TET பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்


பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை எம்.ஜி.ஆர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு எதற்கு? - TNPTF

Popular Posts