3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு:- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகியோர் விடுத்துள்ள செய்தி:
முறைகேடான இட மாறுதலை கண்டித்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் மாநில அளவில் நடந்தன. இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை அறவே தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மாநில தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முன் அனுமதி பெறாமல் ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு எத்தகைய போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகியோர் விடுத்துள்ள செய்தி:
ஆசிரியர்களது பிரச்சனைகளை துறை அலுவலர்கள் உரிய முறையில் உடன் தலையிட்டு உத்தரவுகள் பிறப்பித்தால், மற்றும் தமிழகஅரசு இயக்க பொறுப்பாளர்களை அழைத்து பேசி ஊதிய முரண்பாடுகளை கலைந்தால் எதற்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்?
அரசு- அலுவலர்கள் கையில் தான் இப்போரா ட் டங்கள் உள்ளது என்றனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகியோர் விடுத்துள்ள செய்தி:
ஆசிரியர்களது பிரச்சனைகளை துறை அலுவலர்கள் உரிய முறையில் உடன் தலையிட்டு உத்தரவுகள் பிறப்பித்தால், மற்றும் தமிழகஅரசு இயக்க பொறுப்பாளர்களை அழைத்து பேசி ஊதிய முரண்பாடுகளை கலைந்தால் எதற்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்?
அரசு- அலுவலர்கள் கையில் தான் இப்போரா ட் டங்கள் உள்ளது என்றனர்.
TET பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை எம்.ஜி.ஆர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு எதற்கு? - TNPTF
அரசு ஊழியர்களுக்கு 25% அகவிலைப்படி உயர்வு; மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகிறது
ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அவர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட இருக்கிறது என்று மாநிலமுதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்திருக்கிறார்.
ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் ஒன்றுபட்டு கடந்த பல ஆண்டுகளாகவே தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்தன. ஹரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவிருப்பதை ஒட்டி, மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா முன்வந்திருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக அவர் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 25 சதவீதம் அதிகரிக்கப்படும். ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 58 ஆக இருக்கிறது. அதனை 60 ஆக மாநில அரசு உயர்த்த இருக்கிறது. அதற்கு முன்பு ஓய்வுபெறும் ஊழியரிடம் 58 வயதில் ஓய்வு பெற சம்மதமா அல்லது மேலும் ஈராண்டுகளுக்குப் பணியில் நீடிக்க விருப்பமா என்று கருத்து கோரப்படும். மேலும் தற்போது 28 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்குத்தான் முழு ஓய்வூதியம் கிடைக்கிறது. இது 20 ஆண்டுகளாகக் குறைக்கப்பட இருக்கிறது.
இவை அனைத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து அமலாகும்.6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்கிய சமயத்தில் இருந்த குறைபாடுகளைக் களைந்திட புதிய ஊதியக் குழு அமைக்கப்படும். அட்ஹாக் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் நிரந்தரப்படுத்தப்படுவார்கள். ஒப்பந்த ஊதிய முறையை முழுமையாக ஒழித்துக்கட்ட அரசு கொள்கை அளவில் தீர்மானித்திருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கு முன் பணம் கொடுப்பதற்கான கொள்கை தளர்த்தப்படும்.இவ்வாறு முதல்வர் ஹூடா அறிவித்துள்ளார்
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள், பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை; உயர்நீதிமன்றம்
ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மேலும் தொடரப்பட்ட புதிய அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக கருதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
7வது ஊதியக்குழு: குறைந்தபட்சம் 26 ஆயிரம் சம்பளம்; மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்பள கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.மாத்தூரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக்குழு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைக்கப்பட்டு, இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.மாத்தூர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், 7வது சம்பள கமிஷன் படி, ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனக்குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.மாத்தூரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போது 3 முறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதனை முதல்நிலை அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதை போல 5 முறையாக மாற்ற வேண்டும். கருணை அடிப்படையிலான பணியை 3 மாதத்துக்குள் வழங்க வேண்டும். குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். 50 சதவீதமாக இருக்கும் ஓய்வூதியத்தை 67 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.மில், மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்
பெரு நகரங்களில், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். இல் மாதம் 5 முறை மட்டும் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான புதிய திட்டத்தை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர் பிற வங்கி ஏடிஎம்களில் மேற்கொள்ளும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை மாதத்துக்கு 3 ஆக குறைகிறது. அதுபோல், கணக்கு வைத்துள்ள வங்கியிலும் 5 முறைக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள், 2009 ஏப்ரல் முதல் பிற வங்கி ஏடிஎம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ20 கட்டணமாக தரவேண்டியுள்ளது.
இது சுமையாக உள்ளதாக வங்கிகள் முறையிட்டன. வங்கிகள் வேண்டுகோளை ஏற்ற ரிசர்வ் வங்கி, பிற வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 இலவச பரிவர்த்தனை செய்ய அனுமதித்தது.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பிற வங்கி ஏடிஎம்களையே பயன்படுத்திய, அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க வங்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த மார்ச் மாதத்தின்படி, ஏ.டி.எம். எண்ணிக்கை 1.6 லட்சத்துக்கு மேலும், டெபிட்கார்டு மூலமாக பொருட்கள் வாங்கும் வசதி 10.65 லட்சம் இடங்களுக்கு மேலும் உள்ளன.
இந்நிலையில், இவற்றுக்கான வங்கி செலவுகளையும் கருத்தில் கொண்டு மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் பிற வங்கி ஏடிஎம்மில் மேற்கொள்ளும் பரிவர்த்தனையை 3 ஆக குறைக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மை 5 முறை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.20 கட்டணம் வசூலிக்கலாம்.
சிறு மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், பெரு நகரங்கள் தவிர பிற இடங்களுக்கும் இந்த கட்டுப்பாடு தேவையில்லை எனவும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் கூறியுள்ளது.
நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தியை மகாத்மாவாக்கிய மதுரை மண்!
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மதுரைக்கு என தனிச் சிறப்பிடம் உண்டு. புராண கால நகரான மதுரையானது தமிழ் சங்கத்தின் தலைநகராக மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்தில் பெரும் திருப்பத்தைத் தந்த மண்ணாகவும் திகழ்கிறது என்பதை வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன.
போக்குவரத்து வசதியற்ற அக் கால கட்டத்தில் தமிழகத்தில் காந்தியடிகள், சிற்றூர்களுக்குக் கூட சென்று உரையாற்றி வந்திருப்பது பெரும் வியப்பே. அப்படிப்பட்ட காந்தியை மகாத்மா எனும் அளவுக்கு மாற்றிய மண் மதுரை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
காந்தியடிகள் முதன்முறையாக மதுரைக்கு 1919-இல் வருகை புரிந்துள்ளார். அவர் தற்போது மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்துக்கு எதிரே உள்ள இடத்தில் இருந்த தியாகி ஜார்ஜ் ஜோசப் வீட்டில் (தற்போது அது தனியார் விடுதியாகிவிட்டது) தங்கினார். சுதந்திரப் போராட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் ஆலோசித்தார்.
பின்னர், 1921-இல் மதுரைக்கு மீண்டும் அவர் வந்தார். அப்போது மதுரை மேலமாசி வீதியில் குஜராத் தொழிலதிபர் சாங்கோயி என்பவரது வீட்டில் (தற்போது காதி கிராப்ட் இல்லம்) தங்கினார்.
மதுரையில் தங்கிய அவர், மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசச் சென்றார். அப்போது மிதவாதிகளுக்கும், தீவிரவாத கொள்கையுடையவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், கூச்சல், குழப்பத்தால் காந்தியடிகளால் சிரமமின்றி உரை நிகழ்த்த முடியவில்லை.
இந்த நிலையில், அவர் மதுரை கிராமப் பகுதிகளைச் சுற்றிவந்தார். அங்கு விவசாயிகள் மேலாடை இன்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்திய மக்கள் இவ்வளவு வறுமையில் இருக்கும்போது தான் மட்டும் நவநாகரிகமாக கோட்டு, சூட்டுடன் இருப்பது சரியல்ல என நினைத்தார்.
அன்றிரவே காந்தி பொட்டலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்ற வந்தபோது அரையாடையுடன் முதன்முதலில் தோன்றினார். அவர் முதன்முதலில் அரையாடை மனிதராகத் தோன்றி பேசியதாலேயே அந்த இடத்துக்குத் தற்போதும் காந்தி பொட்டல் என்றே பெயர்.
மதுரைக்கு அவர் 1927-ஆம் ஆண்டு வந்தார். அதன்பின், 1934-ல் மதுரை வந்தபோது அவரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு அழைத்தனர். ஆனால், ஹரிசனங்கள், பிற்படுத்தப்பட்டோர் நுழையாத கோயிலுக்குள் தான் செல்ல விரும்பவில்லை எனக் கூறி விட்டார்.
அதன்பின்னர், காந்தியடிகளின் ஆலோசனையின்பேரில் தியாகி வைத்தியநாதய்யர் தலைமையில் மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்குள் ஹரிசனங்களை அழைத்துச்செல்லும் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. பின்னர், 1946-இல் மதுரை வந்தபோது காந்தியடிகள் மீண்டும் மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்குள் சென்றார்.
காந்தியடிகள் மதுரைக்கு ரயில் மூலம் வந்துள்ளார். அவர் காந்திபொட்டல், எட்வர்டு ஹால், மதுரைக் கல்லூரி மைதானம் உள்ளிட்ட இடங்களில் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். சேதுபதி மேல்நிலைப்பள்ளி, செüராஷ்டிர கிளப், அப்போதைய சிவகங்கை மாளிகை (தற்போது மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியாக உள்ளது), சொக்கிகுளத்தில் உள்ள என்.எம்.ஆர். மாளிகை உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளார்.
மதுரையில் காந்தி மியூசியம் 1959-இல் தொடங்கப்பட்டது. அங்கு காந்தியடிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகும்போது கட்டியிருந்த ஆடை, கண்ணாடிகளுடன் அவரது அஸ்திக் கலசமும் வைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகளின் அரிய புகைப்படங்கள், அவரது கையெழுத்துடன் கூடிய கடிதங்கள் என அரிய வரலாற்றுப் பொக்கிஷமாகவே காந்தி அருங்காட்சியகம் திகழ்கிறது.
காந்தியடிகள் பேசிய, அரையாடையுடன் தோன்றிய இடங்களில் அதுகுறித்த நிகழ்வுகள் எதுவும் எழுதி வைக்கப்படவில்லை. ஆம்...நாம் நமது பழைய பெருமை, வரலாறுகளை அலட்சியப்படுத்தி வருகிறோம். அதனால் நமது குழந்தைகள் பாதை தெரியாத பயணிகளாகவே வாழ்க்கையில் திசைமாறிச் செல்லும் நிலை உள்ளது.
மதுரை என்றாலே அது....முரட்டுத்தனமானவர்களுக்கான ஊர் என்பது போலவே நமது நகர் பற்றிய பார்வை பரவி வருகிறது. இது சரியல்ல. ஆதி முதல் அந்தம் வரை சரித்திர நிகழ்வுகள் மூலம் சமூகத்துக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது மதுரை என்பதை உலகறியச் செய்வது அவசியம். அதற்கு மாநகராட்சி முதல் மாவட்ட நிர்வாகம் வரையில் தியாக சீலர்களின் சிலைகள் முன்பு, வரலாறுகளை எழுதி வைக்க முன்வரவேண்டும்.
ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு
ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அடிக்கடி நடக்கும் போராட்டங்களால் வெறுத்துப்போன மாநில கல்வித்துறை நிர்வாகம், போராட்டங்கள் நடத்த திடீர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், பல்வேறு சங்கங்கள் சார்பில் இயங்கி வருகின்றனர். சமீபகாலமாக, ஆசிரியர் பணி மாறுதலில் ஆங்காங்கே பிரச்னைகள் எழுந்தது. சில இடங்களில், முறைகேடான இட மாறுதலை கண்டித்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் மாநில அளவில் நடந்தன.
இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை அறவே தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மாநில தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முன் அனுமதி பெறாமல் ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு எத்தகைய போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இடமாறுதலில் மறைக்கப்பட்ட பணியிடம், முறைகேடுகளை கண்டித்தும், கல்வித்துறையில் நீண்ட கால கோரிக்கைகள் நிறை வேற்றாததை கண்டித்துதான் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குறைபாடு இல்லாவிட்டால் எதற்காக ஆர்பாட்டம் நடத்துகிறோம்,” என்றார்.
முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம்
அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், ஊராட்சித் தலைவர் காந்திமதி சேதுராமனை தேசியக் கொடி ஏற்ற, தலைமையாசிரியர் செல்வமணி அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தலைவர் காந்திமதி சேதுராமன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டார்.
இதன்பேரில், தர்மபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி விசாரணைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தலைமையாசியர் செல்வமணி, கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். மேலும், பள்ளி அலுவலக ஆவணங்களை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தலைமையாசிரியர் செல்வமணியை இடைநீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், வட்டார உதவி தொடக்கக் கல்வி அதிகாரி திருநாவுக்கரசு வியாழக்கிழமை, போலீஸ் பாதுகாப்புடன் தர்மபட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வந்து இடைநீக்க உத்தரவை செல்வமணியிடம் கொடுத்தார். மேலும் இப் பள்ளியின் தலைமையாசிரியராக அங்கு ஆசிரியையாகப் பணியாற்றும் ரேகா என்பவர் (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.
உரிய முன் அனுமதி பெறாமல் படித்த உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் இல்லை: ஆசிரியர்களுக்கு இயக்குநர் அதிரடி உத்தரவு
ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் தடை விதித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந் தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது.
ஓர் ஆசிரியர் தனது பணிக்காலத் தில் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியுடைவர் ஆவார். ஓர் ஊக்க ஊதியம் என்பது இரண்டு வருடாந்திர ஊதிய உயர்வை (இன்கிரிமென்ட்) குறிக்கும். அடிப்படைச் சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் 3 சதவீதமும், அதற்குரிய அகவிலைப்படியையும் உள்ளடக்கியது ஓர் இன்கிரிமென்ட்.
உதாரணத்துக்கு, பட்டதாரி ஆசிரியர் ஒருவர், தனது பதவிக்கான கல்வித் தகுதியான இளங்கலை பட்டம் மற்றும் பி.எட் படிப்புடன் கூடுதலாக முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் ஓர் ஊக்க ஊதியமும், எம்.எட். முடித்திருந்தால் இன்னொரு ஊக்க ஊதியமும் ஆக 2 ஊக்க ஊதியங்கள் பெறுவார். இன்றைய நிலவரப்படி, அரசு பணியில் சேரும் ஒரு பட்டதாரி ஆசிரியர் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியாக இருந்தால் அவருக்கு கூடுதல் சம்பளமாக ரூ.1,668 கிடைக்கும்.
பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டுமானால் தங்கள் மேல் அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியிடமும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரி யர்கள் தலைமை ஆசிரியர்களிடமும் முன்அனுமதி வாங்க வேண்டும்.
முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பெற்றுவந்த ஆசிரியர்களுக் கும் உரிய விளக்கம் பெற்று அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங் கப்பட்டு வந்தது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் முன்அனுமதியின்றி படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்அனுமதி இல்லாமல் படித்த படிப்புக்கு ஊக்க ஊதியம் வழங்கக்கூடாது என்று மாநில தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ஊக்க ஊதியம் வழங்கினால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிரடி உத்தரவினால், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “முன்அனுமதி பெறாமல் ஏற்கெனவே படிப்பில் சேர்ந்துவிட்ட ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும். புதிய உத்தரவை இனிவரும் நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.
உதவித்தொகை: அறிவியல் படிக்க மாதம்-ரூ.5 ஆயிரம்
பள்ளி மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகள் பக்கம் ஈர்த்திட மாணவர் அறிவியல் ஊக்கத்தொகை திட்டம் (Kishore Vaigynanic Protsahan Yojana-KVPY) என்ற புதுமையான கல்வி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது.
நேர்முகத் தேர்வு
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் சேரவைப்பது இந்தத் திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்படும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், உயிரி-வேதியியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பம் போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட பட்டப் படிப்பு படிப்பதற்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரமும், முதுகலை படிக்க ரூ.7 ஆயிரமும் கல்வி உதவித்தொகை (Fellowship) பெறலாம். மேலும், பட்டப் படிப்பு படிப்போருக்கு எதிர்பாராத கல்விச் செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமும், இதேபோல் முதுகலைப் படிப்புக்கு ரூ.28 ஆயிரமும் தனியாக வழங்கப்படும். இதற்குத் தகுதியான மாணவர்கள் திறனறித் தேர்வு (100 மதிப்பெண்) மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இப்பணியைப் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science_IISc) மேற்கொள்கிறது.
மூன்று வகையான மாணவர்கள்
இந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு மூன்று வகையாக மாணவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
முதலாவது தற்போது பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கான பிரிவு. எஸ்எஸ்எல்சி தேர்வில் அறிவியல், கணிதப் பாடங்களில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்கள் தேவை. எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 70 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்குப் பட்டப் படிப்பு முதலாகத்தான் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கிடையே, அவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்படுவார்கள். இதற்காக அவர்களுக்கு மத்திய அரசின் செலவில் முகாம்கள் நடத்தப்படும். அவர்கள் பிளஸ்-2 தேர்வில் அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீதம்) எடுக்க வேண்டியது அவசியம்.
இரண்டாவது பிரிவு பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கானது. பிளஸ்-2 முடித்துவிட்டு அறிவியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள். மேற்குறிப்பிட்ட மதிப்பெண் தகுதிதான் இதற்கும்.
மூன்றாவது பிரிவு தற்போது அறிவியல் பட்டப் படிப்பில் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உரியது. அவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வில் மேற்குறிப்பிட்ட மதிப்பெண் தகுதி பெற்றிருக்க வேண்டும். பெல்லோஷிப் பெறுவதற்கு முன்பாகப் பட்டப் படிப்பில் முதல் ஆண்டில் 60 சதவீத மதிப்பெண்கள் தேவை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 40 சதவீத மதிப்பெண்கள் போதும். ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (Integrated M.Sc. M.S.) படிக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
நவம்பரில் தேர்வு
இதற்கான 2014-ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு நவம்பர் 2-ந் தேதி சென்னை, பெங்களூர், மும்பை, கொச்சி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஆன்லைனிலும், பல்வேறு முக்கிய நகரங்களில் தேர்வு மையங்களிலும்
(Off-line) நடத்தப்பட உள்ளது. இதற்கு www.kvpy.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள், பி.எஸ்சி. முதல் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் மாதம் 8-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாக
விண்ணப் பித்தவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை அக்டோபர் 2-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் அனுப்பி விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச்சீட்டு தபால் மூலம் அனுப்பப்படும். தேர்வு மையங்களி்ன் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
அரசு ஊழியர்களை அவமதிக்கும் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்இரா.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதத்தின்போது “ அரசு ஊழியர்களுக்காக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுமா ” என்று சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், “ அரசு ஊழியர்களுக்கு 6வது சம்பளக் கமிஷனில் வீட்டு வாடகைப்படி அதிகமாகக் கிடைக்கிறது.
அதனால் அவர்கள் தனியார் வாடகை வீடுகளில் சொகுசாகஇருக்கிறார்கள். அதனால் அவர்கள் அரசுக் குடியிருப்பை நாடுவதில்லை ” என பதில்அளித்துள்ளார்.
அரசு ஊழியர்களை இவ்வாறு அவமதித்துப் பேசிய அமைச்சரின் செயலைதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்கடுமையாக ஆட்சேபிப்பதோடு, கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.தமிழக வீட்டு வசதித் துறைஅமைச்சரின் கருத்து உண்மைக்குப் புறம்பானதாக உள்ளது. தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி அதிகபட்சமாக நகராட்சிகளில் ரூ.1,400/-ம், மாநகராட்சிகளில் சென்னையில் ரூ.3,200/-ம்,மதுரை போன்ற மாநகராட்சிகளில் ரூ.1,800/-ம் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தரம் ஐஐஐ நிலையிலுள்ள நகராட்சிகளில் ரூ.1,000/-மும் இதர பகுதிகளில் இதற்கும் கீழாக ரூ.400/- மட்டும் வீட்டுவாடகைப்படி வழங்கப்படுகிறது.
ஆகவே 50 சதவீதத்திற்கும் மேலான அரசு ஊழியர்மற்றும் ஆசிரியர்கள் ரூ.1,400/-க்கு கீழாகவே வீட்டு வாடகைப்படி பெற்று வருகின்றனர் என்பதே உண்மையாகும்.இவ்வளவு குறைந்த வாடகையில் நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட வீடுகிடைப்பதில்லை. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் குடியிருந்து வரும்அரசு ஊழியர்களிடம் அரசுவழங்கும் வீட்டு வாடகைப்படியோடு அக்குடியிருப்பின் தர நிலைக்கேற்ப கூடுதலாக ஒன்றரை சதவீதம் முதல் 4சதவீதம் வரை அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு நகரங்களின் தர நிலைக்கு ஏற்ப 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் சதவீத அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்க தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர்போன்றவற்றிலும், பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட 33 நகராட்சிகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு உரிய வீட்டு வாடகைப்படி இதுவரை வழங்கப்படவில்லை.தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தால் சமீப காலமாக புதிய வீடுகள் கட்டப்படுவதில்லை. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளை வீட்டு வசதி வாரியம் பராமரிக்க மறுத்து வருவதோடு, அக்குடியிருப்புகளில் உள்ளவர்களை காலி செய்ய நிர்பந்தித்து வருகிறது.
மேற்படி வீடுகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் வீடுகள் இடிந்து விழுந்து உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் சம்பளத்தில் பெரும் பகுதியை வாடகையாகச் செலவிட்டு தனியார் வீடுகளுக்குச் செல்லவேண்டிய அவல நிலைக்குஅரசு ஊழியர்கள் ஆளாகியுள்ளனர்.எனவே, இத்தகைய அவலநிலையில் வாழ்ந்து வரும் அரசுஊழியர்களைப் பற்றி “சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள்” என்று பேசிய அமைச்சரின் கருத்துகளுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவிப்பதோடு, அக்கருத்து வாபஸ் பெறப்பட்டு அவைக் குறிப்பிலிருந்து நிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here