ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தும் அதன்
வாடிக்கையாளர்களிடம், வங்கிகள் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன. இதற்கு
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தி கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளார்.
இது
குறித்து சக்ரபர்த்தி கூறியதாவது: வங்கிகளின் இந்த திட்டம், மிகவும்
அபத்தமான, முரண்பாடான செயல். உலகில் எங்கும் இது போன்ற நடைமுறை இல்லை. இந்த
திட்டத்தை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.