிகபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்தும் என எதிர்பார்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841
(மேற்காணும் எண்ணிக்கைகள் கூடுதல் பெற வாய்ப்புண்டு)
மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்த்தல் மூலம் கட்டாய கல்வியுரிமை சட்டம் 2009 சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தொடக்க மற்றும் பள்ளிகல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு (10 வகுப்பை தவிர்த்து) பாடல், பேச்சு, கட்டுரை,நாடகம், ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளை பள்ளி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடத்தி பரிசுகள் வழங்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மற்றும் போட்டி தலைப்புகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு
2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம்
மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து நடப்பு 2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க
click here to download the DEE format for Crayons and Colour Pencils 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 2013-2014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 01.01.2013 நிலவரப்படி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதியுள்ள 30 உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களின் பெயர்பட்டியலை 2013-2014ஆம் கல்வியாண்டு பதவியுயர்வு மூலம் நியமனம் செய்ய விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
click here to download the DEE proceeding and Formats of AEEO/AAEEO to HSS HM promotion panel Reg
click here to download the DEE proceeding and Formats of AEEO/AAEEO to HSS HM promotion panel Reg
CPS குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு கேரள அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
கேரளாவில் அரசு ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலை நிறுத்தம், முதல்வர் உம்மன்சாண்டியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.
கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு தீர்மானித்தது. இதற்கு அரசு ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, கடந்த 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு ஊழியர்கள் தொடங்கினர். இதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. முதல் நாளே 60 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிக்கு வந்தனர். நாளுக்கு நாள் பணிக்கு வரும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இதற்கிடையே, பணிக்கு வந்த ஊழியர்களை பல இடங்களில் போராட்டக்காரர்கள் தாக்கினர். கல்வீச்சு உட்பட வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் இரவு முதல்வர் உம்மன்சாண்டி, நிதி அமைச்சர் கே.எம். மாணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று அதிகாலை 2 மணி வரை இது நீடித்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து, அரசு ஊழியர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பினர்.
லஞ்சம், கெடுபிடி அதிகரிப்பு: பள்ளிகளை விற்க தனியார் திட்டம்
தமிழகத்தில் அதிகரித்துவிட்ட லஞ்சம் மற்றும் கெடுபிடியால், பாதிக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதில் பலரும் தங்களது பள்ளியை விற்கவும், மூடவும் தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் சமீப காலமாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது வரை, சி.பி.எஸ்.சி., பள்ளிகள் உள்பட, 15 ஆயிரம் பள்ளிகள் தனியார் வசம் உள்ளன. இவற்றில், 1,000 பள்ளிகள் பிரபலமான பள்ளிகளாகவும், 3,000 பள்ளிகள் வரை, லாபத்தில் இயங்கும் பள்ளிகளாகவும் உள்ளன.
மீதமுள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு, அரசின் கெடுபிடி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளால், பள்ளி நடத்துவதே சவாலான விசயமாக மாறியுள்ளது. பள்ளி அங்கீகாரத்துக்கு, ஐந்து லட்சம் வரையிலும், சி.பி.எஸ்.சி., பள்ளியாக இருந்தால், 35 லட்ச ரூபாயும் வரையும் லஞ்சமாக வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதுமட்டுமின்றி, உள்ளூர் கட்சி பிரமுகர்களையும் கவனித்து, அவர்களின் பரிந்துரையும் அங்கீகாரத்துக்கு அவசியம். அதுமட்டுமின்றி, தாசில்தார், தீயணைப்புத் துறையினரிடம் சான்றிதல், கட்டிட உரிமை சான்று, கட்டிட உறுதிச்சான்று, சுகாதாரச் சான்று உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும், பல லட்ச ரூபாய் வரை லஞ்சமாக தர வேண்டியுள்ளது.
கட்டாயக் கல்விச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், 25 வகையான புது விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வகுப்பறைக்கும், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்கள், அதற்கு மேல், 40 மாணவர்கள் வீதம், ஐந்து வகுப்பறைகள் மட்டுமே நடத்த வேண்டும். வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கெடுபிடிகளையும் அரசு விதித்துள்ளது.
தமிழ்நாடு நர்ஷரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: இன்றைய நிலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே பள்ளியை இயக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
நவீன கட்டிடம், புதிய வசதி, வாகன வசதி, பிரபலமான பெயர் ஆகியவை இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை உள்ளது. இவை இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. அரசு தரப்பிலும், பலவித நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
நல்ல ரிசல்ட் கொடுத்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்கும். ஆனால், டெட் தேர்வு எழுதி, 80 சதவிகித திறமையான ஆசிரியர்கள் திடீரென அரசுப்பணியில் சேர்ந்துவிட்டனர். இதனால் ஆசிரியர் பற்றாக்குறையும் உருவாகிவிட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு அதிக அளவில் சம்பளம், இ.எஸ்.ஐ., - பி.எஃப்., உள்ளிட்ட சலுகைகளும் வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
அதிகமாகிவிட்ட மின்கட்டணம், அதிகாரிகளுக்கு லஞ்சம் என, பல மடங்கு செலவு அதிகமாகி விட்டதால், பள்ளியை நடத்துவது பெரும் சிரமமான விசயமாக மாறிவிட்டது. குறிப்பாக, 500க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நர்சரி பள்ளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதில் பெரும்பாலானோர் பள்ளிகளை மூடவும், விற்கவும் தயாராகிவிட்டனர். பள்ளிகள் நடத்துவதை விட, திருமண மண்டபமோ, வணிக வளாகமோ நல்ல லாபத்தை தரும் என்ற முடிவுக்கு பலரும் வந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
Income Tax 2012-13 - Deductions and Schemes :
- Deduction in tax will be given for amount upto Rs.1 lakh invested in tax savings under 80C.
- 50 % deduction on investment upto Rs.50,000 directly in equities for taxpayers with annual income upto Rs. 10 lacs will be given under Rajiv Gandhi Equity Savings Scheme.
- With the new slab salaried employees will have minimum Rs. 2000 tax relief.
- A deduction of upto Rs 10,000 for interest from savings bank accounts is proposed while computing taxable income.
- If taxable salary income is up to Rs 5,00,000 and interest from savings bank accounts is up to Rs 10,000, no tax return is to be filed.
- Rs 5,000 to cover expenses for preventive health check-ups for self and family members are deducted from taxable income within the overall limit of Rs 15,000 for Mediclaim insurance premium.
- Capital gains from sale of house property will not be taxable, if invested in equity shares of eligible companies (typically SMEs).
- Tax benefits (deduction for premium or exemption for maturity proceeds) are no longer available to new life insurance policies having annual premiums of more than 10% of sum assured (this does not take into account the loyalty bonus component).
New Tax Saving Scheme Rajiv Gandhi Equity Savings Scheme (RGESS)
- RGESS scheme is introduced under the new Section -80CCG- of the Income Tax Act, 1961.
- Scheme is open only to newcomers to equity market. This will be ensured from the PAN numbers. This includes those who have opened the Demat account but have not made any transaction in equity / derivatives till the date of notification of this Scheme. This includes also those account holders other than the first account holder who wish to open a fresh account.
- Only for those whose annual income is up to Rs. 10 lakh.
- Maximum Investment permissible under the Scheme is Rs. 50,000.
- Investor would get a 50% deduction of the amount invested from the taxable income for that year.
- Investment should be in stocks listed under the BSE 100 or CNX 100, or Navratna, Maharatna or Miniratna PSU stocks. Follow-on Public Offers (FPOs) of the above companies would also be eligible under the Scheme. IPOs of PSUs, which are getting listed in the relevant financial year and whose annual turnover is not less than Rs. 4000 cr for each of the immediate past three years, would also be eligible.
- Exchange Traded Funds (ETFs) and Mutual Funds (MFs) that have RGESS eligible securities as their underlying are also eligible under RGESS.
- Investments in installments are also permitted.
- A lock-in period of three years will be applicable including an initial blanket lock-in period of one year, commencing from the date of last purchase of securities under RGESS.
- After the first year, investors would be allowed to trade in the securities in furtherance of the goal of promoting an equity culture and as a provision to protect them from adverse market movements.
- Investors would, however, be required to maintain their level of investment during these two years at the amount for which they have claimed income tax benefit or at the value of the portfolio before initiating a sale transaction, whichever is less, for at least 270 days in a year. The calculation of 270 days includes those days pursuant to the day on which the market value of the residual shares /units has automatically touched the stipulated value after the date of debit.
புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு கேரள அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து கேரளாவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டத்தால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பள்ளிகள் மூடப்பட்டன. போராட்டத்துக்கு கேரள அரசு பஸ் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்ததால் பயணிகளும் பாதிப்படைத்தனர்.
கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் சமீபத்தில் அறிமுகபடுத்தப்பட்டது. இதன்படி, ஊழியர்களும் தங்கள் ஊதியத்தில் இருந்து ஒரு பங்கை ஓய்வூதியத்துக்கு செலுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பங்களிப்பு திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் 8ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால் கோரிக்கையை ஏற்க அரசு மறுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. ஆனால் அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி நேற்று வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை குறைவாக இருந் தது. அரசு ஆதரவு தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை குறைவாக இருந்தது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம் உட்பட பல மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். இதனால் மாணவர்களால் வகுப்பறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிகளை பூட்டிச் சென்ற தலைமைஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் உம்மன்சாண்டி உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு நேற்று கேரள அரசு பஸ் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை குறைவாக இருந்தது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம் உட்பட பல மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். இதனால் மாணவர்களால் வகுப்பறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிகளை பூட்டிச் சென்ற தலைமைஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் உம்மன்சாண்டி உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு நேற்று கேரள அரசு பஸ் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
முதல்-மந்திரி உம்மன் சாண்டி இதுபற்றி கூறுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் கண்டிக்கத்தக்கது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேலைக்கு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். வேலைக்கு வருபவர்களை யாராவது தடுத்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதற்கிடையே இன்று காலை தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் பஸ்கள் அனைத்தும் கேரள எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் களியக்காவிளை பகுதியில் நிறுத்தப்பட்டன. காலை 7.30 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதற்கிடையே இன்று காலை தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் பஸ்கள் அனைத்தும் கேரள எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் களியக்காவிளை பகுதியில் நிறுத்தப்பட்டன. காலை 7.30 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
Income Tax - 2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு?
Income tax slab for fy 2012-13
The new and revised income tax slabs and rates applicable for the financial year (FY) 2012-13 and assessment year (AY) 2013-14 are mentioned below:
New Income tax slab for fy 2012-13 / ay 2013-14
| ||
முதல் பிரிவு (பொது)
| ||
S. No.
|
Income Range
|
Tax percentage
|
1
|
Up to Rs 2,00,000
|
No tax / exempt
|
2
|
2,00,001 to 5,00,000
|
10%
|
3
|
5,00,001 to 10,00,000
|
20%
|
4
|
Above 10,00,000
|
30%
|
2வது பிரிவு (60 வயதிற்கு உட்பட பெண்கள்)
| ||
S. No.
|
Income Range
|
Tax percentage
|
1
|
Up to Rs 2,00,000
|
No tax / exempt
|
2
|
2,00,001 to 5,00,000
|
10%
|
3
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
| |
3வது பிரிவு (60 முதல் 80 வயதிற்கு உட்பட்ட மூத்த குடிமக்கள்)
| ||
1
|
Up to Rs 2,50,000
|
No tax / exempt
|
2
|
2,50,001 to 5,00,000
|
10%
|
3
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
| |
4வது பிரிவு (80 வயதை கடந்த மிக மூத்த குடிமக்கள்)
| ||
1
|
Up to Rs 5,00,000
|
No tax / exempt
|
2
|
5,00,001 to 10,00,000
|
20%
|
3
|
Above 10,00,000
|
30%
|
For normal category the simple calculation is as follows
- Taxable Income in 10% slab maximum tax will be Rs 30000
- Taxable Income in 20% slab maximum tax will be Rs 30000 + Rs 1,00,000 total Rs 1,30,000
- Taxable Income in 30% slab minimum tax will be Rs Rs 1,30,000
Education and other cess will be in addition to this.
வருமான வரியை சேமிப்பது எப்படி?
மாத சம்பளம் பெறுபவர்கள் வருமான வரியை, வருமான வரிச் சட்டம் 80சி, 80டி பிரிவுகளில் வழங்கப்படும் விலக்குகளை எப்படிப் பெறலாம்?
மாத சம்பளம் பெறுபவர்கள் சரியாக திட்டமிட்டால் வருமான வரி செலுத்துவதை மிச்சப்படுத்தலாம்.
மாத சம்பளம் பெறுபவர்கள் சரியாக திட்டமிட்டால் வருமான வரி செலுத்துவதை மிச்சப்படுத்தலாம்.
பிரிவு 80 சி: இந்த பிரிவின் கீழ் நீங்கள் தேசிய சேமிப்பு பத்திரம், வங்கி வைப்பு நிதி, தொழிலாளர் வருங்கால சேம நல நிதி, பொது சேம நல நிதி, பரஸ்பர நிதிகள் வெளியிடும் பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள்,காப்பீடுக்கு செலுத்தும் பிரிமியம் மற்றும் வருங்கால ஓய்வுதியம் ஆகியவைகளுக்கு செலுத்தும் பிரிமியம் ஆகியவைகளில் செய்யும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 சிசிசி: 80 சி பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவு, காப்பீடு நிறுவனங்களின் ஓய்வுதிய திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டி: இந்த பிரிவின் படி கூட்டாக வாழும் ஹிந்து குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், வருமான வரி செலுத்துபவர், அவரின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு செய்யப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில் செலுத்தப்படும் பிரிமியத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி வருமான வரி செலுத்த வேண்டிய வருவாயில் அதிகபட்சமாக ரூ.15,000 வரை வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்கள் எனில் ரூ.20 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டிடி: இந்த பிரிவின் படி வருமான வரி செலுத்துபவரை நம்பியுள்ள உடல் ஊனத்துக்கான மருத்துவ செலவுக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி அதிகபட்சமாக ரூ.50,000க்கு வருமான வரி விலக்கு பெறலாம். அல்லது குணப்படுத்த முடியாத நீண்ட கால நோயாக இருந்தால் ரூ.75 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டிடிபி: இந்த பிரிவின் படி சில குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை கட்டணத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவ செலவுக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரையிலும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.60ஆயிரம் வரையிலும் வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 இ: இந்த பிரிவின் கீழ் உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இந்த வருமான வரி விலக்கு வட்டிக்கு மட்டும் என்பது கவனிக்கத்தக்கது.
பிரிவு 80 சிசிசி: 80 சி பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவு, காப்பீடு நிறுவனங்களின் ஓய்வுதிய திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டி: இந்த பிரிவின் படி கூட்டாக வாழும் ஹிந்து குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், வருமான வரி செலுத்துபவர், அவரின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு செய்யப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில் செலுத்தப்படும் பிரிமியத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி வருமான வரி செலுத்த வேண்டிய வருவாயில் அதிகபட்சமாக ரூ.15,000 வரை வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்கள் எனில் ரூ.20 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டிடி: இந்த பிரிவின் படி வருமான வரி செலுத்துபவரை நம்பியுள்ள உடல் ஊனத்துக்கான மருத்துவ செலவுக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி அதிகபட்சமாக ரூ.50,000க்கு வருமான வரி விலக்கு பெறலாம். அல்லது குணப்படுத்த முடியாத நீண்ட கால நோயாக இருந்தால் ரூ.75 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டிடிபி: இந்த பிரிவின் படி சில குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை கட்டணத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவ செலவுக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரையிலும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.60ஆயிரம் வரையிலும் வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 இ: இந்த பிரிவின் கீழ் உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இந்த வருமான வரி விலக்கு வட்டிக்கு மட்டும் என்பது கவனிக்கத்தக்கது.
பிரிவு 80 ஜி: இந்த பிரிவின் கீழ் குறிப்பிட்ட அமைப்புகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் நன்கொடைக்கு வருமானவரி விலக்கு பெறலாம். நன்கொடை செலுத்திய மொத்த தொகையில் 50 அல்லது 100 விழுக்காடு வரை வரிவிலக்கு பெறலாம். ஆனால் இதற்கு வரி விலக்கு பெறும் தொகை, மொத்த வருவாயில் 10 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here